MENU BAR

Monday 7 October 2013

தினமலர்-வாரமலர் (15.09.2013) இதழில் வெளிவந்த செயலரின் கவிதை:



காணலையே
கருப்பா...

ஏழெட்டுப் பங்காளிகளுக்கு
சொந்தமான
கருப்பணசாமி கோயிலில்
படையல் போட்டு
நடுச்சாம பூஜை!

வெட்டிய கிடாயின்
ஈரலைச் சுட்டு பொங்கலில் கலந்து,
‘காவு சோறு’ வீசியபின்
திரும்பிப் பார்க்காமல்
வீடுவந்து சேர்ந்ததோடு
விடியும்வரை யாரும்
அந்தப் பக்கம் எட்டி பார்க்கவில்லை,
பயமுறுத்திய பூசாரியின்
கட்டளைப்படி.

விடிந்தபின்
மறுபூஜைக்குக் கூடிய பொழுதில்,
படையலுக்கொன்றாக
பங்காளிகள் வைத்துச்சென்ற
‘குவார்ட்டர்’ பாட்டில்கள்
மயமாகிப் போயிருந்தன.

தள்ளாட்டம் ஏதுமின்றி
கருப்பணசாமி
இருந்த பொழுதிலும்,
பூசாரியிடம்
யாரும் கேட்டிடவில்லை....
பாட்டில்கள்
என்னவாயினவென்று..!