MENU BAR

Saturday, 28 February 2015

தோழர் K.பச்சியப்பன் இலாகா பணி நிறைவு
22.4.1974 -ல் நமது இலாகா பணியில் சேர்ந்த  தோழர் K. பச்சியப்பன் 1986-ல் இருந்து பவானி NFPE-P3 கிளைச் செயலர் மற்றும் தலைவர் பொறுப்புகளில் இருந்து செயல்பட்டார். பவானி கிளை மட்டுமல்லாது ஈரோடு கோட்ட கிளை, கோபி கிளை செயல்பாடுகளிலும் உறுதுணையாக இருந்து சிறப்பான தொழிற் சங்க பணியைச் செய்தவர். பவானி கிளையில் NFPE சங்கத்தை முதன்மை சங்கமாக (மாற்று சங்க உறுப்பினர்களே இல்லை எனும் அளவுக்கு ) தொடர்ந்து வைத்திருந்தார்.

கடந்த அக்டோபர் 2012 ஈரோடு தலைமை  அஞ்சலகத்தில் APM பொறுப்பை ஏற்றுக் கொண்டார். பணி  ஓய்வு  பெரும் இன்றைய நாளில் DY- Postmaster ஆக பணி ஓய்வு பெறுகிறார். கடந்த முறை மாநில சங்கத்தில் அமைப்பு செயலராக இருந்து சிறப்பாக செயல்பட்டார். தற்பொழுது மாநில சங்கத்தில் Supreme Councillor பொறுப்பில் இருந்து சிறப்பாக பணியாற்றி வந்தவர். ஈரோடு தலைமை அலுவலகம் வந்த பிறகு , ஈரோடு P3 கோட்ட கிளையின் செயல்பாடுகளில் சிறப்பான ஒத்துழைப்பு நல்கி வந்தார்.

முன்னால் அகில இந்திய பொது செயலர் தோழர் K.V .ஸ்ரீதரன்  மற்றும் இன்றைய NFPE-P3 அகில இந்திய பொது செயலர் தோழர் N.சுப்ரமணியம் ஆகியோரின் உற்ற நண்பருமான நமது தோழர் K.பச்சியப்பன் , அவர்களின் வழிகாட்டுதலில் தனது தொழிற்சங்க பணியை மெருகேற்றி கொண்டர்.

இன்று பணி ஓய்வு பெரும் தோழர்  K.பச்சியப்பன் (9894437337) அவர்களுக்கு ஓர் மகனும் ஓர் மகளும் உள்ளனர். மகளுக்கு திருமணம் முடித்துள்ளார். இவரது பணி ஓய்வு காலம் வளமுடன் அமைய ஈரோடு, பவானி மற்றும் கோபி கிளைகளின் P3,P4,GDS  சங்கங்களின் சார்பாக நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.


Thursday, 26 February 2015

Recreation Club சந்தாவை UCR -ல் Erode Senior Postmaster கிரெடிட் செய்ததை கண்டித்தும், சந்தாவை eMO அனுப்பியதை கண்டித்தும் JCA சார்பில் PMG Western Region அவர்களுக்கு கொடுக்கப்பட்ட Memorandum

Fwd: Authoritarian attitude of Sr PM, Erode in the functioning of Erode HPO Recreation Club –reg

Chinnasamysanjeevi Chinnasamy <chinnasamysanjeevi@gmail.com>25 February 2015 at 21:39

To: NFPE ERODE <nfpeerode@gmail.com>

Chinnasamysanjeevi Chinnasamy <chinnasamysanjeevi@gmail.com>

Attachments9:37 PM (1 minute ago)

to pmg_coimbatore
Respected Madam ,Vanakkam.  This is regarding atrocities of Sr.PM,Erode HPO.  This union has already submitted the copy of the Memorundum  of JCA,Erode Division on the anti -labour activities of the Sr.Postmaster, Erode HPO.  Even after intervention of the benign PMG in the said issue the Sr.Postmaster,Erode still continuing his anti-workers policy on the staff of Erode HPO and ITS town SOs staff. In this regard a copy of memoreundum addressed to the PMG,Western Region, is submitted herewith as an attachment for favour of Benign PMG's kind information and further suitable action in this regard please.

Thanking You,.
Yours faithfully,
C.Sanjeevi,Regional Secretary,AIPEU,Group-C,Western Region@ Suramangalam 636005
NFPE    JCA   FNPO
Joint Council of Action (Postal)
Erode Division, Erode 638001

Ref No: JCA/ Dlgs dated 25.2.2015

To
The Postmaster General,
Western Region (TN),
Coimbatore 641002

Respected Madam,

Sub: Authoritarian attitude of Sr PM, Erode in the functioning of Erode HPO    
         Recreation Club –reg

          Kindly recall the discussion our divisional JCA had with you on 20.01.2015 along with our NFPE P3 Circle Vice-President comrade Ebenezer Gandhi regarding complaints against the Sr PM, Erode HO. One of the issues so discussed was functioning of Erode HO recreation Club.
          After the meeting it is understood that the Sr PM and SSP Erode have been called and some instructions have been given.
          On the advice of the PMG, the recreation club General body was held and a set of office bearers were elected. But to our dismay, the Sr PM Erode sent the subscription of recreation club recovered from all members for the month of February 2015 (from the pay of January 2015) to the Secretary of Recreation Club through eMO deducting the MO commission even though the Secretary is working at Erode HO itself. It is an unprecedented practice and not supported by any rules. It is not known as to who authorized him to send the subscription through eMO for which eMO commission was wastefully spent by the Sr PM, Erode.
          To add insult to injury, the Sr PM has credited under UCR, subscription amounting to Rs 9600/- recovered from the members from March 2014 to Dec 2014. UCR is an item that which cannot be classified under any head. Recreation club subscription is an amount recovered under a clear head and kept out of account. It is not known as to which rule has permitted him to credit the amount under UCR. Recreation club members are very much agitated over this continues intolerable attitude of Sr PM, Erode.
          The above action of the Sr PM is not a new one. Likewise, the Sr PM Erode had without any orders reduced the TRCA of the substitutes who worked in the place of GDS during the month March, April and May 2014. The same was rectified only after the intervention by the PMG to whom our Postal JCA had reported the issue through a memorandum dated 30.07.2014.
          The entire staffs of Erode HO are fed up with the repeated inhuman, unlawful and authoritative action of the Sr PM, Erode HO.
          Hence it is requested that suitable instruction may please be given to the Sr PM, Erode to pay the Subscription credited Under UCR and subscription to be collected here after to the Secretary of the recreation club direct instead of sending it though eMO.
Thanking You.
Yours Faithfully,
                                                                K.Swaminathan     J.Balamohanraj
                                                                       Dvl Sec NFPE P3  Dvl Sec FNPO P3
                                                               JCA Conveners.

Copy to:
The SSPOs Erode Division, Erode 638001.

Wednesday, 25 February 2015

படித்ததில் பிடித்தது கவிதைக்கு CIRCLE UNION கொடுத்துள்ள விளக்கம்:

சிந்தனைக்கு  ஒரு கவிதை 

ஈரோடு தோழர் சுவாமிநாதன்  தங்களுடைய அஞ்சல் மூன்று வலைத்தளத்தில்  'விகடன்' பத்திரிகையில் வெளிவந்த சிந்தனையைத் தூண்டும் 'புலி ஆடு புல்லுக்கட்டு' புதிர் விளையாட்டு  ஆட்டம் பற்றிய  
ஒரு கவிதையின் பகிர்வை அளித்துள்ளார். கவிதை என்பது காலத்தால் அழியாதாது. பல சிந்தனைகளை சில வரிகளில் தருவது.  இந்தக் கவிதையின் முடிவில் கதையின் களமாகிய 'ஆறு ' காணாமல் போயிருந்தது என்று முடிக்கப்பட்டுள்ளது.   

ஆம்  நாம் இன்று 'INFOSYS '  'FINACLE ' 'McCAMISH ' என்று தினம்ஆடும் -  ஆடு, புலி , புல்லுக்கட்டு ஆட்டத்தில், கடைசியில்  நம்முடைய 
களமாகிய  'ஆறு '( இலாக்கா ) காணாமல் போய்விடும் என்று 
இந்தக் கவிதை  நமக்கு தெரிவிக்கிறது  !  

நமக்குப் புரிகிறது ! நம்மை ஆளும் நிர்வாகத்திற்கு இது புரிகிறதா ?  புரியுமா ? புரிய வேண்டும் என்பதே நம் வேண்டுகோள் ! 
நாம் அவர்களுக்கு எதிரி அல்ல . பிரச்சினைகளை எடுத்துச் சொல்லுகிறோம். தீர்க்க வேண்டிய  அல்லது இலாக்காவை காக்க வேண்டிய இடத்தில் அவர்கள் இருப்பதால்  
அவர்களிடம்தான் நாம்  சொல்ல முடியும் . 

பிரச்சினைகளை சரியாகப் புரிந்துகொண்டு  அதனை தீர்ப்பதில் 
அவர்கள் ஈடுபட வேண்டும் என்பதே  நம்முடைய  வேண்டுகோள். 
மாறாக  இத்தனை துன்பங்களையும் தாங்கி நிற்கும்  ஊழியர்களையே  அவர்கள் எதிரிகளாக நினைப்பது  தவறல்லவா ?  

அஸ்திவாரமான  ஊழியர்களுக்கு,  பிரச்சினைகளில்  நிர்வாகம் அரவணைப்பு கொடுக்க வேண்டும் . அடித்து  நொறுக்க எண்ணக்கூடாது ! 
அடித்து நொறுக்கினால் 'ஆறு ' காணாமல் போனபின்பு  அவர்களும் இருக்க மாட்டார்கள் ! இதுவே முற்றிலும் உண்மையாகும் !
இதுவே 'புலி, ஆடு, புல்லுக்கட்டு' கவிதை தரும் செய்தி !

Saturday, 21 February 2015

படித்ததில் பிடித்த ஆனந்த விகடன் (28.1.2015) கவிதை :

                           ஏதாவது ஒரு யுக்தியில் நமது அன்றாட வேலைப் பளுவினை         செவ்வனே செய்து முடித்து திரும்பிப் பார்த்தால் எதிர் பாராத திருப்பமாய் "CORPORATION" என்கிறார்கள் ! இச் சிந்தனையைத்  தூண்டிய    கவிதைக்கு நன்றி !!!


பார்த்ததில் ரசித்தது !!!


17.02.2015 ஆர்ப்பாட்டம் குறித்த நாளிதழ் செய்திகள் :


Thursday, 19 February 2015

250 தோழர், தோழியர்கள் எழுச்சியோடு கலந்து கொண்ட ஆர்ப்பாட்டம்

தமிழ் மாநில NFPE P3, GDS சங்கங்களின் அறைகூவலுக்கு இணங்கவும், மத்திய அஞ்சல் JCA அறைகூவலுக்கு இணங்கவும், 17-02-2015 மாலை ஈரோடு தலைமை அஞ்சலகம் முன்பு FNPO,P3 கோட்ட செயலர் J. பாலா மோகன் ராஜ் மற்றும் NFPE P4, கோட்ட தலைவர் C.M. ரங்கசாமி ஆகியோர் தலைமையில்  மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தோழர்கள் K. சுவாமிநாதன் P3 செயலர், ஈரோடு கோட்டம், N.செல்வராஜ் செயலர், FNPO GDS ஈரோடு கோட்டம், M. மகாலிங்கம், செயலர், NFPE GDS பவானி கிளை, S. நடராஜன், NFPE GDS,  ஈரோடு கோட்டம், R.கிருஷ்ணமூர்த்தி, தலைவர், NFPE P3, கோபி கிளை, மனோகரன், கோட்ட தலைவர், FNPO P4, A. எழில்வாணன், NFPE P3 , செயலர், பவானி கிளை, K. பச்சியப்பன் NFPE P3 ஆகியோர் கோரிக்கைகள் குறித்து விளக்கிப் பேசினர்.
தோழர் S.தங்கவேல் GDS NFPE கோபி, கோசங்கள் எழுப்ப, தோழர். S. செல்லமுத்து, NFPE, ERODE நன்றி உரை நிகழ்த்தினார்.
250 க்கும் மேற்பட்ட NFPE, FNPO தோழர்கள், ஈரோடு, பவானி, கோபி பகுதிகளிலிருந்து திரளாக வந்திருந்தது கோரிக்கைகளின் நியாயத்தை உணர்த்தியது. இனிவரும் அடுத்த கட்ட போராட்டங்களிலும் தோழர்கள் திரளாக கலந்து கொள்ள வேண்டுகிறோம்.