MENU BAR

Friday 26 September 2014

ஏ.டி.எம் பிரச்சினைக்கு எங்கே புகார் செய்வது?

பெரும்பாலான சமயங்களில் ஏ.டி.எம்.-ல் ஏற்படும் தவறான நடவடிக்கைகளால்தான் மக்கள் பணத்தை இழக்கிறார்கள். ஏ.டி.எம். இயந்திரத்தில் இருந்து நீங்கள் பணம் எடுக்க முயலும்போது பணம் வரவில்லை. ஆனால், உங்கள் கணக்கிலிருந்து பணம் எடுக்கப்பட்டதாக உங்கள் பாஸ்புக்கில் பதிவாகிறது. அல்லது நீங்கள் 10,000 ரூபாய் எடுக்க முயற்சிக்கிறீர்கள். ஆனால், வெறும் 1,000 ரூபாய் மட்டுமே கிடைக்கிறது. ஆனால், உங்கள் பாஸ்புக்கில் 10,000 ரூபாய் பணம் எடுக்கப்பட்டிருப்பதாக உள்ளது. ஏ.டி.எம்.-ல் பணம் எடுக்கும்போது இப்படி பல பிரச்னைகள் ஏற்படலாம். இந்தப் பிரச்னைகள் அந்த ஏ.டி.எம். மெஷினிலோ அல்லது மின்சாரக் கோளாறினாலோ அல்லது சர்வர் (Server) இயந்திரத்தில் வரும் பிரச்னைகளினாலோ ஏற்படக்கூடும்.

எங்கு புகார் செய்வது..?
ஏ.டி.எம்.-ல் பணம் எடுக்கும்போது இதுமாதிரியான பிரச்னை உங்களுக்கு ஏற்பட்டால், எந்த வங்கி உங்களுக்கு ஏ.டி.எம். கார்டை வழங்கியதோ, அந்த வங்கியில் உடனடியாக புகார் (Complaint) செய்யவும். ஏ.டி.எம். சென்டருக்குள்ளேயே உடனடி புகார் செய்ய வேண்டிய தொலைபேசி எண் குறிப்பிடப்பட்டிருக்கும்.

ஏ.டி.எம்.-ல் இருந்து பணம் எடுத்ததற்கான ரசீதை (transaction) ஜெராக்ஸ் எடுத்து அதை கவனமாக வைத்துக்கொள்ளவும். அந்த ஸ்லிப்பில் ரெஸ்பான்ஸ் கோட் '00’ அல்லது '054’ இருக்கிறதா என்று பார்க்கவும். '00’ என்று வந்தால் அந்த பணப்பரிமாற்றம் சரியானது. '054’ என்று வந்தால் அந்தப் பணப்பரிமாற்றம் தவறானது.

கேட்டுப் பெறவேண்டியவை!
ஏ.டி.எம். தொடர்பான உங்கள் புகார்களை தெரிவிக்கும்போது வங்கியிடமிருந்து கேட்டுப் பெறவேண்டியவை, சர்ச்சைக்குரிய பணப்பரிமாற்றத்திற்கான கணக்கு விவரத்தின் பிரதி, எலெக்ட்ரானிக் ஜர்னல் (Journal), ஜர்னல் பிரின்ட் எனப்படும் பரிமாற்றம் நடந்ததற்கான தகவல் பிரதி.
வாடிக்கையாளர் பணம் எடுக்கும்போது ஏ.டி.எம். இயந்திரத்தால் பதிவு செய்யப்படும் நடவடிக்கை விவரங்கள் மற்றும் வாடிக்கையாளர் கணக்கில் இருப்புத் தொகை போன்ற விவரங்கள். சரியான முறையில் பணம் வழங்கி யிருந்தாலும், பணம் வழங்காமல் போனாலும் இந்த விவரங்கள் அதில் பதிவாகி இருக்கும். அதன் பிரதி ஒன்று.

சம்பந்தப்பட்ட ஏ.டி.எம். இயந்திரத்தில் ஒருநாளின் முடிவில் எடுக்கப்பட்ட சரி செய்தலுக்கான விவரங்கள் மற்றும் பணம் சரிபார்த்தல் ரிப்போர்ட் ஆகியவற்றின் பிரதி.

வாடிக்கையாளர் பணம் எடுக்கும்போது எடுக்கப்பட்ட ஏ.டி.எம். காமிரா மற்றும் சி.சி.டிவி-யின் கண்காணிப்பு பதிவுகளடங்கிய சிடி அல்லது டிவிடி ஒன்று.
பணப்பரிமாற்ற நடவடிக்கையின் ஸ்விட்ச் ரிப்போர்ட்.

இது சம்பந்தமாக இந்திய ரிசர்வ் வங்கியின் நெறிமுறைகள்படி, வாடிக்கையாளருக்கு ஏ.டி.எம். கார்டு வழங்கிய வங்கியானது, இந்த புகார் மீது நடவடிக்கை எடுத்து, புகார் பெற்ற 7 நாட்களுக்குள் வாடிக்கையாளருக்கு ஏற்பட்ட நஷ்டத்தை சரிசெய்வது அவசியம்.

ஏழு நாட்களுக்கு மேல் தாமதம் ஏற்பட்டு, அதுபற்றி வாடிக்கையாளர் 30 நாட்களுக்குள் புகார் தருவாரேயானால், கார்டு வழங்கிய வங்கி நாளன்றுக்கு 100 ரூபாய் வீதம் அபராதமாகத் தரவேண்டியிருக்கும்.

வங்கியானது வாடிக்கையாளர் அடைந்த நஷ்டத்துக்கீடான பணத்தை வரவு வைக்கா விட்டாலோ அல்லது இத்தகைய புகார்களுக்கு வங்கி பதில் ஏதும் அளிக்காமல் போனாலோ, அந்தப் பகுதியைச் சேர்ந்த வங்கி குறைதீர்ப்பு ஆணையத்திடம் புகார் அளிக்கலாம்.



Wednesday 3 September 2014

மொபைல் நிறுவனங்கள் தவறாக எடுத்த பணத்தை திரும்ப பெற எளிய வழி!!

இந்தியாவில் மொபைல் போன் வைத்திருக்கும் அனைவருக்கும் இருக்கும் ஒரு பிரச்சினை,தேவை இல்லாத Service - களை மொபைல் நிறுவனங்கள் Activate செய்து பணம் பறிப்பது.

பேங்க் கொள்ளைகளை விட, இதில் தான் நிறைய பணம் கொள்ளையடிக்கப்பட்டு இருக்கும். இந்த பிரச்சினையில் இருந்து எளிதாக தப்பிக்கும் வழியை பார்ப்போம்.

நமக்கு Activate செய்யப்படும் சர்வீஸ்களுக்கு VAS (Value Added Services) என்று பெயர். Dialer Tune/Caller Tune, Wallpaper, SMS(Joke,Devotional மற்றும் பல) மற்றும் பல இதில் வரும்.

இம்மாதிரி பிரச்சினை எந்த நெட்வொர்க்கில் வந்தாலும் நீங்கள் 155223 என்ற அலைபேசி எண்ணுக்கு அழைத்தால் நீங்கள் எந்த Service Activate செய்து உள்ளீர்களோ அதை Cancel செய்து விடலாம்.

தவறுதலாக எடுக்கப்பட்டிருந்து நீங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு கொண்டு Complaint செய்தால் உங்கள் பணம் திரும்ப கொடுக்கப்பட்டு விடும்.24 மணி நேரத்திற்கு பின் நீங்கள் Call செய்தால் சர்வீஸ் மட்டும் கான்சல் செய்யப்படும்.

நீங்களாக Activate செய்த சர்வீஸ்களையும் இதில் Deactivate செய்யலாம்.அநேகமாக அனைத்து நிறுவனங்களும் தற்போது இதை கொண்டு வந்துவிட்டன. உங்கள் நெட்வொர்க்குக்கும் இது வந்து விட்டதா என்று அழைத்து பாருங்கள்.

அழைக்க வேண்டிய எண் - 155223

Tuesday 2 September 2014

TRANSFER POLICY - RULE 38 TRANSFERS UNDER COMMUNAL VACANCIES A BOTTLENECK - CHQ TAKEN UP THE CASE

விதி 38 இட மாறுதலின்  விதியை நிர்ணயிக்கப் போகும் புதிய TRANSFER  பாலிசி ?

சுழல் மாற்றல் மேலும்  சுழற்சியா ?
விதி 38 இன் கீழ் அளிக்கப் படும் இடமாறுதல்களில் , நடப்பு ஆண்டில் (2014) ஏற்கனவே ஜனவரியிலேயே காலியிடங்கள் அறிவிக்கப்பட்டு மே மாதத்தில் தேர்வு நடைபெற்றதால் , விண்ணப்பங்கள் பரிசீலனை செய்து அவை  உரியகோட்டங்களின் RESULTANT   காலியிடங்களாக  மாற்றப் படவில்லை. 

இதனால்  நடப்பு ஆண்டில்  விதி 38 இன் கீழான இட மாறுதல்கள்  தடைப் பட்டு உள்ளன. மேலும்  தற்போது DOPT  மற்றும் இலாக்காவால் அறிவிக்கப்பட்டுள்ள  புதிய TRANSFER  POLICY  காரணமாக , இனி வரும் ஆண்டுக்கான விதி 38 இன் கீழான  இட மாறுதல்களிலும் கூட மிகப் பெரும் பாதிப்பு ஏற்பட  உள்ளது.  

முதலாவதாக , TRANSFER  COMMITTEEதான்  RT  யை இறுதி செய்ய வேண்டும் என்று  எடுக்கப்பட்டுள்ள கொள்கை முடிவால் , இனி RT  மண்டல அதிகாரியால் இறுதி செய்யப்படும். இதன் மூலம்  கோட்ட அதிகாரிகளால்  அளிக்கப்படும் பரிந்துரைகளின் அடிப்படையிலேயே மண்டல அதிகாரிகள் இறுதி செய்வார்கள் என்பதே நடக்கும் நிகழ்வாக இருக்கும். ஏனெனில் அந்தந்த கோட்டத்தின் பிரத்தியேக பிரச்சினைகள் மண்டல அதிகாரிகளுக்கு தெரிய வாய்ப்பில்லை.  அவர்கள் கோட்ட அதிகாரியின் அறிக்கையையே சார்ந்திருக்க வேண்டும். 

மேலும் மண்டல அதிகாரி தலைமையிலான கமிட்டி  RT  உத்திரவுகளை இறுதி செய்வதால் , அதன் மீது மேல் முறையீடு செய்வதற்கு வாய்ப்பில்லாமல் போகும். அடுத்து நிலை உயர் அதிகாரியிடம் மேல் முறையீடு செய்யலாம்  என்று  வழிகாட்டுதல் அளிக்கப்பட்டால் கூட, அந்த மேல்முறையீடு  சாதாராண ஊழியர்களுக்கு எந்த அளவில் சாத்தியம் என்பது  கேள்விக்குறியே ?

இரண்டாவதாக,  RULE  38 இட மாறுதல்களில் ஏற்கனவே பல பிரச்சினைகளை நம் ஊழியர்கள்  சந்தித்து வருகிறார்கள். பெண் ஊழியர்கள் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளார்கள்.  

A)    இனி   நேரடி நியமனக் காலியிடங்களில் தான்  நேரடி நியமனம் பெற்ற எழுத்தர்  மாறுதல் பெற முடியும் என்பதும் ,  

B) PROMOTIVE  எழுத்தர் , விண்ணப்பிக்கும் கோட்டத்தில் அவருக்குண்டான  PROMOTIVE காலியிடங்களில் மட்டுமே இடமாறுதல் பெறமுடியும் என்பதும் ,

C)      MUTUAL TRANSFER  க்கும் இதே விதி தான்  பொருந்தும் என்பதும் , 

D)   அதுபோல எந்தெந்த COMMUNITY  யை சேர்ந்தவர் இட  மாறுதல் கேட்டு விண்ணப்பிக்கிறாரோ, அவர்களின்   COMMUNITY  அடிப்படையில்  காலியிடங்கள் , விண்ணப்பிக்கும் கோட்டத்தில் இருந்தால் மட்டுமே அவர்களுக்கு , அதுவும்  ORDER  OF  SENIORITY   அடிப்படையில்   மாறுதல் கிடைக்க வாய்ப்பு உள்ளது என்பதும் , 

E ) SENIOR REQUEST  இருந்தும்  JUNIOR  REQUEST ஆல்  OVERLOOK  செய்திட வாய்ப்பு ஏற்படும் என்பதும் ,

இடமாறுதல் பிரச்சினையில் பெரும்  பாதிப்பை ஏற்படுத்த உள்ளது. இது குறித்து  நம்முடைய தமிழ் மாநில அஞ்சல் மூன்று சங்கத்தால்   இந்தப் பிரச்சினை  அகில இந்திய சங்கத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. 

தற்போது  நம் அகில இந்திய சங்கத்தின் பொதுச் செயலர் இந்தப் பிரச்சினையை  நம் இலாக்கா முதல்வரிடம் எடுத்துச் சென்றுள்ள போதிலும், 

இதில் மேலும் முயற்சி எடுத்து நாம் கூறியுள்ள அனைத்து பிரச்சினை களையும்  தீர்த்திட,  தற்போது   நம்முடைய  அஞ்சல் மூன்றின் பொறுப்புப் பொதுச் செயலர் தோழர். N .S . அவர்களிடம் நாம் வேண்டியுள்ளோம்.  இந்தப் பிரச்சினையை   எதிர்வரும் JCM  இலாக்கா குழு கூட்டத்திலும் எடுத்திட நம் மாநிலச் சங்கம் வேண்டியுள்ளது.