MENU BAR

Thursday 20 June 2013

மாபெரும் ஆர்ப்பாட்டம்

                                                                                                                                                                                      
ஈரோடு கோட்டஅஞ்சல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

         மத்திய அரசு ஊழியர்களுக்கு 7 வது ஊதியக்குழு உடனடியாக அமைக்கப்பட வேண்டும், 50 சதவீத பஞ்சபடியை அடிப்படைசம்பளத்துடன் இணைக்க வேண்டும், சமூக பாதுகாப்புக்கு ஊறு விளைவிக்கக் கூடிய வகையிலும்- உத்திரவாதமற்ற வகையிலும் அமைய பெற்றுள்ள புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து  செய்ய வேண்டும, கிராமப்புற அஞ்சல் ஊழியர்களின் ஊதிய மாற்றத்தையும்  7வது ஊதியக்குழுவே பரிசீலிக்க வேண்டும், கிராமப்புற அஞ்சல் ஊழியர்களின் போனஸ் உச்சவரம்பு ரூ3500 என உயர்த்தப்படவேண்டும் , அவர்களது வேலை நேரக் கணக்கீட்டில் மாற்றம் வேண்டும் என்பன உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தபால் துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளன அறைகூவலின்படி20.06.2013 வியாழன் மதியம் 1 மணிக்கு ஈரோடு தலைமை அஞ்சலகம் முன்பு இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

       கூட்டத்திற்கு என்.எப்.பி.இ சங்கத் தலைவர் தோழர் ரவிசங்கர் தலைமையேற்றார். பச்சியப்பன் அவர்களும் சுவாமிநாதன் அவர்களும் கோரிக்கை விளக்க உரை நிகழ்த்தி ஆர்ப்பாட்டம் செய்தனர். தோழர் N. ஆனந்த குமார் நன்றி கூறினார். எழுத்தர்கள், தபால்காரர்கள், கிராமிய அஞ்சல் ஊழியர்கள் உட்பட 40 கும்மேற்பட்டோர் ஆர்ப்பாட்டக் கூட்டத்தில் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment