· GDS ஊழியர்களின் ஊதிய மாற்றம் 7 வது
ஊதியகுழுவிலேயே செய்யப்படலாம் என்ற நமது அஞ்சல் துறையின் பரிந்துரையை-நிதித்துறை
நிராகரித்ததைக் கண்டித்தும்.......
· அஞ்சல், RMS ஊழியர்களின் கேடர் மறுசீரமைப்பு
குறித்த நமது அஞ்சல் துறையின் பரிந்துரையை-DOPT திருப்பி அனுப்பியதைக்
கண்டித்தும்....
· அஞ்சல், RMS அலுவலகங்களில் அனைத்துக்
கேடர்களிலும் உள்ள அனைத்துக் காலியிடங்களையும் உடனே நிரப்பிட வேண்டுமென
வலியுறுத்தியும்.......
19.08.2015 மாலை 6.30 மணியளவில் ஈரோடு
தலைமை அஞ்சலகம் முன்பு JCA
சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்ட
கூட்டத்திற்கு ஈரோடு கோட்ட NFPE P3 சங்கத்தின் பொறுப்புச் செயலர் தோழர்.
G.சேதுராமன் தலைமை தாங்க, தோழர்கள் J. பாலமோகன்ராஜ் (FNPO P3 கோட்ட செயலர்), A.
எழிழ்வாணன் (NFPE P3 பவானி கிளைச்செயலர்), M.மகாலிங்கம் (மாநில
உதவிச்செயலர்-NFPE-GDS), N.சதாசிவன்(மாநில உதவித் தலைவர் NFPE-GDS),S.நடராஜன்(கோட்டச்செயலர்-NFPE-GDS),
C.தில்லைசாமி(NFPE-GDS),S.சக்திவேல்(NFPE-P4, உதவிச்செயலர், கோபி) ஆகியோர் கோரிக்கைகளை
விளக்கி சிறப்புரையாற்றினர்.
ஆர்பாட்டத்தில் NFPE,FNPO சங்கங்களைச் சேர்ந்த ஈரோடு, பவானி, கோபி
பகுதியின் P3,P4,GDS உழியர்கள் 40
க்கும் மேற்ப்பட்டோர் கலந்து கொண்டது ஒரு
சிறப்பு அம்சமாகும்.
தோழர். P.கணேசன்(FNPO-P3 உதவிச்செயலர்) நன்றி
கூறி ஆர்ப்பாட்டக் கூட்டத்தை முடித்து வைத்தார்.
இந்தக் கோரிக்கைகளுக்கான அடுத்த கட்ட
இயக்கங்களிலும் திரளாகக் கலந்து கொள்வோம்.
தோழமையுடன்,
G.சேதுராமன்,
கோட்டச்செயலர்(பொறுப்பு).
No comments:
Post a Comment