MENU BAR

Saturday, 9 January 2016

ஈரோடு கோட்ட அஞ்சல் JCA வின் தொடர் போராட்டத்திற்கு வெற்றி ! ஈரோடு தலைமை அஞ்சலக அதிகாரி பணியிட மாற்றம் செய்யப்பட்டார் !!



 பொதுமக்கள் நலன், ஊழியர் நலன் என்ற அக்கறை சிறிதுமின்றி - ஈரோடு தலைமை அஞ்சலக ஊழியர்களை எப்படியெல்லாம் துன்புறுத்த முடியும் , அவமரியாதை செய்ய முடியும் என்பதையே ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நிமிடமும் சிந்தித்து, ஊழியர்கள் தன்னைச் சந்திக்கவே அஞ்ச வேண்டும் என்ற வைராக்கியத்தோடும் , மிகுந்த அகந்தையோடும் செயல்பட்டு வந்த ஈரோடு தலைமை அஞ்சலக அதிகாரி திரு A.சுந்தரராஜன் அவர்களைப் பணியிட மாற்றம் செய்ய வேண்டுமென்ற ஈரோடு அஞ்சல் JCA வின் தொடர் போரட்டங்களுக்கு 08.01.2016 அன்று வெற்றி கிடைத்துள்ளது.

நமது நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று - அவரை சேலம் தலைமை அஞ்சலகத்திற்கு பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்ட நமது மேற்கு மண்டல PMG திருமதி MANJU.P.PILLAI அவர்களுக்கு ஈரோடு JCA சார்பில் நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

இதே கோரிக்கை மாநிலச் சங்கத்தால் CPMG அவர்களிடம் வைக்கப்பட்ட பொழுது - பிரச்சனையை சரியாக அணுகி தீர்வு கண்டிட்ட தமிழக Chief PMG திரு. CHARLES LOBO அவர்களுக்கும் JCA சார்பில் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

ஈரோடு JCA எடுத்த அனைத்துப் போராட்ட நடவடிக்கைகளுக்கும் தோழமையோடு உடன் நின்ற NFPE -P3 மாநிலச் சங்க நிர்வாகிகள் அனைவருக்கும், குறிப்பாக - கடந்த 29.12.2015 அன்று கோவையில் நடந்த Bi-Monthly meeting  மற்றும் அதன் பின்னர் நடந்த Informal  meeting ஆகியவற்றில் ஈரோடு தலைமை அஞ்சலகப் பிரச்சனையை நமது  PMG அவர்களிடம் சரியான முறையில் விவரித்துச் சொல்லி இந்த மாறுதல் உத்தரவு வழங்கப்பட மிக முக்கிய காரணமாய் இருந்த NFPE - P3 மாநிலச் செயலர் தோழர் J. ராமமூர்த்தி  மற்றும் மண்டலச் செயலர் திருப்பூர் தோழர் A. ராஜேந்திரன் ஆகியோருக்கும் JCA வின் உளப்பூர்வ நன்றிகள். மண்டல மட்டத்தில் இந்தப் பிரச்சனையில் தலையிட்டுப் பேசிய FNPO-R3 மண்டலச் செயலர் தோழர் M.ராஜாமணி அவர்களுக்கும் நன்றிகள் பல.

ஈரோடு  கோட்ட JCA வின் போராட்ட நடவடிக்கைகள் குறித்தான சுற்றறிக்கைகளை, செய்திகளை தங்களது வலைதளங்களில் பிரசுரித்து - போராடுகின்ற எங்கள் ஈரோடு தோழர்களுக்கு உத்வேகமளித்ததோடு போராட்டத்தின் நியாயத்தை தமிழகம் முழுவதும் அறியச் செய்த திருநெல்வேலி , சேலம் கிழக்கு உள்ளிட்ட மற்ற அனைத்துக் கோட்டச் சங்க நிர்வாகிகளுக்கும் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறோம். கடந்த செப்டம்பர் 2015-ல் புதுக்கோட்டையில் நடைபெற்ற NFPE - P3 மாநில மாநாட்டிலும் , அதற்குப் பின்னரும் தொடர்ந்து ஆதரவுக் கரம் நீட்டிய அனைத்துக் கோட்ட , கிளைச் செயலர்களுக்கும் நன்றிகள்.

எல்லாவற்றிற்கும்  மேலாக கடந்த இரண்டு வருடங்களாக ஈரோடு JCA வின் போராட்ட நடவடிக்கைகளான - கோரிக்கை அட்டை அணிதல் , ஆர்பாட்டங்கள் , குழுவாகச் சென்று JCA சார்பில் PMG அவர்களைச் சந்திப்பது போன்ற அனைத்து விதமான இயக்கங்களிலும் முழு ஈடுபாட்டுடனும், திரளாகவும் பங்கேற்ற ஈரோடு கோட்டம், பவானி கிளை , கோபி கிளை NFPE மற்றும் FNPO சம்மேளனங்களின் P3, P4, GDS  சங்க நிர்வாகிகளுக்கும் (மாநிலச் சங்க நிர்வாகி பவானி தோழர் A.எழில்வாணன்  உள்ளிட்டு) தோழர் , தோழியர்களுக்கும் வீர வணக்கத்தையும், வாழ்த்துக்களையும் , நன்றியினையும் நெஞ்சாரத் தெரிவித்துக் கொள்கிறோம்.

ஒற்றுமை கட்டுவோம் !
 அயராது தொடர்ந்து போராடுவோம் !!
ஊழியர் நலன் காப்போம் !!!
 - என்பதே தொழிற்சங்க முழக்கமாகும் .

இந்த முழக்கத்திற்கு கிடைத்த வெற்றியைப் போற்றுவோம் !
மேலும் முன்னேறுவோம் !! 
ERODE 638001 / 09.01.2016                               இவண், 
                                                                                                 K. சுவாமிநாதன் 
                                                                                                J.பாலமோகன்ராஜ் 
                                                                                                    JCA conveners  
                                                              


No comments:

Post a Comment