உலகெங்கிலும் உள்ள பெண்களின் உரிமைக்குரல் உரத்து ஒலிக்கும்
நாளாம் உலகப் பெண்கள் தினத்திலே அனைத்து மகளிருக்கும் NFPE தன் போராட்ட வாழ்த்துக்களை
உரித்தாக்கிக் கொள்கிறது.
உலக சமாதானம் , வாக்குரிமை , வேலை நேர குறைப்பு என்ற பரந்துபட்ட
கோரிக்கைகளின் பின்னணியில் உருவானதே உலகப் பெண்கள் தினம்.
1910 ல் KOPENGAHEN நகரில் நடந்த இரண்டாவது சோசியலிச பெண்கள் மாநாட்டில் கிளாரா ஜேட்கின் , அலெக்ஸாண்டர கொலந்தாய்
போன்ற பெண் கம்யூனிஸ்ட்களால் முன்மொழியப்பட்டு 1911 மார்ச் 8 முதல் பெண்களின்
போராட்டக் குரலாய் இத்தினம் ஒலிக்கப்பட்டு வருகிறது.
நடைமுறையில் பெண் உரிமை வருவதற்கு
உகந்த அரசியல் , சமூக ,
பொருளாதார, பண்பாட்டு களநிலை
உருவாகி பல்வேறு துறைகளில் பெண்கள் வெற்றி பெரும் நிலை உருவாகி வருகிறது.
சம வேலைக்கு சம ஊதியம்
சட்ட மன்றத்திலும் பாராளுமன்றத்திலும்
33 சத இட ஒதுக்கீடு
பாலியல் ரீதியான தாக்குதல்கள்
இல்லாத ஒரு நல்ல சூழ்நிலை
No comments:
Post a Comment