MENU BAR

Saturday 10 September 2016

7ஆவது ஊதியக்குழு பரிந்துரைகளை விரைந்து நிறைவேற்றிட வேண்டுகோள்

புதுதில்லி. செப். 7-
மத்திய அரசு 7ஆவது ஊதியக்குழு அளித்திட்ட பரிந்துரைகளின் அடிப்படையில் படிகள் (ALLOWANCES)தொடர்பான பரிந்துரைகளை உடனடியாக நிறைவேற்றிடவேண்டும் என்று அரசு ஊழியர்அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன.மத்திய அரசு 7ஆவது ஊதியக்குழு கூறியிருந்த படிகள் தொடர்பாக ஒரு குழு அமைத்திருந்தது. இக்குழு கடந்த வியாழனன்று கூடியது. மத்திய அரசு நிதி (செலவினங்கள்) செயலாளர் தலைமை வகித்தார். மத்திய அரசு ஊழியர் சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.கூட்டம் துவங்கிய உடனேயே சங்கங்களின் பிரதிநிதிகள், மத்தியஅரசு தான் உறுதி அளித்தபடிஉயர்மட்டக்குழு அமைக்காததற்கு தங்கள் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தினார்கள். ஜூலைமாதம் நடைபெற்ற கூட்டத்தின்போது மத்திய அமைச்சர்கள் குழு,குறைந்தபட்ச ஊதியம் மற்றும்பல்வேறு காரணிகள் குறித்து குழுஅமைக்கப்படும் என்று அரசுத்தரப்பில் ஒப்புக் கொண்டிருக்கிறது. ஆயினும் இதுநாள்வரையில் குழுஅமைக்கப்படவேயில்லை. ஊழியர் சங்கங்கள், மத்திய அரசுஊழியர்களுக்கான குறைந்தபட்ச ஊதியம் 26 ஆயிரம் ரூபாயாகநிர்ணயிக்கப்பட வேண்டும் என்றுவலியுறுத்தி வருகிறார்கள். 18ஆயிரம் ரூபாய் என்று ஊதியக்குழு பரிந்துரைத்திருப்பதை அவர்கள் ஏற்கவில்லை. மேலும், படிகள்தொடர்பாக ஊதியக்குழு அளித்துள்ள பரிந்துரைகளை 2016 ஜனவரி 1 முதல் அமல்படுத்திட உடனடியாகத் தீர்மானித்திட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்கள்.வீட்டு வாடகைப்படி அடிப்படைச் சம்பளத்தில் 10 முதல் 30சதவீதம் வரை நிர்ணயிக்கப்பட வேண்டும் என்றும் கோரியிருக்கிறார்கள். இது ஊழியர்கள் பணியாற்றும் நகரத்திற்கேற்ப அமைந்திட வேண்டும்; மேலும் குழந்தைகளின் கல்விப்படி மூவாயிரம் ரூபாய் வழங்கிட வேண்டும்;விடுதி மானியத் தொகை 10 ஆயிரம்ரூபாய் வழங்கிட வேண்டும்; இவ்வாறு வழங்கப்படும் படிகள் அனைத்திற்கும் வரி விலக்கு அளித்திட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.குழந்தைகளுக்கான கல்விப் படிகளில் முதுகலை மற்றும் தொழிற்கல்விப் படிப்புகளும் சேர்க்கப்பட வேண்டும் என்றும், வடகிழக்குப் பிராந்தியத்தில் சிறப்பு பணிப்படி உயர்த்தப்பட வேண்டும் என்றும் கோரினர்.நிலையான மருத்துவப் படி 2 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட வேண்டும்.கூடுதல்நேர பணிப் படி,சிறிய குடும்ப படிமற்றும் உடைப்படி ஆகியவை மாற்றி அமைக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.ரத்து செய்யப்பட்டிருக்கிற பல்வேறு துறை படிகளும் தொடர்ந்துவழங்கப்பட வேண்டும் என்றும் கோரியுள்ளனர். (ந.நி)

No comments:

Post a Comment