MENU BAR

Friday, 1 March 2019

🚩 *பாசுர்/சிவகிரி முறைகேடு குறித்து Directorate/CPMG/PMG அவர்களுக்கு கடிதம்*🚩









🚩 *பாசுர்/சிவகிரி முறைகேடு குறித்து Directorate/CPMG/PMG அவர்களுக்கு கடிதம்*🚩

தோழியர்களே..
தோழர்களே..
கடந்த 03.02.2019 மற்றும் 04.02.2019 அன்று நமது கோட்ட சங்கம் சார்பாக சென்னையில் மாநில சங்கத்துடன் பாசுர்/சிவகிரி SO முறைகேடுகள் குறித்தும், கோட்ட நிர்வாகம் அப்பாவி ஊழியர்கள் மீது chargesheet போடுவது குறித்தும் நாம் ஆலோசனை செய்துவிட்டு வந்திருந்தோம் .

அதன் தொடர்ச்சியாக நமது அகில இந்திய முன்னாள் பொது செயலாளர். தோழர். KVS அவர்கள் தொடர்ந்து நமது கோட்ட சங்கத்திற்கு ஆலோசனை தெரிவித்து வருகிறார்..

மேலும் நமது கோட்ட சங்க முன்னணி நிர்வாகிகள் சேகரித்து அளித்து இருந்த தகவல்கள் கொண்டு ,தோழர்.KVS அவர்கள் ஒரு detailed ( 5 paged ) memorandum ஒன்று தயார் செய்து அதை மாநில சங்கத்திடமும் ,அகில இந்திய சங்கத்திடமும் அளித்துள்ளார்..

அதனை (ie. Memorandum regarding PSR/SVG case) உடனே நமது மாநில செயலர். தோழர். வீரமணி அவர்களும் நேற்றே 28.02.2019 அன்று நமது CPMG அவர்களை நேரில் சந்தித்து Memorandum அளித்து ,அப்பாவி ஊழியர்களை விடுத்து, தவறு இழைத்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரியுள்ளனர்..
CO மூலம் நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் மாநிலம் முழுவதும் போராட்டங்கள் முடுக்கி விடப்படும் என்றும் ஆணித்தரமாக பதிவிட்டு வந்துள்ளனர்..
மேலும் அதே memorandumஐ மாநில சங்கத்தில் இருந்து நமது மேற்கு மண்டல PMG அவர்களுக்கும் அளிக்க உள்ளது .


*அகில இந்திய சங்கம் மூலம் நடவடிக்கை*
அதே போல் அகில இந்திய சங்கமும் இன்று 01.03.2018 அன்று நமது கோட்ட PSR/SVG case குறித்த memorandumஐ நமது துறை இயக்குனரகத்திற்கு அளிக்க உள்ளது என்பதையும் இங்கு நாம் தெரிவித்து கொள்கிறோம்..

ஆகவே தோழமைகளே நமது மாநில சங்கம் மூலமாகவும், அகில இந்திய சங்கம் மூலமாகவும் இந்த முறைகேடுகளில் தொடர்பில்லாமலே பாதிக்கப்பட்டு இருக்கும் தோழமைகள் பாதுகாக்கப்படவும், தவறு இழைத்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் நாம் வலியுறுத்தி உள்ளோம்..

மேலும் நிர்வாகத்தின் போக்கை பொறுத்து நமது அடுத்தகட்ட போராட்டங்கள் வெடிக்க உள்ளன என்பதையும் இங்கு நாம் தெரிவித்து கொள்கிறோம்..


தோழமையுடன்,
ஈரோடு கோட்ட NFPE -P3🚩

No comments:

Post a Comment

E
D
O
R
E
E
P
F
N