MENU BAR

Thursday 22 August 2019

21.08.2019 மாபெரும் ஆர்ப்பாட்டம்


தோழமைகளே..
23அம்ச கோரிக்கைகளை முன்வைத்து நமது மத்திய அஞ்சல் JCAவானது பல்வேறு கட்ட போராட்ட இயக்கங்களை நடத்த அறைகூவல் விடுத்துள்ளது அதில் முதற்கட்ட போராட்டமாக 29.07.2019 திங்கள்கிழமை அன்றே நமது  ஈரோடு தலைமை அஞ்சலகம் முன்பு மதிய உணவு இடைவெளி ஆர்பாட்டம் நடத்தினோம்.
மேலும் மத்திய JCAவின் அறைகூவலின் இரண்டாம் கட்ட  போராட்டமாக  21.08.2019 புதன்கிழமையன்று மாலை 06:15 மணியளவில் நமது ஈரோடு கோட்ட அலுவலகம் முன்பு (ஈரோடு தலைமை அஞ்சலக வளாகம் ) மாபெரும் ஆர்பாட்ட இயக்கம் நடைபெற்றது.
நமது ஈரோடு கோட்டத்தில் உள்ள NFPE மற்றும் FNPOவை சார்ந்த  ஈரோடு , பவானி மற்றும் கோபி கிளைகளில் இருந்து சுமார் 200க்கும் மேற்பட்ட P3,P4 மற்றும் GDS  தோழமைகள் நமது ஈரோடு தலைமை அஞ்சலகம் முன்பு திரண்டு வந்து இருந்தனர்.

கோட்ட NFPE சங்கத்தின் convenor தோழர்.K.சுவாமிநாதன் மற்றும் கோட்ட FNPO செயலர் தோழர்.P.கணேசன் அவர்கள் கூட்டுத்தலைமை ஏற்று இந்த ஆர்பாட்ட கூட்டத்தை சிறப்பாக நடத்தினர். மேலும் ஈரோடு NFPE கோட்டச் செயலர் தோழர்
S.செல்லமுத்து, ஈரோடு FNPO கோட்டச் செயலர் தோழர் P.கணேசன், கோட்ட NFPE P4 கோட்ட செயலர் தோழர்.சிவக்குமார்,NFPE மாநில உதவி செயலர் தோழர்.N சதாசிவம்,ஈரோடு கோட்ட NFPE GDS செயலர் தோழர் மாயவன், ஈரோடு கோட்ட FNPO GDS செயலர் தோழர்.செல்வராஜ், பவானி கிளை NFPE GDS செயலர் தோழர் தங்கராசு, கோபி கிளை NFPE GDS உதவி செயலர் தோழர் தங்கவேல் ஆகியோர் சிறப்பாக உரையாற்றினார்கள்
ஆர்பாட்ட கூட்டத்தில் முக்கியமாக
1.       UNSCEINTIFIC & UNREALISTIC TARGET நிர்ணயிப்பதை எதிர்த்தும்
2.       மத்திய JCAவின் 23அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும்
பல்வேறு கோஷங்கள் எழுப்பப்பட்டன...கடும் மழை வந்த போதும் தளராமல் , கோட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் இருந்து தோழமைகள் இந்த கூட்டத்தில் பங்கேற்றது , இந்த ஆர்பாட்டத்தின் வெற்றியை பறைசாற்றும்.

மேலும்  ஆர்பாட்டத்தின் அவசியம் குறித்து ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து பத்திரிகைகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு, ஊடக அளவில் நமது போராட்டங்களை ஆவணபடுத்தி உள்ளோம்..
இறுதியாக ஈரோடு கோட்ட NFPE சங்கத்தின் அமைப்புச் செயலர் தோழர்N கார்த்திகேயன் நன்றியுரையுடன் ஆர்பாட்டம் சிறப்புற நிறைவு பெற்றது.

ஆர்ப்பாட்ட கூட்டத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களில் சிலவற்றை அனைவரின் பார்வைக்கும் இங்கு நாம் பதிவிட்டுள்ளோம்.



































தோழமையுடன்
ஈரோடு NFPE P3. 

No comments:

Post a Comment