மத்திய அஞ்சல் ஊழியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு (POSTAL
JCA), ஏற்கனவே மே மாதம் 6 ந் தேதி முதல் நடைபெறுவதாக இருந்து ஒத்தி வைக்கப்பட்ட காலவரையற்ற வேலை நிறுத்தம், மீண்டும் எதிர் வரும் 23.11.2015 முதல் நடைபெறும் என அறிவித்துள்ளது. மத்திய அரசின்
பிடிவாதப் போக்கு காரணமாகவும் , அஞ்சல் துறையின் மெத்தன போக்கு
காரணமாகவும் கீழ்க் காணும் முக்கிய கோரிக்கைகள் இதுவரை நிறை வேற்றப்படவில்லை.
1. அஞ்சல் துறையில் பணியாற்றும் 2.65 லட்சம் GDS ஊழியர்களின்
ஊதியம் மற்றும் பணித்தன்மை குறித்து ஏழாவது ஊதியக் குழுவே பரிசீலிக்க வேண்டும் .
2. கேடர் சீரமைப்புத் திட்டம் உடனடியாக நடைமுறைப்படுத்தப் பட வேண்டும் .
3. அனைத்து பகுதிகளிலும் காலிப் பணியிடங்கள் முறையாக
முழுவதுமாக நிரப்பப் படவேண்டும்.
ஏற்கனவே ரயில்வே, பாதுகாப்பு துறை ஊழியர் சங்கங்கள் உள்ளிட்ட
அனைத்து மத்திய அரசு ஊழியர்களின் அமைப்பான NATIONAL COUNCIL JCM ஊழியர் தரப்பு சங்கங்கள் சார்பாக எதிர்வரும் 23.11.2015 முதல் GDS ஊழியர் கோரிக்கை உள்ளிட்ட ஊதியக் குழு தொடர்பான மற்றும் இதர முக்கிய கோரிக்கைகளை நிறைவேற்றிடக் கோரி காலவரையற்ற வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது ஏழாவது ஊதியக் குழு தன்னுடைய அறிக்கையை அரசுக்கு
சமர்ப்பிக்க உள்ள சூழலில் இந்த வேலை நிறுத்தம் குறித்து மாற்று தேதி அல்லது மாற்று முடிவு NC JCM ஊழியர் தரப்பு தலைவர்களால் அறிவிக்கப்பட்டாலும் கூட, நமது PJCA வின் வேலை நிறுத்தம் இதே தேதியில் இருந்து மேற்கண்ட மூன்று கோரிக்கைகளுக்காக நிச்சயம் நடைபெறும் என்றும் அறிவிக்கப் பட்டுள்ளது.
Again postponed.
ReplyDelete