வானளாவிய அதிகாரம் படைத்த அதிகாரியின்
அதிகார துஷ்பிரயோகங்கள் :
1) D.G அவர்களே உத்தரவு போட்டாலும்
பரவாயில்லை- இங்கே நான் தனியாக Special Order book
-ல் உத்தரவு
போடுகிறேன் என்று உத்தரவை எழுத்து பூர்வகமாக வழங்கி MPKBY Agent கள் மூலமாக OPEN செய்யப்பட்ட
RD கணக்குகளின் முதிர்வு தொகைக்கு cheque வழங்குங்கள் என்று சொன்ன ஒரு அதிகாரியை நாம் பெற்றுள்ளோம். (இப்படி கோரிக்கை வைத்தவர்களின்
நிர்பந்தத்திற்கு இவர் பணிந்து போனதன் மர்மம் என்ன ? ) அதே அதிகாரி அந்த special உத்தரவை வாபஸ்
வாங்கியதன் பின்னணி
என்ன ?
2) SSP அவர்களே உத்தரவு
போட்டாலும் பரவாயில்லை - இங்கே நான் தனியாக உத்தரவு போடுகிறேன் என்று அலுவலக EB பில்லை தலைமை அஞ்சலக கவுன்டரில் கட்டக்
கூடாது - Group 'D' ஊழியர் பணத்தை (லட்சக் கணக்கில்) எடுத்துக் கொண்டு EB அலுவலகம் சென்று மணிகணக்கில் Queue வில் நின்று பணம் கட்டி
விட்டுத்தான் வர வேண்டும் என்று மாதா
மாதம் நிர்பந்திக்கின்ற ஒரு அதிகாரியை நாம் பெற்றுள்ளோம் . (இது குறித்து SSP அவர்களிடம் மாதாந்திரப்
பேட்டியில் தகவல் அளித்த பின்னரும் தொடர்ந்து இப்படி நடப்பதன் மர்மம் என்ன?
3) SB - Rules மற்றும் உத்தரவுகள் எப்படி
வேண்டுமானாலும் இருக்கட்டும் - SB withdrawal form மற்றும் Closure
form முறைப்படி
இல்லாமல் இருந்தாலும் பரவாயில்லை - நான்
உத்தரவு போடுகிறேன் இந்தக் காரியத்தை இவருக்குச் செய்து கொடுங்கள் என்று SB பகுதி ஊழியர்களிடம்
மிரட்டும் பாணியில் உத்தரவு இடுகின்ற ஒரு அதிகாரியை நாம் பெற்றுளோம். (நமது
ஊழியர்கள் witness போட்டாலும் ID proof photo copy கேட்டு இல்லாத சட்டத்தை அமுலாக்கி
வருகின்ற அதிகாரி இருக்கின்ற சட்டங்களை சிலருக்காக மட்டும் relax செய்து கொள்வதின் பின்னணி
என்ன ?
4) LRPA , Junior என்ற எந்தவிதமான norms யையும் பார்க்கத் தேவையில்லை - யாரை வேண்டுமானாலும் Deputation அனுப்புவேன் என்று ஒரு சீனியர் ஊழியரை Deputation அனுப்ப உத்தரவு போடுகின்ற ஒரு அதிகாரியை நாம் பெற்றுள்ளோம்.
இவரது வானளாவிய
அதிகார உத்தரவுகளால் பாதிக்கப்பட்ட
1) GDS - பதிலிகள் குறித்தும்
2)
01.04.2015 அன்று PMG அவர்களின்
உத்தரவு இருந்தும் சம்பளம் பெற முடியாமல் போன CBS அலுவலக ஊழியர்கள் குறித்தும்
3) ஈரோடு மனமகிழ் மன்ற
உறுப்பினர்கள் பட்ட சிரமங்கள் குறித்தும்
நாம் JCA மூலம் அனுப்பிய புகார்களின்
அடிப்படையில் - இந்த அதிகாரியின் இது போன்ற ஊழியர் விரோத நடவடிக்கைகள் இனிமேல் தொடராது என்று மரியாதைக்குரிய நமது மேற்கு மண்டல PMG அவர்கள் JCA விடம் தெரிவிதுள்ளார்கள்.
மேலே சுட்டிக் காட்டியபடி இவரது ஊழியர் விரோத நடவடிக்கைகள் தொடர்வதால் ஈரோடு JCA மீண்டும் PMG அவர்களை அணுக வேண்டிய
நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது என்பதை உறுப்பினர்களுக்கு தெரிவித்துக் கொள்கிறோம்.
இந்த பிரச்சனைக்காக JCA எடுக்கும் அனைத்து
நடவடிக்கைகளுக்கும் உறுப்பினர்கள் முழு ஒத்துழைப்பு நல்க வேண்டுகிறோம்.
இவண் ,
K.Swaminathan
J.Balamohanraj
JCA Conveners
30.11.2015
No comments:
Post a Comment