தோழமைகளே..
மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனத்தின் அறைகூவல்படி இன்று *23.04.2019 செவ்வாய்க்கிழமை மாலை 6:15 மணியளவில் ஈரோடு தலைமை அஞ்சலகத்தில்* கீழ்காணும் இயக்கங்கள் நடத்தப்பட்டன.
*கோரிக்கை :* NPS எனப்படும் புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்ய கோரி
*போராட்டம் :* மெழுகுவர்த்தி ஏந்தும் ஆர்ப்பாட்டம்
*பங்குபெற்றோர் எண்ணிக்கை :* 60க்கும் மேற்பட்டோர்
*பங்குபெற்ற சங்கங்கள் ;*
NFPE -அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கங்கள் (P3,P4,R3,R4 மற்றும் GDS) - ஈரோடு, பவானி மற்றும் கோபி கிளைகள்
*&*
அகில இந்திய அஞ்சல் RMS ஓய்வூதியர் சங்கம்,ஈரோடு
*&*
மத்திய அரசு ஊழியர் சங்க கூட்டமைப்பு, ஈரோடு.
*ஆர்ப்பாட்ட தலைமை :*
தோழர்.N.கார்த்திகேயன்,
கோட்ட செயலாளர்,
அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கம்-P3,
ஈரோடு.
*NPS பாதிப்புகள் பற்றிய விளக்கவுரை :*
தோழர். பழனிவேலு,
பொருளாளர், அகில இந்திய அஞ்சல் RMS ஓய்வூதியர் சங்கம்,ஈரோடு.
*தோழர்.NG அவர்களின் தொழிற்சங்க வரலாறு பற்றிய பாராட்டுரை :*
தோழர். சத்ருக்கன்,
கோட்ட செயலாளர், அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கம்-GDS,ஈரோடு.
*ஆர்ப்பாட்ட/போராட்ட கோஷத்தை முன்னெடுத்தவர் :*
தோழர்.K. சுவாமிநாதன்,
கோட்ட உதவி செயலாளர்,
அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கம்-P3,ஈரோடு.
*நன்றியுரை :*
M. தங்கராஜ்,
கிளை செயலாளர்,
அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கம்-GDS,
பவானி.
*ஆர்ப்பாட்ட கூட்டத்தின் முக்கிய நிகழ்வுகள்*
👇👇👇
🚩 மத்திய அரசிடம் *NPS திட்டத்தை ரத்து செய்ய கோரி ஒரு வலுவான கோஷங்களும், மெழுகுவர்த்தி ஏந்தும் ஆர்ப்பாட்டமும்* நடைபெற்றது.
🚩 மத்திய சங்கத்தின் முன்னாள் செயல் தலைவரும், தமிழ் மாநில சங்கத்தின் முன்னாள் உதவி செயலாளரும், ஈரோடு கோட்டத்தின் முன்னாள் செயலாளருமான *தோழர். NG என்கிற N.கோபாலகிருஷ்ணன் அவர்களின் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கல்கள் தெரிவிக்கப்பட்டும், மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது*.
🚩 சமீபத்தில் *இலங்கையில் நடந்த குண்டு வெடிப்பில் இறந்த அப்பாவி போதுமக்களுக்காக கண்ணீர் அஞ்சலி செலுத்தப்பட்டது*..
( *குறிப்பு :* ஆர்ப்பாட்ட கூட்டத்தின் சில புகை படங்கள் அனைவரின் பார்வைக்கும் இங்கு பதியப்படுக்கின்றது..)
தோழமையுடன்,
அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கங்கள் - P3,P4 மற்றும் GDS,
ஈரோடு, பவானி மற்றும் கோபி.🚩
No comments:
Post a Comment