சென்னை CPMG அலுவலக வளாகத்தில் நடைபெற்ற உண்ணா விரதப் போராட்டத்திற்கு NFPE அஞ்சல் நான்கின் அகில இந்திய அமைப்புச் செயலர் தோழர் கோபு. கோவிந்தராஜன் மற்றும் FNPO அஞ்சல் நான்கின் மாநிலச் செயலர் தோழர். குணசேகரன் கூட்டுத் தலைமை ஏற்றனர் .
NFPE சம்மேளனத்தின் முன்னாள் மா பொதுச் செயலர் தோழர்.K .R ., FNPO சம்மேளனத்தின் மா பொதுச் செயலர் தோழர். D . தியாகராஜன் , NFPE சம்மேளனத்தின் உதவிப் பொதுச் செயலர் செயலர் தோழர். ரகுபதி , NFPE அஞ்சல் மூன்றின் செயல் தலைவர் தோழர் NG , உதவிப் பொதுச் செயலர் தோழர் வீரமணி , NFPE தமிழ் மாநில அஞ்சல் மூன்றின் செயலர் தோழர்
J.R., FNPO தமிழ் மாநில அஞ்சல் மூன்றின் செயலர் தோழர் முத்துக்கிருஷ்ணன் , NFPE அஞ்சல் நான்கின் மாநிலச் செயலர் (எலெக்ட்) தோழர் ராஜேந்திரன் , NFPE R 3 மாநிலச் செயலர் தோழர் சங்கரன், FNPO
R 3 மாநிலச் செயலர் தோழர் குமார் , NFPE SBCO மாநிலச் செயலர் தோழர் அப்பன்ராஜ் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டு போராட்டத்தை வாழ்த்திப் பேசினார் .
உண்ணா விரதப் போராட்டத்தில் கலந்து கொண்ட அஞ்சல் நான்கின் மாநிலச் சங்க நிர்வாகிகள் மற்றும் கோட்ட / கிளைச் செயலர்கள் அனைவரும் அடுத்த கட்ட போராட்டமான அரை ஆடை போராட்டத்தை தமிழகமெங்கும் மிகப் பெரிய அளவில் நூற்றுக்கு நூறு விழுக்காடு வெற்றிகரமாக நடத்திட வேண்டும் என்று சூளுரைத்துப் பேசினார் . இறுதியில் லூயில் மணி அவர்கள் நன்றி கூற , ஆர்ப்பாட்ட கோஷங்களுடன் போராட்டம் மாலை 05.00 மணியளவில் இனிதே முடிக்கப் பட்டது .
நமது கோட்டதிலிருந்து ஈரோடு கோட்ட P4 செயலர் B. சிவகுமார் மற்றும் கோபி P4 தோழர் S. சக்திவேல் ஆகியோர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment