MENU BAR

Thursday 11 July 2013

கேள்வியும் நானே பதிலும் நானே!


கேள்வி:

பரதேசி படத்தில் ஊர் ஊராகச் சென்றுகங்காணியால் வேலைக்கு அழைத்துச் செல்லப்பட்டவர்களையும் , கல்லூரி, கல்லூரியாகச் சென்று "இன்டர்வியு" மூலம் இன்றைய கம்பெனிகளால் வேலைக்கு அமர்த்தப்படுபவர்களையும் ஒப்பிடலாமா ?

பதில்:

புலம்பெயர்தல்,குடும்பம்-உறவுகளைப் பிரிதல், உள்ளூர்ப் பண்டிகை மற்றும் விசேசங்களிலிருந்து விலகுதல் என்பவை இருதரப்பினருக்கும் பொதுவானவைதான். கூலி மறுப்பு மட்டுமல்ல, தங்களது பாசாங்கற்ற வாழ்க்கை கேள்விக்குறியானதால்தான் - தாங்கள் அடிமைகளாக்கப் பட்டுவிட்டதை முற்றிலும் உணர்ந்தார்கள் முன்னவர்களான பரதேசி பட கூலிகள். கணிசமான சம்பளம், "இன்சென்டிவ்" என்பன தரும்மயக்கம்-பணியிடத்திற்கு செல்ல ஆகும் மிகுதியான பயணநேரம், வேலைப்பளு ஆகியன,தாங்கள் தற்போது எந்த நிலையில் இருக்கிறோம் என்பதையே புரிந்து கொள்ள விடுவதில்லை-பின்னவர்களான I.T துறையினரை.

கே சுவாமிநாதன் ,
கோட்ட செயலர்,
NFPE P 3 ஈரோடு .
நன்றி: உழைக்கும் வர்க்கம் ஜூலை 2013இதழ்.
 

1 comment:

  1. I.T துறைகூலி அடிமைகளின்
    வாழ்க்கைதரம் உய‌ர்ந்த அளவு
    அவர்களின் குடும்பஉறவு,
    சமூக உணர்வு உயராதது
    நம்அவ‌லம்.சுவாமிநாதன்.
    தோழமையுடன் ‍
    kandh.praba,P.Puram

    ReplyDelete