MENU BAR

Wednesday, 25 February 2015

படித்ததில் பிடித்தது கவிதைக்கு CIRCLE UNION கொடுத்துள்ள விளக்கம்:

சிந்தனைக்கு  ஒரு கவிதை 

ஈரோடு தோழர் சுவாமிநாதன்  தங்களுடைய அஞ்சல் மூன்று வலைத்தளத்தில்  'விகடன்' பத்திரிகையில் வெளிவந்த சிந்தனையைத் தூண்டும் 'புலி ஆடு புல்லுக்கட்டு' புதிர் விளையாட்டு  ஆட்டம் பற்றிய  
ஒரு கவிதையின் பகிர்வை அளித்துள்ளார். கவிதை என்பது காலத்தால் அழியாதாது. பல சிந்தனைகளை சில வரிகளில் தருவது.  இந்தக் கவிதையின் முடிவில் கதையின் களமாகிய 'ஆறு ' காணாமல் போயிருந்தது என்று முடிக்கப்பட்டுள்ளது.   

ஆம்  நாம் இன்று 'INFOSYS '  'FINACLE ' 'McCAMISH ' என்று தினம்ஆடும் -  ஆடு, புலி , புல்லுக்கட்டு ஆட்டத்தில், கடைசியில்  நம்முடைய 
களமாகிய  'ஆறு '( இலாக்கா ) காணாமல் போய்விடும் என்று 
இந்தக் கவிதை  நமக்கு தெரிவிக்கிறது  !  

நமக்குப் புரிகிறது ! நம்மை ஆளும் நிர்வாகத்திற்கு இது புரிகிறதா ?  புரியுமா ? புரிய வேண்டும் என்பதே நம் வேண்டுகோள் ! 
நாம் அவர்களுக்கு எதிரி அல்ல . பிரச்சினைகளை எடுத்துச் சொல்லுகிறோம். தீர்க்க வேண்டிய  அல்லது இலாக்காவை காக்க வேண்டிய இடத்தில் அவர்கள் இருப்பதால்  
அவர்களிடம்தான் நாம்  சொல்ல முடியும் . 

பிரச்சினைகளை சரியாகப் புரிந்துகொண்டு  அதனை தீர்ப்பதில் 
அவர்கள் ஈடுபட வேண்டும் என்பதே  நம்முடைய  வேண்டுகோள். 
மாறாக  இத்தனை துன்பங்களையும் தாங்கி நிற்கும்  ஊழியர்களையே  அவர்கள் எதிரிகளாக நினைப்பது  தவறல்லவா ?  

அஸ்திவாரமான  ஊழியர்களுக்கு,  பிரச்சினைகளில்  நிர்வாகம் அரவணைப்பு கொடுக்க வேண்டும் . அடித்து  நொறுக்க எண்ணக்கூடாது ! 
அடித்து நொறுக்கினால் 'ஆறு ' காணாமல் போனபின்பு  அவர்களும் இருக்க மாட்டார்கள் ! இதுவே முற்றிலும் உண்மையாகும் !
இதுவே 'புலி, ஆடு, புல்லுக்கட்டு' கவிதை தரும் செய்தி !

No comments:

Post a Comment