MENU BAR

Tuesday, 31 July 2012

பணி நிறைவு பாராட்டு


இன்று (31.07.2012) பணி ஓய்வு பெறும், மிலிடரி என அனைவராலும்
அன்பாக அழைக்கப்படும் தோழர். S . சண்முகம் ,APM, ERODE HPO அவர்களுக்கு , NFPE ஈரோடு கோட்ட சங்கத்தின் சார்பில் நெஞ்சார்ந்த பாராட்டுக்களையும்,வாழ்த்துகளையும்தெரிவித்துகொள்கிறோம். இவர் 1974 ல் PA, ERODE வாக இலாகாவில் சேர்ந்தார். மேலும் 1975 முதல் 1987 வரை ARMY POSTAL SERVICE (APS ) க்கு DEPUTATIONல் சென்று நாட்டுக்காக சேவையாற்றி, மீண்டும் 1987 ல் இலாக்காவுக்கு திரும்பி , இன்று APM , Erode HO வாக பணி ஒய்வு பெறுகிறார் என்பது குறிப்படத்தக்கது.


இன்று (31.07.2012) பணி ஓய்வு பெறும், ஈரோடு கோட்ட முதுநிலை அஞ்சல் கண்கணிப்பாளர் திரு. P. ஸ்டாலின் அவர்களுக்கு , NFPE ஈரோடு கோட்ட சங்கத்தின் பாராட்டுக்களையும்,வாழ்த்துகளையும்தெரிவித்துகொள்கிறோம்.  இவர் 1973 ல் PA, BHAVANI HO வாக இலாகாவில் சேர்ந்தார். பிறகு 18 ஆண்டுகள் ஆர்மி போஸ்டல் சர்வீஸ் (APS ) ல் சேவை செய்து மீண்டும் இலக்காவுக்கு திரும்பிய பிறகு, நமது மண்டலத்தில் பல்வேறு உயர் பதவிகளில் பணியாற்றி , இன்று SSPOs , Erode Division ஆக பணி ஒய்வு பெறுகிறார் என்பது குறிப்படத்தக்கது.

Thursday, 26 July 2012

அடிக்கடி டென்சனா..? எளிய தீர்வு..!

இப்போதெல்லாம் எதுக்கெடுத்தாலும் டென்சன்..டென்சன் தான் போங்க.. காலையில ஸ்கூலுக்குப் புறப்பட்ட பிள்ளைகளிலிருந்து, அவலகத்துக்கு புறப்பட பெற்றோர்கள் வரைக்கும் இந்த டென்சன் ஆட்டிப் படைக்குது... காரணம் என்ன? நம்முடைய செயல்களை நாம் முறைப்படுத்தாது தான்.. மற்றபடி டென்சனுக்கு மற்றவர்கள் என்றுமே காரணமாக இருக்கமாட்டார்கள்.

ways to reduce tension

டென்சன்(tension) என்றால் என்ன?

டென்சன் என்ற ஆங்கில வார்த்தைக்கு பல தமிழ்வார்த்தைகளைச் சொல்லலாம். மன இறுக்கம், கோபம், மனக் குழப்பம்...இப்படி. குறிப்பாக சொல்லவேண்டுமானால் மன இறுக்கம்தான். அந்த மனசு யாரிடம் இருக்கிறது.. நம்மிடம்தானே...? அப்போ டென்சனுக்கு யார் காரணம்.. நாம் தானே..? நம்மிடம் உள்ள மனசு இறுகி அதன்விளைவாக குழப்பச் சூழ்நிலை அடைகிறது.. அந்த மனத்தை யார் நிர்வகிப்பது.. நாம்தானே...!!!

அதனால் உங்களுடைய மன இறுக்கத்திற்கு மற்றவர்கள் எப்போதும் காரணமாக இருக்கமாட்டார்கள் என்கிற உண்மையை மட்டும் நன்றாக உணர்ந்துகொள்ளுங்கள். சரி. இந்த டென்சனை எப்படி குறைப்பது? ஒரு சில வழிமுறைகளைப் பார்ப்போமா..!

நீங்கள் வீட்டிலுள்ள பொருட்களை சரியான இடத்தில் வைக்கப் பழகிக்கொண்டாலே வாழ்க்கையில் பாதி டென்சன் குறைந்துவிடும். உதாரணமாக வீட்டுச் சாவி, கார் சாவி(Car Key), போன்றவைகளை சாவி மாட்டும் கொக்கியில் மாட்டிவிடப் பழகிக்கொள்ள வேண்டும். நம்மவர்கள் என்ன செய்கிறார்களென்றால் வீட்டைத் திறக்க வேண்டியது... கையில் உள்ள சாவியை பார்வை எங்கு செல்கிறதோ அந்த இடத்தில் வைத்துவிட வேண்டியது.. மறுபடியும் அந்த சாவி எடுக்கும்போது எங்கே வைத்தோம் என யோசிப்பார்கள்.. அமைதியான மனநிலையில் இருந்தால் ஓரளவுக்கு நினைத்துப் பார்த்து சாவியை மீட்டுவிடுவார்கள்.. இல்லையென்றால் வீட்டில் ஒரு பெரிய களேபரமே நடக்கும். நான் இங்கதான் வைத்தேன்... ஆனால் சாவியை காணல.. என்று பிள்ளைகளை கேட்டு நச்சரிப்பார்கள்.. இவன்தான் எங்கேயாவது எடுத்துப் போட்டிருப்பான் என்று அவர்களின் தவறை பிள்ளைகள் மீது காட்டும் பெற்றோர்களும் உண்டு. இதுபோல முக்கியமாக நாம் சரியான இடத்தில் வைக்கவேண்டிய பொருட்கள், ரேஷன் கார்ட்(family card), பால் கார்ட்(milk card), கிரடிட் கார்ட்(Credit Card), பேன் கார்டு(PAN CARD), டிரைவர் லைசென்ஸ்(Driver License), கார் சாவி, வீட்டு சாவி, இப்படி தினமும் பயன்படுத்தும் பொருட்களை அதனதன் இடத்தில் வைக்க வேண்டியது ரொம்ப முக்கியம்.

இந்தப் பிரச்னைகள் வராமல் இருக்க மறக்காமல் சாவிகொத்தை(Bunch of keys) சாவிமாட்டும் கொக்கியில் மாட்டியிருந்தால் சாவி எங்கும் போயிருக்காது அல்லவா?

இதுபோலதான் ஒவ்வொரு பொருளுக்கும் இந்த விதி முறை பொருந்தும். கிச்சனில் இருக்க வேண்டிய கரண்டி ஹாலில் வந்து விழுந்து கிடக்கும்.. கிச்சனில் தேடினால் கரண்டி எங்கிருந்து வரும்..? அதுபோலவே மளிகைப்பொருள் டப்பாக்களும் அப்படிதான்.. அவசரத்தில் மாற்றி மாற்றி வைத்துவிட்டு, பிறகு வாணலியை அடுப்பில் வைத்துவிட்டு எண்ணையை ஊற்றிவிட்டுதான் கடுகு டப்பாவைக் காணோமே..? என்று தேடுவார்கள்... பெண்களுக்கு இதுபோல பிரச்னைகள் அனுதினமும் நடக்கும் விஷயங்கள்(daily activities).. இதற்கெல்லாம் நாமேதான் காரணம். வைப்பதை ஒழுங்காக இருக்கும் இடத்தில் வைத்துவிட்டால் பிறகேது நமக்கு டென்சன்..

அனாவசிய செலவுகளைத் தவிர்க்க வேண்டும்:

ஒரு கடைத்தெருவுக்கு போகிறோம்.. தேவையான பொருட்களை வாங்க வேண்டும் என்ற எண்ணத்தில்தான் போவோம்.. ஆனால் அங்கே கடைவீதியில் குறைந்த விலையில் அதிக மதிப்புள்ள பொருட்களை(High value products at low prices) விற்பதாக கடைவிரித்துப் போட்டிருப்பார்கள். அதில் கண்ணைக் கவர்ந்த பொருளை உடனே யோசிக்காமல் எடுத்துவிடுவது.. பிறகு பார்த்துக்கொள்ளலாம்.. வீட்டிற்குத் தேவையான பொருட்களை இந்த மாதம் குறைத்து வாங்கிக்கொள்ளலாம்.. அல்லது வேறு எங்காவது கடன் வாங்கி ஓட்டிவிடலாம் என்று நினைவு மேலோங்கி, நாம் வாங்கச் சென்ற பொருளை வாங்காமல் வேறு பொருளை வாங்கிவிடுவது. பிறகு பாருங்களேன்.. மாத்த்தின் பதினைந்து தேதி தொடங்கியதிலிருந்தே திண்டாட்டம் ஆரம்பித்துவிட்டும். ஒவ்வொரு செலவையும் குறைக்க முடியாமல் திண்டாடுவார்கள். அன்றாட அத்தியாவசிய தேவைகளில் எதையும் குறைக்க முடியாது அல்லவா? இதன் விளைவாக வீட்டில் ஒரு போர்க்களமே வெடித்துவிடும் அபாயமும் இருக்கிறது.

திட்டமிடுதல் அவசியம்:

ஒரு சிலர் இருப்பார்கள். தங்களுக்கு எந்த பிரச்னையுமே வாரது என்று அசட்டு துணிச்சலுடன் இருந்துவிடுவார்கள். இது தான் வாழ்க்கையில் மிகப்பெரிய பிரச்னையைக் கொண்டுவந்துவிடும். சாதாரணமாகவே இது தோன்றினாலும் எதிர்காலப் பிரச்னையை எதிர்கொள்ள முடியாமல் செய்துவிடும். இந்த அசட்டுத் துணிச்சல்... உதாரணமாக பாருங்கள்.. ஒரு வேலைக்கோ, அல்லது தேர்வுக்கோ விண்ணப்பம் அனுப்ப வேண்டும். ஆனால் இவர்கள் கடைசித் தேதிவரை நாளை செய்துவிடலாமே.. நாளை செய்துவிடலாமே.. இன்னும் ஒரு வாரம் இருக்கிறது. இன்னும் 4 நாட்கள் இருக்கிறது இப்படி.. தனக்குத்தானே சமாதானம் செய்து இறுதிநாள் வரும் வரை இருந்துவிடுவார்கள். பிறகு இறுதிநாளில் விண்ணப் அனுப்பச் சென்றால்.. அங்கே இவர்களைப் போலவே பல ஆயிரம் பேர் நின்று கொண்டிருப்பார்கள்.. இறுதியாக தேர்வுக்கான விண்ணப்பம் அனுப்பவேண்டிய காலம் முடிந்திருக்கும்.. அதற்குப் பிறகுதான் இவர்களுக்கு டென்சன் வரும்..

சரி அடுத்த தேர்வுக்கு விண்ணப்பித்துக்கொள்ளலாம் என்று இவர்களுக்கு இவர்களே சமாதானம் செய்துகொள்வார்கள்... ஆனால் கடந்த முறை தேர்வு எழுதிய நண்பர்களோ, தெரிந்தவர்கள் தேர்வில் வெற்றிப்பெற்று பணியிலும் அமர்ந்துவிட்டால்.... அப்போது தோன்றுமே ஒரு டென்சன்.. ஆஹா... அது சொல்லில் வடிக்க முடியாது.. அடடா... "ஜஸ்ட் மிஸ் பண்ணிட்டோமே.." என்று உள்ளுக்குள் புழுங்குவார்கள்...

இந்த வகையில் இன்னும் சிலவற்றைக் கூறலாம்.. தேர்வுக்கு முன்னதாகவே புறப்பட்டு செல்வது.. அலுவலகத்திற்கு ஒரு அரைமணி நேரம் முன்னதாக செல்வது.. இப்படி வேலைக்குத் தகுந்த மாதிரியான சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் பின்பற்றுவது பலனைத் தரும்..

அதனால்தான் சரியான திட்டமிடுதல் அவசியம்..நேர நிர்வாகம் மிக முக்கியம். இதனால் நமக்கு டென்சனும் குறையும்.. மனதில் அந்த வேலையை செய்துவிட்டோம் என்ற திருப்தியும் இருக்கும்.

இது தற்போது மிக முக்கியமாக கடைப்பிடிக்க வேண்டிது.. சமையல் செய்யும் எரிவாயு கலன்(Cooking gas cylinder) தீர்வதற்கு முன்பே கவனமாக இருப்பது. அல்லது அதற்கு பதிலாக மண்ணெண்ணெய் அடுப்பு சரியாக இருக்கிறது அதற்கான மண்ணெண்ணெய் போதுமான அளவு இருக்கிறதா என்று சோதனை செய்துகொள்வது. திடீரென வீட்டிற்கு விருந்தினர்கள் வந்துவிட்டார்கள். அவர்களுக்கு இரண்டு மூன்று நாட்கள் விருந்துபடைத்திருப்போம். இதனால் திட்டமிட்டபடி குறிப்பிட்ட நாடகளுக்கு வரும் என்று எண்ணியிந்த கேஸ் ஒரு வாரம் முன்னதாகவே தீர்ந்துவிடும்.. இதனால் இந்த விஷயத்தை முக்கியமாக கவனிக்க வேண்டும். சாப்பாட்டு விஷயமல்லவா.. கவனம்.. கவனமாக இருக்கவேண்டும். (சகோதரிகள் இதை கவனிக்க...)

கோடைக்கால வெப்பம், மின்சாரப் பற்றாக்குறை... தீடிர் காற்று,... மழை.. இவற்றால் மின்சாரம் அதிகம் தடைபடும்.. (இப்போது தமிழக மக்கள் இதற்கு பழகிக்கொண்டுவிட்டார்கள் என நினைக்கிறேன்.) முன்னெச்சரிக்கையாக மெழுகு வர்த்தி, அல்லது டார்ச் லைட் போன்றவற்றை எடுத்துவைத்துக்கொள்வது நல்லது. இன்னும் சரியாக சாப்பிட உட்காரும்போதுதான் 'பட்' டென மின்சாரம் தடைபடும்.. பிறகு இருட்டில் தேடுவதென்பது கடினம்.. (இப்போ செல்போன் டார்ச் கையிலேயே இருக்கு பாஸ்...என்கிறீர்களா?..)

வெளியில் வாகனங்களை எடுத்துக்கொண்டு புறப்படுகிறோம் என்றால் உடனே வாகனத்தை நன்றாக சோதனை செய்துகொள்ள வேண்டும். இப்போது ஹெல்மெட்(Helmet) அணியாமல் சென்றால் அபராதம்.. விதிக்கிறார்கள் என்பதால் மறக்காமல் ஹெல்மெட் அணிந்து செல்வது நல்லது.. இது நம் உயிருக்கும் பாதுகாப்புதானே.. அதனால் அபாரத்திற்கு பயப்படாமல் உயிர்காக்க உதவும் என்ற எண்ணத்தில் எடுத்துச் செல்லலாம். வாகனத்தில் காற்று, தேவையான பெட்ரோல்(Petrol) இருக்கிறதா? என பார்த்துக்கொள்ள வேண்டும். இல்லையென்றால் ஆள்அரவமில்லாத இடத்தில் வண்டியை நிறுத்திவைத்துக்கொண்டு "ஙே' என முழிக்க வேண்டியதுதான். இதனால் ஏற்படும் டென்ஷன் இருக்கிறதே.. அனுபவபட்ட எனக்கு நன்றாக தெரியும்...

பள்ளி மாணவர்களாக இருந்தால் அன்றைய பாடங்களை, அன்றே முடித்துவிடுவது நல்லது.. இல்லையென்றால் காலையில் பள்ளிக்கு கிளம்பும்போது டென்சன்... அதைவிட மாணவர்களுக்கு மற்ற குறுக்கு வழிகளை மனம் வழிதேடும். ஆசிரியரை ஏமாற்ற நினைப்பது.. பெற்றோர்களை ஏமாற்ற நினைப்பது.. இப்படி. தொடர்ந்து இவ்வாறு அவர்கள் நினைக்கும்போது படிப்பின் தரம் குறைந்து அ்வர்கள் எதிர்காலத்தில் கஷ்டப்பட வேண்டியிருக்கும்.. எனவே அன்றாட கடன்களை கழிப்பதுபோல.. அன்றாட பாடங்களையும் அன்றன்றே முடிப்பது நல்லது. இதைப் பெற்றோர்கள் தவறாமல் கவனிப்பது அவசியம். உங்களுக்கு டென்சனும் குறையும்... ஆசிரியர்கள், பெற்றோர்களிடத்திலும் மாணவர்கள் நல்ல பெயர் எடுப்பார்கள்....

டெலிபோன் பில்(Telephone bill), கரண்ட்பில்(Current Bill) மற்ற மாதாந்திர தொகைகளை குறிப்பிட்ட தேதிக்கு முன்னதாகவே கட்டப் பழகிக்கொள்ளுங்கள்.. இதனால் உங்களுக்கு டென்சன் இல்லாமல் இருக்கும். அதே சமயம் உங்கள் பணமும் விரயமாகமல் இருக்கும். தேவையில்லாமல் காலகடப்புக் கட்டணம் செலுத்துவதையும் தடுக்கலாம். இப்போது ஆன்லைனிலேயே இந்த வசதிகள் வந்துவிட்டது.. இதை உடனுக்குடனேயே செய்துவிடலாம். போஸ்ட் ஆபிசிலும் இப்போது மின்சாரக் கட்டணம், டெலிபோன் பில் கட்டும் வசதி வந்துவிட்டது. அதனால் யோசிக்காமல் உடனேயே இவற்றை குறிப்பிட்ட தேதிக்குள் எளிதாக கட்டிவிட முடியும்.

விரலுக்கு ஏற்ற வீக்கம் என்று கேள்விப்பட்டிருப்பீர்கள்.. இது வேடிக்கையாக சொல்வதற்காக இல்லை.. நம்முடைய பொருளாதார வசதிக்கு தகுந்த மாதிரி நம்முடைய தேவைகளையும் வைத்துக்கொள்ள வேண்டும். ஏதோ ஒரு சினிமா படத்தில் தகுதிக்கு மீறிய செலவுகளை செய்து, பிறகு குடும்பம் வறுமையில் கஷ்டப்படும்.. அந்த நிலைமை உருவாக்க விடாதீர்கள்.. பக்கத்து வீட்டில் புது கார் நிற்கிறது.. நாமும் அதை வாங்க வேண்டும் என்று நினைப்பது தவறல்ல.. அதற்கான வருமானம் இல்லாமல், கடன் வாங்கி வாங்குவதுதான் தவறு.. பிறகு அதை கட்ட முடியாமல் திண்டாடும் போது ஏற்படும் கஷ்டங்கள், மேலும் உங்களை டென்சனுக்கு உள்ளாக்கும். அதனால் உங்களுடைய பொருளாதார வசதிக்கு தகுந்த மாதிரி உங்களுடைய தேவைகளையும் வைத்துக்கொள்ளுங்கள்.

மேலே கூறியதை சுருக்கமாக சொல்வதென்றால்... திட்டமிடாமை.., அதிக எதிர்பார்ப்பு.. செயல் ஒழுங்குமுறை இல்லாமை...இவைதான் முக்கியமாக நம்முடைய டென்சனுக்கு காரணம். இதன் கூடவே வேறொன்றையும் சேர்த்துக்கொள்ளலாம்.. அதுதான் நான் அடிக்கடி சொல்லும் வார்த்தை தன்னம்பிக்கை..

தன்னம்பிக்கை இருந்தால் வாழ்க்கையில் வெற்றி மேல் வெற்றிதான்...

டென்சன் என்பதே உங்களை எட்டிப்பார்க்காது.. காரணம் தன்னம்பிக்கை உள்ளவன், திட்டமிட்டு, சரியாக செயல்படுத்தும் திறனைக் கற்று வைத்திருப்பான்.. ஏதேனும் குழப்ப சூழ்நிலைகளில் அமைதியாக சிந்தித்து சரியான நேரத்தில் முடிவெடுப்பான்.. சின்ன சின்ன விஷயங்களுக்கும் டென்சன் ஆகவே மாட்டான்.....அதற்கு என்ன காரணம் என்று சிந்திக்கும்போது... கடைசியில் அந்தக் காரணத்திற்குரிய நபர் நாமேதான் என்று நம்மை நோக்கியே அந்த அம்பு பாய்ந்துவரும்.. எனவே எந்த பிரச்னைக்கும், டென்சனுக்கும் நாம்தான் காரணம்.. செயல்களை சரியாக திட்டமிட்டு முறைப்படுத்துங்கள்.. நிதானமாக யோசித்து நல்லதை யார் சொன்னாலும் , வயது வித்தியாசமில்லாமல் கேட்டு, அது சரியென்றால் ஏற்றுக்கொள்ளுங்கள்.. பிறகு வாழ்க்கையில் டென்சன் ஏது.. ?

அன்பு நண்பர்களே.. இனி நீங்கள் டென்சனில்லாமல் மகிழ்ச்சியாக இருங்கள்...!!!!

Monday, 9 July 2012

பழைய சோறு ...... (:-)

அந்த காலத்தில் கிராமங்களில் காலை உணவாக பழைய சோறு சாப்பிடுவது வழக்கம். அந்த வழக்கம் தற்ப்போது கிராமங்களில் கூட கான முடிவதில்லை. நாம் சிறு வயதில் சாப்பிட்டிருப்போம். இப்போது பழைய சோறு சாப்பிடுவது தகுதி குறைவாக பார்க்கப்ப்டுகிறது. பிச்சைக்காரன் கூட வாங்க மாட்டேன் என்கிறான். அப்படிதான் எங்கள் வீட்டில் ஒரு நாள் மதிய உணவை முடித்து விட்டு மீதம் இருந்த சாத்திற்க்கு தண்ணிர் உற்றி வைத்து விட்டோம்... , சிறிது நேரத்தில் ஒருவர் தனக்கு பசிகிறது ஏதாவது சாப்பிட கொடுங்கள் என கேட்க எங்க அம்மா அவரிடம் இப்போதான் தண்ணிர் ஊற்றினேன் குழம்பு ஊற்றி கொண்டு வரவா அல்லது தண்ணிரோடு சாப்பிடுகிறீர்களா என கேட்க தண்ணி ஊத்தியாச்சா நான் பழைய சோறு சாப்பிட மாட்டேன் எனக்கு வேண்டாம் என கூற, இப்போதான் ஊற்றினேன் பழைய சோறு இல்ல என எடுத்து கூறியும் அவர் எனக்கு வேண்டாம் என நடையை கட்டிவிட்டார். அப்போதே அப்படி என்றால் இக்காலத்தில் சொல்லவே வேண்டாம். பழைய சோறு என்றாலே காத தூரம் ஓடுகிறோம். ஆணால் அதில் தான் வைட்டமீன் பி6 மற்றும் பி12 அதிகமாக உள்ளது. தவிரவும் சிறு குடலுக்கு நன்மை செய்யும் பாக்டிரியாக்கள் ட்ரில்லியன் கணக்கில் இருக்கிறதாம். இது நமது உணவுப்பாதையை ஆரோகியமாக வைத்திருகிறதாம். உணவுப்பாதை சீராக இருந்தால் அவுட்லெட்டும் சீராகிவிடும். காலையில் கழிவறயில் மல்லு கட்ட வேண்டாம். இதனுடன் இரண்டு சிறிய வெங்காயம் சேர்த்து உண்டால் அபரிமிதமான நோய் எதிற்ப்பு சக்தி கிடைகிறதாம். காய்சால் பேன்ற நோய்களிடம் இருந்து காக்கிறது பண்றி காய்ச்சல் உட்பட. காலை உணவாக பழைய சாத்தை உண்டால் உடல் லேசாகவும் சுறு சுறுப்பாகவும் இருக்கும். இரவிலே தன்னிர் ஊற்றி வைப்பதால் லட்சக்கணக்கான நல்ல பாக்டிரியாக்கள் உருவாகிறது. மறு நாள் இதை குடிப்பதால் உடல் சூட்டை தணிப்பதோடு குடல் புண், வயிற்று வலி போன்றவற்றை குணப்படுதும். அதுமில்லாமல் இதில் இருக்கும் நார் சத்து மலச்சிக்கல் இல்லமல் காலையில் ஃபிரியா போலாம். இதனை தொடர்ந்து சாப்பிட்டால் ரத்த அழுத்தம் கட்டுக்குள் வந்து உடல் எடையும் குறந்துவிட்டதாக அமெரிக்காவில் வசிக்கும் இந்திய விஞ்ஞானி பிரதீப் கூறுகிறார். இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் உடலுக்கு அதிகமான சக்தியை தந்து உடலை சோர்வின்றி வைக்க உதவுகிறது. அலர்ஜி, அரிப்பு போன்றவை கூட சரியாகிவிடுகிறது. அல்சர் உள்ளவர்கள் இதை சாப்பிட்டு வந்தால் மிக விரைவில் குண்மாகிவிடும். எல்லாவற்றிர்கும் மேலாக நோய் எதிர்ப்பு சக்தி கிடைப்பதால் எந்த நோயும் வராம்ல் உடல் ஆரோக்கியமாகவும் இளமையாகவும் இருக்கும். அதனாலதான் நம்ம ஆளுங்க ஒரு சட்டி பழைய சாதம் சாப்பிட்டு விட்டு மாலை வரை வயலில் வேலை செய்யமுடிந்திருகிறது போலும். காலையில் சாண்ட்விச், பீட்ஸா, பர்கர் என கழித்து திரியும் தமிழ் மக்களே இன்றிலிருந்து பழைய சோறு சாப்பிட்டு நோயிலிருந்து பாதுகாப்பு பெறுவோம். அப்புறம் பழைய சாதம் செய்ய தெரியுமா? (என்ன கொடுமை சார் இது எதுகொல்லாம் கிளாஸ் எடுக்க வேண்டியாத இருக்கு) பொங்குன சோத்துல தண்னிய ஊத்திட்டு அடுத்த நாள் கலைல திறந்து பாருங்க கம கம என பழைய சோறு தயார். இதற்க்கு கைகுத்தல் அரிசி சிறந்தது. நம்ம வீட்டல் போய் கைகுத்தல் அரிசியில் சோறு பொங்க சொன்னால் நம்க்குதான் குத்து கிடைக்கும் என அஞ்சுபவர்கள் ஒரு ரூபாய் அரிசி கூட உபயோக்கலாம். சூடான சாததில் தண்னிர் ஊற்ற கூடாது. ஆறிய பின்பு மண்டட்டியில் போட்டு தண்னிர் ஊற்றி மறு நாள் காலையில் சிறிது மோர் கலந்து சின்ன வெங்காயத்துடன் சாப்பிட்டால் ஜில்லென்று இருக்கும். மதியம் வரை பசிக்காதாம்"

Saturday, 7 July 2012

வேலூரில் 23 ,24.6.2012 தேதிகளில் நடந்த CENTRAL WORKING COMMITTEE MEETING -நிழற்படங்கள்



NFPEமாபொதுசெயலர்தோழர்.கிருஷ்ணன்,நமது பொது செயலர் தோழர K.V.S அவர்கள்















நமது பொது செயலராக பொறுப்பேற்றுள்ள தோழர்.சிவ நாராயணா அவர்களுக்கு NFPE தலைவர்கள் வாழ்த்து தெரிவிக்கும் காட்சி .


பொது செயலராக பொறுப்பேற்றுள்ள  தோழர் . 
சிவ நாராயணா அவர்களுக்கு ஈரோடு கோட்ட சங்கங்களின் வாழ்த்துக்கள்.

Tuesday, 3 July 2012

GRAMIN DAK SEVAKS - CRUSADER


ERODE DIVISIONAL UNION  CONGRATULATES THE AIPEU GDS(NFPE) CHQ ON ITS PUBLICATION OF MAGAZINE " GDS CRUSADER"
புதியதாக உதயமாகியுள்ள GDS ஊழியர்களின்  விடிவெள்ளியாம் AIPEU - GDS (NFPE) சங்கத்தின் புதிய மாத இதழான  GDS CRUSADER இன்  முதல் இதழ் வெளியானமை குறித்து ஈரோடு கோட்டச் சங்கக்களின் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
 

The Editorial page of the I issue is re-presented below for information.
GDS  ஊழியர்களின் புதிய சங்கத்தில் இணைய வேண்டியதின் அவசியம் குறித்து வெளியான
 Editorial  பகுதி கிழே தரப்பட்டுள்ளது.





                                                                                                                                                                    AIPEU-GDS(NFPE) General secretary Com P.Pandurangarao submitted the memorandum to    Hon. State Minister of Communications Sri Sachin Pilot on 16.5.2012.






சாமி!யார், இவங்க?!-- ஒரு ‘ரிஷி’மூலம்

சாமி!யார், இவங்க?!
- ஒரு ‘ரிஷி’மூலம்
பெ. கருணாகரன்

மீண்டும்... மீண்டும்... மீண்டும்...

அதே செய்தி, அதே தலைப்பு, அதே பரபரப்பு. ஆட்கள்தான் மாறுகிறார்கள். ஆனால், அதே செய்தி மீண்டும் மீண்டும். ஆன்மிகவாதி என அறியப்பட்டவர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் அல்லது பொருளாதார மோசடிகள் எனத் தமிழ் ஊடகங்களில் இரண்டு மூன்று ஆண்டுகளுக்கொருமுறை பரபரப்பு எழுகிறது. உணவு விடுதிகள், பேருந்துகள், அலுவலக இடைவேளை, திருமண மண்டபங்கள், மகளிர் மன்றங்கள், கல்லூரி கேண்டீன்கள் என எல்லாப் பொது இடங்களிலும் அந்தச் செய்திகள் ஆவேசமாக அலசப்படுகின்றன. ஆனால், அடுத்து வேறு ஒரு செய்தி அலை எழும்போது எல்லாம் மறக்கப்படுகின்றன. சில ஆண்டுகளுக்குப் பின் இன்னொரு ஆன்மிகவாதி. இன்னொரு சம்பவம். மீண்டும்... - இந்த வரிகள் ஏற்கெனவே நீங்கள் படித்தவைதான். கடந்த 25 மார்ச் 2010 ‘புதிய தலைமுறை’ இதழில் வெளியான ‘மீண்டும்... மீண்டும்...’ கவர் ஸ்டோரியின் ஆரம்ப வரிகள்தான் அவை. அந்த வரிகளை மெய்ப்பிப்பதுபோல் மீண்டும் சாமியார் சர்ச்சைகள்... இந்த முறை நித்தியானந்தா.

இவரது பிம்பத்தை வளர்த்தெடுத்த ஊடகங்களே அவரது புனிதப் பிம்பத்தை அடித்து நொறுக்கிக் கொண்டிருக்கின்றன.

யார் இந்த நித்தியானந்தா?

ஒரு சாமியார் உதயமாகிறார்
நித்தியானந்தா என்கின்ற ராஜசேகர் 1978ம் ஆண்டு ஜனவரி ஒன்றாம் தேதி திருவண்ணாமலையில் பிறந்தபோது, வானத்தில் எந்த நட்சத்திரமும் தோன்றியதாகச் செய்தியில்லை. எந்த அதிசயச் சம்பவமும் உலகில் நடந்துவிடவில்லை.

அவரது குடும்பம் சாதாரண விவசாயக்குடும்பம். அப்பா கூலித் தொழிலாளி. பிறந்த பத்தாம் நாளில் ராஜசேகருக்குஜாதகம் கணிக்கப்பட்டபோது ஜோதிடர், ராஜசேகரின் கிரகசாரங்களைப் பார்த்து அதிசயித்து, பின்னாளில் அவர் ராஜ சன்னியாசியாகத் திகழ்வார் என்று கூறினாராம்.

தனது பன்னிரெண்டாம் வயதில் அருணாச்சல மலை அடிவாரத்தில் ஒரு புத்த பூர்ணிமா அன்று (31 மே 1990), ‘உடல் தாண்டி அனுபவம்’ எனும் பேரானந்த நிலையினை முதல் ஆன்மிக அனுபவமாக இவர் அடைந்ததாக அறிவித்தார். பன்னிரெண்டாம் வகுப்புவரை அரசுப் பள்ளியில்தான் படித்த இவர், அதன்பின் அருணை பொறியியல் கல்லூரியில் சேர்ந்தார். ராமகிருஷ்ண பரமஹம்சர், ரமண மகரிஷி ஆகியோரை மானசீகக் குருவாகக் கொண்டு வளர்ந்த ராஜசேகர், மயிலாப்பூர் ராமகிருஷ்ண மடத்தில் சேர்ந்தார். அங்கு சேர்ந்த கொஞ்ச காலத்திலேயே, மற்றவர்களை முந்திக் கொண்டு தனக்கு முன்னுரிமை தந்து, ‘தத்கல்’ முறையில் தீட்சை தரவேண்டும் என்று கேட்டிருக்கிறார். ‘அப்படி ஒரு வழக்கம் இங்கு இல்லை’ என்று பதில் கிடைக்கவே, அங்கிருந்து வெளியேறி திருச்செங்கோடு, ஈரோடு பகுதிகளில் தங்கி பக்தர்களுக்கு அருளாசி வழங்கி வந்தவர், பின்னர் இமயமலைக்குப் புறப்பட்டார். அங்கு பல கடுமையான தவ நிலைக்குப் பிறகு, ‘ஞானஅனுபூதி முக்தி’ என்னும் நிலையினை 2000ம் ஆண்டு ஜனவரி 1 அன்று அடைந்ததாகக் கூறிய இவர், தியானபீடம் என்ற சேவைநிறுவனத்தினை அதே நாளில் ஆரம்பித்தும் வைத்தார். இன்று இந்நிறுவனம் 800 கிளைகளுடன் 21 நாடுகளில் கோடிக்கணக்கான சொத்துக்களுடன் பரந்து விரிந்துள்ளது (இமயமலையில் உள்ள ஒரு பெரிய சாமியார் அவருக்கு பரமஹம்ச நித்தியானந்தா என்று பெயரிட்டதாக தியானபீடத்தின் இணையதளம் கூறுகிறது).

ஹைடெக் பிரியர்
நித்தியானந்தா எந்த விஷயத்திலும் ஹைடெக் சமாச்சாரங்களைத்தான் விரும்புவார். மைக் முதல் லேப்டாப் வரை ஹைடெக் சாமியாராக வலம் வந்த நித்தியானந்தா கார் விஷயத்திலும் ஹைடெக் அம்சங்களைக் கொண்ட ஃபோர்டு எண்டெவர் பிரிமியம் எஸ்யூவி காரை பயன்படுத்தி வருகிறார். ஆண்டுக்கு ஒரு புதிய காரை மாற்றிவிடுவது நித்தியானந்தாவின் வாடிக்கையாம்.

இன்றைய நிலையில் நித்தியானந்தாவின் சொத்து மதிப்பு 2,500 கோடி ரூபாய்க்கு மேல் இருக்கும் என்கிறார்கள். தென் இந்தியாவில் ஆன்மிகச் சொற்பொழிவு, பிரசங்கம் மூலம் வெகுவாக மக்களின் கவனத்தைக் கவர்ந்த நித்தியானந்தா, கோடீஸ்வர தொழில் அதிபர்கள், போலீஸ் உயர் அதிகாரிகள், அரசுத்துறை அதிகாரிகளின் நம்பிக்கை நட்சத்திரமானார். தியான பீடத்தில் ஆன்மிகப் பயிற்சியில் சேர விரும்புபவர்களிடம் 2,000 முதல் 25 ஆயிரம் ரூபாய் வரை நன்கொடை வசூலிக்கப்பட்டுள்ளது.

நித்தியானந்தா கையைத் தூக்கி ஆசி வழங்க வேண்டும் என்றால் 5,000 ரூபாய் கட்டணம், தலையைத் தொட்டு ஆசி வழங்க 10 ஆயிரம் ரூபாய் கட்டணம், தொட்டு அரவணைத்து ஆசி வழங்க 25 ஆயிரம் ரூபாய், பாதபூஜைக்குப் பல்லாயிரம் என வசூல் வேட்டை நடந்துள்ளது. எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ் 2 மாணவ, மாணவியர் பலர் பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற 5,000 முதல் 10 ஆயிரம் வரை பணம் கட்டி ஆசி பெற்றுள்ளனர்.

இப்படியெல்லாம் ஜெகஜோதியாகச் சென்று கொண்டிருந்த நித்தியானந்தா வாழ்க்கையில் ஒரு வீடியோ படம் மூலம் சறுக்கல் ஆரம்பித்தது. பட்ட காலிலேயே படும் என்பது போல தொடர்ந்து மதுரை ஆதீன வாரிசானது, பெங்களூரில் செக்ஸ் புகார் வழக்கு, தலைமறைவு, சரண், ஜாமீன் என்றுசர்ச்சைகள் மேல் சர்ச்சை. எதற்கும் அசராத நித்தியானந்தா தொடர்ந்து தனது ‘ஆன்மிகப் பணிகளில்’ ஈடுபட்டுக் கொண்டுதான் இருக்கிறார். இது அவர் மீதான நம்பிக்கை அல்ல. மக்களின் மீது அவர் வைத்திருக்கும் ‘அபாரமான நம்பிக்கை’. இந்த அபார நம்பிக்கைதான் இன்னும் இன்னும் புற்றீசல்போல் சாமியார்கள் இங்கு புறப்பட்டுக் கொண்டிருக்க காரணமாயிருக்கிறது.

கடையைத் திற...காசு வரட்டும்...
இன்றைய நிலையில் ஒரு பெட்டிக்கடை வைப்பதென்றால் கூட குறைந்தபட்சம் பத்தாயிரம் ரூபாயாவது முதலீடு தேவை. ஆனால், முதலீடே தேவையில்லாத வர்த்தகம், ஆசிரமம் வைத்து அருளாசி வழங்குவது. இதற்கு மூன்று தகுதிகள் முக்கியம். நயமாகப் பேசத் தெரிந்திருக்க வேண்டும். சின்னச் சின்ன மாஜிக் வித்தைகள் காட்டத் தெரிந்திருந்தால் நல்லது. அவரது புகழ் மேலும் வேகமாகப் பரவும். மூன்றாவதாக யோக, தியானம் அல்லது சிகிச்சை. இவற்றில் ஏதேனும் ஒன்று தெரியாவிட்டாலும் பரவாயில்லை. பக்தர்கள் ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கிறார்கள்.

ஆரம்பத்தில் ஆசிரமம் வைக்க இடமில்லையா? பரவாயில்லை... நதிக்கரை, மரத்தடி இப்படி எங்கேயாவது உட்கார்ந்துகொண்டு அருள் பாலிக்கலாம். ஒரே வருடத்தில் ஆசிரமம் அமைப்பதற்குத் தேவையான அளவுக்கு வசதி வந்துவிடும். பணத்தைக் கொண்டு வந்து கொட்டக் காத்திருக்கிறார்கள் பலர். ஒரு வர்த்தக நிறுவனம் ஆரம்பிக்க லைசென்ஸ் வாங்க வேண்டும், அதற்கான கட்டமைப்புகளுக்குச் செலவிட வேண்டும். ஊழியர்களை பணியமர்த்த வேண்டும். இத்தகைய எந்தப் பிடுங்கலும் இல்லாமல் மிக எளிதாக ஓர் ஆசிரமத்தை அமைத்துக் கொண்டு, ஒரு தொழிலதிபருக்கு இணையாக அல்லது சாமியாரின் முகத்தில் ‘தேஜஸ்’ அதிகமாக இருந்தால் தொழிலதிபரை விடவும் அதிகமாகச் சம்பாதிக்க முடியும்.

லோக்கல் தொழிலதிபர்கள் வெளிநாடுகளில் தங்கள் வர்த்தக நிறுவனங்களைத் தொடங்குவதுபோல் சாமியார்களும் ஆங்கிலப் புலமை இருக்கும்பட்சத்தில் வெளிநாடுகளில் தங்கள் ஆசிரமங்களின் கிளைகளை ஆரம்பித்து டாலர்களை அள்ளலாம். தொழிலதிபர் தொழில் வரி, வருமான வரி என்று ஏகப்பட்ட நெருக்கடிகளைச் சந்திக்க வேண்டியிருக்கும். ஆனால், இந்தச் சாமியார்களுக்கு எந்தவித நெருக்கடியும் இல்லை. தவிர, தொழிலதிபரின் நெருக்கடிகளைப் போக்க அவர்களுக்கு ஆலோசனை வழங்கிக் கொண்டிருப்பார் நமது கில்லாடிச் சாமியார். பணக்காரப் பக்தர்களைத் திருப்திப்படுத்தும் விதமாக இவர்களில் பலரது ஆசிரமங்கள் நூற்றுக்கணக்கான ஏக்கர்களுக்கு விரிந்து நட்சத்திர விடுதிகளுக்கு ஒப்பான தங்கும் அறைகளுடன் காணப்படுகின்றன. இயற்கையான சூழ்நிலையை விரும்பும் பக்தர்களுக்காகத் திறந்தவெளிகளில் கீற்றுக் குடில்களும் உண்டு.

ஊடகங்களும் சாமியார்களும்...
பொதுவாக சாமியார்களின் புகழ் உச்சங்களுக்குக் காரணமாய் இருப்பவை ஊடகங்கள்தான். தனது கவர்ச்சிப் பிம்பங்களைத் தொலைக்க, ஊடகங்களுக்கு இந்தச் சாமியார்களின் உபன்யாச உபதேசங்கள் தேவையாயிருக்கிறது. இதனால், ஒருபுறம் சாமியார்களுக்கும் பிரபலம் கிடைக்கிறது. சாமியாரின் பக்தர்களால் அந்தப் பத்திரிகைகளின் விற்பனையும் உயர்கிறது. அந்த வகையில் இருதரப்புக்கும் ஆதாயமே. ஒருகட்டத்தில் செக்ஸ் அல்லது பணமோசடி போன்ற ஏதாவது ஒரு சர்ச்சையில் அந்தச் சாமியார் சிக்கிக் கொண்டாலும் கவலையில்லை. அதுகுறித்த ‘இன்வெஸ்டிகேஷன்’ மசாலாக்களும் பத்திரிகையின் விற்பனை உயரக் காரணமாகின்றன. அந்த வகையில் சாமியார்கள் ஊடகங்களுக்குத் தங்க முட்டையிடும் வாத்துக்கள். மக்களுக்கும் இதிலுள்ள நியாயங்கள், முரண்கள் பற்றிய கவலையில்லை. அவர்களைப் பொறுத்தவரை, பரபரப்பாக மெல்லுவதற்கு அன்றன்று அவல் கிடைத்தால் சரி.

ஒரு வார இதழில் சுகமான கார்ப்பரேட் சாமியார், மனசை ரிலாக்ஸ் பண்ணச் சொல்லித் தொடர் எழுதினார். அந்த இதழின் போட்டிப் பத்திரிகை இன்னொரு காவிக்குத் தொடர் எழுதச் சொல்லிக் கதவு திறந்தது. தொடர் வெளியான ஒரே ஆண்டில் அந்தச் சாமியார் கார்ப்பரேட் தரத்துக்கு உயர்ந்து விட்டார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். இவர்களில் தனியே தொலைக்காட்சி சானல்கள் நடத்தும் சாமியார்களும் உண்டு. பலருக்கு இணையதளங்கள் உண்டு. நித்தியானந்தா, கல்கி பகவான், ஜக்கி வாசுதேவ், ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் போன்றவர்கள் ஃபேஸ்புக் போன்ற சமூகவலைப் பின்னல்களிலும் இருக்கிறார்கள்.

எழுத்தாளர்களும் சாமியார்களும்...
ஒருபுறம் ஊடகங்கள் இந்தச் சாமியார்களை வளர்த்து விடுகின்றதென்றால் மற்றொருபுறம் எழுத்தாளர்கள். அவர்களும் சாதாரண எழுத்தாளர்கள் அல்ல, இலக்கிய முத்திரை பெற்றவர்கள்... வியாபார ரீதியாக எழுதி வெற்றி கண்டவர்கள். மேடையில் மெஸ்மரிச வார்த்தைகளைப் பேசி மக்களை மயக்கும் இந்தச் சாமியார்கள் தங்கள் தத்துவங்களைத் தாங்களே எழுதினால் படிப்பவருக்குத் தலை சுற்றும். அந்த அளவுக்குத் ‘தெளிவாக’ இருக்கும் (இவர்களுக்கு செழுமையான எழுத்து என்பது சுட்டுப் போட்டாலும் வராது). எனவே தங்கள் கருத்துக்களை மக்களை மயக்கும் வண்ணம் குட்டிக் குட்டிக் கதைகளோடு செறிவான மொழிநடையில் பத்திரிகைகளில் எழுத ஆட்கள் வேண்டும். அந்த வகையில் அந்த எழுத்தாளர்களை சாமியார்கள் நாடுகிறார்கள்.

சுகமானவரின் தொடரையும் கதவைத் திறந்தவரின் தொடரையும் அந்தப் பத்திரிகைகளின் ஆசிரியர் குழுவைச் சேர்ந்தவர்கள்தான் அழகான மொழி நடையில் எழுதினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இளைய தலைமுறைக்குக் குறி!
ஒருமுறை ஓர் இந்து மதச் சாமியாரிடம் ‘இந்து மதத்தில் ஆட்டம், பாட்டமான சடங்குகள் அதிகமுள்ளனவே... அது என்ன காட்டுமிராண்டிகள் மதமா?’ என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர், ‘இந்து மதம் கொண்டாட்ட பூர்வமானது. மன அழுத்தத்தைத் குறைத்து மனதைப் பக்குவப்படுத்தும் போக்கு அதன் சடங்குகளில் பொதிந்துள்ளது. இது காட்டுமிராண்டித்தனமல்ல. நம் கோபங்களைக் குறைத்து, மனஅழுத்தங்களைக் குறைத்து உலக வாழ்க்கையை எளிதாக எதிர்கொள்வதற்கு மனதைப் பக்குவப்படுத்தும் உளவியலே அந்தச் சடங்குகள்...’ என்றார். அவர் சொல்வது உண்மைதான். சில அம்மன் பாடல்களும், அயப்பன் பாடல்களும் குத்துப் பாடல்களின் மெட்டுக்களுக்கு நிகரானவை.

இந்து மதத்தின் இந்தக் கொண்டாட்ட பூர்வ அணுகுமுறையை தங்கள் ஆன்மிக வர்த்தகத்துக்கும் இந்தச் சாமியார்கள் பயன்படுத்திக் கொள்ளத் தவறவில்லை. உலக மயமாக்கலைத் தொடர்ந்து இந்தச் சாமியார்களும் தங்கள் தொழில் அணுகுமுறையை இன்னும் சொகுசாக்கி நவீனமாக்கினார்கள். ஒரு தலைமுறை தகவல் தொழில் நுட்பத்தை வைத்து முன்னேறிக் கொண்டிருந்தபோது, அவர்களுக்குப் பிடித்தமான விஷயங்களைத் தங்கள் தொழிலில் புகுத்தி அவர்களையும் தங்கள் ஆசிரமங்களின் வாடிக்கையாளர் ஆக்கினார்கள். கடவுள் வழிபாடு என்பதைத் தாண்டி பணி அழுத்தத்தைக் குறைத்து, மனதை உற்சாகப்படுத்துவது என்ற போர்வையில் நடனம், பாட்டு போன்றவற்றையும் தங்கள் வழிபாட்டு முறைகளாக அறிமுகப்படுத்தினார்கள். இது விஞ்ஞானப் பூர்வமானது என்றும் அதனை அவர்கள் சிலாகித்துக் கொண்டார்கள். விளைவு... பாட்டு, நடனம் கலந்த மனப்பயிற்சிக்கு இளைய தலைமுறையின் அமோக ஆதரவு கிடைத்தது. சாமியார்களின் கல்லாவும் நிரம்பி வழியத் தொடங்கியது.

அரசியலும் ஆன்மிகமும்
கடவுள் மறுப்புக் கொள்கையைத் தவிர்த்துவிட்டுப் பகுத்தறிவு பேசும் திராவிட இயக்கத்தினரால் தீவிரமாக ஆதரிக்கப்பட்டவர்கள் மடாதிபதிகள் என்கின்ற சன்னிதானங்கள். பூணூல் அணிந்த காஞ்சி மடங்களுக்கும் அகோபில மடங்களுக்கும் செல்வதற்கான மனத்தடையைப் பூணூல் அணியாத இந்தச் சன்னிதானங்கள் நீக்கினார்கள். பிராமணீயத்தை எதிர்த்த திராவிட பக்தர்களின் ஆதரவு தேவாரம், திருவாசகம் ஓதும் தமிழார்வம் உள்ள திருவாடுதுறை, குன்றக்குடி, மதுரை போன்ற சன்னிதானங்களுக்குக் கிடைத்தது. அதன் நீள்தொடர்ச்சியாகவே யாகவா முனிவர், பிரேமானந்தா, பங்காரு அடிகள், சத்குரு ஜக்கி வாசுதேவ், நித்தியானந்தா போன்றவர்களின் வெற்றிக்குப் பின்னே திராவிட சாதிய அரசியலும் அடங்கியுள்ளது. ‘அவாளிடம்’ போய்ப் பிரச்சினையைச் சொல்வதைவிட நம்மாளிடம் போய்ச் சொல்லித் தீர்வு கேட்போம் என்பதுதான் இதிலுள்ள உளவியல்.

எனவே அவாளுக்கும் சரி, இவாளுக்கும் சரி அரசியல்வாதிகளின் அமோக ஆதரவு உண்டு. தேர்தலின்போது அருளாசி வழங்குவது... அரசியலில் பிரச்சினைகள் வந்தால் ஆலோசனை சொல்வது, ஹோமம் வளர்ப்பது, பரிகாரத்துக்கு ஆலோசனை சொல்வது என்று இந்தச் சாமியார்களின் ‘அரசியல் கடமைகள்’ நீளமானவை. அரசியல்வாதிக்கு நெருக்கமானவர் என்கின்ற பிம்பம் இந்தச் சாமியார்களின் வளர்ச்சிக்கு உரமாகின்றன. மேலும் பின்னாளில் ஏதேனும் பிரச்சினையில் மாட்டிக் கொண்டாலும் இவர்களது அரசியல் பின்புலம் இவர்களுக்குப் பாதுகாப்பளிக்கிறது. இதுதவிர, வருமான வரித்துறை, உளவுத்துறை போன்ற அமைப்புகளால் நெருங்க முடியாத மதம் என்கின்ற ‘சென்சிடிவ்’ போர்வை போர்த்திக் கொண்டிருக்கும் இந்தச் சாமியார்கள் அரசியல்வாதிகள் குறுக்கு வழிகளில் சம்பாதித்த கறுப்புப் பணத்தைப் பதுக்கி வைக்கும் ரகசிய கஜானாக்களாகவும் செயல்படுகிறார்கள். ஒரு வகையில் பார்த்தால் இவர்கள் லோக்கல் ‘ஸ்விஸ்’ வங்கிகள் மாதிரி. இத்தகைய மோசடிச் சாமியார்கள் வளர்வது அரசியல்வாதிகள் தவிர, கறுப்புப் பண முதலைகளுக்கும் வசதியாகவே உள்ளது. எப்போதாவது குற்றங்கள் வெளிப்பட்டு, ஓர் ஆட்சியில் ஒரு சாமியார் கைது செய்யப்பட்டால் அடுத்த ஆட்சியில் அவர் மிக எளிதாக வெளியில் வந்துவிடுவார்.

சமூக உளவியல்
அகத்தேடலான ஆன்மிகத்தின் கருத்தியல் இன்று மாறிவிட்டது. இன்றைய நுகர்வுக் கலாச்சாரத்தில் ஆன்மிகம் என்பது புற உலகம் சார்ந்ததாகவே மக்களால் பெரும்பாலும் துக்கப்படுகிறது. ‘எத்தைத் தின்றால் பித்தம் தெளியும்’ என்கிற நிலைதான் இது. வாழ்வில் ஏற்படும் பொருளாதாரப் பிரச்சினைகள், உறவு ரீதியான சிக்கல்கள், உடல் உபாதைகள் பெரும்பாலும் இன்றைய நிலையில் இவற்றுக்குத் தீர்வு தேடித்தான் சாமியார்களை நோக்கிப் படையெடுத்துக் கொண்டிருக்கிறார்கள் மக்கள்.

"தொழிலில் நஷ்டம். மீண்டும் எழ முடியுமா என்கின்ற சந்தேகமே வந்துவிட்டது. மனச்சோர்வில் தற்கொலை செய்து கொள்ளலாமா என்று கூட நினைத்தேன். இந்நிலையில்தான், அந்தச் சாமியாரைப் பார்த்தால் எல்லாப் பிரச்சினையும் தீர்ந்துவிடும் என்று என் சொந்தக்காரர் ஒருவர் கூறினார். அவர் ஆலோசனைப்படியே அந்தச் சாமியாரைப் பார்த்தேன். அவர் முகத்தைப் பார்த்ததுமே மனசுக்குள் உற்சாகம் பொங்கியது. அந்தச் சாமியாரும் எலுமிச்சம் பழம் கொடுத்து, ‘உன் பிரச்சினைகள்லாம் விரைவில் தீரப் போவுது’ என்று ஆசி வழங்கினார். அதன்பிறகு, என் தொழிலில் தொடர்ந்து முன்னேற்றம்தான். புதிதாக எதை ஆரம்பித்தாலும் அந்தச் சாமியாரைப் பாக்காமல் ஆரம்பிப்பதில்லை" என்று கூறுகிறார் மதுரையைச் சேர்ந்த பாண்டியன்.

இதுகுறித்து மனநல மருத்துவர் ஒருவர் கூறும்போது, "அனுபவங்கள்தான் ஒரு மனிதரைச் செம்மைப்படுத்துகின்றன. வாழ்வதற்கான வழிகாட்டுகின்றன. சாமியாரைப் பார்த்தவுடன் தனக்கு நல்லது நடக்கும் என்ற நம்பிக்கையில் மனம் தூண்டப்படுகிறது. அந்த நம்பிக்கையுடன் முன்பை விட ஆர்வத்தோடும், தீவிரத்தோடும் ஒரு செயலிலோ, தொழிலிலோ ஈடுபடும்போது, அதன் வெற்றியின் சாத்தியங்கள் அதிகமாகின்றன. அந்த வெற்றி உங்கள் முயற்சிக்குக் கிடைத்த வெற்றி. அது சாமியாரின் ஆசியால் கிடைத்தது என்று நினைப்பதில்தான் அந்தச் சாமியாரின் வெற்றியின் சூட்சுமம் அடங்கியுள்ளது. அந்த பக்தர் கடவுளைக் கும்பிடுவதை விட்டு கடவுளுக்குப் பதிலாக, சாமியாரை வழிபட ஆரம்பிக்கிறார். அந்தச் சாமியாரைப் பார்த்ததால் தனக்கு நல்லது நடந்ததாக ஒருவர் அடுத்தவரிடம் கூறும்போது, அங்கே சாமியார் குறித்த பிரச்சாரம் ஆரம்பமாகிறது" என்றார் அந்த மருத்துவர்.

பெய்யெனப்பெய்யும் மழை?
உழைப்பையும் தன்னம்பிக்கையுடனான முயற்சியையும் பின்னுக்குத் தள்ளிவிட்டு, சாமியார்களின் கால்களில் விழும்போக்கு ஓர் அறிவுடைமைச் சமுதாயம் செய்யும் செய்யலல்ல. இத்தகைய போக்கினால் அந்தச் சமுதாயம் பின்னடைவைத்தான் சந்திக்க நேரிடும். சாமியார்கள் தவறு செய்து கையும் களவுமாக மாட்டிக் கொள்ளும் நிலையில் அவர்களுக்கு ஆதரவாக சிலர் குரல் கொடுப்பதும், ‘அவர் அப்படி என்ன தப்பு செய்துட்டார்?’ என்று கேட்கின்ற போக்கும் நீடித்து வருவது கவலைக்குரியது. அது அறிவு வறட்சியின் வெளிப்பாடு. அறிவு வறட்சி உள்ள ஒரு சமூகத்தில் இயற்கையும் வறண்டுதான் போகும். இதனைச் சொன்னவர் ஓர் உண்மையான ஆன்மிகவாதி. அவர் திருமூலர்!

‘ஞானமிலாதார் சடைசிகை நூல்நண்ணி
ஞானிகள்போல் நடிக்கின்றவர் தம்மை
ஞானிகளாலே நரபதி சோதித்து
ஞானமுண்டாக்குதல் நலமாகும் நாட்டிற்கே’

-போலிச் சாமியார்களைக் கட்டுப்படுத்தினால்தான் ஒரு நாட்டில் பருவமழை பெய்யும். அரசுக்கும் பாதுகாப்பாகும் என்று தனது திருமந்திரத்தில் எழுதுகிறார் திருமூலர்.


இனியாவது இங்கு மழை பெயுமா?

Monday, 2 July 2012

மைதா – விலை கொடுத்து வாங்கும் ஆபத்து ?


மைதா விலை கொடுத்து வாங்கும் ஆபத்து ?



       மைதா என்பது நன்கு அரைக்கப்பட்ட கோதுமை மாவு. மஞ்சள் நிறத்தில் இருக்கும் ‘ பென்சாயில் பெராக்சைடு ‘ என்ற ரசாயனம் கொண்டு வெண்மை ஆக்க்படுகிறது. அதுவே மைதா மாவாகும். நம் தலை முடியை கருபாக்கப் பூசும் டையில் இருப்பது இந்த ரசாயனம்தான். மாவை மிருதுவாக்க ‘ ஆலோக்ஷான்’ என்ற ரசயனமும் கலக்கபடுகிறது. ஆபத்து என்ன ?

        மைதாவில் கோதுமையின் நார்ச் சத்து கிடையாது. நம் செரிமான சக்திக்கு நார்ச்சத்து அவசியமலானது. ஆகவே மைதா நம் ஜீரண சக்தியை குறைத்து விடும். மைதா மாவில் உள்ள protein உடன் பென்சாயில் பெராக்சைடு சேர்ந்து சர்க்கரை நோயிற்கு காரணியாக அமைகிறது. ஆலோக்ஷா சோதனை கூடத்தில் எலிகளுக்கு சர்க்கரை நோய் வர வைப்பதுற்காக பயன்படுத்தும் ரசயனமாகும். ஆகவே இது மனிதனுக்கும் சர்க்கரை நோய் வர துணை புரிகறது.

       நார்சத்து அற்ற இந்த மைதா எளிதில் ஜீரணம் ஆவதில்லை . இவற்றை இரவில் சாப்பிடுவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். இந்த மைதவால் செய்ய படும் உணவு வகைகளை குழந்தைகளுக்கு கொடுப்பதை தவிர்ப்பது நல்லது.

தடை விதிப்பு:
      
       ஐரோப்பா , சீனா , இங்கிலாந்து ஆகிய நாடுகளில் மைதா பொருட்கள் விற்கத் தடை விதிகபட்டுளுது. நமது அண்டை மாநிலமான கேரளா வில் மைதா வின் தீமை பற்றி பிரசாரம் செய்ய தொடங்கி விட்டனர்.

தினசரிகளில் படித்த பயனுள்ள சுவாரசியமான தகவல்கள்