MENU BAR

Thursday 28 January 2016

வாசிக்கவும் ... யோசிக்கவும்.

  வைக்கோல் வாழ்க்கை
                 ஆளுக்கொரு வேலை
                 அவரவருக்கு பல தேவை
                 ஊசி முனையளவும்
                 ஊர் உலகை நினையாமல்
                 காசொன்றே வாழ்வென்று
                 கரைகிறது ஜனக்கூட்டம்.
                 வாசலில் கோலமிட
                 வாய்ப்பில்லா பெருநகரில்
                 பூசணிப்பூ வாசத்தை
                 நுகர்ந்ததில்லை மார்கழிகள்.
                 யோசனைகள் மொத்தமுமே
                 இ.எம்.ஐ என்றாக
                 செல்போனில் இழவுகேட்டு
                 சொல்லுகிறோம் ஆறுதலை.
                 வாழ வழி தெரியவில்லை
                 வருசமெல்லாம் நடைப்பயிற்சி
                 பணமிருந்தால் போதுமெனும்
                 பரிதவிப்பில் இளைத்துவிட்டோம்.
                 சக்கையான வைக்கோலை
                 உண்ட பசு பால் கறக்க
                 சத்தியத்தை தொலைத்துவிட்ட
                 சம்பாத்தியம் என்னத்துக்கு ?
                                                              யுக பாரதி
                                                                                 ஆனந்த விகடன் 
                           20.01.2016

Wednesday 27 January 2016

அலுவலக Business HOURS மாற்றம் வேண்டி 16.10.2015 ல் தமிழ் மாநிலச் சங்கத்தால் கோரிக்கை வைக்கப்பட்டு 20.10.2015 ல் மத்தியச் சங்கம் இலாகா செயலருக்கு கடிதம் எழுத அதன் மீதான இலாகா உத்தரவு கீழே . தமிழ் மாநிலச் செயலர் தோழர் J. ராமமூர்த்தி மற்றும் மத்தியச் சங்க பொதுச்செயலர் தோழர் R.N.பராசர் அவர்களுக்கும் ஈரோடு கோட்டச் சங்கத்தின் நெஞ்சார்ந்த நன்றி .

 

PROTEST DEMONSTRATION BY TN NFPE COC AGAINST THE ARBITRARY DISENGAGING OF 27 CASUAL LABOURERS AT ANNA SALAI HPO RESULTANTLY COMBINING THE DUTIES OF THE POSTMAN/ MTS.

FIRST STEP POWERFUL PROTEST DEMONSTRATION AGAINST THE ARBITRARY DISENGAGING OF 27 CASUAL LABOURERS AT ANNA SALAI HPO RESULTANTLY COMBINING THE DUTIES OF THE POSTMAN/ MTS.
DEMONSTRATION UNDERTAKEN BY TN NFPE COC ON 25.01.2016 AT THE CLOSING HOURS IN FRONT OF O/O CPMG, TN. PL SEE SOME OF THE PHOTOS TAKEN DURING THE PROTEST DEMONSTRATION.
==============================================================================

சென்னை அண்ணா சாலை தலைமை அஞ்சலகத்தில் திடீரென்று CASUAL LABOURER களாக கடந்த 20 முதல் 25 ஆண்டுகளாக பணியாற்றி வந்த 27 ஊழியர்களை வெளியேற்றி சென்னை பெருநகரமண்டல நிர்வாகம் (இப்படித்தான் CHIEF POSTMASTER , ANNA  ROAD HPO பதில் அளித்துள்ளார்) அடாவடியாக உத்திரவிட்டது. ஆனால் PMG அவர்கள் இதற்கும் மண்டல நிர்வாகத்திற்கும் தொடர்பில்லை என்கிறார்.

எவர் செய்தார் என்பது நமது கேள்வியல்ல. அது நிர்வாகத்தின் உள்விஷயம். இதனால் 27 குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது மட்டுமல்லாமல் அவர்களால் விடுப்பு மற்றும் காலிப் பணியிடங்களில் செய்யப்பட்ட பணிகள் அனைத்தும் தற்போது பணி இணைப்பு செய்யப்பட்டு, இருக்கும் தபால்காரர்கள் மற்றும் MTS ஊழியர்களைக்  கொண்டு  செய்யப் பணிக்கப்பட்டுள்ளது.

நிர்வாகத்தின் இந்த மனிதாபிமானமற்ற  நடவடிக்கையை கண்டித்தும் உடனே அந்த 27 ஊழியர்களையும் பணிக்கு கொண்டுவரக் கோரியும் சென்னை CPMG அலுவலகம் முன்பாக 25.01.2016 மாலை தமிழக அஞ்சல் RMS(NFPE) இணைப்புக் குழு சார்பாக மாபெரும் எழுச்சி மிக்க கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. 

கூட்டத்திற்கு இணைப்புக் குழு தலைவர் தோழர். பரந்தாமன் (R 4) தலைமை ஏற்க, முன்னோட்ட உரையினை இணைப்புக் குழு கன்வீனர் தோழர். கண்ணன்(P4) அவர்கள் வழங்க , விளக்கமாக பிரச்சினையை அஞ்சல் மூன்று மாநிலச் செயலர் தோழர். J. இராமமூர்த்தி எடுத்துப் பேச, RMS மூன்றின் மாநிலச் செயலர் தோழர். ரமேஷ் கண்டன உரையாற்ற, CASUAL, COTINGENT, PART TIME ஊழியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் தோழர். சிவகுருநாதன் நன்றியுரை ஆற்ற , நூற்றுக் கணக்கான தோழிய/தோழர்களால் விண்ணதிரும் கண்டன கோஷங்கள் முழங்கப்பட்டு ஆர்ப்பாட்டம் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

புதன் காலை 11.00 மணியளவில் மண்டல நிர்வாகத்தால் பேச்சு வார்த்தைக்கு அழைக்கப் பட்டிருக்கிறோம். FNPO COC தோழர்களும் இந்த பேச்சு வார்த்தைக்கு வருவதாக, கண்டன ஆர்ப்பட்டத்திற்குப் பின்னதான கலந்துரையாடலில் தெரிவித்துள்ளனர்.


பேச்சு வார்த்தை வெற்றியடைந்து அந்த 27 ஊழியர்களும் பணிக்கு திரும்பினால் மிகுந்த மகிழ்ச்சி. இல்லையேல் , அடுத்த கட்ட போராட்டம் அஞ்சல் JCA போராட்டமாக வீறு கொண்டு உடன் எழும் என்பதை நிர்வாகத்திற்கு அறிவிக்கிறோம். 

போராட்டம்  நடத்துவது  நமக்கு  விருப்பமும் அல்ல . பொழுது போக்குமல்ல. அப்பாவி  ஊழியர்களின்  வாழ்வாதாரமே  பாதிக்கப்பட்டால்,  வேடிக்கை பார்ப்பதும் தொழிற்சங்கமாக இருக்க முடியாது என்பதை நிர்வாகத்தில் உள்ளவர்கள் நன்கு புரிந்துகொள்ளவேண்டும். நம் போராட்டம் நிச்சயம் வெற்றி பெறும். நிர்வாகம் பிரச்சினையை தீர்த்திட முயலவேண்டும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

TN CONFEDERATION CONDUCTED DHARNA ON NJCA PROGRAMME ON 20.01.2016 AT O/O CHIEF PMG, TN

மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனம் ,  தமிழ்நாடு  கிளை  சார்பாக கடந்த 20.01.2016 அன்று சென்னையில்  CPMG  அலுவலக வளாகத்தில் ஆயிரக் கணக்கான  மத்திய அரசு ஊழியர்கள்   கலந்துகொண்ட  எழுச்சி மிக்க முழு நாள் தார்ணா  போராட்டம்  மிகச் சிறப்பாக நடைபெற்றது. 

தார்ணா போராட்டத்திற்கு  மகா சம்மேளனத்தின்  தமிழக தலைவர் தோழர். J . இராமமூர்த்தி அவர்கள்   தலைமை தாங்கி  தலைமை உரையுடன்  போராட்டத்தை துவக்கி வைத்தார்.  மகா சம்மேளனத்தின் தமிழக பொதுச் செயலர் தோழர். துரைபாண்டியன் அவர்கள்  துவக்க உரையாற்றி ,  ஊதியக் குழுவின் பாதகமான பரிந்துரைகள் குறித்தும் அதன் மீது  மாற்றம் வேண்டி NJCA மற்றும்  அஞ்சல் JCA  அளித்த கோரிக்கை மனு குறித்தும் தெளிவாக விளக்கிப் பேசினார். பின்னர் அஞ்சல் RMS  ஓய்வூதியர்கள் சங்கத்தின்  அகில இந்தியப் பொதுச் செயலர் தோழர். K . ராகவேந்திரன் அவர்கள் வாழ்த்திப் பேசினார்.  

உணவு இடைவேளையில்  SRMU  சங்கத்தின் பொதுச் செயலர்  தோழர். M . கண்ணையா அவர்கள் 400 க்கும் மேற்பட்ட தோழர்களுடன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.  40 ஆண்டுகளுக்குப் பிறகு இரயில்வே பகுதியில் இருந்து  அதன் பொதுச் செயலர்  நம் பகுதியில் நடைபெற்ற போராட்டக் கூட்டத்தில் கலந்து  கொண்டது,  தற்போதைய மகா சம்மேளன தலைமை இருக்கும் காலத்தில் ஏற்பட்ட ஒரு  குறிப்பிடத் தகுந்த  தொழிற்சங்க  வரலாற்றுப் பதிவு ஆகும். இது   ஊழியர் சங்கங்களிடையே ஏற்பட்டிருக்கும் பரந்த ஒற்றுமைக்கு ஒரு சிறந்த எடுத்துக் காட்டு  ஆகும்.

 உணவு இடைவேளைக்குப்  பிறகு,  சாஸ்திரி பவன்  COC , ராஜாஜி பவன் COC, கல்பாக்கம் அணுசக்தி துறை ஊழியர் சங்கம், வருமான வரித்துறை,  மதுரை மாவட்ட மகா சம்மேளனம் போன்ற உறுப்புச் சங்கங்களின்  தலைவர்கள் ,  அஞ்சல், RMS  பகுதி தலைவர்களான  அஞ்சல் மூன்றின் முன்னாள் பொதுச் செயலர் தோழர். KVS, மற்றும் தோழர். ரகுபதி, தோழர். மனோகரன் , தோழர். வீரமணி, தோழர். கண்ணன்,  தோழர். பரந்தாமன், தோழர். ரமேஷ் ,தோழர். K .R . கணேசன், தோழர். சந்தோஷ்குமார்,தோழர். கார்த்திகேயன், தோழர். தனராஜ், தோழர். சிவகுருநாதன் , தோழர். மோகன், தோழர். மணிமேகலை,  தோழர். ஏஞ்சல்  சத்தியநாதன்  உள்ளிட்டோர் கலந்துகொண்டு வாழ்த்திப் பேசினார்.   

தமிழகத்தின் பல்வேறு  கோட்டங்களில் இருந்து  அஞ்சல் மூன்று, அஞ்சல் நான்கு  மாநிலச் சங்க நிர்வாகிகள், கோட்ட/ கிளைச் செயலர்கள் ஏராளமான  உறுப்பினர்களுடன் கலந்து கொண்டது  சிறப்பு ஆகும்.

இறுதியாக அஞ்சல் நான்கின் முன்னாள் மாநிலச் செயலரும், மகா சம்மேளனத்தின் முன்னாள்  தமிழக தலைவருமான மூத்த தலைவர் தோழர்.AGP அவர்கள் தார்ணா  போராட்டத்தை முடித்து வைத்து வாழ்த்திப் பேசினார்.  மகா சம்மேளனத்தின் தமிழக பொருளாளர் தோழர். சுந்தரமூர்த்திஅவர்கள்   (வருமான வரித்துறை சங்கத்தின்  மாநிலத் தலைவர்) நன்றியுரையுடன்  கோஷங்கள் விண்ணை முட்ட  தர்ணா போராட்டம்  நிறைவுற்றது.  

CPMG  அலுவலக வளாகாமே  தலைகளால் நிரம்பிய ஒரு போராட்டம் என்று வரலாற்றுப் பதிவு செய்தது இந்த தார்ணா  போராட்டம் என்றால் அது மிகையாகாது.

Saturday 23 January 2016

No posting if employees fail to submit property returns: Govt

Press news.
An online system is in place to facilitate hassle-free filing of the property details. The employees have been asked to avoid and slowing down of the system at the last moment.

All Central government employees were today told to submit their property returns by this month-end failing which they will be denied vigilance clearance for new postings. The last date for filing Immovable Property Returns (IPR) is January 31. All Central Secretariat Service officers are requested to submit the returns for the year 2015 "at the earliest without waiting for the last date to approach", an order issued by Department of Personnel and Training (DoPT) said.
An online system is in place to facilitate hassle-free filing of the property details. The employees have been asked to avoid and slowing down of the system at the last moment.
"The officers are also informed that for non-submission of IPR within the stipulated date, vigilance clearance will be denied for empanelment, deputations, etc," it said.
Similar instructions have been issued to all employees working under various cadres and services, a DoPT official said.
These IPR are in addition to the ones need to be filed by all Central government employees under the Lokpal Act.
The last date for filing such details under the Lokpal Act is April 15, 2016. Employees need to file details of their assets and liabilities along with that of their spouses and dependent children as part of mandatory obligations under Act.
There are about 50 lakh Central government employees.

India Post to ban Gmail in Post offices from Feb 2016


PF வட்டிவிகிதம் 7.75% இல் இருந்து 8.95% ஆக உயருகிறது

            DELHI: The Employees Provident Fund Organisation’s (EPFO) finance panel has recommended raising the interest rate on statutory savings of over 5 crore subscribers from 8.75% to 8.95% during the current fiscal.

                The proposal has to be endorsed by the central board of trustees before the finance ministry notifies it. If it goes through, it will be the highest return since the 9.5% paid in 2010-11 and the highest ever real interest rate (after netting out inflation) in recent years. An 8.95% rate will translate into returns of nearly 12% for those in the highest slab as the withdrawals and interest earnings do not attract tax at the time of withdrawal.

Tuesday 19 January 2016

வாசிக்கவும் ... யோசிக்கவும் ..."சாதாரண மதிப்பெண்களோடும் அசாதாரணமான

 புரிதல்களோடும் உனது கல்லூரிப் படிப்பை

 முடித்துக் கொண்டு வா மகளே “
                                
                                           ... முத்து நிலவன்  
                          
                       முதல் மதிப்பெண் எடுக்க வேண்டாம் மகளே-   
                         
                       என்ற கட்டுரை நூலின் ஆசிரியர்.

 
 இது வேண்டுகோள் வாசகமா என்ன?

 இல்லை – இது ஒரு முழக்கம் !


மனித உறவுப் புரிதல்கள் பலவீனப்பட்டு –

எத்தனை மார்க் ? எத்தனையாவது ரேங்க் ? –

என்ற புள்ளி விவரக் கணக்குகளின் கை 

ஓங்கிக் கிடக்கும் வகுப்பறைக்கு 

எதிரான முழக்கம் ! நியாயமானதொரு முழக்கம் !!