MENU BAR

Friday 21 August 2015

வெற்றிகரமான 19.08.2015 ஆர்ப்பாட்டம்:

·          GDS ஊழியர்களின் ஊதிய மாற்றம் 7 வது ஊதியகுழுவிலேயே செய்யப்படலாம் என்ற நமது அஞ்சல் துறையின் பரிந்துரையை-நிதித்துறை நிராகரித்ததைக் கண்டித்தும்.......

·         அஞ்சல், RMS ஊழியர்களின் கேடர் மறுசீரமைப்பு குறித்த நமது அஞ்சல் துறையின் பரிந்துரையை-DOPT திருப்பி அனுப்பியதைக் கண்டித்தும்....
  
·         அஞ்சல், RMS அலுவலகங்களில் அனைத்துக் கேடர்களிலும் உள்ள அனைத்துக் காலியிடங்களையும் உடனே நிரப்பிட வேண்டுமென வலியுறுத்தியும்.......
  19.08.2015 மாலை 6.30 மணியளவில் ஈரோடு
 தலைமை அஞ்சலகம் முன்பு JCA சார்பில்     மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

       ஆர்ப்பாட்ட கூட்டத்திற்கு ஈரோடு கோட்ட NFPE P3 சங்கத்தின் பொறுப்புச் செயலர் தோழர். G.சேதுராமன் தலைமை தாங்க, தோழர்கள் J. பாலமோகன்ராஜ் (FNPO P3 கோட்ட செயலர்), A. எழிழ்வாணன் (NFPE P3 பவானி கிளைச்செயலர்), M.மகாலிங்கம் (மாநில உதவிச்செயலர்-NFPE-GDS), N.சதாசிவன்(மாநில உதவித் தலைவர் NFPE-GDS),S.நடராஜன்(கோட்டச்செயலர்-NFPE-GDS), C.தில்லைசாமி(NFPE-GDS),S.சக்திவேல்(NFPE-P4, உதவிச்செயலர், கோபி) ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி சிறப்புரையாற்றினர்.
        ஆர்பாட்டத்தில் NFPE,FNPO சங்கங்களைச் சேர்ந்த ஈரோடு, பவானி, கோபி பகுதியின் P3,P4,GDS உழியர்கள் 40 க்கும் மேற்ப்பட்டோர் கலந்து கொண்டது ஒரு சிறப்பு அம்சமாகும்.
        தோழர். P.கணேசன்(FNPO-P3 உதவிச்செயலர்) நன்றி கூறி ஆர்ப்பாட்டக் கூட்டத்தை முடித்து வைத்தார்.
        இந்தக் கோரிக்கைகளுக்கான அடுத்த கட்ட இயக்கங்களிலும் திரளாகக் கலந்து கொள்வோம்.

தோழமையுடன்,
G.சேதுராமன்,
கோட்டச்செயலர்(பொறுப்பு).

Saturday 8 August 2015

ஈரோட்டில் இன்று துவங்கி நடக்கும் NFPE-R4 மாநில மாநாடு:

ஈரோட்டில் இன்று துவங்கி நடந்து கொண்டிருக்கும் NFPE- R4 தமிழ் மாநில மாநாடுக்கு வருகைபுரியும் அனைத்து சங்க நிர்வாகிகளையும், தோழர், தோழியர்களையும், நிர்வாக அதிகாரிகளையும் வருக வருக என  ஈரோடு கோட்டத்தின் அனைத்து NFPE சங்கங்களின் சார்பாக அன்புடன் வரவேற்கின்றோம்.மேலும் இம்மாநாடு வெற்றி பெற வீர வாழ்த்துகளையும் தெரிவித்துக்ககொள்கிறோம்.