MENU BAR

Monday 14 June 2021

Monthly meeting subjects June 2021

 தோழமைகளே..

15.06.2021 செவ்வாயன்று Video conference வாயிலாக நடக்க்கவிருக்கும் (கோட்ட நிர்வாகத்துடனான) தொழிற்சங்க சந்திப்பில் ,நமது சங்கத்தின் சார்பில் விவாதிப்பற்காக அளிக்கப்பட்டு இருக்கும் பொருள்கள் கீழ்கண்டவாறு..


MM / June2021 dlgs                                Dated:      14.06.2021

To

The SSPOs

Erode Division

Erode 638001.


Sir,

Sub: Subjects to be discussed in Union Monthly meeting f/m/o Dec 2020 – reg

The following subjects may please be discussed with our union in this monthly meeting. Also the status of the pending subjects may also be included along with this.

1.Wherever our staffs are getting affected by deadly virus COVID19 , necessary action may please be taken to close the POs temporarily so as to break the chain of virus spread further.(Ex. Unjalur SO, Perundurai SO)


2.Necessary action may please be taken with DD Health office so that the staffs(of all cadres including outsiders and other casual labours) and their family members can get their vaccine shot for COVID



3.Posting of regular SPM and PA to Thindal SO and  Guruvareddiyur SO


4.Maintenance of sufficient staff strength in heavy workload POs like Erode railway Colony SO, Surampatti SO, Pallipalayam SO, Karungalpalayam SO, Erode Collectorate SO and POs like 



5.Representation status of the LSG promoted officials (Ex. Smt.Sowmya, Smt.Vigneswari)


6.Necessary practical training may be given to the new PAs at our WTC itself especially in software like POSB FINACLE by maintaining proper precautionary measures wrt. COVID19.  



7.PA candidates are not able to get utilised for all kind of operative work at POs even after completion of one year of posting. Necessary action may please be taken to take a survey of above fact and to ensure the training and availability of user credentials for all the newly joined PAs so that they can be utilised for all kind of work in POs (Back office, POS, SAP DPMS, SAP F&A, POSB Finacle, IPPB Finacle, Aadhaar , CSC, CRM portal, WUMTs, etc.   )


8.Repair/Replacement of UPS units/Batteries {which were not covered under any Warranty/AMC} at Guruvareddiyur SO, Vasavi College SO, Tudupathi SO, Ammapettai SO, Perundurai West SO, Perundurai Sanatorium SO and Erode Collectorate SO.



9.There is no provision to install more than one PC at thindal SO where the sanctioned strength is 1+1 since 2018. Necessary action may please be taken with RO/CO and SIFY for the provision of same.


10.During this pandemic situation , POs couldn’t  able to concentrate in providing key services to public like Mail, Financial services since administration is compelling for the performance of third party products like CSC services. Hence it is requested to divisional administration not to compel our POs/ Staffs for performing CSC transactions (for which the officials are not even properly trained)



 11.Supply of new cash counting machines to Thindal SO and replacement /repair of cash counting machine at Bhavani HO.


 12.Necessary action may please be taken to refill and renew the FIRE EXTINGUISHERS available in our POs.


The following union representatives will be attending this month union meeting

Details of the Union representatives

S.no

Name of the Union representative

Designation

Mobile

Email ID


1

S Chellamuthu

Divisional Secretary, AIPEU- Group ‘C’ Erode. (SPM Erode North SO now on deptn at Erode HO)

70102 72295

muthuchellam0257@gmail.com



2

Saravanan

PA Olagadam SO

90802 39175

Saran.dop10@gmail.com



3

S Karthikeyan

Secretary, AIPEU – Group ‘C’ Gobichettipalayam. (PA Gobichettipalayam HO)

97919 67183

rithanika.k@gmail.com


Yours faithfully,

S.Chellamuthu,

Divisional Secretary.

~~~~~~|||~~~~~~


தோழமையுடன்,

ஈரோடு NFPE P3🚩

Monday 7 June 2021

துணை இயக்குநருக்கு( சுகாதார பணிகள்) கோட்ட சங்கத்தின் கோரிக்கை

 தோழமைகளே..

நமது ஈரோடு கோட்ட அஞ்சல் ஊழியர்களுக்கு கோரோணா தடுப்பு நடவடிக்கை குறித்து நமது ஈரோடு மாவட்ட சுகாதார பணிகள் துறை துணை இயக்குநர் அவார்களுக்கு நமது ஈரோடு கோட்ட சங்க நிர்வாகிகள் நேரில் சென்று கீழ்கண்ட மனுவினை அளித்து வந்துள்ளோம்..


NFPE

அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கங்கள்

ஈரோடு கோட்டக்கிளை, ஈரோடு 638001


NFPE/covid19/1 dlgs dated 07.06.2021


பெறுநர்:


துணை இயக்குனர் அவர்கள், 

சுகாதார பணிகள், ஈரோடு மாவட்டம்

ஈரோடு 638012


மதிப்பிற்குரிய ஐயா/அம்மா,


பொருள் : ஈரோடு கோட்ட அஞ்சல் ஊழியர்களுக்கு தகுந்த கொரொனோ தடுப்பு நடவடிக்கை எடுக்க வேண்டி

வணக்கம். 


நமது நாடு கொரோனா தோற்று பரவலால் , கடும் இன்னல்களை சந்தித்து வரும் இந்த சமயத்தில், மருத்துவம், காவல் போன்ற துறைகளோடு நமது இந்திய அஞ்சல் துறையும்  மக்கள் சேவையை தொடர்ந்து வழங்கி வருகின்றது என்பதை பணிவோடு தெரிவித்துக் கொள்கிறோம்.


முக்கியமான மருந்துகள் உள்ளிட்ட அனைத்து தபால்களைகளையும் அவரவர் இடத்திற்கே/வீட்டிற்க்கே கொண்டு சேர்பிக்கும் தபால்காரர், முக்கியமான வரவு/செல்ல செய்வதற்கு ஏதுவாக பொதுமக்களின் பயன்பாட்டிற்கு அஞ்சலக சிறுசேமிப்பு திட்ட சேவைகளை தொடர்ந்து வழங்கி வரும் கிராமப்புற/நகர்புற அஞ்சல் அதிகாரிகள்/ அஞ்சல் எழுத்தர்கள் என நமது அஞ்சல் துறை ஊழியர்கள் அனைவரும் களத்தில் முன்னணி சேவகர்களாக பணிபுரிந்து வருகிறோம்.


இந்த சூழலில், எங்களது NFPE அஞ்சல் ஊழியர் தொழிற்சங்கத்தின் சார்பில் கீழ்க்கண்ட கோரிக்கைகளை மேற்படி நடவடிக்கைக்காக சமர்பிக்கின்றோம்.


1.நமது ஈரோடு அஞ்சல் கோட்டம் முழுவதும் சுமார் 850 அஞ்சல் பணியாளர்கள், முன்கள சேவர்களாக பணிபுரிந்து வருகின்றனர்.அந்தந்த பகுதி சுகாதார மையங்களில், நமது அஞ்சல் ஊழியர்களுக்கு கொரோனா நோய் தடுப்பு ஊசி போடுவதில் முன்னுரிமை அளிக்க வேண்டுகிறோம். மேலும் அஞ்சல் ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு கோரோனோ சிறப்பு தடுப்பூசி முகாம் ஏற்படுத்தும் பட்சத்தில் , நமது அஞ்சல் துறை ஊழியர்கள் மேலும் உடல் உறுதியோடு மக்கள் சேவை செய்ய இயலும். 


2.இந்த கொரோன பெருந்தொற்று காலத்திலும் மருத்துவம், காவல் ஆகிய துறைகளோடு நமது அஞ்சல் துறையும் பொதுமக்களுக்கு சேவை வழங்கி வருவதால் , ஊழியர்கள் பலருக்கும் இந்த கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. அப்படி பாதிக்கப்படும் பட்சத்தில் அவர்கள் மருத்துவ சிகிச்சை பெறுவதில் பல சிக்கல்கள் எழுகின்றன. ஆதலால் நமது மாவட்டத்தில் அஞ்சல் துறை உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு/அவர்களது குடும்பத்தினருக்கு  கொரொனோ தொற்று ஏற்படும் பட்சத்தில், அவர்களுக்கென பிரித்யேகமாக/தற்காலிகமாக  ஒரு கொரோனா சிகிச்சை மையம் தொடக்கி சிகிச்சை அளிக்கும்பட்சத்தில் அந்தந்த அத்தியாவசிய துறைகள் தத்தம் பணிகளை இடைவிடாது தொடர வழிவகுக்கும் என்பதை தெரிவித்துக்கொண்டு அதற்கு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டி கேட்டுக்கொள்கிறோம்.  .



ஈரோடு மாவட்டத்தில் உள்ள அஞ்சல் துறை ஊழியர்கள் மற்றும் பொதுமக்களின் நலன்கருதி மேற்கூறிய அனைத்து கோரிக்கைகளையும் தாங்கள் தயவுகூர்ந்து பரிசீலனை செய்து, தக்க நடவடிக்கைகளை எடுக்கும்படி எங்கள் NFPE அஞ்சல் ஊழியர் தொழிற்சங்கத்தின் மூலம் வேண்டி விரும்பி கேட்டுக் கொள்கிறோம்.

நன்றி.

தங்கள் உண்மையுள்ள


கோட்டச் செயலாளர்

அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கம்(NFPE)

ஈரோடு  கோட்டக் கிளை

ஈரோடு 638001.

தொடர்புக்கு : 70102 72295 / 98658 85113/ 98423 98613.

மாண்புமிகு அமைச்சருக்கு NFPE கோட்ட சங்கத்தின் கோரிக்கை மனு

 கோரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக தமிழ்நாடு வீட்டுவசதி துறை அமைச்சரும்,நமது ஈரோடு மேற்கு சட்டமன்ற  தொகுதியின் உறுப்பினருமான மாண்புமிகு சு. முத்துசாமி MLA அவர்களிடம்,நமது கோட்ட சங்கத்தின் சார்பில் கோட்ட செயலர் தோழர் செல்லமுத்து அவர்கள் இன்று 07.06.2021 நேரில் சந்தித்து  அளித்துள்ள கோரிக்கை மனு கீழ்கண்டவாறு...


NFPE

அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கங்கள்

ஈரோடு கோட்டக்கிளை, ஈரோடு 638001

NFPE/covid19/dlgs dated 07.06.2021


பெறுநர்:

உயர்திரு சு.முத்துசாமி அவர்கள், 

வீட்டுவசதிதுறை அமைச்சர், 

சட்டமன்ற உறுப்பினர் - ஈரோடு மேற்கு தொகுதி

ஈரோடு 638001


மதிப்பிற்குரிய ஐயா,


பொருள் : ஈரோடு கோட்ட அஞ்சல் ஊழியர்களுக்கு தகுந்த கொரொனோ தடுப்பு நடவடிக்கை எடுக்க வேண்டி

வணக்கம். 


நமது நாடு கொரோனா தோற்று பரவலால் , கடும் இன்னல்களை சந்தித்து வரும் இந்த சமயத்தில், மருத்துவம், காவல் போன்ற துறைகளோடு நமது இந்திய அஞ்சல் துறையும்  மக்கள் சேவையை தொடர்ந்து வழங்கி வருகின்றது என்பதை பணிவோடு தெரிவித்துக் கொள்கிறோம்.


முக்கியமான மருந்துகள் உள்ளிட்ட அனைத்து தபால்களைகளையும் அவரவர் இடத்திற்கே/வீட்டிற்க்கே கொண்டு சேர்பிக்கும் தபால்காரர், முக்கியமான வரவு/செல்ல செய்வதற்கு ஏதுவாக பொதுமக்களின் பயன்பாட்டிற்கு அஞ்சலக சிறுசேமிப்பு திட்ட சேவைகளை தொடர்ந்து வழங்கி வரும் கிராமப்புற/நகர்புற அஞ்சல் அதிகாரிகள்/ அஞ்சல் எழுத்தர்கள் என நமது அஞ்சல் துறை ஊழியர்கள் அனைவரும் களத்தில் முன்னணி சேவகர்களாக பணிபுரிந்து வருகிறோம்.


இந்த சூழலில், எங்களது NFPE அஞ்சல் ஊழியர் தொழிற்சங்கத்தின் சார்பில் கீழ்க்கண்ட கோரிக்கைகளை மேற்படி நடவடிக்கைக்காக சமர்பிக்கின்றோம்.


1.ஈரோடு கோட்டத்தின் கீழ் உள்ள எந்தவொரு அஞ்சலகத்தில் பணிபுரிபவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்படும் பட்சத்தில், உடனடியாக சம்பந்தப்பட்ட அஞ்சலகத்தை (தற்காலிகமாக) மூடுவதற்கு தங்கள் அலுவலகத்தின் மூலம் எங்கள் ஈரோடு அஞ்சல் கோட்ட அதிகாரி உயர்திரு SSPOs அவர்களுக்கு அறிவுறுத்தும்படி கேட்டுக்கொள்கிறோம். இதன்மூலம் சம்பந்தப்பட்ட அஞ்சலகத்தில் பணிபுரியும் சக ஊழியர்களுக்கோ , அல்லது அந்தபகுதி பொதுமக்களுக்கோ தோற்று பரவாமல் இருப்பதை உறுதி செய்யலாம்.


2.நமது ஈரோடு அஞ்சல் கோட்டம் முழுவதும் சுமார் 850 அஞ்சல் பணியாளர்கள், முன்கள சேவர்களாக பணிபுரிந்து வருகின்றனர்.அந்தந்த பகுதி சுகாதார மையங்களில், நமது அஞ்சல் ஊழியர்களுக்கு கொரோனா நோய் தடுப்பு ஊசி போடுவதில் முன்னுரிமை அளிக்க வேண்டுகிறோம். மேலும் அஞ்சல் ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு கோரோனோ சிறப்பு தடுப்பூசி முகாம் ஏற்படுத்தும் பட்சத்தில் , நமது அஞ்சல் துறை ஊழியர்கள் மேலும் உடல் உறுதியோடு மக்கள் சேவை செய்ய இயலும். 

3.இந்த கொரோனா பெருந்தொற்று காலத்திலும் மருத்துவம், காவல் ஆகிய துறைகளோடு நமது அஞ்சல் துறையும் பொதுமக்களுக்கு சேவை வழங்கி வருவதால் , ஊழியர்கள் பலருக்கும் இந்த கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. அப்படி பாதிக்கப்படும் பட்சத்தில் அவர்கள் மருத்துவ சிகிச்சை பெறுவதில் பல சிக்கல்கள் எழுகின்றன. ஆதலால் நமது மாவட்டத்தில் அஞ்சல் துறை உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு/அவர்களது குடும்பத்தினருக்கு  கொரொனோ தொற்று ஏற்படும் பட்சத்தில், அவர்களுக்கென பிரித்யேகமாக/தற்காலிகமாக  ஒரு கொரோனா சிகிச்சை மையம் தொடக்கி சிகிச்சை அளிக்கும்பட்சத்தில் அந்தந்த அத்தியாவசிய துறைகள் தத்தம் பணிகளை இடைவிடாது தொடர வழிவகுக்கும் என்பதை தெரிவித்துக்கொண்டு அதற்கு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டி கேட்டுக்கொள்கிறோம்.  .


ஈரோடு மாவட்டத்தில் உள்ள அஞ்சல் துறை ஊழியர்கள் மற்றும் பொதுமக்களின் நலன்கருதி மேற்கூறிய அனைத்து கோரிக்கைகளையும் தாங்கள் தயவுகூர்ந்து பரிசீலனை செய்து, தக்க நடவடிக்கைகளை எடுக்கும்படி எங்கள் NFPE அஞ்சல் ஊழியர் தொழிற்சங்கத்தின் மூலம் வேண்டி விரும்பி கேட்டுக் கொள்கிறோம்.

நன்றி.

தங்கள் உண்மையுள்ள



சி.செல்லமுத்து

கோட்டச் செயலாளர்

அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கம்(NFPE)

ஈரோடு  கோட்டக் கிளை

ஈரோடு 638001.

தொடர்புக்கு : 70102 72295/ 98658 85113.

 

Tuesday 1 June 2021

பணிஓய்வு பாராட்டுக்கள்


 


தோழமைகளே..

நமது ஈரோடு கோட்டத்தில், கீழ்கண்ட தோழமைகள் இன்று 31.05.2021 அன்று பணி ஓய்வு பெறுகிறார்கள்..

1. தோழர். K. சுவாமிநாதன் (கோட்ட உதவி செயலர், கோட்ட சங்கத்தின் முன்னாள் செயலர் NFPE P3 ஈரோடு) APM ஈரோடு தலைமை அஞ்சலகம்.

2. தோழர். C சஞ்சீவி (முன்னாள் மண்டல செயலாளர் ,NFPE P3

கோவை மேற்கு மண்டலம்) APM ஈரோடு தலைமை அஞ்சலகம்.

3. தோழர்.P. செங்கோடன், DPM ஈரோடு தலைமை அஞ்சலகம்.

4. தோழர். T. சிவக்குமார், PM,கோபி தலைமை அஞ்சலகம்

5. தோழியர் மாதேஸ்வரி,SPM, நம்பியூர் துணை அஞ்சலகம்

6. தோழர். கருப்பணன்(செயலாளர், NFPE -P4, பவானி) Postman, பவானி தலைமை அஞ்சலகம்.

 

அது சமயம் நமது ஈரோடு தலைமை அஞ்சலகம் சார்பிலும், கோட்ட சங்கத்தின் சார்பிலும்,ஈரோடு HO மனமகிழ் மன்றத்தின் சார்பிலும் மேற்கூறிய முதல் தோழமைகளுக்கு சந்தன மாலை, பொன்னாடையுடனான வாழ்த்துரை வழங்கப்பட்டது..

நிகழ்வின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் அனைவரின் பார்வைக்கும் இங்கு பதியப்படுகின்றது..

 

மேலும் பணி மூப்பின் அடிப்படையில் நமது தமிழ்நாடு NFPE P3 சங்கத்தின் மாநில தலைவர் M.செல்வகிருஷ்ணன் (Postmaster, திருநெல்வேலி தலைமை அஞ்சலகம்) அவர்களும் பணி ஓய்வு பெறுகிறார்..

 

நமது ஈரோடு கோட்ட NFPE P3 சங்கத்தின் சார்பில் இன்று பணிஓய்வு பெறும் மேற்கூறிய அனைத்து தோழமைகளுக்கும் வாழ்த்துக்களையும் வணக்கங்களையும் தெரிவித்ததுக் கொள்கிறோம்..

 

தோழமையுடன்,

ஈரோடு NFPE P3.


















Thursday 27 May 2021

தோழர் சுவாமிநாதன் பணிநிறைவு மடல்

தோழமைகளே..
நமது ஈரோடு கோட்ட சங்கத்தின்  முன்னாள் கோட்ட செயலாளரும், சங்க முன்னணி நிர்வாகியுமான தோழர். சுவாமிநாதன் அவர்கள் வருகின்ற 31.05.2021 பணிஓய்வு பெறுவதை ஒட்டி ,
ஒரு மடல் எழுதியுள்ளார்..
அனைவரின் பார்வைக்காகவும் இங்கு நாம் பதிகின்றோம்..







தோழமையுடன்,
ஈரோடு NFPE P3🚩

Tuesday 25 May 2021

ஈரோடு கோட்ட அஞ்சல் ஊழியர்களுக்கு கோரோனோ தடுப்பூசி

 ஈரோடு கோட்ட அஞ்சல் ஊழியர்களுக்கு கோரோனோ தடுப்பூசி🚩

தோழமைகளே!

நமது ஈரோடு கோட்ட NFPE சங்கத்தின் சார்பில் ஏற்கனவே நமது SSPOs அவர்களுக்கும் , ஈரோடு மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கும் நமது ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டி இருந்தோம். மேலும் நமது SSPOs அவர்களும் நேற்று நமது மாவட்ட ஆட்சியரை சந்தித்து இதுகுறித்து வலியுறுத்தி பேசியதை அடுத்து , நமது மாவட்ட ஆட்சியர் அவர்கள் நமது ஊழியர்களுக்கு தடுப்பூசி போடுவதற்கு முன்னுரிமை அளிக்க ஒப்புதல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து நமது ஈரோடு கோட்ட அலுவலகத்தில் இருந்து நேற்று 24.05.2021 EMAIL வழியாக நமது ஈரோடு கோட்டத்தில் உள்ள அனைத்து அஞ்சலகங்களுக்கும் இதுகுறித்த தகவல் கேட்டு உள்ளனர்.

இதுகுறித்த தகவல்களை கீழ்க்கண்டவாறு அளித்துள்ளோம்.

யாருக்கெல்லாம் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம்?

1. SPM/PA

2.POSTMAN/MTS

3.ALL GDS staffs (HO/SO/BO)

4. Outsiders

(குறிப்பு: முதற்கட்டமாக மேற்கண்ட ஊழியர்களுக்கு தடுப்பூசி போடப்படும். அடுத்தகட்டமாக அவரவர் குடும்ப உறுப்பினர்களுக்கு தடுப்பூசி போடுவதற்கு பரிசீலிக்கப்படும்  )

யாரிடம் தகவல் சொல்ல வேண்டும்?

சம்பந்தப்பட்ட SUB POSTMASTER/ HEAD POSTMATSER/APM/DPM

என்னென்ன தகவல் தரவேண்டும்?

1.Name of the official

2.Name of the office

3.Gender (M/F)

4.Age(years)

5.Aadhaar Number

6.Self declaration form for taking VACCINATION

கோட்ட அலுவலகத்திற்கு எப்பொழுது தகவல் சொல்ல வேண்டும்?

25.05.2021 செவ்வாய் முதல் 27.05.2021 வியாழன் வரை

தடுப்பூசி முகாம் எங்கு?

பெரும்பாலும் முகாம் நடத்த வாய்ப்பு இல்லை. அனைவரும் அவரவர் பகுதி அரசு மருத்துவமனையில் தடுப்பூசி போட்டுக்கொள்ள ஏற்பாடு செய்யப்படலாம்.

தடுப்பூசி அவசியம் போடவேண்டுமா?

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வது அவரவர் தனி விருப்பம். இதுகுறித்த சந்தேகம் இருப்பின் உங்களது மருத்துவரிடம் ஆலோசனை பெற்றுக் கொண்டு இந்த விஷயத்தில் முடிவு எடுக்கலாம்.

எப்பொழுது தடுப்பூசி போடப்படும்?

அதிகபட்சமாக தடுப்பூசி  அடுத்த வாரம் எதிர்பார்கலாம்.

 

இதுகுறித்து தக்க நடவடிக்கை எடுத்து வரும் நமது ஈரோடு கோட்ட SSPOs அவர்களுக்கும், ஈரோடு மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கும் நமது தொழிற்சங்கத்தின் சார்பில் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.


தோழமையுடன்

ஈரோடு NFPE P3.🚩