Thursday 23 May 2013
Tuesday 7 May 2013
CONFEDERATION OF 24TH NATIONAL CONFERENCE, COM. M. KRISHNAN ELECTED AS NEW SECRETARY GENERAL
The 24th National Conference of the Confederation of Central Government Employees & Workers held at Kolkata from 4th to 6th has elected following as main office bearers. Com. S. K. Vyas (Advisor), Com. K. K. N. Kutty (President) Com. M. S. Raja (Working President), Com. M. Krishnan (Secretary General), Com. K. P. Rajagopal (Secretary) Com. Vrighu Bhattacharjee (Finance Secretary), 13 lakhs Central Government employees of 106 affiliated organisation are members of Confederation
Monday 6 May 2013
ஆறுசுவைகள் :
பழங்கால இந்திய மருத்துவங்களும், ஆயுர்வேதமும் நா அறியக்கூடிய சுவைகளை ஆறு வகைகளாகப் பிரிக்கின்றன. ஆயுர்வேதம், உடலின் ஆறு முக்கிய தாதுக்களுடன் இச்சுவைகளைச் சம்பந்தபடுத்தி, உடல் வளர்ச்சியில் இச்சுவைகளின் பங்குகளை விளக்குகின்றது. இனிப்பு, புளிப்பு, உவர்ப்பு, கசப்பு, கார்ப்பு மற்றும் துவர்ப்பு ஆகிய இந்த ஆறுசுவைகளின் பண்புகளையும், உடல் நலத்திற்கு இவற்றின் பங்குகளைப் பற்றியும் சற்று விரிவாய் பார்க்கலாம்.
தொன்றுதொட்டு பழக்கத்தில் இருந்து வரும் இந்திய மருத்துவங்களாகிய ஆயுர்வேதம், சித்த மருத்துவம் போன்றவற்றில் சுவைகள் ஆறு வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. உடலானது ரத்தம், தசை, கொழுப்பு, எலும்பு, நரம்பு, உமிழ்நீர், மூளை ஆகிய ஏழு முக்கிய தாதுக்களைக் கொண்டது என்பதனால் உடலை "யாக்கை" என்று கூறினர். இதில் ஏழாவது தாதுவான மூளை சரிவர இயங்க முதல் ஆறு தாதுக்கள் தகுந்த அளவில் இருத்தல் அவசியம். இந்த ஆறு தாதுக்களும், ஆறு சுவைகளுடன் கீழ்கண்டவாறு சம்பந்தப்பட்டுள்ளன.
துவர்ப்பு - இரத்தத்தைப் பெருக்குகின்றது
இனிப்பு - தசையை வளர்க்கின்றது
புளிப்பு - கொழுப்பினை வழங்குகின்றது
கார்ப்பு - எலும்புகளை வளர்க்கின்றது
கசப்பு - நரம்புகளை பலப்படுத்துகின்றது
உவர்ப்பு - உமிழ்நீரைச் சுரக்கச் செய்கின்றது
அந்த கால மருத்துவங்களும், உணவு முறைகளும் இதனை அடிப்படையாகக் கொண்டே இருந்துவந்தது. உடல் தாதுவைப் பெருக்க, சமன் செய்ய அதற்கு ஏற்றவாறு உணவு வகைகளைத் தயாரித்து வந்தனர். இதனைக் கொண்டுதான் "உணவே மருந்து, மருந்தே உணவு" என்று சொல்வார்கள்.
இது அதிகம் விருப்பு, வெறுப்பு காட்டப்படாத சுவை. உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் உகந்த சுவை. அதிக வியர்வையைக் கட்டுப்படுத்துகின்றது. இரத்தப்போக்கினைக் குறைக்க வல்லது. வயிற்றுப்போக்கினை சரி செய்யவல்லது.
இது அதிகமாயின், இளமையில் முதுமை தோற்றத்தை உண்டுவிக்கும். வாய் உலர்ந்து போகச் செய்யும், சரளமாக பேசுவதைப் பாதிக்கும். வாத நோய்கள் தோன்ற வழிவகுக்கும்.
கிடைக்கும் உணவுப் பொருட்கள்
வாழைக்காய், மாதுளை, மாவடு, மஞ்சள், அவரை, அத்திக்காய் போன்ற காய் வகைகளில் அடங்கியுள்ளது.
மனிதர்களால் அதிகம் விரும்பப்படும் சுவை இதுதான். மனதிற்கு மட்டுமல்லாமல் உடலுக்கும் உடனடி உற்சாகத்தைத் தரக்கூடிய சுவையிது. குழந்தைகளின் வளர்ச்சிக்கு மிகவும் உதவுகின்றது.
இது அதிகமாயின் உடல் தளர்வு, சோர்வு, அதிகத் தூக்கம், இருமல், உடல் எடைக் கூடுதல் போன்ற சிக்கல்கள் பலவும் தோன்ற வாய்ப்பு உள்ளது.
கிடைக்கும் உணவுப் பொருட்கள்
பழவகைகள், உருளை, காரட் போன்ற கிழங்கு வகைகள், அரிசி, கோதுமை போன்ற தானியங்கள் மற்றும் கரும்பு போன்ற தண்டு வகைத் தாவரங்களிலும் இனிப்புச் சுவை அதிக அளவில் அடங்கியுள்ளது.
உணவிற்கு மேலும் ருசி சேர்க்கும் ஒரு சுவையிது. பசியுணர்வைத் தூண்டும். உணர்வு நரம்புகளை வலுப்பெறச் செய்கின்றது. இதயத்திற்கும், செரிமானத்திற்கும் மிகவும் நல்லது.
இது அதிகமாயின், தாக உணர்வினை அதிகரிக்கும். பற்களைப் பாதிக்கும். நெஞ்செரிச்சல், இரத்தக் கொதிப்பு, அரிப்பு போன்ற தொந்திரவுகளை உண்டுவிக்கும். உடல் தளரச் செய்யும்.
எலுமிச்சை, புளிச்ச கீரை, இட்லி, தோசை, அரிசி, தக்காளி, புளி, மாங்காய், தயிர், மோர், நார்த்தங்காய் போன்றவற்றில் அதிகம் உள்ளது.
பசியுணர்வைத் தோற்றுவிப்பதோடு அல்லாமல், செரிமானத்திற்கும் பெரிதும் உதவுகின்றது. உடல் இளைக்கவும், உடலில் உள்ள அதிக்கப்படியான நீரை வெளியேற்றவும் செய்கின்றது. இரத்தச் சுத்திகரிப்புச் செய்கின்றது. தோல் நோய்களுக்கு நல்லதொரு பலனைத் தருகின்றது.
அதிகப்படியான காரம், உடல் எரிச்சலை உண்டுவிக்கும். உடல் சூட்டை அதிகரித்து, வியர்வையை அதிகம் சுரக்கச் செய்யும். குடல் புண்கள் தோன்ற அதிக வாய்ப்பு அளிக்கும்.
வெங்காயம், மிளகாய், இஞ்சி, பூண்டு, மிளகு, கடுகு போன்றவற்றில் அதிகப்படியான காரச்சுவை அடங்கியுள்ளது.
அதிகம் வெறுக்கப்படும் சுவையாக இருந்தாலும், அதிகம் நன்மைப் பயக்கும் சுவையும் இது ஒன்றே. மற்றச் சுவைகளை அறிய இது பெரிதும் உதவுகின்றது. சிறந்த நோய் எதிர்ப்புச் சக்தியாக செயல்படுகின்றது. தாக உணர்வைக் கட்டுப்படுத்துகின்றது. உடல் எரிச்சல், அரிப்புகளில் இருந்து நிவாரணம் தருகின்றது. காய்ச்சலைத் தணிக்கின்றது. இரத்தச் சுத்திகரிப்புச் செய்கின்றது.
இது அதிகமாயின், உடலின் நீர் குறைந்துப் போகச் செய்யும். மேனி வறண்டு கடினத்தன்மைத் தோன்ற நேரிடும். எலும்புகளைப் பாதிக்கும். அடிக்கடி மயக்கம் உண்டாகும், உச்சகட்டமாய் சுயநினைவற்ற நிலைக்கும் செல்ல வழிவகுக்கும்.
பாகற்காய், சுண்டக்காய், கத்தரிக்காய், வெந்தயம், பூண்டு, எள், வேப்பம்பூ, ஓமம் போன்றவற்றில் இந்த சுவை மிகுதியாய் உள்ளது.
தவிர்க்க இயலாத சுவை இது, அளவோடு இருக்கும்பட்சத்தில் அனைவராலும் விரும்பப்படும் ஒன்று. உமிழ்நீரைச் சுரக்கச் செய்கின்றது. மற்றச் சுவைகளைச் சமன்செய்ய உதவுகின்றது. உணவுச் செரிமானத்திலும் பங்கு வகிக்கின்றது.
இது அதிகமாயின் தோல் தளர்வினை உண்டுவித்து, சுருங்கிப் போகச் செய்யும். தோல் வியாதிகளையும் தோன்றச் செய்கின்றது.
உடல் சூட்டினை அதிகப்படுத்தி சிறுக் கட்டிகள், பருக்கள் தோன்ற வழிவகுக்கும்.
கீரைத்தண்டு, வாழைத்தண்டு, முள்ளங்கி, பூசணிக்காய், சுரைக்காய், பீர்க்கங்காய் போன்றவற்றில் அதிகமாய் இருக்கின்றது.
நன்றி : www.arusuvai.com

Friday 3 May 2013
வெயிலைத் தாக்குப் பிடிக்க.....!
வெயிலில் வெளியில் அலைபவர்கள், வாகனம் ஓட்டுபவர்கள் மற்றும் ஒரே இடத்தில் உட்கார்ந்தபடி வேலை செய்பவர்கள் அடிக்கடி மோர் மற்றும் இளநீரை குடிக்க வேண்டும்.
உடல் சூடு குறைவதோடு, உடம்புக்கு புத்துணர்வு கிடைக்கும். கோடை காலத்தில் எண்ணை பதார்த்தங்கள், காரம் முதலானவற்றை தவிர்க்கவும். சுத்தமான குடிநீரையும் அதிகமாக குடிக்கலாம்.
ஒவ்வொரு நாளும் நான்கு முறையாவது நல்ல சோப்பினால் தேய்த்து முகத்தைக் கழுவிக் கொள்வது நல்லது. இதனால் முகத்தில் வியர்வைத் துவாரங்கள் திறக்கப்படுவதோடு, தோலில் படியும் அழுக்குகளும் அகற்றப்படும்.
குறிப்பாக இரவு படுக்கப் போகும் முன்பு, சோப்பு போட்டு முகத்தை கழுவுவது அவசியம். தினமும் இரண்டு வேளை குளிக்கவும்.
வேர்க்குருவைப் போக்க சந்தனத்தை பன்னீரில் குழைத்து, வேர்க்குருக்கள் மீது தடவலாம். நல்ல நிவாரணம் கிட்டும்.
வெயிலின் தாக்கம் தாங்காமல் முகத்தில் கரும்புள்ளிகள் ஏற்படும். குறிப்பாக எண்ணைப் பசையான உடம்பு என்றால் முகத்தில் பருக்கள் ஏற்படுவதும் உண்டு.
கரும்புள்ளிகள் மற்றும் பருக்கள் மறைய பப்பாளிப் பழச்சாறை முகத்தில் தடவவும். எக்காரணம் கொண்டும் பருக்களை கிள்ளக் கூடாது. இதனால் பருக்கள் அதிகமாகும்.
முருங்கைக் கீரை மற்றும் ஏனைய கீரை வகைகளை வாரத்தில் 2 நாட்களாவது உணவில் சேர்த்துக் கொள்வதும் நல்லது.
வியர்வை அதிகமாக சுரப்பதால் தோல் வறட்சியை ஏற்படுத்தும். இதற்கு பழச்சாறு, காய்கறிச்சாறு, சூப் மற்றும் குடிநீரை அடிக்கடி குடிக்கவும்.
இதனால் தோல் வறட்சி தடுக்கப்படும். உடம்புக்கு புத்துணர்ச்சி கிடைப்பதோடு தோலும் பளபளப்பாக மாறும். கோடை காலத்தில் தயிர் சாப்பிடுவதை விட உப்பு சேர்த்து மோராக சாப்பிடுவதும் நல்லது.
நன்றி : கூடல்
Thursday 2 May 2013
செல்போன் டிப்ஸ்
* அடுக்குமாடி குடியிருப்புகளில் இருப்பவர்கள் எப்போது வெளியே சென்றாலும் செல்போனை எடுத்துச் செல்வது நல்லது. லிஃப்டில் பிரச்னை என்றாலோ, மேல் மாடியில் லிஃப்ட் கதவை யாராவது சரியாக மூடவில்லை என்றாலோ உடனடியாக தகவல் சொல்ல வசதியாக இருக்கும்.
* செல்போனில் பாட்டரி சார்ஜ் செய்கையில் இன்டிகேட்டர் ஸ்கிரீனில் நான்கு அல்லது ஐந்து கோடுகள் காண்பிக்கும். இரண்டு கோடுகள் வந்த உடனேயே சார்ஜ் செய்துவிட்டால் கரண்ட் கட் ஆகும் நேரங்களிலும் மொபைல் ஆக்டீவாக இருக்கும்படி பார்த்துக் கொள்ளலாம். தேவையற்ற டென்ஷனையும் தவிர்க்கலாம்.
* குடும்பத்தினர் ஒவ்வொருவரும் மற்றவர்களின் செல்போன் ஐஙஉஐ எண்ணை பதிவு செய்து தங்கள் செல்போனில் வைத்துக்கொண்டால் போன் தொலைந்து போகும் பட்சத்தில் புகார் செய்ய வசதியாக இருக்கும்.
* செல்போனில் பதிவு செய்திருக்கும் எண்களை கம்ப்யூட்டரில் பதிவு செய்துவிடவும். தவறுதலாக அழித்துவிட்டாலோ, போன் தொலைந்துவிட்டாலோ மீண்டும் போனில் ஏற்றிக்கொள்ளலாம்.
* செல்போனில் பேசியபடி நடப்பதாலும் வாகனம் ஓட்டுவதாலும்தான் அதிக அளவு விபத்துகள் ஏற்படுகின்றன. எனவே இந்த இரண்டு செயல்களையும் தவிர்க்கவும்.
* செல்போனில் தேவையற்ற கட்டணம் பிடித்தம் செய்யப்பட்டால் கஸ்டமர் கேருக்கு போன் செய்யும்போது,"ட்ராய்' (TRAI) அமைப்புக்கு புகார் செய்வேன்' என்று சொன்னால் உடனடியாக நடவடிக்கை எடுப்பார்கள். "Telecom Regulatory Authority of India' என்பதம் சுருக்கம்தான் ட்ராய்.
* செல்போனை டி.வி., ஃப்ரிட்ஜ், கம்ப்யூட்டர் போன்ற மின்சாதனப் பொருள்களின் அருகில் வைக்கக்கூடாது. பேட்டரி வீக் ஆகிவிடும்.
* செல்போன்களில் நாம் உபயோகிக்காத ஆப்ஷன்களை ஆஃப் செய்து வைப்பதன் மூலம் பேட்டரியின் சக்தியை சேமிக்கலாம்.
* செல்போனில் சார்ஜ் குறைந்து ஒரு கோடு இருக்கும்போது பேசக்
கூடாது. அப்போது அதில் ஆயிரம் மடங்கு கதிர்வீச்சு வெளிப்படும்.
Thanks to Dinamani * செல்போனில் பாட்டரி சார்ஜ் செய்கையில் இன்டிகேட்டர் ஸ்கிரீனில் நான்கு அல்லது ஐந்து கோடுகள் காண்பிக்கும். இரண்டு கோடுகள் வந்த உடனேயே சார்ஜ் செய்துவிட்டால் கரண்ட் கட் ஆகும் நேரங்களிலும் மொபைல் ஆக்டீவாக இருக்கும்படி பார்த்துக் கொள்ளலாம். தேவையற்ற டென்ஷனையும் தவிர்க்கலாம்.
* குடும்பத்தினர் ஒவ்வொருவரும் மற்றவர்களின் செல்போன் ஐஙஉஐ எண்ணை பதிவு செய்து தங்கள் செல்போனில் வைத்துக்கொண்டால் போன் தொலைந்து போகும் பட்சத்தில் புகார் செய்ய வசதியாக இருக்கும்.
* செல்போனில் பதிவு செய்திருக்கும் எண்களை கம்ப்யூட்டரில் பதிவு செய்துவிடவும். தவறுதலாக அழித்துவிட்டாலோ, போன் தொலைந்துவிட்டாலோ மீண்டும் போனில் ஏற்றிக்கொள்ளலாம்.
* செல்போனில் பேசியபடி நடப்பதாலும் வாகனம் ஓட்டுவதாலும்தான் அதிக அளவு விபத்துகள் ஏற்படுகின்றன. எனவே இந்த இரண்டு செயல்களையும் தவிர்க்கவும்.
* செல்போனில் தேவையற்ற கட்டணம் பிடித்தம் செய்யப்பட்டால் கஸ்டமர் கேருக்கு போன் செய்யும்போது,"ட்ராய்' (TRAI) அமைப்புக்கு புகார் செய்வேன்' என்று சொன்னால் உடனடியாக நடவடிக்கை எடுப்பார்கள். "Telecom Regulatory Authority of India' என்பதம் சுருக்கம்தான் ட்ராய்.
* செல்போனை டி.வி., ஃப்ரிட்ஜ், கம்ப்யூட்டர் போன்ற மின்சாதனப் பொருள்களின் அருகில் வைக்கக்கூடாது. பேட்டரி வீக் ஆகிவிடும்.
* செல்போன்களில் நாம் உபயோகிக்காத ஆப்ஷன்களை ஆஃப் செய்து வைப்பதன் மூலம் பேட்டரியின் சக்தியை சேமிக்கலாம்.
* செல்போனில் சார்ஜ் குறைந்து ஒரு கோடு இருக்கும்போது பேசக்
கூடாது. அப்போது அதில் ஆயிரம் மடங்கு கதிர்வீச்சு வெளிப்படும்.
Wednesday 1 May 2013
புரட்சிகர மே தின வாழ்த்துக்கள் !
புரட்சிகர மே தின வாழ்த்துக்கள் !
இளைஞர்கள் தெரிந்து கொள்ள ' மே தின' வரலாறு
பல்வேறு நாடுகளில் போராட்டங்கள்
18ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் – 19ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும் வேகமாக வளர்ச்சியடைந்த நாடுகளில் தொழிலாளிகள் பலரும் நாளொன்றுக்கு 12 முதல் 18 மணி நேரக் கட்டாய வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டனர். இதற்கெதிரான குரல்களும் பல்வேறு நாடுகளில் ஆங்காங்கே எழத் துவங்கியது. இதில் குறிப்பிடத்தக்கது இங்கிலாந்தில் தோன்றிய 'சாசன இயக்கம்' (CHARTISTS ) என்பதாகும். சாசன இயக்கம் ஆறு முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து தொடர் இயக்கங்களை நடத்தியது. அதில் குறிப்பிடத்தக்கது 10 மணி நேர வேலை கோரிக்கை.
பிரான்சில் நெசவுத் தொழிலில் ஈடுபட்டிருந்த தொழிலாளிகள், தினமும் கட்டாயமாக 15 மணி நேரம் உழைக்க வேண்டி இருந்தனர். இதை எதிர்த்து அவர்கள் பெரும் வேலை நிறுத்தப் போராட்டத்தை நடத்தினர். 1834 ல் 'ஜனநாயகம்' அல்லது 'மரணம்' என்ற கோஷத்தை முன்வைத்து பெரும் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். இவையனைத்தும் தோல்வியில் முடிவ டைந்தன.
ஆஸ்திரேலியாவில் மெல்போர்னில் கட்டிடத் தொழிலில் ஈடுபட்டிருந்த தொழிலாளிகள் உலகிலேயே முதன் முதலாக 8 மணி நேர வேலை கோரிக் கையை முன்வைத்து 1856 ல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு, வெற்றியும் பெற்றனர். இது தொழிலாளி வர்க்க போராட்டத்தின் மைல் கல்லாக அமைந்தது.
அமெரிக்காவில் 1832ல் போஸ்டனில், கப்பலில் பணியாற்றிய தச்சுத் தொழிலாளர்கள் 10 மணி நேர வேலை கோரிக்கையை முன்வைத்து வேலை நிறுத்தம் செய்தனர். அதே போல், 1835 ல் பிலடெல்பியாவிலும், பென்சில்வேனியாவிலும் இதே கோரிக்கையை முன்வைத்து இயக்கம் நடத்தப்பட்டது. பென்சில்வேனியாவில் நிலக்கரிச் சுரங்கத் தொழிலாளர்களும், இரயில்வே தொழிலாளர்களும் குறைவான வேலை நேரத்தை வலியுறுத்தி 1877 ல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
மாபெரும் வேலை நிறுத்தம்
இதைத் தொடர்ந்து அமெரிக்காவின் பல்வேறு மாநிலங்களில் உள்ள தொழிலாளர் இயக்கங்களை இணைத்து “அமெரிக்க தொழிலாளர் கூட்டமைப்பு” என்ற இயக்கம் உருவாக்கப்பட்டது. இவ்வியக்கம் 8 மணி நேர வேலை கோரிக்கையை முன்வைத்து தொடர்ந்து இயக்கங்களை நடத்தியது. அத்தோடு மே 1, 1886 அன்று நாடு தழுவிய வேலை நிறுத்தத்திற்கு அறைகூவல் விடுத்தது. இவ்வியக்கமே மே தினம் பிறப்பதற்கு காரணமாகவும் அமைந்தது.
தொழில் நகரங்களான நியூயார்க், சிகாகோ, பிலடெல்பியா, மில்வாக்கி, சின்சினாட்டி, பால்டிமோர், டெட்ராய்ட் என அமெரிக்கா முழுவதும் 3,50,000 தொழிலாளர்கள் பங்கேற்ற மாபெரும் வேலை நிறுத்தம் துவங்கியது. இவ்வேலை நிறுத்தத்தில் 1200க்கும் மேற்பட்ட நிறுவனங்களில் உள்ள தொழிலாளர்கள் பங்கெடுத்துக் கொண்டனர். தொழிலாளர்களின் எழுச்சிமிக்க வேலை நிறுத்தத்தினால், அமெரிக்க பெரு நிறுவனங்கள் மூடப்பட்டன. இரயில் போக்குவரத்து நடைபெறவில்லை. வேலை நிறுத்தத்தில் பங்கேற்ற தொழிலாளர்களின் பேரணி அமெரிக்காவை உலுக்கியது. மிக்சிகனில் மட்டும் 40,000 தொழிலாளர்களும், சிக்காகோவில் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்களும் இந்த பேரணியில் கலந்துக் கொண்டனர்.
சிக்காகோ பேரெழுச்சி
மே 3, 1886 அன்று “மெக்கார்மிக் ஹார் வெஸ்டிங் மெஷின் நிறுவனத்தின்” வாயிலில் 3000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் அணி திரண்டு கண்டனக் கூட்டத்தை நடத்தினர். இங்கு இடம்பெற்ற கலவரத்தில் நான்கு தொழிலாளர்கள் காவல் துறையினரின் துப்பாக்கிச் சூட்டிற்குப் பலியாயினர். இச்சம்பவத்தை கண்டிக்கும் வகையில் ஹே மார்க்கெட் சதுக்கத்தில் மே 4 அன்று மாபெரும் கண்டன கூட்டம் ஒன்றை தொழிலாளர்கள் அறிவித்தனர் . இது அரசினால் தடை செய்யப் பட்டது . தடையையும் மீறி 2500 தொழிலாளர்கள் பேரணியாக ஹே மார்கெட் நோக்கிச் சென்றனர். இந்நேரத்தில் காவல்துறையினர் ஏவி விடப்பட்டனர். அனைவரையும் கலைந்து செல்லுமாறு காவல் துறை அறிவித்தது . இவ்வேளையில் திடீரென்று கூட்டத்தில் வெடிகுண்டு வீசப்பட்டதில் அந்த இடத்திலேயே ஒரு காவலர் பலியானார். இதனால் கலவரமடைந்த போலீசார் கூட்டத்தினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தித் தொழிலாளர்களைத் தாக்கினர். துப்பாக்கிச் சூட்டில் 20 க்கும் மேற்பட்ட தோழர்கள் பலியாயினர். அத்துடன் தொழிலாளர் தலைவர்களை கைது செய்து தேசத் துரோகக் குற்றம் சாட்டப்பட்டு வழக்குத் தொடுத்தனர். இந்த வழக்கு ஜூன் 21, 1886 அன்று துவங்கியது. இதன் முடிவாக 7 பேருக்கு தூக்குத் தண்டனை வழங்கப்பட்டது.
அமெரிக்காவின் கருப்பு தினம்
நவம்பர் 11, 1887 அன்று தொழிலாளர் தலைவர்கள் ஆகஸ்ட் ஸ்பைஸ், ஆல்பிரட் பார்சன்ஸ், அடொல்ஃப் ஃபிஷர், ஜார்ஜ் ஏங்கல் ஆகியோர் தூக்கிலிடப்பட்டனர். இது அமெரிக்காவின் கறுப்பு தினமாக தொழிலாளர்களால் அறிவிக்கப் பட்டது. நவம்பர் 13, 1887 அன்று நடைபெற்ற இறுதி ஊர்வலத்தில் அமெரிக்க தேசமே அணி திரண்டது. நாடு முழுவதும் ஐந்து லட்சம் பேர் இவர்களது இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டதோடு, அமெரிக்கா முழுவதும் கறுப்பு நிறமேந்தி கண்டனக் குரல் எழுப்பினர் .அமெரிக்க தொழிலாளர்களின் 8 மணி நேர வேலைக்கான போராட்டமும், சிகாகோ தியாகிகளின் தியாகமும்தான் இன்றைக்கு மே தினமாக – உழைப்பவர் தினமாக நம்முன் நிற்கிறது.
அனைத்துலக தொழிலாளர் போராட்டம்
1889 ஜூலை 14 அன்று பாரீசில் சோசலிசத் தொழிலாளர்களின் ‘’சர்வதேச தொழிலாளர் பாராளுமன்றம்’’ கூடியது. 18 நாடுகளில் இருந்து 400 பிரதிநிதிகள் இக்கூட்டத்தில் பங்கேற்றனர். பிரெட்ரிக் ஏங்கெல்ஸ் உட்படப் பலர் கலந்துகொண்ட இக்கூட்டத்தில் கார்ல் மார்க்ஸ் வலியுறுத்திய 8 மணி நேர போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வது என்றும், சிக்காகோ சதியை இம்மாநாடு கடுமையாக கண்டித்ததோடு, 1890 மே 1 அன்று அனைத்துலக அளவில் தொழிலாளர்கள் இயக்கங்களை நடத்திட வேண்டும் என்றும் அறைகூவல் விடப்பட்டது.உலகத் தொழிலாளர்கள் அனைவரும், எட்டுமணி வேலை நேரத்திற்காக போர்க்குரல் கொடுக்கவேண்டிய நாள் மே 1 என்று அறிவிக்கப்பட்டது. இந்த அறைகூவலே மே முதல் நாளை, சர்வதேச தொழிலாளர் தினமாக, மே தினமாக கடைப் பிடிப்பதற்கு வழிவகுத்தது.
இதைத் தொடர்ந்து தொழிலாளர்களின் உரிமைக் கோரிக்கையும், அதற்கான இயக்கமும் வலிமை பெற்றன. நாளொன்றுக்கு எட்டுமணி நேரம் மட்டும் உழைக்கும் உரிமையும், வாரத்தில் ஒரு நாள் விடுமுறையும் உலகம் முழுதும் கொஞ்சம் கொஞ்சமாக நடைமுறைக்கு வரத் தொடங்கின. உழைக்கும் மக்களை உலகம் மனிதாபிமானத்தோடு பார்க்கக் கற்றுக்கொண்டது.
மே தினம் - வரலாற்று நிகழ்வு
அமெரிக்கத் தொழிலாளர்களின் எட்டு மணி நேர வேலைக்கான போராட்டமும், சிகாகோ போராளிகளின் தியாகமும்தான் இன்றைக்கு மே தினமாக, உழைப்பாளர்களின் தினமாக நம் முன் நிற்கிறது. இப்படியாக, பொதுவுடைமைத் தத்துவத்திற்கு பெரும் எதிர்ப்பு காட்டி வரும் அமெரிக்காவில்தான் உழைப்பாளர்களின் அடிப்படை உரிமை முதன் முதலில் நிலைநாட்டப்பட்டது என்பது வரலாறு காட்டும் பாடம் ஆகும். எங்கு அழுத்தம் அதிகமாகிறதோ அங்கு நிச்சயம் புரட்சி வெடித்துக் கிளம்பும்.
பெற்ற சுதந்திரம் பறி போகிறது !
நேற்று வரை நம் முன்னோர்களின் தியாகத்தால் நாம் பெற்ற இந்த 8 மணி வேலை என்ற சுதந்திரம் , இப்போது ஏகாதிபத்திய அரசுகளால், முதலாளித்துவ சக்திகளால், பன்னாட்டு நிறுவனங்களால், நம்மை அடகு வைக்கும் ஆளும் நாலாந்தர அரசியல் வாதிகளால் படிப்படியாகப் பறிக்கப் படுகிறது. 10 மணி நேரம் , 12 மணி நேரம் நீ வேலை செய்தால் என்ன என்று நம்மிடமே கொடூர எண்ணம் கொண்ட அதிகாரிகளால் இன்று தைரியமாக கேட்கப் படுகிறது . மீண்டும் அடிமைச் சாசனம் எழுதப் படுகிறது.
மீண்டும் புரட்சிக்கு தயாராவீர் !
இதிலிருந்து நாம் மீள வேண்டுமானால் , பெற்ற சுதந்திரம் பறிபோகாமல் காக்கப் படுமானால் என்ன தியாகத்திற்கும் நாம் தயாராக வேண்டும். தொழிற் சங்கம் என்ன செய்தது என்று கேட்பதை விட்டு , நாம் என்ன செய்ய வேண்டும் என்ற உணர்வு ஒவ்வொரு தோழனிடமும் வெடித்துக் கிளம்ப வேண்டும். அதிகார மிரட்டலுக்கு அடி பணியாது , தண்டனை களுக்கு பயந்து ஓடாது , போராட்ட குணம் வளர்க்கப் பட வேண்டும். தொழிலாளர் சக்தி அற்ப எண்ணங்களுக்காக பிரிக்கப்படாமல் , ஒன்று படுத்தப் படவேண்டும். மீண்டும் வரலாற்றுப் போருக்கு இளைஞர்களை நாம் தயார் செய்திட வேண்டும் . இதுவே மே தின தியாகிகளுக்கு நாம் செய்திடும் உண்மையான அஞ்சலி ஆகும்.
மே தின தியாகிகள் நினைவு ஓங்கட்டும் !
புரட்சிக்கான சிந்தனை பெருகட்டும்!
=======================================================================
இந்த வரலாற்றை பிரதி எடுத்து அனைத்து இளம் தோழிய/ தோழர்களுக்கும் அளித்திட அனைத்து கோட்ட/ கிளைச் செயலர்களையும் முன்னணித் தோழர்களையும் மாநிலச் சங்கம் அன்புடன் வேண்டுகிறது ! நிச்சயம் செய்வீர்கள் என்று நாங்கள் நம்புகிறோம் ! எதிர் கால எழுச்சிக்கு நம் இளைஞர் சக்தியை ஒன்று படுத்துவீர்கள் என்றும் நம்புகிறோம் !

========================================================================
புரட்சிகர மே தின வாழ்த்துக்களுடன்
J . ராமமூர்த்தி, மாநிலச் செயலர் ,
அஞ்சல் மூன்று , தமிழ் மாநிலம் .
Subscribe to:
Posts (Atom)