ஈரோடு கோட்ட அஞ்சல் ஊழியர்களுக்கு கோரோனோ தடுப்பூசி🚩
தோழமைகளே!
நமது ஈரோடு கோட்ட NFPE சங்கத்தின் சார்பில் ஏற்கனவே நமது SSPOs அவர்களுக்கும் , ஈரோடு மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கும் நமது ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டி இருந்தோம். மேலும் நமது SSPOs அவர்களும் நேற்று நமது மாவட்ட ஆட்சியரை சந்தித்து இதுகுறித்து வலியுறுத்தி பேசியதை அடுத்து , நமது மாவட்ட ஆட்சியர் அவர்கள் நமது ஊழியர்களுக்கு தடுப்பூசி போடுவதற்கு முன்னுரிமை அளிக்க ஒப்புதல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து நமது ஈரோடு கோட்ட அலுவலகத்தில் இருந்து நேற்று 24.05.2021 EMAIL வழியாக நமது ஈரோடு கோட்டத்தில் உள்ள அனைத்து அஞ்சலகங்களுக்கும் இதுகுறித்த தகவல் கேட்டு உள்ளனர்.
இதுகுறித்த தகவல்களை கீழ்க்கண்டவாறு அளித்துள்ளோம்.
யாருக்கெல்லாம் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம்?
1. SPM/PA
2.POSTMAN/MTS
3.ALL GDS staffs (HO/SO/BO)
4. Outsiders
(குறிப்பு: முதற்கட்டமாக மேற்கண்ட ஊழியர்களுக்கு தடுப்பூசி போடப்படும். அடுத்தகட்டமாக அவரவர் குடும்ப உறுப்பினர்களுக்கு தடுப்பூசி போடுவதற்கு பரிசீலிக்கப்படும் )
யாரிடம் தகவல் சொல்ல வேண்டும்?
சம்பந்தப்பட்ட SUB POSTMASTER/ HEAD POSTMATSER/APM/DPM
என்னென்ன தகவல் தரவேண்டும்?
1.Name of the official
2.Name of the office
3.Gender (M/F)
4.Age(years)
5.Aadhaar Number
6.Self declaration form for taking VACCINATION
கோட்ட அலுவலகத்திற்கு எப்பொழுது தகவல் சொல்ல வேண்டும்?
25.05.2021 செவ்வாய் முதல் 27.05.2021 வியாழன் வரை
தடுப்பூசி முகாம் எங்கு?
பெரும்பாலும் முகாம் நடத்த வாய்ப்பு இல்லை. அனைவரும் அவரவர் பகுதி அரசு மருத்துவமனையில் தடுப்பூசி போட்டுக்கொள்ள ஏற்பாடு செய்யப்படலாம்.
தடுப்பூசி அவசியம் போடவேண்டுமா?
கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வது அவரவர் தனி விருப்பம். இதுகுறித்த சந்தேகம் இருப்பின் உங்களது மருத்துவரிடம் ஆலோசனை பெற்றுக் கொண்டு இந்த விஷயத்தில் முடிவு எடுக்கலாம்.
எப்பொழுது தடுப்பூசி போடப்படும்?
அதிகபட்சமாக தடுப்பூசி அடுத்த வாரம் எதிர்பார்கலாம்.
இதுகுறித்து தக்க நடவடிக்கை எடுத்து வரும் நமது ஈரோடு கோட்ட SSPOs அவர்களுக்கும், ஈரோடு மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கும் நமது தொழிற்சங்கத்தின் சார்பில் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
தோழமையுடன்
ஈரோடு NFPE P3.🚩
No comments:
Post a Comment