தோழமைகளே...
நமது அஞ்சல் துறையில் சிறப்பானதொரு அரசு பணி செய்த பிறகு, நமது மூத்த தோழர் T.V.ராகவன் அவர்கள் கடந்த 03.08.2020 அன்று விருப்ப ஓய்வு பெற்றார்..
தோழர் அவர்கள் நமது ஈரோடு கோட்ட அலுவலகம் முதல் , துணை அஞ்சலகம் , ஈரோடு தலைமை அஞ்சலகம் என அனைத்து வகை பணி சூழலிலும் மிகுந்த ஈடுபாட்டுடனும், அதிக சுறுசுறுப்புடனும் , மிக தன்மையுடனும் பணியாற்றி வந்தது குறிப்பிடத்தக்கது...
மேலும் ஈரோடு கோட்ட சங்கத்தின் முன்னணி தோழமையாக, Active worker ஆக நமது சங்க செயற்பாடுகளுக்கு பெரிதும் பங்காற்றியவர்..
தோழரின் அஞ்சல் பணி சேவைக்கும், தொழிற்சங்க கடமைகளுக்கும் நன்றிகள் சொல்லும் அதே வேளையில், தோழரின் ஓய்வு வாழ்க்கை இனிதே அமைய நமது ஈரோடு கோட்ட சங்கத்தின் சார்பில் நல் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்..
நேற்றைய 03.08.2020 தினமன்று கோட்டம் ஈரோடு தலைமை அஞ்சலக மனமகிழ் மன்றம் சார்பிலும், நமது ஈரோடு கோட்ட சங்கத்தின் சார்பிலும் தோழரது பணி ஓய்வு விழா தகுந்த சமூக இடைவெளியுடனும் சிறப்பாகவும் அமைந்தது..
நிகழ்வின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் அனைவரின் பார்வைக்கும் இங்கு பகிரப்படுகின்றது..
தோழமையுடன்,
ஈரோடு NFPE P3.
Such a fantastic experience to work with you sir
ReplyDelete