MENU BAR

Friday 8 January 2016

பெண் ஊழியர்கள் குறிவைக்கப்பட்டு அலைகழிக்கப்படுவதும், அழவைக்கப்படுவதும் தொடர்கதையாகி வருகிறது. ஆர்பரித்துப் போராடி அநீதி களைவோம்.



     ஈரோடு தலைமை அஞ்சலக அதிகாரியின் அத்துமீறல்களைக் கண்டித்து:

மாபெரும் ஆர்ப்பாட்டம்
நாள்: 08.01.2016
நேரம் : மதியம் 1 மணியளவில்    (உணவு இடைவேளை)
இடம்: ஈரோடு தலைமை அஞ்சலகம் முன்பு


தோழர்களே ! தோழியர்களே !

1)        கருணை, மனிதாபிமானம் என எதுவுமின்றி மூத்த பெண் MTS ஊழியரை பஸ்ஸ்டான்ட் பணியில் அமர்த்தியது மட்டுமில்லாமல், அவருக்கு CL- மறுத்து அவர் மரணத்தின் விழும்பிற்கே  சென்று வந்ததற்கு இவரது SADIST தன்மைதான் காரணம் என்று நாம் அனைவரும் அறிவோம்.

2)       சென்ற பொங்கல் திருநாளன்று யாரோ ஒரு ஊழியர் மட்டும் Cheque Clearing- க்கு வந்தால் போதும் என்பதை நன்கு அறிந்து வைத்துக் கொண்டே SB COUNTER பெண் ஊழியர்கள் அனைவரையும் DUTY- க்கு வரச் சொல்லிய இவரது SADIST தன்மையையும் அறிவோம்.

3)       ஒரு பெண் ஊழியர் தனது மாமானார் மாமியார் இறந்து விட்ட காரணத்தால் தனது கணவரின் தம்பி திருமணத்தை,  அப்பா அம்மா ஸ்தானத்திலிருந்து நடத்தி வைக்க வேண்டுமென்று வலியுறுத்திக் கூறியும் – மற்ற ஒரு ஊழியரை அவரது பணியிடத்தில் போட்டு அவருக்கு மூன்று நாட்கள் விடுப்பு கொடுக்க வாய்ப்பிருந்தும் LEAVE கொடுக்க மறுத்த இவரது கொடூரத்தன்மையும் நாம் அறிவோம்.

4)       ஒரு போஸ்ட்WOMAN தோழியருக்கு இவர் வழங்கிய அதிகபட்ச தண்டனையை குறைக்க APPEAL செய்த பொழுது அவருக்கு தவறான தகவலைச் சொல்லி அவருக்கு மேலும் சிக்கலை உண்டாக்க நினைத்த இவரது தந்திரத்தையும் நாம் அறிவோம்.

5)       24.12.2015- ல் HOLIDAY NPO, 27.12.2015-ல் SUNDAY NPO என ஓயாமல் DUTY பார்த்த ஒரு பெண் MTS ஊழியர் தனது மருமகளின் மகப்பேறு நிகழ்வைக் கவனிக்க 26.12.15 –ல் விடுப்பு கேட்டு அது மறுக்கப்பட்ட அநியாயத்தையும் நாம் அறிவோம்.

6)       மதியம் 1.30 மணிக்கு கொண்டு வந்த சாப்பாட்டிற்கு தொட்டுக் கொள்ள தயிர் வாங்கி வர அருகில் உள்ள மெஸ்-க்கு சென்று வந்ததையும் , மற்றறொரு நாள் அதே 1.30 மணிக்கு நமது ATM - மிலிருந்து பணம் எடுத்துச் சென்று திரும்பி வந்ததையும் தவறாகக் கணித்து “ DUTY நேரத்தில் ஊர் சுற்றுகிறையா“ என்று ஒரு பெண் GDS ஊழியரை மிரட்டிய கொடூரத்தன்மையும் நாம் அறிவோம்.

7)       SB counter -ல் பணி புரியும் ஒரு பெண் ஊழியர் UCR-ல் கட்டிய பணம் குறித்து statement விளக்கம் கொடுத்தபிறகும் – அது தெளிவாக இல்லை – நான் சொல்கிறபடி எழுதங்கள் என்று அலைகழிக்கப்பட்ட அநாகரீக செயலையும், அதை செல்போனில் பதிவு செய்ய முயற்சித்ததையும் நாம் அறிவோம்.

8)       காலை நேரமொன்றில் கால் இடறி பிசகிவிட்ட காரணத்தால் 1 நாள் விடுப்பு கேட்ட பெண் ஊழியர் விடுப்பு மறுக்கப்பட்டதால் மருத்துவரிடம் சென்று வலி நிவாரணி எடுத்துக் கொண்டு வந்து DUTY- க்கு ரிப்போர்ட் செய்த பிறகு “நன்றாகத் தானே இருக்கிறார்கள்” என்று comment அடுத்தவர்களிடம் Comment  செய்த அநாகரீக  செயலையும் நாம் அறிவோம்.

9)       ஒரு புதிய பெண் ஊழியர், நிறைமாத கர்ப்பிணியாக இருந்தவர் மருத்துவரின் ஆலோசனைப்படி உடனடியாக விடுப்பு எடுக்க வேண்டிய பொழுது SRPM விடுப்பை மறுத்தே விட்டார். SSP அவர்களை அணுகிய பிறகே அவர் விடுப்பில் செல்ல முடிந்தது என்பதையும் நாம் அறிவோம்.

இப்படி தொடர்ந்து பெண் ஊழியர்களை அலைகழித்து – அழவைத்து ஆனந்தம் அடைகின்ற ஈரோடு தலைமை அஞ்சலக அதிகாரியின் ஆணவப் போக்கினைக் கண்டிக்கும் விதமாகவும் - அன்றாடம் யாராவது ஒருவரை அழவைப்பதும், அவமானப் படுத்துவதுமான இவரது செயல்களால் தலைமை அஞ்சலக ஊழியர்கள் மனரீதியாகவோ, உடல்ரீதியாகவோ பாதிக்கப்பட்டால் அதற்கு முழுக்க முழுக்க இவர்தான் காரணமென வலியுறுத்தும் விதமாகவும்  அவரைப் பணியிட மாற்றம் செய்ய வேண்டுமென்ற நமது நீண்ட நாள் கோரிக்கையை மறுபடியும் வலியுறுத்தும் விதமாகவும் நடைபெறும். மேற்கண்ட ஆர்ப்பாட்டத்தில் அனைத்து ஊழியர்களும் திரளாகக் கலந்து கொள்ள வேண்டுகிறோம்.

ERODEERODE 638001 / 08.01.2016             தோழமையுடன்,
K.SWAMINATHAN     J.BALAMOHANRAJ
                                                                   JCA Conveners
 

No comments:

Post a Comment