AIPEU-GDS(NFPE) சங்க முதல் அகில இந்திய மாநாட்டில் - 32 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு கட்டப் போராட்டங்களை நடத்துவதென எடுத்த முடிவின்படி 25.06.2013 ல் சென்னை CPMG அலுவலகம் முன்பு முழுநாள் தர்ணா நடைபெற்றது.
நமது ஈரோடு கோட்டத்திலிருந்து AIPEU GDS (NFPE) கோட்டச் செயலர் தோழர். S. நடராஜன், மாநில உதவித்தலைவர் தோழர். N. சதாசிவம், மாநில உதவிச் செயலர் தோழர் M. மகாலிங்கம், பவானி P3 கிளைச்செயலர் A. எழில்வாணன் மற்றும் தோழர்கள் S. மாயவன் ( ஈரோடு கோட்ட GDS சங்கம்) P. முருகன் (பவானி GDS கிளைத்தலைவர்) M.K. தங்கராசு (பவானி GDS கிளைப் பொருளாளர்) ஆகியோர் இந்தத் தர்ணாப் போராட்டத்தில் கலந்து கொண்டனரென்பது நமது கோட்டத்திற்கு பெருமை அளிக்கிறது . இவர்களுக்கு நமது வாழ்த்துக்கள்.
தமிழகத்தின் பல கோட்டங்கள், கிளைகளிலிருந்தும் P3,P4,GDS ஊழியர்கள் கலந்து கொண்டதென்பது - புதிய AIPEU GDS சங்கம் தனிப்பெரும் சங்கமாக - முதன்மைச் சங்கமாக உருவெடுத்திருப்பதற்கு கட்டியம் கூறுவதாக அமைந்ததென்பது மகிழ்ச்சியோடு பகிர்ந்து கொள்ள வேண்டிய விஷயமாகும்.
தோழமையுடன்,
K. சுவாமிநாதன்,
P3 கோடடச் செயலர்.