Wednesday, 28 January 2015
Saturday, 24 January 2015
NC JCM strongly opposes the Corporatization and Privatization of Government Establishments
No. NC/JCM/2015
Dated: January 11, 2015
The Cabinet Secretary,
Government of India,
Cabinet Secretariat,
Rashtrpati Bhawan Annexe,
New Delhi.
Dear Sir,
I solicit your kind attention
to my letter in No.NC/JCM/2014 dated 16 th December, 2014, wherein we had
conveyed the decisions taken at the National Convention of representatives of
the organisations participating in the JCM. We are distressed that you
have chosen not to respond to our letter till date. We have so far not received
any communication from any quarter of the convening of the National Council of
the JCM. No effort has also been taken by any Ministry to convene the
Departmental Councils.
We have now been given to
understand that the Government has taken serious steps to set up a corporation
to carry on the functions of the 41 ordnance Factories, presently functioning
under the Ministry of Defence. We have also noted that the report
of the Committee set up by the Government to corporatize the functions of the
Postal Department. The inordinate delay in
settling the demands for Interim Relief and Merger of DA is causing distress
amongst the Central Government employees. The
Railwaymen are particularly agitated over the decision of the Government to
induct FDI to the extent of 100% in Railways, which we are aware cannot be done
without privatisation of the Railways. The
declaration of the Convention, which we had forwarded to you vide our letter
cited had amply explained the anguish of the Central Government employees.
In order to register our
opposition to the recent decision of the Government to corporatize the
functions of the Ordnance factories, we have amended Item No.2 of the charter
of demands. We send herewith the revised charter of demands.
The National JCA met today
and took note of the silence on the part of the Government to our pleadings. The meeting has, therefore,
decided to go ahead with the agitational programmes, the first phase of which
will culminate in a massive March to Parliament by Central Government employees
on 28th April, 2015.
If no
settlement is brought about on the 10 point charter of demands, we will be
constrained to go for an indefinite strike action, the date of commencement of
which will be decided on 28 th April, 2015.
Thanking you,
Comradely yours,
sd/-
(Shiva Gopal Mishra)
Secretary (Staff Side)
NC/JCM & Convener
sd/-
(Shiva Gopal Mishra)
Secretary (Staff Side)
NC/JCM & Convener
Copy
to:
Secretary, DoP&T – for information and necessary action pl.
Secretary, DoP&T – for information and necessary action pl.
Friday, 16 January 2015
Congrats to the GDS Candidates who have passed the Postman Exam
Congratulations to the following candidates who are selected as Postman through the competitive examination limited to GDS held on 02.11.2014 (Sunday) .
1. G.Satheeskumar GDS BPM,
KuppandamapalayamBO a/w Athani SO |
2. R.Boopathiraja, GDS MD,
Kannadipalayam BO a/w Olagadam SO |
3. R.Poongodi, GDS Packer,
Sivagiri SO |
4. P.Balaji, GDS BPM, Kilwani
BO a/w Athani SO |
|
|
|
|
Monday, 12 January 2015
Thursday, 8 January 2015
சோதனை எலிகளாய் சாகமாட்டோம்! நல்ல பணிசூழலுக்காக போராட்டக்களம் அமைப்போம்!!
INFOSYS நிறுவனத்தின் சோதனை எலிகளா
தமிழகத்து அஞ்சல் எழுத்தர் ?
கடந்த இரண்டு நாட்களாக நாடு முழுவதும் CBS அலுவலகங்களில் EOD கொடுக்க முடியாமல் மறுநாளைக்கான BOD செய்ய முடியாமல் , COUNTER இல் வந்த CUSTOMER களிடம் பதில் சொல்ல முடியாமல் , வேறு வழியில்லாமல் வாங்கிய பணத்தையும் VOUCHER களையும் வரவு வைக்க முடியாமல் இரவு பகலாக தூக்கம் தொலைத்து , பொது மக்களிடம் 'அடி உதை' வாங்காத குறையாய் , வசவுகளை மட்டுமே வாங்கி தன் பணியை இன்றுதான் முடித்தான் நம் தோழன் .
இதில் தமிழகத்து தோழனுக்கு சிறப்பான இடம் உண்டு .
ஏன் தெரியுமா ? நாம் தானே சோதனை எலிகள் !
யாருக்கு ? INFOSYS நிறுவனத்திற்கு !.
ஏன் சோதனை எலிகள் ஆனோம் ?
'எத்தனை அடித்தாலும் வாங்குகிற வடிவேலு 'வை காரணம் கேட்க
'அதில ஒருத்தன் என்ன நல்லவன்னு சொல்லிட்டான்மா ' என்று கூறும் திரைப்பட வசனம் போல, நம்மை நல்லா வேலை பார்க்கிறான் ' னு நம்முடைய உயர் அதிகாரிகள் சொல்லி விட்டார்கள் அல்லவா ?
எப்படி ?
இந்தியாவிலேயே CBS MIGRATION முதன் முதலில் துவங்கியதும் தமிழகத்தில்தான் .. மிக அதிக அலுவலகங்கள் MIGRATE செய்யப் பட்டதும் தமிழகத்தில் தான் ... அதுவும் அதிவேக எண்ணிக்கையில்............
அதாவது 05.01.2015 இலாக்கா புள்ளி விபரப்படி MIGRATE செய்யப்பட அலுவலகங்கள் :-
தமிழகத்தில் H.O. - 94 S.O.s - 289 மொத்தம் - 383 அலுவலகங்கள்
பீகார் H.O. - 1 S.O. - NIL H.O. - சத்தீஸ்கர் - 1 S.O. - NIL
குஜராத் H.O. - 4 S.O. - NIL ஹரியானா - H.O. - 4 S.O. - NIL
ஹிமாச்சல் H.O. - 3 S.O. - NIL ஜார்கண்ட் - H.O. - 8 S.O. - NIL
கேரளா H.O. - 13 S.O. - NIL மத்திய பிரதேஷ் H.O. - 14 S.O. - NIL
இப்படிப் போகிறது பட்டியல் .... உங்களுக்குத் தெரியாது .. ஆனால் நம்முடைய அதிகாரிகளுக்கு நன்றாகவே தெரியும் !
இப்படி வேகமாக செய்து முடிக்க நம்முடைய அதிகாரிகள் காட்டும் அதீத ஆர்வம்............... , அது சரியாக இருக்குமானால் நமக்கும் நிச்சயம் சரியாக ஏற்றுக் கொள்ள முடியும். அதில் தவறில்லை . ஆனால் 1100 கோடி 'ஏப்பம்' விட்ட INFOSYS COMPANY யை........ வாங்கிய பணத்திற்கு வேலை செய்ய வைக்க நம்முடைய அதிகாரிகளால் முடியவில்லை அல்லவா ?
MOCK MIGRATION செய்து பார்த்துதானே DATA CENTRE இல் DATA MIGRATE செய்கிறார்கள் ?
அப்படியானால் ஒவ்வொரு அலுவலகத்திற்கும் எத்தனை கணக்குகள் உள்ளது என்ற எண்ணிக்கை அவர்களுக்கு தெரியாதா ?
எத்தனை அலுவலகங்கள் ' இடையில் வரும் ஒரு SUNDAY அல்லது HOLIDAY யில் MIGRATE செய்ய முடியும் என்று தெரியாதா ?
அதற்கு ஏற்றார்போல அலுவலக எண்ணிக்கையை நிர்ணயித்துக் கொள்ள தெரியவே தெரியாதா ?
03.01.2015 ஒரே நாளில் 103 அலுவலகங்கள் MIGRATE செய்ய வேண்டிய அவசியம் என்ன ?
அந்த DATA 06.1.2015 வரை MIGRATE செய்து முடிக்க முடியவில்லையே ஏன் ?
அதுவரை பொதுமக்களிடம் உதை வாங்கியது.... வாங்குவது யார் ?அப்பாவி அஞ்சல் ஊழியன் தானே ?
1100 கோடி வாங்கிய INFOSYS காரன் அல்லவே ?
06.01.2015 BOD 06.01.2015 மாலை 06.45 க்கு துவக்கலாம் என்று வெட்கமில்லாமல் MAIL கொடுப்பதை நம் அதிகாரிகள் எவ்வாறு ஏற்கிறார்கள் ?
நாம் ஒரு TRANSACTION செய்யவில்லை என்றால்கூட RULE 16 கொடுக்கத் துடிக்கும் அதிகாரிகள் , நாடுமுழுதும் உள்ள 1539 MIGRATE செய்யப் பட்ட அலுவலகங்கள் இரண்டு நாட்களாக ஸ்தம்பித்தபோது என்ன செய்தார்கள் ?
பல லட்சம் மக்களின் சேவை பாதிக்கப்பட்டதற்கு என்ன செய்தார்கள் ?
CUSTOMER இழப்புக்கு என்ன செய்யப் போகிறார்கள் ? ஓ ! குட்டி அதிகாரிகள்தான் நம் ஊழியனின் 'பெண்டாட்டி' பேரிலும் 'பிள்ளை' பேரிலும் பல நூறு கணக்குகள் துவக்கிடச் சொல்லுகிறார்களே ? பார்த்துக்கொள்ளலாம் ... என்ற நினைப்போ ?
எத்தனை மனித உழைப்பு நாட்கள் வீணடிக்கப்பட்டன ? இந்த நஷ்டத்தை எவர் தலையில் கட்டுவது ?
இத்தனைக்கு இது முதல் தடவை அல்லவே ? ஒவ்வொரு திங்கள் கிழமையும் CBS அலுவலகங்களில் வயிற்றில் நெருப்பைக் கட்டிக்கொண்டு அல்லவா நம் அப்பாவி ஊழியன் உள்ளே நுழைய வேண்டி உள்ளது ? .
இதற்கெல்லாம் ஏன் INFOSYS COMPANY மீது
சட்டபூர்வமாக நடவடிக்கை எடுக்கவில்லை ? .
ஏன் நஷ்ட ஈடு கோரவில்லை ?
ஏன் CONTRACT ஐ ரத்து செய்யவில்லை ?
ஏன் BLACK LIST செய்யவில்லை ?
ஓ ! அதெல்லாம் மேலிடத்து சமாசாரமோ ? இருக்கட்டும் ...
அப்படியே இருக்கட்டும் ...
அது எங்கள் வேலையில்லை என்றாலும் கூட ... என் அப்பாவி ஊழியனை ஏன் கொடுமைப் படுத்துகிறீர்கள் ?
ஏன் இந்த 'பேய்' வேகம் ? ' ஓட்டைச் சட்டி' என்று இத்தனை மாதங்களுக்குப் பிறகு புரிந்த பின்னுமா MIGRATION இல் வேகம் ?
இத்தனை பிரச்சினை இருக்கும் போது எந்த மாநிலங்களிலும் இல்லாமல் இங்குமட்டும் , ஏன் இந்த வேகம்? சற்று நிறுத்திதான் செய்யலாமே ?
இத்தனைக்கும் வங்கித்துறையில் இன்று பல நிறுவனங்கள் 'FINACLE ' சரியில்லை என்று கழற்றி விடுவதாக பத்திரிகை செய்தி தினம் தோறும் வருகிறதே ? பார்க்கவில்லையா ?
"United Bank of India (UBI), which markets itself as 'the bank that begins with U', has taken a U-turn a day after it blamed deficiencies in Infosys' Finacle software" ...BUSINESS STANDARD - 07.01.2015.
எது என்ன ஆனால் என்ன ? ... அஞ்சல் ஊழியன்... தமிழக அஞ்சல் ஊழியன் ... பன்னாட்டு நிறுவனங்களின் சோதனை எலிகளாக்கப்பட்டு வருகின்றான் ... இது சரியா ?
இது எவருடைய குற்றம் ? காலத்தின் குற்றமா ? கர்த்தாவின் குற்றமா ?
தேவை மறு பரிசீலனை ....
சொல்லிப் பார்க்கிறோம் ....
கேட்டுப் பார்க்கிறோம் ....
எழுதிப் பார்க்கிறோம் ....
பிரச்சினை தீரவில்லை எனில் ...
போராட்டம் ஒன்றே வழி என்று நம்மைத் தள்ளுவார்களேயானால் ...
வேறு வழியில்லை ..களம் இறங்கிடுவோம் ..
பிரச்சனைகளை வீதிக்கு கொண்டுவருவோம் ...
சாவதற்கு நாம் சோதனை எலிகளல்ல என்று காட்டுவோம் ....
பால் கொடுத்து உயிர்காக்கும் பசுக்கள் ...
பாதிப்பு வந்தால் கொம்பு சுழற்றி களம் இறங்கும்
என்பதை புரிய வைப்போம் ...
விரைவில் போராட்டத்திற்கு தயாராவோம் !
Monday, 5 January 2015
கவிதை:
பெருமை கொள்வோம் !
யாரு போட்ட திட்டமோ ? அஞ்சல் துறையை
ஆறு கூறாக்க வருகிறதாம் புது சட்டமாம்
ஆம் ஆத்மி சாயமெல்லாம் அஞ்சு வருஷத்தில் போயாச்சு
மெக்கன்சியின் மேதாவிதனம் மெல்ல மறைந்து போயாச்சு
கட்டி முடிச்ச ATM யும் காட்சி பொருளாய் ஆயாச்சு
இன்டர்நெட் வேகத்தில இருந்த ஆளும் போயாச்சு --ஆனாலும்
வாடிக்கையாளரை தக்க வைப்பதாய் புது வேடிக்கையும் நடக்குது
Speedpost நீ அனுப்பு -Epost நீ கொடு
Mystamp நீ வாங்கு -Philately நீ சேரு --என்று
இருப்பவரையே இழுத்து பிடித்து இலக்கை எட்ட சொல்லுது
58 சாப்ட்வேரில் தனி ஆளாய் வேலை பார்த்து
88 மெயிலுக்கு விளக்கம் வேறு கொடுத்தாலும்
மேசை மேல தூசியை காட்டி மேலிடமும் பாயுது
மன உளைச்சலில் ஊழியர்களின் மனமெல்லாம் நோகுது
ஒரு நாள் விடுப்புக்கும் ஒன்பது விளக்கம் தேவைபடுது
ஓயாம கேட்காதே என்று ஒரே பதிலில் முடிக்குது
அடக்குமுறை ,ஆணவம் -அடிமை --அத்துமீறல்
வெள்ளைக்காரன் காலம் போல வேகமாக பரவுது
வேடிக்கை பார்பதற்கும் -வெஞ்சாமரம் வீசுவதற்கும்
NFPE --ஆட்சியாளரால் பிறந்தது அல்ல
இரத்தசாட்சியா ளர்களால் பிறந்தது
நினைவு கொள்வோம் --பெருமை கொள்வோம்
NFPE இல் இருப்பதை பிறப்பின் பாக்கியம் என்போம்
NFPE இல் தொடர்வதை பிறவி பயன் என்போம்
இன்குலாப் ஜிந்தாபா த் SKJ
நன்றி: http://www.nfpetirunelveli.blogspot.in/
Saturday, 3 January 2015
புத்தாண்டில் ஒரு சராசரி ஊழியனின் பார்வை !
அன்புத்
தோழர்களுக்கு ! வணக்கம் ! நம்முடைய இலாக்கா முதல்வர் அவர்கள் அனைவருக்கும்
இனிய புத்தாண்டு வாழ்த்துச் செய்தியுடன் 2014 இல் நம்முடைய கடின
உழைப்புக்கான பாராட்டினையும் தெரிவித் துள்ளார்கள் ! அவர்களுக்கு நம் அனைவரின் சார்பில் நம்முடைய நன்றி உரித்தாகட்டும் !
நடப்பு ஆண்டில்
நம் இலாக்காவின் வளர்ச்சி, அதற்கான இலக்கு நிர்ணயம் அதன் தேவைகள்
குறித்தும் , மாறி வரும் சந்தைத் தேவைகளுக்கு ஏற்பவும் , புதிய வணிக
வாய்ப்புகளுக்கு ஏற்பவும் நம்முடைய திறமைகளை மேம்படுத்திக்
கொள்ளவேண்டியிருப்பது குறித்தும் தெரிவித்துள்ளார்கள்.
இலாக்காவின்
ஊழியர்கள் என்ற வகையில், நம்முடைய இலாக்காவின் வளர்ச்சியில் நம்
எல்லோருக்கும் நிச்சயம் அதற்கான கடமை உள்ளது. மிக அதிக அளவில் நம்
பங்கும் அதில் உள்ளது. நம் இலாக்காவே நம் அனைவரின் வாழ்வாதாரம் .
நிச்சயம் அந்த திசை நோக்கி நாம் செயல்படுவோம் என்று உறுதி கூறுகிறோம்.
ஆனால் அதற்கான
அடிப்படை தேவைகள் குறித்தும் நிர்வாகம் தன் பார்வையை செலுத்த
வேண்டியுள்ளது என்பதை இந்த நேரத்தில் நாம் பதிவு செய்கிறோம். நம்முடைய
ஊதிய உயர்வு , பஞ்சப்படி இணைப்பு போன்ற கோரிக்கைகளை இலாக்காவிடம் நாம்
வலியுறுத்தவில்லை. அதற்கான அரங்கு என்பது வேறு. மத்திய அரசின்
பார்வையில் அதிகாரிகள் உள்ளிட்ட, அனைத்து மத்திய அரசு ஊழியர்கள் சார்பாக
அதனை நாம் கொண்டு செல்கிறோம்.
ஆனால் நம்முடைய
இலாக்காவில் , நிர்வாக கட்டமைப்பிற்கு ஒரு திசைப் பார்வை மட்டுமே உள்ளது
என்பதே நம் ஊழியர்களிடம் உள்ள மனத் தாங்கல். அதனை இந்தப் புத்தாண்டில்
தெரிவிக்க வேண்டிய கடமை நமக்கு உள்ளது.
உதாரணமாக
இலாக்காவின் தகவல் தொழில் நுட்ப மேம்பாட்டுக்கு ரூ. 4909/- கோடியை
ஒதுக்கியது மத்திய அரசு. அதில் ஒரு பைசா கூட நம்முடைய தகவல்
தொழில் நுட்ப அடிப்படை கட்டுமானத்திற்கு அளிக்கப்படவில்லை என்பது வேதனை அல்லவா ?
2000 - 2004 களில்
அளிக்கப் பட்ட காலாவதியான கணினிகள் , PRINTER கள் , UPS - BATTERY கள் ,
BAR CODE SCANNER கூட இல்லாத அலுவலகங்கள் -இதனை வைத்துக் கொண்டு "நொண்டிக்
குதிரையில் ஏறி டெல்லிப் பட்டினம்போ" என்று விரட்டுவது வேடிக்கையான
விஷயமில்லையா? உடனே பரிசீலிக்க வேண்டிய ஒரு அத்தியாவசியமான அவசர அவசியம்
இல்லையா ?
TECHNOLOGY
TRANSFER என்ற வகையில் மென்பொருள் அளிப்பதற்கே ரூ.4909 கோடி பன்னாட்டு
நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது என்பது சரிதானா ?
அதுவும் நமது துறைக்கென்று பிரத்தியேகமாக , அதன் சட்ட விதிகள் ,
சேமிப்பு வங்கி
தொடர்பான நம்முடைய இலாக்காவின் தனித்துவமான திட்டங்கள் , காப்பீட்டுப்
பகுதியில் நம்முடைய இலாக்காவின் தேவைகள் குறித்தெல்லாம் முறையான ஆய்வு
செய்து அதற்கான மென்பொருள் வடிவமைத்துப் பெறாமல் , எவருக்கோ செய்த
காலணியை நாம் மாட்டிக் கொள்வதற்கு "நம்முடைய பாதங்களை வெட்டுவது போல"
இன்று இந்த திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுவது சரிதானா ?
இதுபோலத்தான் ,
MAIL OPERATION, FINANCE & ACCOUNTS, RETAIL OPERATION, RURAL ICT,
HR போன்ற பகுதிகளிலும் தனித்துவமான மென் பொருள் பெறாமல் வேறு
எவருக்கோ செய்தது நமக்கு வழங்கப்படுமா ?
இதனையெல்லாம் சரி
செய்திட வேண்டிய கடமை உள்ள, அதற்காக ஒப்பந்தங்கள் போட்டு (2 YEARS FOR
IMPLEMENTATION , 5 YEARS FOR MAINTANANCE) பல நூறு கோடிகள் வாங்கிய
நிறுவனங்கள் , பிரச்சினைகளை தீர்த்திட களத்தில் இல்லாமல் ஓடிப்
பதுங்குவதும், நம் அப்பாவி ஊழியர்கள் பிரச்சினைகளைத் தீர்த்திட ' இரவு
பகலாக " களத்தில் வேலை செய்ய வேண்டி உள்ளதும் சரிதானா ?
"இட்லி திங்கச் சொன்னது ஒருத்தனையாம் - ஏப்பம் விடச்சொன்னது இன்னொருத்தனையாம் " என்ற கிராமத்து பழமொழி இதற்காகத்தான் வந்ததோ ?
தினந்தோறும் எத்தனை எத்தனை பிரச்சினைகள் ? "கழுதை முதுகில் வைத்த சுமை போல" எல்லாம் பழகினால் சரியாகிவிடும் என்பதும் சரிதானா ?
எந்த அளவு "அலைக்கற்றை பரிமாணம் " தேவை என்று கூட அறியாமல் LAPTOP இல் போடும் DATA CARD க்கு உண்டான 256 KBPS /512 kbps BANDWIDTH மட்டும்
பெற்று அதில் "மின்னல் வேகத்தில் TRANSACTION" என்று வெறும் "அச்சு
மற்றும் மின்னணு ஊடகங்களுக்கு பேட்டி கொடுப்பது" சரிதானா ?
NET WORK
CONNECTIVITY இல்லாததால் TRANSACTION செய்திட இயலாமல் பொதுமக்களிடம்
அடிவாங்கும் அளவுக்கு ஊழியர் அவதியுறுவது தெரியாதா ? எத்தனை ஊரில் போலீஸ்
பாதுகாப்பு போடப் பட்டது ? இது தெரியவே தெரியாதா ?
இப்போது
மேம்படுத்தப்பட்டு விட்டது என்று இன்னமும் நாம் 'பொய்' கூறிக் கொண்டுதானே
உள்ளோம் ? பல நாட்கள் 'HANG OVER ' இல் ஊழியர்படும் அவதி , மறுநாள்
மறந்து விடும் என்று சமாதானம் செய்தால், பொது மக்களும் அப்படியே
சமாதானமாகி விடுவார்களா ?
பல நூறு கோடிகள்
கொடுத்து ஒப்பந்தம் போடும் முன்னரே உரிய தொழில் நுட்ப மற்றும் துறை
சார் அறிவு கொண்ட அதற்கான வல்லுநர் குழு அமைத்து அனைத்து பகுதிகளையும்
ஆய்வு செய்து ஒப்பந்தங்கள் போட வேண்டாமா ? ஏனோ தானோ வென்று ஒப்பந்தங்கள்
போடப்பட்டு , அதன் பாதிப்புகள் அனைத்தையும் அடிமட்ட தொழிலாளி தலையில்
கட்டி " ஓடு ஓடு" என்றால் எப்படி ஓடுவது என்று சிந்திக்க வேண்டாமா ?
இத்தனைக்கும் நம்
எழுத்தரின் அடிப்படை கல்வித்தகுதி +2 தானே ? மேலும் அதில் பாதி பேர்
, பழைய 8TH STANDARD QUALIFICATION இல் தேர்வு செய்யப்பட்டு
தபால்காரராக /MTS ஆக பணியாற்றி பதவி உயர்வு பெற்ற எழுத்தர் தானே ?
இவர்கள் ஒரே நேரத்தில் 58 SOFTWARE நம் துறையில் HANDLE செய்யும் அளவு
அறிவு பெற்றவர்களா ? 1200 SCREEN SHOT நினைவில் கொள்ளும் வண்ணம்
தொழில் நுட்ப அறிவு மேம்பட்ட தகவல் தொழில் நுட்பத் துறையில் உயர்
கல்வி பெற்றவர்களா ? இருந்தும் இத்தனை பல்நோக்கு உள்ள அனைத்து
வேலைகளையும் செய்கிறார்கள் என்பது உலகிலேயே எந்தத் துறையிலும் இல்லாத
புதுமை இல்லையா ? இது குறித்து என்றாவது , எவராவது ஒரு வரி பாராட்டியது
உண்டா ? பாராட்டு கூட ஒரு "ஊக்க மருந்து" தானே ?
வேறு
எந்த மத்திய அரசுத் துறையிலாவது ஒரே நேரத்தில் 58 SOFTWARE கணினிகளில்
பயன்பாட்டிற்கு உள்ளதா ? ஏன் ? தொழில் நுட்ப முதுகலைப் பட்டம் அல்லது
தொழில் நுட்ப பொறியாளர் பட்டம் பெற்ற உயர் கல்வி பெற்றவர்கள்
பணி புரியும் MNC க்களில் கூட இத்தனை SOFT WARE ஒரு ஊழியர்
கையாள்கிறாரா ? இல்லையே !
இவ்வளவு ஊழியம் செய்தும், அதுவும் INITIALISATION காலத்தில் 'TRANSITION' காலத்தில், ஊழியர் தம் பணியில் ஒரு சிறு தவறு செய்தால் கூட, அதனை
தொழில் நுட்ப ரீதியாக சரி செய்திடும் விபரம் கூட சிறிதும்
தெரிந்துகொள்ளாத சில கீழ்மட்ட அதிகாரிகள் , தனக்கு "RULE 16 போடுவது தவிர
வேறு எதுவும் தெரியாது" என்ற வகையில் ஊழியர்களை தினம் தினம் பழிவாங்கும் போக்கு மிகவும் அதிகமாகி உள்ளதே ? அது உங்களுக்கு தெரியுமா ? பல இடங்களில் கூக்குரல் கேட்கிறதே ? அது உங்களுக்குப் புரியுமா ?
BUSINESS
DEVELOPMENT கூட்டங்களில் வெறும் TARGET பற்றி மட்டும் பேசினால் , அதனை
சாதிக்க வேண்டிய அடிமட்ட ஊழியர் சரியான WORKING ENVIRONMENT
இல்லாவிட்டால் எவ்வாறு சாதிப்பான் என்பது குறித்து ஆய்வு செய்வது
கிடையாதா ?
வணிக வளர்ச்சி,
மாத இலக்கு என்ற பெயரில் 'MULTI LEVEL MARKETING COMPANY " கள் போல
"உன் பெண்டாட்டி பேரில் 100 RD கணக்கு" , "பிள்ளை பேரில் 100 RD கணக்கு" ,
அடுத்த PREMIUM மே கட்டாத "'பினாமி " RPLI பாலிசிகள் GDS ஊழியர்
சம்பளத்தில் போடு" என்று வணிக யுக்தியே சிறிதும் தெரியாத சில கீழ்மட்ட
அதிகாரிகளின் தினசரி நடவடிக்கைகள் நம் துறையை நிஜமான வளர்ச்சி
பெற வைக்குமா ? வீழ்ச்சி பெற வைக்குமா ? இது குறித்து சிந்திக்க
வேண்டாமா ? வணிக வளர்ச்சி கூட்டங்களில் பேசுவது உண்டா ?
EPOST சேவை
எதற்காக துவங்கப்பட்டது என்பதே தெரியாமல், போட்டியில்லாத , எவருமே
போட்டியிட முடியாத இந்த சேவைப் பகுதியை எவ்வாறு விரிவாக்கம் செய்வது
என்பது கூட தெரிந்துகொள்ளும் அடிப்படை அறிவு (KNOWLEDGE ) இல்லாமல்
"சினிமா நடிகை பிறந்த நாளுக்கு 1000 EPOST போடு" "ரசிகர் மன்றம் நீயே
அமை" என்றெல்லாம் கோமாளித்தனம் செய்யும் கீழ் மட்ட அதிகாரிகளை
உங்களுக்குத் தெரியவே தெரியாதா ? இவையெல்லாம் நம் துறையை வளர்ச்சி பெற
வைக்குமா ? இது குறித்து சிந்திக்க வேண்டாமா ?
பல ஆயிரக் கணக்கான காலியிடங்களை நிரப்பவே வேண்டாமா ?
காலியிடங்களை
நிரப்ப போராடி நடவடிக்கை எடுத்தாலும், தேர்வு முடிவுகள் வெளி வருவதில்
ஆண்டுக் கணக்காக ஆகிறதே ? இது சரி செய்யப் பட வேண்டாமா ?
புதிய வேலைகளுக்கு அளவீடு என்பது வேண்டாமா ?
இப்படி எத்தனை
எத்தனையோ கேள்விகள் - சாதாரண அடிப்படை ஊழியனின் மனதில் - புத்தாண்டு
கேள்விகள் உண்டு ! இவற்றையும் நிச்சயம் பரிசீலிக்க வேண்டிய கடமை
நம் நிர்வாகத்திற்கு உண்டு !
இந்த திசை
நோக்கியும் பார்த்தால் மட்டுமே நம்மால் இலாக்காவை நினைக்கும் திசையில் ,
உரிய வேகத்தில் , கொண்டு செல்ல முடியும் ? ஒரு திசைப் பார்வையில் "இலக்கு
" "இலக்கு" என்று சாட்டையை சுழற்றினால் அதில் பெறுவது நிச்சயம்
வளர்ச்சியாக இருக்காது . வீக்கமாகவே இருக்கும் . செயற்கையான வீக்கம்
நோயின் அடையாளம் !
நாம் நோய் பெறப் போகிறோமா ? வளர்ச்சி பெறப் போகிறோமா ? என்பது
நம் கையில்
இருக்கவேண்டும் என்று நிர்வாகம் நினைப்பது போல , நிர்வாகமும் அப்படி
நினைக்கவேண்டும் என்று இந்தத் துறையின் ஊழியர்களான நாம் நினைப்பதில்
தவறு எதுவும் உண்டோ ? சிந்திக்க வேண்டுகிறோம்.
courtesy: aipeup3tn.blogspot.in
CHANGE IN TRAINING SESSION AT PTC, MADURAI ON THE EVE OF PONGAL FESTIVAL
அன்புத்
தோழர்களுக்கு இனிய வணக்கம் ! நம்முடைய மாநிலச் சங்கத்தின் சார்பில் கடந்த
30.12.2014 அன்று CPMG (I/C) திரு. BARMMA அவர்களைச் சந்தித்து பல்வேறு
பிரச்சினைகள் குறித்து கடிதம் அளித்து பேசிய விபரம் அன்றைய தேதியில் நம்
மாநிலச் சங்க வலைத்தளத்தில் தெரிவித்திருந்தோம். இதில் முக்கிய
பிரச்சினையான PONGAL பண்டிகை காலத்தில் மதுரை PTC யில் உத்திரவிடப்
பட்டிருந்த TRAINING SESSION மாற்றியமைக்கப் படவேண்டும் என்பதே . அதற்கு
அவரும் உடன் ஆவன செய்வதாக உறுதி அளித்திருந்த விபரம்
தெரிவித்திருந்தோம்.
அதன்படி
எதிர்வரும் 05.01.2015 முதல் 17.01.2015 வரை அறிவிக்கப் பட்டிருந்த
பயிற்சி வகுப்புகள் மாற்றியமைக்கப்பட்டு , இடையில் வரும் 10.01.2015
மற்றும் 11.01.2015 நாட்கள் பயிற்சி வகுப்பு நாட்களாக
அறிவிக்கப்பட்டுள்ளன. அதனால் பயிற்சி வகுப்புகள் அனைத்தும் பொங்கலுக்கு
முதல் நாளே , அதாவது 14.01.2015 அன்றே முடிக்கப்பட்டு விடும்.
பயிற்சி
வகுப்புக்கு தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து பணிக்கப் பட்டிருந்த 130
ஊழியர்கள் இதனால் பயன் பெறுவார்கள். அவர்கள் அனைவருக்கு நம் மாநிலச்
சங்கத்தின் பொங்கல் நல் வாழ்த்துக்கள் !
நம் கோரிக்கையை
ஏற்று இதற்கான முயற்சிகளை மேற்கொண்ட CPMG (I/C) திரு. BARMMA
அவர்களுக்கும் , DPS HQ திரு. கோவிந்தராஜன் அவர்களுக்கும் , அதற்கு
உறுதுணையாக இருந்த AD (STAFF ) திரு. ஆறுமுகம் அவர்களுக்கும் ஊழியர்கள்
சார்பாக நம் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். இது குறித்த DIRECTOR
PTC அவர்களின் பதிலை கீழே பார்க்கவும்.
Courtesy: AIPEUP3tn.blogspot.in
Subscribe to:
Posts (Atom)