MENU BAR

Tuesday, 11 September 2012

இயற்கை மருத்துவக் குறிப்புகள்: பாகம் 3

புண்கள் ஆற வேண்டுமா?(To treat ulcers)
வெள்ளை வெங்காயத்தை அடிக்கடி உணவில் பயன்படுத்துங்கள். வயிற்றிலும் குடலிலும் உண்டாகும் புண்களை ஆற்றிவிடும்.
இளம் ஆண்- பெண்களுக்கு ஏற்படும் முகப்பருக்கள் போக, காய்ச்சி ஆறிய ஒரு கோப்பை நீரில் எலுமிச்சை சாறு பிழிந்து சீனிச்சர்க்கரை கலந்து சாப்பிட குணம் கிடைக்கும்.
நீர் கடுப்பு உடல் எரிச்சல் தீரவெள்ளரிக்காய், தக்காளிப்பழம், வெங்காயம், பச்சைப் பருப்பு சேர்த்து கூட்டு சாப்பிடுங்கள். குணமாகும்.
தோல் வியாதி குணமாக்கும் திருநீற்றுபச்சை:(to cure skin problem)
படை மற்றும் தோல் வியாதிகளுக்கு பயன்படுகிறது. முகப்பரு, வேனல் கட்டி போன்றவற்றிற்கு இந்த இலையின் சாற்றை போட்டால் குணமாகும். இதன் சாறை தேள் கடித்த இடத்தில் தடவ, கடுப்பு நீங்கும்.

பருத்த உடலை இளைக்கச் செய்ய - (நீங்கள் ஒல்லியாக வேண்டுமா?)
ஐம்பது கிராம் கொள்ளு எடுத்து அரைலிட்டர் தண்ணீரில் இரவில் ஊறவைத்து காலையில் கொதிக்க வைத்து, சிறிது இந்துப்பு சேர்த்து சாப்பிடவும். அதேபோல் காலையில் ஊறவைத்து இரவில் சாப்பிட வேண்டும். இப்படியாக 48 நாட்கள் சாப்பிட்டால் சரிரம் இளைத்து விடும்.

ஜீரண சக்தி கோளாறா?
(Digestive problem?)
நன்றாக ஜீரணமாகவேண்டுமா? சுவையான காய்கறி பண்டங்களில் கரு வேப்பிலைசேர்த்துக் கொள்ளுங்கள். வாசனையோடு பண்டங்களுக்கு சுவையூட்டி நல்ல ஜீரணமும் கொடுக்கும் இந்த கருவேப்பிலை(Curry leaves). பருப்பு அல்லது தேங்காய் புளி மிளகாய் சேர்த்து துவையல் செய்து சாப்பிவாய்ப்புண் குணமாக(To treat thrush)
வாயில் புண் அடிக்கடி வருகிறதா? அகத்திக் கீரை, மணத்தக்காளிக் கீரை மாற்றி மாற்றி வெங்காயம் சேர்த்து சாப்பிடுங்கள். தேங்காய் துருவி பால் சாப்பிடுங்கள். மரு தோன்றி இலையை நீரில் இரவில் ஊறவைத்து காலையில் வாய் கொப்பளிக்க புண்கள் ஆறிவிடும்.

வேம்புவின் மருத்துவ குணங்கள்:
(Medicinal neem)
மருத்துவ குணம் கொண் டது. சின்னம்மை தாக்கிய பின், முதலில் குளிக்கும் போது இதன் இலையை போட்டு குளிப்பது வழக்கம். வேப்பிலைகளை பெட்டிகள் மற்றும் பீரோவில் போட்டு வைப்பதால், கரப்பான் பூச்சிகள் அண்டாது.
நன்றி குறிப்புகள் முற்றும்.

No comments:

Post a Comment