MENU BAR

Wednesday, 31 July 2013

பணிநிறைவு பாராட்டு


 
           இன்று (31.07.2013) பணி ஓய்வு பெறும் NFPE-P3 கோபிசெட்டிபாளையம் கிளைத் தலைவர் தோழர். கு. தொட்டுகுண்ணன் அவர்களுக்கு நமது வாழத்துக்கள். 1980 ல் அந்தியூர் SO வில் பணியில் சேர்ந்த இவர் கோபி HO மற்றும் பல அலுவலகங்களில் பணிபுரிந்து தற்போது கவுந்தபாடி SO வில் பணிநிறைவு செய்கிறார். 1981 முதல் 1989 வரை P3 சங்கத்தில் அமைப்புச் செயலராகவும் 1990 முதல் 2006 வரை கோபி கிளைச் செயலராகவும் சிறப்பாகச் செயல்பட்ட இவர் 2011 முதல் கிளைத்தலைவராக இருந்து சிறப்பாக செயல்பட்டு வருகிறார். நமது அஞ்சல் துறையில் பணிபுரியும் இவரது மனைவி மற்றும் இரண்டு மகன்களோடும் இவரது பணி ஓய்வுக்காலம் சிறப்பாக அமைய நமது வாழ்த்துக்கள்.

Friday, 26 July 2013

தபால்காரர் சங்க போராட்டம்- பத்திரிக்கைச் செய்திகள்:

தினகரன் நாளிதழ் 24.07.2013.



































தினமலர் நாளிதழ் : 25.07.2013



































மத்திய அரசு ஊழியர் மகாசம்மேளன செய்தி:
தினகரன் நாளிதழ் 24.07.2013






 
 
 
 
 
 
 
 
 
 
 

Thursday, 18 July 2013

தகவல்:


இந்த வார ஆனந்த விகடனில் (24.7.13)  “நானே கேள்வி, நானே பதில்” பகுதியில் கோட்டச் செயலரின் படைப்பு:
“சமீபத்தில் வாசித்ததில் சுளீரென அறைந்த கவிதை?”
“யார் எழுதியது என்று தெரியவில்லை...
‘விதைத்தவன் உறங்குகிறான்
விதைகள் உறங்குவதில்லை’!”

 

 

Tuesday, 16 July 2013

கவிதை:

மடமைக் கொலையை  மண் புதைப்போம்!

யாரங்கே? 
 
ரத, கஜ, துரக, பாதாதிகளென
நம் படைகள் அனைத்தையும்
திசைகள் எட்டும்
அனுப்பி வையுங்கள்.

அண்ணலும் நோக்க
அவளும் நோக்க
 
செம்புலப் பெயல் நீர்போல்
அன்புடை நெஞ்சம்
தாம் கலந்தனவே 

ஆதலினால் காதல் செய்வீர்
என்ற வரிகளை எழுதிய
கவி மேதாவிகளை
எங்கிருந்தாலும்
இழுத்துவரச் செய்யுங்கள். 

மதம், இனம், சாதி துறந்து
யாதும் ஊரே யாவரும் கேளிர்
என சிந்திக்கத் தூண்டிய
குற்றவாளிகள் அவர்களை
கழுவிலேற்றி
சம்ஹாரம் செய்திடுவோம். 

காதலால் நிகழும்
கௌரவக் கொலைகள்
நாட்டில் இனிமேலும்
தொடராதிருக்க
புதுவழி கண்ட
நவயுக நாயகன்
நானெனப்
புகழ்ந்து பாடும்
புலவர்கள்
பெற்றுச் செல்லட்டும்
பொற்கிழிப்  பரிசினை!

கே. சுவாமிநாதன்,
கோட்டச் செயலர்-P3.

(தங்களது “இமை” ஜூலை மாத இதழில் இக்கவிதையைப் பிரசுரித்த உலகத் தமிழ் – பண்பாட்டு பேரவை – ஈரோடு மாவட்ட அமைப்பினருக்கு நன்றி)

Thursday, 11 July 2013

கேள்வியும் நானே பதிலும் நானே!


கேள்வி:

பரதேசி படத்தில் ஊர் ஊராகச் சென்றுகங்காணியால் வேலைக்கு அழைத்துச் செல்லப்பட்டவர்களையும் , கல்லூரி, கல்லூரியாகச் சென்று "இன்டர்வியு" மூலம் இன்றைய கம்பெனிகளால் வேலைக்கு அமர்த்தப்படுபவர்களையும் ஒப்பிடலாமா ?

பதில்:

புலம்பெயர்தல்,குடும்பம்-உறவுகளைப் பிரிதல், உள்ளூர்ப் பண்டிகை மற்றும் விசேசங்களிலிருந்து விலகுதல் என்பவை இருதரப்பினருக்கும் பொதுவானவைதான். கூலி மறுப்பு மட்டுமல்ல, தங்களது பாசாங்கற்ற வாழ்க்கை கேள்விக்குறியானதால்தான் - தாங்கள் அடிமைகளாக்கப் பட்டுவிட்டதை முற்றிலும் உணர்ந்தார்கள் முன்னவர்களான பரதேசி பட கூலிகள். கணிசமான சம்பளம், "இன்சென்டிவ்" என்பன தரும்மயக்கம்-பணியிடத்திற்கு செல்ல ஆகும் மிகுதியான பயணநேரம், வேலைப்பளு ஆகியன,தாங்கள் தற்போது எந்த நிலையில் இருக்கிறோம் என்பதையே புரிந்து கொள்ள விடுவதில்லை-பின்னவர்களான I.T துறையினரை.

கே சுவாமிநாதன் ,
கோட்ட செயலர்,
NFPE P 3 ஈரோடு .
நன்றி: உழைக்கும் வர்க்கம் ஜூலை 2013இதழ்.
 

53RD ANNIVERSARY OF 1960 STRIKE


Today, is the 53rd anniversary of the Glorious Strike of the Central Government Employees which started on 11thJuly 1960 and continued for 5 days on the basic demands of the workers. That was their biggest strike in independent India till then, which shook the edifice of the Government. It was suppressed by all repressive measures putting thousands in jail, dismissal, termination etc. But the workers never surrendered. The mighty one day Token Strike on 19th September 1968 reminded the Government that the workers can never be suppressed all the times. On this day our Revolutionary salutes to all those comrades who sacrificed their lives at the altar of struggle and also who faced inhuman suppression and also the lakhs of workers who participated. Red Salute to all those who showed through their action that the united struggle is the right path.
 
(M. Krishnan)
SecretaryGeneral
 

சென்னையில் அஞ்சல் நான்கின் உண்ணாவிரதப்போராட்டம்

சென்னை CPMG அலுவலக வளாகத்தில் நடைபெற்ற உண்ணா விரதப் போராட்டத்திற்கு NFPE அஞ்சல் நான்கின் அகில இந்திய அமைப்புச் செயலர் தோழர் கோபு. கோவிந்தராஜன் மற்றும் FNPO அஞ்சல் நான்கின் மாநிலச் செயலர் தோழர். குணசேகரன் கூட்டுத் தலைமை ஏற்றனர் .

NFPE சம்மேளனத்தின் முன்னாள் மா பொதுச் செயலர் தோழர்.K .R ., FNPO சம்மேளனத்தின் மா பொதுச் செயலர் தோழர். D . தியாகராஜன் , NFPE சம்மேளனத்தின் உதவிப் பொதுச் செயலர் செயலர் தோழர். ரகுபதி , NFPE அஞ்சல் மூன்றின் செயல் தலைவர் தோழர் NG , உதவிப் பொதுச் செயலர் தோழர் வீரமணி , NFPE தமிழ் மாநில அஞ்சல் மூன்றின் செயலர் தோழர்
J.R., FNPO தமிழ் மாநில அஞ்சல் மூன்றின் செயலர் தோழர் முத்துக்கிருஷ்ணன் , NFPE அஞ்சல் நான்கின் மாநிலச் செயலர் (எலெக்ட்) தோழர் ராஜேந்திரன் , NFPE R 3 மாநிலச் செயலர் தோழர் சங்கரன், FNPO
R 3 மாநிலச் செயலர் தோழர் குமார் , NFPE SBCO மாநிலச் செயலர் தோழர் அப்பன்ராஜ் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டு போராட்டத்தை வாழ்த்திப் பேசினார் .

உண்ணா விரதப் போராட்டத்தில் கலந்து கொண்ட அஞ்சல் நான்கின் மாநிலச் சங்க நிர்வாகிகள் மற்றும் கோட்ட / கிளைச் செயலர்கள் அனைவரும் அடுத்த கட்ட போராட்டமான அரை ஆடை போராட்டத்தை தமிழகமெங்கும் மிகப் பெரிய அளவில் நூற்றுக்கு நூறு விழுக்காடு வெற்றிகரமாக நடத்திட வேண்டும் என்று சூளுரைத்துப் பேசினார் . இறுதியில் லூயில் மணி அவர்கள் நன்றி கூற , ஆர்ப்பாட்ட கோஷங்களுடன் போராட்டம் மாலை 05.00 மணியளவில் இனிதே முடிக்கப் பட்டது .
 
நமது கோட்டதிலிருந்து ஈரோடு கோட்ட P4 செயலர் B. சிவகுமார் மற்றும் கோபி P4 தோழர் S. சக்திவேல் ஆகியோர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.