MENU BAR

Tuesday 18 November 2014

பாண்டி கோட்டத்தைச் சேர்ந்த  தோழியர் S . ஜோதி  என்பவர் TNPSC  
GROUP IV  தேர்வில் வெற்றி பெற்று REGISTRAR  அலுவலகத்தில் 
பணி புரிய நியமன ஆணை கிடைக்கப் பெற்றார்.எனவே நம் 
இலாகாவில் இருந்து விடுவிக்கக் கோரி (RESIGNATION )  
விண்ணப்பித்து விடுதல் பெற்று  REGISTRAR  அலுவலகத்தில் 
பணியில் சேர்ந்தார். ஆனால் பணியில் சேர்ந்த நாள் முதல் 
அங்கு உள்ள சூழலும் லஞ்ச ஊழல் புரியத் தூண்டுதல்களும் 
அவரை மன உளைச்சலுக்கு உள்ளாக்கவே
  மீண்டும் நம் இலாகாவுக்கே திரும்பி வர அவர் வாய்ப்பு  தேடினார். 

60 நாட்களில் அவர் கோட்ட முது நிலைக் கண்காணிப்பாளருக்கு விண்ணப்பித்தார் . அவரது மனு நிராகரிக்கப்பட்டது . எனவே  அவர் மாநிலச் சங்கத்தின் உதவியை  நாடினார்.  மாநிலச் சங்கத்தின் அறிவுறுத்தல்படி DPS ,CCR க்கு  மேல்  மனு .அளிக்கப்பட்டது.  கோட்ட நிர்வாகம் மீண்டும் அவரை பணிக்கு  அமர்த்திக் கொள்ள  இயலாது என்ற குறிப்புடன் அவரது மனுவை மண்டல அலுவலகத்திற்கு அனுப்பியது. 

இந்தப் பிரச்சினை  நம் மாநிலச் செயலர் மூலம் PMG, CCR  மற்றும் DPS , CCR  ஆகிய இருவரிடமும்  கொண்டு சென்று விவாதிக்கப் பட்டது. முதலில் அந்தத் தோழியரின் மனுவை ஏற்க மண்டல அதிகாரிகள் மறுத்தாலும் , லஞ்சம் , ஊழல் இவற்றிற்கு எதிரான  மனநிலையில் ஒரு இளைய தோழியர்  மீண்டும் நம் இலாகா சேவையை விரும்பி வருவதை இலாக்கா நிர்வாகம் ஊக்கப் படுத்த வேண்டும் என்றும் , அந்தத் தோழியர் விரும்பினால் அவரது பணி  நாளில் அந்தத் துறையில் எவ்வளவோ பொருள் ஈட்டிட முடியும் என்றும் , ஆனால் அது தவறு என்று  வெறுத்து  நமது அஞ்சல் துறை மீது முழு நம்பிக்கை வைத்து திரும்ப வரும் ஒரு ஊழியரை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும் , இதற்கு இலாக்கா விதியும் உறுதுணையாக உள்ளது என்றும் நாம் வேண்டினோம். 

ஊழலற்ற, நேர்மையான வகையில்  சென்னை பெருநகர மண்டல நிர்வாகத்தினை நடத்திடும் இந்த இரண்டு அதிகாரிகளையும்   அந்தத் தோழியரின் நேர்மை கவர்ந்தது. எனவே உடன் அந்தத் தோழியரின் கோரிக்கை ஏற்கப்பட்டு  மீண்டும் அவரை   இலாகா பணியில் அமர்த்திட பாண்டி கோட்ட முது நிலைக் கண்காணிப்பாளருக்கு  உரிய  உத்திரவும் வழங்கப்பட்டது. அநேகமாக இந்த வகையில் ஒரு ஊழியர்  பணியில் மீண்டும் சேருவது இதுவே முதல் முறையாகும் .  

அந்த பெண்  ஊழியரின் நேர்மையான எண்ணத்தைப்  பாராட்டி, RESIGNATION செய்து மூன்று மாதங்களுக்குப் பிறகும்  மீண்டும் நம் இலாக்காவில் சேர்ந்திட அவருக்கு வாய்ப்பு வழங்கிய  நம்முடைய மண்டல அதிகாரிகளுக்கு  நம் மாநிலச் சங்கத்தின் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.உத்திரவின் நகலை கீழே பார்க்கலாம் .

நன்றி: மாநில சங்க இணையதளம்

No comments:

Post a Comment