MENU BAR

Monday 29 December 2014

17 வது உலகக்கோப்பை புகைப்பட கண்காட்சி - (படங்கள்)



பெங்களூரு: உலகக்கோப்பை புகைப்பட கண்காட்சி - (படங்கள்)

Posted Date : 16:55 (03/12/2014)Last updated : 17:35 (03/12/2014)
ர்வதேச புகைப்படக்கலைச் சம்மேளனம் (International federation of  photographic art FIAP) உடன் இணைந்து இந்தியப் புகைப்பட குழுமம் ஏற்பாடு செய்திருந்த 17-வது உலகக்கோப்பை புகைப்பட போட்டி, பெங்களூரூவில் நடைபெற்றது. மொத்தம் 24 நாடுகள் பங்குபெற்ற இப்போட்டியில், இயற்கை மற்றும் வனவாழ் புகைப்படகாரர்களின் சிறந்த 423 புகைப்படங்கள் இடம்பெற்றன.


இந்த உலகக்கோப்பை போட்டியில் பிரின்ட் இமேஜ் (print image)  மற்றும் புரொஜக்டட் இமேஜ் (projected image)  என இரு பிரிவுகளாக போட்டி நடைபெற்றது. இரு பிரிவிலும் இத்தாலி அதிக புள்ளிகள் பெற்று உலகக்கோப்பையை தட்டிச் செல்ல இந்தியா, பிரின்ட் இமேஜ் பிரிவில் தங்கப் பதக்கமும், புரொஜக்டட் இமேஜ் பிரிவில் வெண்களப் பதக்கமும் வென்றது. புகைப்படக் கலைக்கான உலகக்கோப்பை போட்டிகள் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இந்தியாவில் நடப்பது இது இரண்டாவதுமுறை.

24
நாடுகளால் இந்த 17 வது உலகக்கோப்பை போட்டிக்காக பரிந்துரைக்கப்பட்ட, தேர்வான புகைப்படங்கள் பெங்களூரூவில் உள்ள "கர்நாடக சித்திரகலா பரிஷத்தில் கண்காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு புகைப்படமும் இந்த உலகின் இயற்கை அழகையும், இயல்பையும், வர்ணங்களையும் நம் கண்முன் நிறுத்தி, நம்மை கவர்கிறது.













-
 ராகேஷ் (பெங்களூரு)
(மாணவப் பத்திரிக்கையாளர்)

No comments:

Post a Comment