MENU BAR

Monday, 25 March 2019

RULE 38 posting order in Erode Division

தோழமைகளே..
சமீபத்தில் நமது தமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் ஆணையிடப்பட்டுள்ள Rule 38 படி, மற்ற மண்டலங்கள் மற்றும் கோட்டங்களிலுருந்து நமது ஈரோடு கோட்டத்திற்கு சுமார் 14 தோழமைகள் வர இருக்கின்றனர்.. இந்த நிலையில் தற்சமயம் அந்த 14 தோழர்களுக்கு PLACE OF POSTING ஆணையிடப்பட்டுள்ளது..அந்த ஆணையின் நகலை இங்கு அனைவரின் பார்வைக்கும் பதிவு செய்கிறோம்.. அனைத்து தோழமைகளுக்கும் நமது ஈரோடு கோட்ட NFPE P3 சங்கத்தின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்து வரவேற்கின்றோம்..

தோழமையுடன்,
ஈரோடு கோட்ட NFPE P3.

Thursday, 21 March 2019

Monthly meeting Subjects- March 2019

தோழமைகளே..

March 2019 மாதத்திற்க்கு உண்டான மாதாந்திர சந்திப்பில் நமது தொழிற்சங்கம் சார்பாக கோட்ட நிர்வாகத்திற்கு ளிக்கப்பட்டு இருக்கும் Subjects.. அனைவரின் பார்வைக்காக..

தோழமையுடன்,
sஈரோடு கோட்ட NFPE P3.

Thursday, 14 March 2019

Posting of Recently passed LGO candidates in Erode division

ஈரோடு கோட்டத்தில் சமீபத்தில் LGO தேர்வில் வெற்றி பெற்ற 14 தோழமைகளுக்கு ,இன்று 14.03.2019 posting order போடப்பட்டுள்ளது...ஆரம்பத்தில் PA candidateஆக பணியாற்றும் படியும்,விரைவில் நமது PTC மதுரையில் வரவிருக்கும் PA Induction Trainingக்கு batch batch ஆக அனுப்பப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது...புதிதாக பணியேற்கவிருக்கும் அலுவலகங்களில் நமது தோழமைகளே பணியாற்றுவதால் மிகுந்த மன உறுதியுடனும், ஒத்துழைப்பாகவும் பணியாற்றுவீர்கள் என்பதில் சிறிதும் ஐயமில்லை... எனினும் நமது புதிய PA தோழமைகளுக்கு புதிய அலுவலகத்தில் ஏதேனும் இடர்பாடுகள்,சந்தேகங்கள் இருப்பின் நமது NFPE சங்கத்தை எப்பொழுது வேண்டுமென்றாலும் தொடர்பு கொள்ளலாம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்... மேலும் அனைத்து தோழமைகளுக்கும் நமது ஈரோடு  கோட்ட NFPE சங்கத்தின் சார்பில் மீண்டும் ஒருமுறை நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்..

தோழமையுடன்,
ஈரோடு கோட்ட NFPE P3,P3 மற்றும் GDS சங்கங்கள்

Thursday, 7 March 2019

Facility transfer, Role allocation ஆகிவற்றில் ஏற்படும் கால தாமதத்திற்கு தனியா ஒரு PA நியமித்து உடனுக்குடனே Transfer செய்திட வேண்டி நமது ஈரோடு கோட்ட NFPE P3 சங்கம் அனுப்பிய கடிதம்


UPS Batteries வைப்பதற்கு தகுந்த STEEL STAND மற்றும் சுத்தமான குடிநீர் கிடைக்க WATER PURIFIER ஆகியவற்றை supply செய்திட வேண்டி நமது ஈரோடு கோட்ட NFPE P3 சங்கத்தின் சார்பாக அனுப்பப்பட்ட கடிதம்🚩


SAPல் Customer/Bulk addresee dataகளை உடனடியாக SAP softwareல் update செய்து நமது delivery POக்களில் அன்றாடம் ஏற்படும் Bulk addressee குறித்த பிரச்சனைக்கு தீர்வு அளிக்கும்படி நம்து கோட்ட NFPE P3 சங்கத்தின் சார்பில் அனுப்பப்பட்ட கடிதம்🚩


Inhouse பயிற்சிக்கு Advance of TA அளிக்க உடனடியாக உத்தரவு பிறப்பிக்க வேண்டி நமது கோட்ட நிர்வாகத்திற்கு நமது கோட்ட NFPE P3 சங்கம் அனுப்பிய கடிதம்🚩


Logistics Post பிரிவை பழையபடி கருங்கல்பாளையம் SO வளாகத்திற்கு மாற்றம் செய்து மேம்படுத்தவேண்டி நமது ஈரோடு கோட்ட NFPE P3 சங்கத்தின் சார்பாக அனுப்பப்பட்ட கடிதம்..🚩


Friday, 1 March 2019

சமிபத்தில் நடந்த LGO தேர்வில் தேர்ச்சி பெற்று INHOUSE TRAINING செல்லும் தோழமைகளுக்கு வாழ்த்துக்கள்


🚩 *பாசுர்/சிவகிரி முறைகேடு குறித்து Directorate/CPMG/PMG அவர்களுக்கு கடிதம்*🚩









🚩 *பாசுர்/சிவகிரி முறைகேடு குறித்து Directorate/CPMG/PMG அவர்களுக்கு கடிதம்*🚩

தோழியர்களே..
தோழர்களே..
கடந்த 03.02.2019 மற்றும் 04.02.2019 அன்று நமது கோட்ட சங்கம் சார்பாக சென்னையில் மாநில சங்கத்துடன் பாசுர்/சிவகிரி SO முறைகேடுகள் குறித்தும், கோட்ட நிர்வாகம் அப்பாவி ஊழியர்கள் மீது chargesheet போடுவது குறித்தும் நாம் ஆலோசனை செய்துவிட்டு வந்திருந்தோம் .

அதன் தொடர்ச்சியாக நமது அகில இந்திய முன்னாள் பொது செயலாளர். தோழர். KVS அவர்கள் தொடர்ந்து நமது கோட்ட சங்கத்திற்கு ஆலோசனை தெரிவித்து வருகிறார்..

மேலும் நமது கோட்ட சங்க முன்னணி நிர்வாகிகள் சேகரித்து அளித்து இருந்த தகவல்கள் கொண்டு ,தோழர்.KVS அவர்கள் ஒரு detailed ( 5 paged ) memorandum ஒன்று தயார் செய்து அதை மாநில சங்கத்திடமும் ,அகில இந்திய சங்கத்திடமும் அளித்துள்ளார்..

அதனை (ie. Memorandum regarding PSR/SVG case) உடனே நமது மாநில செயலர். தோழர். வீரமணி அவர்களும் நேற்றே 28.02.2019 அன்று நமது CPMG அவர்களை நேரில் சந்தித்து Memorandum அளித்து ,அப்பாவி ஊழியர்களை விடுத்து, தவறு இழைத்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரியுள்ளனர்..
CO மூலம் நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் மாநிலம் முழுவதும் போராட்டங்கள் முடுக்கி விடப்படும் என்றும் ஆணித்தரமாக பதிவிட்டு வந்துள்ளனர்..
மேலும் அதே memorandumஐ மாநில சங்கத்தில் இருந்து நமது மேற்கு மண்டல PMG அவர்களுக்கும் அளிக்க உள்ளது .


*அகில இந்திய சங்கம் மூலம் நடவடிக்கை*
அதே போல் அகில இந்திய சங்கமும் இன்று 01.03.2018 அன்று நமது கோட்ட PSR/SVG case குறித்த memorandumஐ நமது துறை இயக்குனரகத்திற்கு அளிக்க உள்ளது என்பதையும் இங்கு நாம் தெரிவித்து கொள்கிறோம்..

ஆகவே தோழமைகளே நமது மாநில சங்கம் மூலமாகவும், அகில இந்திய சங்கம் மூலமாகவும் இந்த முறைகேடுகளில் தொடர்பில்லாமலே பாதிக்கப்பட்டு இருக்கும் தோழமைகள் பாதுகாக்கப்படவும், தவறு இழைத்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் நாம் வலியுறுத்தி உள்ளோம்..

மேலும் நிர்வாகத்தின் போக்கை பொறுத்து நமது அடுத்தகட்ட போராட்டங்கள் வெடிக்க உள்ளன என்பதையும் இங்கு நாம் தெரிவித்து கொள்கிறோம்..


தோழமையுடன்,
ஈரோடு கோட்ட NFPE -P3🚩