MENU BAR

Saturday, 4 August 2012

இயற்கை மருத்துவக் குறிப்புகள்: பாகம் 1

வணக்கம் தோழர்களே..! மனிதர்கள் சந்திக்கும் நோய்கள் பல. அவற்றை தீர்க்க எத்தனையோ வித மருத்துவ முறைகளை கையாள்கிறோம். சில நோய்கள் விரைவில் குணமடையும். சில நோய்கள் குணமடைய நீண்ட காலம் எடுத்துக்கொள்ளும். ஒரு சில நோய்கள் தீர்க்கப்படாமலேயே இருக்கும். இதைத் தீராத வியாதிகள் என்பர். நமது முன்னோர்கள் வீட்டிலுள்ள பொருட்கள் மற்றும் எளிதாக கிடைக்கக்கூடிய இயற்கை மூலிகைகளிலிருந்து உடலில் ஏற்படும் நோய்களுக்கு தீர்வு கண்டுள்ளனர். அவற்றில் சில ....


அருகம் புல் சாறின் அருமை:ஆபத்துக்கு உதவுவது அருகம்புல். திடீர் வண்டுக்கடி, அலர்ஜி(Allergy) என்ற ஒவ்வாமை(), கடித்தது என்னவென்று தெரியாத விஷக்கடி(Poisonous bite) போன்றவற்றிற்கு, நச்சு நீக்கியாக அருகம்புல் சாறு உதவும்.

இடுப்பு வலியா?(Pelvic pain?)
வருத்த உளுந்து மாவு நூறு கிராம், நல்லெண்ணெய் 200 கிராம். கருப்பட்டி அல்லது பனை வெல்லம் 200 கிராம். அமுக்கிரா கிழங்கு மாவு 100 கிராம். நல்லெண்ணெயை வாணலியில் இட்டு அடுப்பில் வைத்து எரித்து அதில் மற்ற மேலே கூறிய பொருட்களை இட்டு இளகம் போல் செய்து காலை- மாலை ஒரு கோலி அல்லது ஒரு தேக்கரண்டி அளவு சாப்பிட்டு வந்தால் குனிய நிமிர முடியாத இடுப்பு வலிகள் குணமாகும்.
உடம்பு எரிச்சல் குணமாகஉடம்பு எரிச்சல் குணமாக தினமும் காலையில் கரும்புச்சாறு 100 மில்லி தயிர் 100 மில்லிகலந்து சாப்பிட உடம்பு எரிச்சல் சரியாகும்.

கண் பார்வை குறைவா?
(To correct vision loss)
கொத்து மல்லிக்கீரையில் பல அரிய சத்துக்கள நிரம்பியுள்ளன. வாசனை மிகுதி. தினமும் கொத்து மல்லியை வாயிலிட்டு மென்று தின்றால் கண்பார்வை தெளிவு பெறும்.

கால்வெடிப்பு குணமாக
கால்வெடிப்பு வராமல் தடுக்க, இரவில் படுக்கச் செல்லும்போது பாதங்களில் இலுப்பை எண்ணெய் அல்லது வேப்பை எண்ணெய் தடவுங்கள். காலையில் பல் துலக்கி நீராகாரம் அல்லது மோர் எலுமிச்சை ஊறுகாயுடன் அருந்துங்கள்.

நன்றி குறிப்புகள் தொடரும்....

3 comments: