மொபைல் போனின் கதிர்வீச்சிலிருந்து உங்களைப் பாதுகாக்க (To protect yourself from mobile phone radiation )
நம் அன்றாட வாழ்க்கையின் இன்றியமையாத ஓர் சாதனமாக மாறிவிட்டது மொபைல்போன். எந்த ஒரு விஞ்ஞானச் சாதனமும் மனிதனுக்கு நன்மைகள் பல தந்தாலும் அதனால் ஏற்படும் ஒரு சில தீய விளைவுகளும் இருக்கத்தான் செய்கிறது . அதனால் மனிதன் ஏதேனும் ஒருவகையில் பின்விளைவுகளையும் சந்திக்க வேண்டியிருக்கிறது. அந்த வகையில் நாம் அன்றாடம் பயன்படுத்தும் மொபைல் போனிலிருந்து வெளிப்படும் கதிர்வீச்சு அபாயம் குறித்து இப்பதிவில் காணலாம்.
மொபைல் பயன்படுத்துவதால் மூளையில் கேன்சர்(Brain Cancer) வரும் வாய்ப்பு அதிகம் என்று ஒரு சாராரும், இல்லை அவ்வாறான வாய்ப்புகள் மிகக்குறைவு என ஒரு சாராரும் விவாதித்து வருகிறார்கள். இது எந்தளவிற்கு உண்மை? என்பது இன்னும் ஆராய்ச்சி நிலையிலேயே இருந்துவருகிறது.
எனினும் CTIAThe Wireless Association மற்றும் Food and Drug Administration போன்ற அமைப்புகள் புற்று நோய் மொபைல் போனிலிருந்து வெளிவரும் கதிர்வீச்சு(Radiation) புற்றுநோயை உண்டாக்குமளவுக்கு இருப்பதில்லை என தெளிவாக கூறுகின்றனர். எனினும் இந்த செல்போனிலிருந்து வெளிவரும் கதிர்வீச்சிலிருந்து , அதன் பாதிப்பிலிருந்து விடுபடுவது எப்படி? தவிர்ப்பது எப்படி? என்பதையும் அதற்கான ஒரு சில வழிமுறைகளையும் காணலாம்.
உங்கள் மொபைல் போனில் உள்ள பேட்டரியின் அடிப்பகுதியில் Federal Communications Commission (FCC) எண் குறிக்கப்பட்டிருக்கும். அந்த எண்ணை எப்.சி.சி FCC இணையதளத்தில் கொடுத்து உங்கள் போனில் கதிர்வீச்சுத் தன்மையை அறிந்துகொள்ளலாம்.
கதிர்வீச்சுத் தன்மை குறைந்த போன் என எடுத்துக்கொண்டால் சாம்சங்(Samsung) நிறுவனத்தின் இம்ப்ரஸன் (Impression) என்னும் போன் தான் மிக மிக குறைவான கதிர்வீச்சு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது. இதைப்போன்று உங்கள் மொபைல் குறித்த தகவல்களைப் பெற EWG.org எனும் தளத்தில் போய் அறிந்துகொள்ளலாம். நேரடியாக Limit Your Exposure To Cell Phone Radiation என்ற தலைப்பில் அமைந்த கட்டுரையைப் படிக்கலாம்.

- SMS அனுப்புவதன் மூலம் போனிலிருந்து வெளிப்படும் கதிர்வீச்சின் அளவைக் குறைக்கலாம். பேசினால்தான் அதிகம் கதர்வீச்சு வெளிப்படும் என தகவல்கள் கூறுகின்றன.
- உங்கள் மொபைல் போனை ஸ்பீக்கர் மோடில்(Speaker mode) வைத்து இயக்குவதனால், மொபைலிலிருந்து வெளிப்படும் கதர்வீச்சு தலையை பாதிக்காதவாறு பார்த்துக்கொள்ள முடியும். அதேபோல் போனில் ஹெட்செட்(Head set) போன்றவற்றைப் பயன்படுத்திப் பேசுவதன் மூலமாகவும் தலைக்கு கதிர்வீச்சு() பாதிப்பு இல்லாமல் தவிர்க்க முடியும்.
- மொபைல் போனில் டெக்ஸ்ட்(Text) அனுப்பும்போதும், நாம் பேசும் போதும் அதிகம் கதிர்வீச்சு இருக்கும். ஆனால் Incomming call கள் வரும்போது கதிர்வீச்சு குறைவாக இருக்கும்.
- உங்கள் மொபைல் போனுக்கு வரும் சிக்னல்களை நீங்கள் பயன்படுத்தும் மொபைல் மூடிகள்(Mobile caps), பிளாஸ்டிக் உறைகள்(Plastic envelopes) போன்றவைகள் செல்போனிற்கு வரும் சிக்னல்களைத் தடுப்பதால், சிக்னல்களைத் தெளிவாகப் பெறவேண்டி உங்கள் மொபைல்போன் அதிக கதிர்வீச்சினை அனுப்புகிறது. இத்தகைய மூடிகளைப் பயன்படுத்தாமலிருந்தாலே ஓரளவிற்கு கதிர்வீச்சு உருவவாவதை தவிர்க்க முடியும்.
- Radiation Protection Card போன்றவற்றையும் கதிர்வீச்சைத் தடுக்கப் பயன்படுத்தலாம்.
- குறைவான சிக்னல் கிடைக்கும்போது பேசாமல் இருப்பது நல்லது. குறைவான சிக்னலில் இருக்கும்போது பேசினால் போனிலிருந்து வெளிப்படும் கதிர்வீச்சு இருமடங்கு அதிகமாகிறது என்கின்றனர். எனவே சிக்னல் அதிகம் கிடைக்காமல் இருக்கும் பகுதிகளில் பேசாமல் இருப்பதே நல்லது.
- பெரியவர்கள் மற்றும் சிறுவர்களென்றாலே சாதாரண நோய்களும் தாக்கும் அபாயம் உண்டு. காரணம் இவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதால்தான். இந்த செல்போன் கதிர்வீச்சும் இவர்களை அதிகம் பாதிப்பதாக தகவல்கள் கூறுகின்றன. எனவே குழந்தைகள் மற்றும் சிறுவர்களின் கையில் விளையாட்டாக கூட செல்போனை இயக்கிக் கொடுக்கவேண்டாம்.
உங்கள் மொபைல் போனின் கதிர்வீச்சு மற்றும் அபாய தன்மையினை அறிந்துகொள்ள
உங்கள் மொபைல் போனில் உள்ள பேட்டரியின் அடிப்பகுதியில் Federal Communications Commission (FCC) எண் குறிக்கப்பட்டிருக்கும். அந்த எண்ணை எப்.சி.சி FCC இணையதளத்தில் கொடுத்து உங்கள் போனில் கதிர்வீச்சுத் தன்மையை அறிந்துகொள்ளலாம்.
கதிர்வீச்சுத் தன்மை குறைந்த போன் என எடுத்துக்கொண்டால் சாம்சங்(Samsung) நிறுவனத்தின் இம்ப்ரஸன் (Impression) என்னும் போன் தான் மிக மிக குறைவான கதிர்வீச்சு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது. இதைப்போன்று உங்கள் மொபைல் குறித்த தகவல்களைப் பெற EWG.org எனும் தளத்தில் போய் அறிந்துகொள்ளலாம். நேரடியாக Limit Your Exposure To Cell Phone Radiation என்ற தலைப்பில் அமைந்த கட்டுரையைப் படிக்கலாம்.
No comments:
Post a Comment