MENU BAR

Saturday 13 October 2012

படித்ததில் பிடித்தது

கங்காணி அப்பா
சோத்துக்கு அரிசி
கூட்டுக்கு பாவக்கா
குழம்புக்கு தக்காளி
மசாலாக்கு மல்லி
பஸ்ஸில் ஏற்றுவார்
பவிசாக என் அப்பா
சொந்தக் காய்திண்ணு
சொரணை வரட்டும்
கைக்காசும் மிஞ்சட்டுமே
கழிவிறக்கம் அப்பாவுக்கு
இந்த முறை ஊருக்கு
எழவுக்குப் போனேன்
பஸ்ஸில் ஏத்தும்
பைகளைக் காணோம்
நாலு ஏக்கரில்
வால்மார்ட் தக்காளி
மூணு ஏக்கரில்
மோர் மார்ட் உருளை
ரெண்டு ஏக்கரில்
ரிலையன்ஸ் கத்தரியாம்
விதையும் கொடுத்தாங்க
மருந்தும் கொடுத்தாங்க
வெள்ளாம முடிஞ்சா
விளைச்சல் அவுகளதாம்
வெறுங்கை ஆட்டினார்
விவசாய அப்பா ....!
காடு கர நம்மது
மண்ணு வரப்பும்
நமக்குத் தான்
பட்டா சிட்டா
அடங்கலும் உண்டு
ஏழு தலைமுறை பத்திரம்
இரும்பு பெட்டியில்
பத்திரம் ...!
விவசாயம் நம்மளது
வெள்ளாம அவுகளது
கலங்காமப்  போ ...!
கைகாட்டி அனுப்பினார்
கங்காணி அப்பா ... !
---------------எம். சக்தி

No comments:

Post a Comment