· டெங்குவால் பாதிக்கபட்ட ஒருவரைக் கடித்த கொசு, பாதிப்பு இல்லாத மற்றுஒருவரைக் கடிக்கும் போது, அவருக்கும் டெங்கு பரவும். அனால் தும்மல், இருமல் போன்றவற்றின் மூலம் இந்தக் காய்ச்சல் பரவுவது இல்லை. சூரிய உதயத்தில் இருண்டு இரண்டு மணி நேரம், அஸ்தமனத்தில் இருந்து இரண்டு மணி நேரம்... இதுதான் பெரும்பாலும் இந்தக் கொசு கடிக்கும் நேரம்.
· 104 டிகிரிக்கு மேல் காய்ச்சல் , கடும் தலை வலி , கண் வலி, குமட்டல் , உடல் வலி, மூட்டு வலி, வாந்தி, உடலில் அரிப்பு ஆகியவை டெங்குவின் அறிகுறிகள்.
· இந்த காய்ச்சலை தடுக்க தடுப்பு மருந்து கிடையாது. சாதாரனக் காய்ச்சலுக்கு உரிய மருந்தே இதற்கும். லட்ச கணக்கில் உள்ள ரத்தத் தட்டுகளின் எண்ணிக்கையை வெறும் ஆயிரம் என்கிற அளவுக்கு டெங்கு கொண்டு வந்துவிடுவது டெங்கு ஏற்படுத்தும் பெரும் அபாயம்.
· இந்த காய்ச்சல் உடலில் நீர்ச் சத்தைக் குறைத்துவிடும். எனவே, மருந்துகள் எந்த அளவுக்கு முக்கியமோ, அதே அளவுக்கு நீர்ச் சத்து மிக்க இளநீர்,கஞ்சி,உப்பு – சர்க்கரைக் கரைசல் என்று நீராகாரமாக அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும். 7 to 14 நாட்கள் வரை டெங்குபாதிப்பு இருக்கலாம்
· டெங்குவைத் தவிர்க்க ஒரே வழி ... சுற்றுச் சூழலை - குறைந்தபட்சம் வீட்டைச் சுற்றியேனும் சுத்தமாக வைத்துக்கொள்வது.
.
--- Dr Rajamani Karunanithi ; Courtesy: Ananda Vikatan
No comments:
Post a Comment