MENU BAR

Saturday, 21 March 2015

SUCCESS TO CIRCLE UNION'S EFFORTS AND NFPE COC STRIKE CALL ! ALL DEPUTATIONISTS THROUGHOUT CIRCLE ARE ORDERED TO RECALL TO THEIR RESPECTIVE DIVISIONS ! CHIEF PMG ISSUED ORDERS BY TODAY NIGHT !

நம்முடைய  வேலை நிறுத்த 
போராட்ட அறிவிப்பிற்கு  மாபெரும் வெற்றி  !

அன்புத் தோழர்களுக்கு  வணக்கம் !

நம்முடைய அஞ்சல் மூன்றின் வேலை நிறுத்த முக்கிய கோரிக்கைகளில் ஒன்றான, மண்டல மற்றும் மாநில அலுவலகத்தில்  பல கோட்டங்களில் இருந்து  நீண்ட காலம் DEPUTATION  இல் இருக்கும் ஊழியர்கள்   அந்தந்த கோட்டங்களுக்கு  திருப்பி  அனுப்பப்பட வேண்டும் என்பதே . இன்று  தொழிலாளர் நல உதவி ஆணையர் முன்னிலையில்  நடைபெற்ற CONCILIATORY  MEETING இல்  இந்தப் பிரச்சினை விவாதிக்கப்பட்டு  அதன் மீது எழுத்து பூர்வமாக  இன்று பதிவு செய்து  மாநில நிர்வாகத்திற்கு   அளிக்கப்பட்டது . 

இன்று  DEPUTATION  குறித்த கோப்புகள்  மற்றும் ஞாயிறு   பணி  குறித்த பிரச்சினைகள்     நமது  மாநிலத்திற்கு  ADDL  CHARGE  ஆக  இருக்கும் கர்நாடகா CPMG  அவர்களின்  உத்திரவுக்கு அனுப்பப்பட்டு காத்திருப்பில் இருந்தது . ஏனெனில்  அங்கு வருகை புரிந்த  அஞ்சல் வாரிய  உறுப்பினர் அவர்களுடன்  CPMG  CAMP  இல் இருந்ததால்  அதன் மீது முடிவு எடுக்கப் படவில்லை . பிறகு  மாலை 07.00 மணியளவில் முடிவு எடுக்கப்பட்டு  இரவே உத்திரவு அனைத்து  மண்டலங்களுக்கும் அனுப்பப்பட்டது.  

அதன் படி  புதிதாக  பணியில் சேர்ந்த   PA COக்கள் அனைவரும்  பணி  பயிற்சி முடித்து  பணியில் அமர்ந்த உடன் (APRIL  மூன்றாவது வாரத்தில் ) ஏற்கனவே  CIRCLE  OFFICE  மற்றும்  நான்கு மண்டலங்களிலும்  உள்ள  மண்டல அலுவலகங்களில்  நீண்ட காலமாக DEPUTATION  இல் இருக்கும் ஊழியர்கள்  திருப்பி அனுப்பப் படவேண்டும் .  இந்த செய்தி  மாநில நிர்வாகத்தில் இருந்து  நமக்கு  தெரிவிக்கப்பட்டது  . இதற்கான உத்திரவின் நகல்  நமது  சங்கத்திற்கு  நாளை  அனுப்பப் படும்   என்றும்  தெரிவிக்கப்பட்டது. .

இந்தப் பிரச்சினை  15 ஆண்டுகளுக்கும் மேலாக நம்முடைய மாநிலத்தில்  தீர்க்கப்படாமல்  நிலுவையில் இருந்த  பிரச்சினை ஆகும் . பல ஊழியர்கள்  15 ஆண்டுகளுக்கும் மேலாக  DEPUTATION  இல் உள்ளார்கள் என்பதே  இதற்கு ஆதாரம் . இந்த  முடிவு  நம் அனைவரின்  போராட்ட வீச்சிற்கு கிடைத்த வெற்றி என்றாலும்,  இப்படி ஒரு முடிவை   எடுத்த   CPMG  திரு. M .S . ராமானுஜன் , IPoS  அவர்களுக்கு  நம் நன்றியை  தெரிவித்துக் கொள்கிறோம்.

 இந்த ஒட்டு மொத்த உத்திரவின் மூலம்  நம்முடைய  தோழர். S . சுந்தரமூர்த்தி  அவர்களின்  உண்ணா விரதக் கோரிக்கையும்  மதுரை கோட்டத்திற்கு  நிறைவேற்றப்பட்டது  என்பதை மகிழ்வுடன்  தெரிவித்துக் கொள்கிறோம்.  அவரும்  தன்னுடைய உண்ணா நிலை போராட்டத்தை  இன்று முடித்துக் கொண்டார்.  அவரது  போராட்டத்திற்கு  நம்முடைய மாநிலச் சங்கத்தின் வீர வாழ்த்துக்கள் ! இதர கோரிக்கைகளை வென்றடைய  நாம் போராட்ட வீச்சை அதிகப் படுத்துவோம். 
ஊழியர் ஒற்றுமை  ஓங்குக !  
வேலை நிறுத்தம் வெல்லட்டும் !





Saturday, 14 March 2015

PMG அவர்களுடன் சந்திப்பு (பொதுச் செயலருடன்)

                 கடந்த 12.3.2015 அன்று NFPE -P3 அகில இந்திய பொதுச் செயலர் தோழர் N. சுப்ரமணியன் அவர்கள் கோவை வருகை புரிந்து PMG  அவர்களைச் சந்திக்க உள்ளதாக நமக்குத் தெரிவித்தவுடன் JCA சார்பாக NFPE - P3 கோட்டச் செயலர் தோழர் K. சுவாமிநாதன் அவர்கள் சென்று ஈரோடு தலைமை அஞ்சலக அதிகாரி அவர்களின் தொடர் ஊழியர் விரோத நடவடிக்கைகள் குறித்துப் பேசுவததென ஈரோடு JCA சார்பாக முடிவு செய்யப்பட்டது.

             12.03.2015 அன்று மாலை 3.30 மணியளவில் தோழர் N. சுப்ரமணியன் மற்றும் தோழர் எபினேசர் காந்தி அவர்களோடு சென்று 1 மணி நேரத்திற்கும் மேலாக பல்வேறு பிரச்சனைகள் குறித்து PMG அவர்களுடன் பேச முடிந்தது.

               ஈரோடு தலைமை அஞ்சலக அதிகாரி அவர்களின் தொடர்ந்த CRUEL ACTIVITY காரணமாக - ஈரோடு தலைமை அஞ்சலக ஊழியர்கள் மிகுந்த மனச்சோர்வுக்கு உள்ளாகி வருவதை தெளிவாக எடுத்துச் சொன்னோம். ஊழியர்கள் மட்டுமல்ல இவரது செயல்பாட்டால் நமது வாடிக்கையாளர்களும் பாதிக்கப்பட்டு வருவதையும் எடுத்துச் சொன்னோம். முழுமையாக இவைகளைக் கேட்டறிந்த நமது PMG அவர்கள் Senior Postmaster , Erode அவர்களைப் பணியிட மாற்றம் செய்ய உள்ளதாக NFPE - P3 பொதுச் செயலர் அவர்களிடம் உறுதியளித்துள்ளார்கள்.

          பிரச்சனையின் தன்மையை அறிந்து சரியான தீர்வுக்கு உத்திரவாதமளித்த நமது மேற்கு மண்டல PMG அவர்களுக்கு NFPE - FNPO சங்கங்கள் இணைந்த ஈரோடு JCA சார்பாக நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

            சந்திப்புக்கு ஏற்பாடு செய்து கொடுத்த NFPE P3 மாநில உதவித் தலைவர்  தோழர்  எபினேசர் காந்தி அவர்களுக்கும் சந்திப்பின் பொழுது நமக்கு உறுதுணையாக இருந்து சரியான தீர்வுக்கு வழி வகுத்து கொடுத்த NFPE P3 பொதுச் செயலர்  தோழர் N. சுப்ரமணியன் ஆகியோருக்கும்  JCA  சார்பாக நெஞ்சார்ந்த நன்றிகள்.



ஈரோடு 638001 / 14.3.2015                                                    இவண்,

                                                                                         K.SWAMINATHAN
                                                                                         J.BALAMOHANRAJ    
                                                                                         JCA CONVENERS

Wednesday, 11 March 2015

26.03.2015 - தமிழகம் தழுவிய வேலை நிறுத்த நோட்டீஸ் முறைப்படி வழங்கப்பட்டது:

கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம்  
மாபெரும் வெற்றி ! 
சட்ட பூர்வமான வேலை நிறுத்த நோட்டீஸ் முறையாக வழங்கப்பட்டது !
26.03.2015 அன்று தமிழகத்தில்  தேங்கிக் கிடக்கும் கோரிக்கைகளுக்காக 
தமிழகம் தழுவிய ஒரு நாள்  வேலை நிறுத்தம் !

அன்புத் தோழர்களுக்கு  வணக்கம் ! நேற்று (10.03.2015) அன்று மதியம்  தமிழக NFPE  அஞ்சல் - RMS  இணைப்புக் குழு சார்பாக 9 சங்கங்கள் , CPMG  அலுவலகம் முன்பாக  நடத்திய கோரிக்கை முழக்க  ஆர்ப்பாட்டம் மிகச் சிறப்பான வெற்றியைப் பெற்றது.  கிட்டத்தட்ட 300  தோழர்கள்  கலந்து கொண்டது இந்த நிகழ்வின் சிறப்பான அம்சமாகும். இந்த ஆர்ப்பாட்டம்  இணைப்புக் குழுவின் தலைவர் தோழர். B . பரந்தாமன் (R  4) தலைமையில், தோழர். J . ராமமூர்த்தி (P  3) முன்னிலையில், NFPE  அனைத்து மாநிலச் செயலர்களும்  மற்றும் அகில இந்திய சங்கங்களின்  நிர்வாகிகளும்  கலந்துகொள்ள  எழுச்சியுடன்  நடைபெற்றது.  சிறப்பு  அழைப்பாளராக  மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனத்தின்  தமிழக  பொதுச் செயலர்  தோழர். M . துரைபாண்டியன் அவர்கள் கலந்து கொண்டார்கள்.  

ஆர்ப்பாட்டம்  முடிந்த பிறகு  அனைத்து சங்கங்களின் கோரிக்கைகள் அடங்கிய  26.3.2015 அன்றைய தேதியில் நடைபெற உள்ள வேலை நிறுத்தத்திற்கான  சட்ட பூர்வமான நோட்டீஸ்  CHIEF  PMG  தலைமை இடத்தில் இல்லாத காரணத்தினால்  DPS  HQ அவர்களிடம்  நேரில் வழங்கப் பட்டது. இதன் நகல்  PMG,CCR  மற்றும் PMG, MM  அவர்களுக்கும் அளிக்கப் பட்டது.  மேலும்  அனைத்து PMG க்களுக்கும் ,  தொழிலாளர் நல ஆணையருக்கும் முறையாக அனுப்பப் பட்டது. 
10.03.2015 அன்று CHIEF PMG அலுவலகம் முன்பு நடந்த கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்ட புகைப்படங்கள்:




Saturday, 7 March 2015

அஞ்சல் குடும்பத்தில் இணையும் புதியவர்களுக்கு வாழ்த்துக்கள் ....



150 ஆண்டுகளுக்கும் மேலான பழமையோடும், நவீன தொழில் நுட்ப வசதிகளோடும்  இந்திய நாட்டின் மக்களுக்கான பணியினை சிறப்பாகச் செய்து வரும் அரசுத் துறையாம் அஞ்சல் துறையில் POSTAL ASSISTANT பணிக்குத் தேர்வு செய்யப்பட்டு வருகின்ற 09.03.2015 முதல் ஈரோடு அஞ்சல் கோட்டத்தில் தங்கள் பணியைத் தொடங்க உள்ள கீழ்க்கண்ட தோழர் , தோழியர்களுக்கு ...



104 அண்டுகளுக்கும் மேலான பாரம்பரியத்தோடு , ஊழியர்களின் உரிமைகளைப் போராடிப் பெறுவதில் , புதிய ஊழியர் நியமனம் என்பதே இல்லாது இருந்த ஒரு தேக்க நிலையை மாற்றி கடந்த ஆறு ஆண்டுகளாக தொடர்ந்து ஊழியர் நியமனத்தைச் சாத்தியமாக்கியதில் ஒரு முன்னணிப் படையாகத் திகழ்ந்து வருவதால் அஞ்சல் ஊழியர்களில் 80 சதவீதத்திற்கும் மேலனோரை தனது உறுப்பினர்களாகப் பெற்று பெருமையோடு செயல்பட்டு வரும் ....

NFPE (National  Federation of Postal Employees) சமேளனத்தின் All India Postal Employees Union - Group 'C' தொழிற்சங்கத்தின் ஈரோடு கோட்டக் கிளையின் சார்பாக - நெஞ்சார்ந்த இனிய நல்வாழ்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம் .

1) Parthipan. R
2) Janrthanan.M
3) Praveen Kumar. V
4) Selvin Danish. P
5) Jeeno Davidson .A
6) Sudhakar. S
7) Aarthy. T
8) Dineshkumar. A
9) Yazhini. B
10) Dharani. K.S
11) Kamatchiyammal. G
12) Partheepan. S
13) Mahendran. E
14) Dinesh Kumar. A
15) Praveenkumar. P
16) Sheeba Ferin. G
17) Satheeskumar. M                      
கே . சுவாமிநாதன் ,
கோட்டச் செயலர்,
NFPE - P 3,
ஈரோடு 638001.

NFPE P 3 தமிழ் மாநிலச் சங்கம் மத்தியச் சங்கத்தோடு இணைந்து கோரிக்கை வைத்துப் போராடியதால் கிடைத்த வெற்றி :

 தேர்வு செய்யப் பட்ட அனைத்து நேரடி எழுத்தர்களையும் உடனடியாக தாற்காலிக (PROVISIONAL ) பணி  நியமனம் செய்யுமாறு CPMG  அவர்கள்,   எழுத்தர் நியமன அடிப்படை சட்டவிதிகளை RELAX செய்து  உத்திரவிட்டுள்ளார்கள். அதாவது அவர்களிடம் இருந்து UNDER TAKING DECLARATION  பெற்றுக் கொண்டு  CERTIFICATE  VERIFICATION  செய்யாமலேயே , சாதிச் சான்று  VERIFICATION செய்யாமலேயே, MEDICAL  CERTIFICATE  பெறாமலேயே ,  POLICE  VERIFICATION  பெறாமலேயே  அவர்களுக்கு  தாற்காலிகப்  பணி  நியமனம் அளித்திடும் உத்திரவே  இது. ஏற்கனவே  நமது மத்திய சங்கத்தின் மூலம்  TRAINING  செல்லாமல் அனைத்து VERIFICATION  முடிக்கப்பட்டால் பணி  நியமனம்  அளிக்கலாம் என்ற உத்திரவை நாம் பெற்றிருந்தாலும்  தற்போது CPMG  , TN  அவர்கள் அளித்துள்ள  உத்திரவு  ஆட்பற்றாக்குறையை வெகுவாகத் தீர்த்திட  உதவும்,  உடனடி  நியமனத்திற்கான உத்திரவாகும். இது  நமது   தமிழ் மாநில  அஞ்சல் மூன்று  சங்கத்தின்  இரண்டு கட்ட போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாகும்.  உத்திரவின் நகலை கீழே பார்க்கவும்.  இந்த செய்திகளை உடன் நகல் எடுத்து அனைத்து ஊழியர்களுக்கும்   அளிக்கவும்.