MENU BAR

Monday 29 July 2019

29.07.19 ஆர்பாட்டம் அஞ்சல் JCA சார்பில்

வெற்றிகரமான முதற்கட்ட போராட்டம்

தோழியர்களே ! தோழர்களே !
நமது அகில இந்திய அஞ்சல் தொழிற்சங்க  கூட்டு நடவடிக்கைக் குழு (அஞ்சல் ஊழியர் தொழிற்சங்கங்களான NFPE & FNPO இணைந்து) அறைகூவலின்படி 
காலி பணியிடங்களை நிரப்புதல், அஞ்சல் துறை சேவைகளுக்கு தனியார்மயத்தை உட்புகுத்துவதை நிறுத்துதல், அஞ்சல் தொழில்நுட்ப கோளாறுகளை சரிசெய்தல், GDS சம்பள கமிட்டியின் சாதகமான பரிந்துரைகளை அமல்படுத்துதல்,புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்தல் உள்ளிட்ட 23 பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டி நாடு முழுவதும் பல்வேறு இயக்கங்களை நடத்த உள்ளது..

அதில் முதற்கட்ட இயக்கமாக 29.07.2019 திங்கள்கிழமை அன்று நாடு முழுவதும் உள்ள அனைத்து அஞ்சல் கோட்டங்களிலும்  உணவு இடைவெளி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஈரோடு கோட்டத்தை பொறுத்தமட்டில் ஈரோடு தலைமை அஞ்சலகம் முன்பு மதியம் 1 மணியளவில் ஈரோடு/பவானி/கோபி பகுதியில் உள்ள அஞ்சல் ஊழியர்கள் 30க்கும் மேற்பட்டோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று இருந்தனர்.

ஈரோடு கோட்ட NFPE தலைவர் செல்லமுத்து அவர்கள் தலைமையேற்று நடத்த, கோட்ட NFPE துணை செயலர் சுவாமிநாதன் முக்கிய கோரிக்கைகள் பற்றி விவரிக்க, கோட்ட தலைவர் செல்லமுத்து அவர்களுடன் இணைந்து அனைவரும் பலத்த கோஷங்கள் எழுப்ப ,இறுதியாக FNPO தோழர் நசீர் அவர்கள் நன்றியுரை வழங்க ஆர்ப்பாட்டம் சிறப்பான முறையில் நடைபெற்றது..

அடுத்த கட்ட போராட்டமாக நாடு முழுவதும் அனைத்து கோட்ட அளவில், மாநில அளவில் தர்ணா போராட்டங்கள் நடைபெற இருக்கின்றது...

கோரிக்கைகள் நிறைவேறாத பட்சத்தில் காலவறையற்ற வேலைநிறுத்த போராட்டங்களிலும் அஞ்சல் ஊழியர் சங்கங்கள் இறங்க எத்தனித்து உள்ளன...

தோழமையுடன்,
ஈரோடு NFPE P3.

குறிப்பு:
29.07.19 ஆர்ப்பாட்டத்தில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் அனைவரின் பார்வைக்கும் கீழே பதியப்படுகின்றது.






















ஓங்குக ஊழியர் ஒற்றுமை...!
வெல்க அவர்தம் கோரிக்கை...!

No comments:

Post a Comment