MENU BAR

Tuesday, 4 August 2020

தோழர். T.V.ராகவன் அவர்களின் பணி ஓய்வு

தோழமைகளே...
நமது அஞ்சல் துறையில் சிறப்பானதொரு அரசு பணி செய்த பிறகு, நமது மூத்த தோழர் T.V.ராகவன் அவர்கள் கடந்த 03.08.2020 அன்று விருப்ப ஓய்வு பெற்றார்..

தோழர் அவர்கள் நமது ஈரோடு கோட்ட அலுவலகம் முதல் , துணை அஞ்சலகம் , ஈரோடு தலைமை அஞ்சலகம் என அனைத்து வகை பணி சூழலிலும் மிகுந்த ஈடுபாட்டுடனும், அதிக சுறுசுறுப்புடனும் , மிக தன்மையுடனும் பணியாற்றி வந்தது குறிப்பிடத்தக்கது...
மேலும் ஈரோடு கோட்ட சங்கத்தின் முன்னணி தோழமையாக, Active worker ஆக நமது சங்க செயற்பாடுகளுக்கு பெரிதும் பங்காற்றியவர்..


தோழரின் அஞ்சல் பணி சேவைக்கும், தொழிற்சங்க கடமைகளுக்கும் நன்றிகள் சொல்லும் அதே வேளையில், தோழரின் ஓய்வு வாழ்க்கை இனிதே அமைய நமது ஈரோடு கோட்ட சங்கத்தின் சார்பில் நல் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்..

நேற்றைய 03.08.2020 தினமன்று கோட்டம் ஈரோடு தலைமை அஞ்சலக மனமகிழ் மன்றம் சார்பிலும், நமது ஈரோடு கோட்ட சங்கத்தின் சார்பிலும் தோழரது பணி ஓய்வு விழா தகுந்த சமூக இடைவெளியுடனும் சிறப்பாகவும் அமைந்தது..

நிகழ்வின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் அனைவரின் பார்வைக்கும் இங்கு பகிரப்படுகின்றது..


தோழமையுடன்,
ஈரோடு NFPE P3.























Monday, 1 June 2020

MAY 2020 பணி ஓய்வு வாழ்த்துக்கள்

தோழமைகளே..

கடந்த 30.05.2020 அன்று நமது ஈரோடு கோட்டத்தைச் சார்ந்த பல தோழமைகள் சிறப்பானதொரு அரசு பணிக்கு பிறகு, ஓய்வு பெற்றுள்ளனர்.

 அவர்கள் அனைவருக்கும் நமது ஈரோடு கோட்டச் சங்கத்தின் சார்பில் பொன்னாடை போர்த்தி  மரியாதையை செய்யப்பட்டு , வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது..

பணி ஓய்வு வாழ்த்தின் பொது எடுக்கப்பட்ட புகைபடங்களில் சிலவற்றை அனைவரின் பார்வைக்கும் இங்கு பகிரப்படுகின்றது.


தோழர்.குழந்தைவேலு அவர்களுக்கு , சங்கத்தின் சார்பில் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டது

 கோபி தலைமை அஞ்சலகத்தில்






தோழியர். சாந்தாமணி அவர்களுக்கு சங்கத்தின் சார்பில் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கபட்டது






விருப்ப ஓய்வில் செல்லும் முன்னால் SYSTEM ADMIN தோழர். ஆனந்தகுமார் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி கெளரவிக்கப்பட்டது



















ஈரோடு தலைமை அஞ்சலக முதுநிலை அஞ்சல் அதிகாரி தோழர் சாய்ராம் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டது





ஈரோடு கோட்ட முதுநிலை அஞ்சல் கண்காணிப்பாளர் திரு சக்திவேல் முருகன் அவர்களுக்கு , சங்கத்தின் சார்பில் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கபட்டது




மேலும் கடந்த MAY2020 மாதத்தில், பணி ஓய்வு பெற்ற அனைத்து தோழமைகளுக்கும் நமது ஈரோடு கோட்ட NFPE சங்கத்தின் சார்பில் சிறப்பானதொரு வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறோம்.


தோழமையுடன்,
NFPE -ஈரோடு.

Friday, 22 May 2020

22.05.2020 கண்டன ஆர்ப்பாட்டம் - NFPE ஈரோடு

வெற்றிகரமான கண்டன ஆர்ப்பாட்ட கூட்டம் 🚩

தோழமைகளே..
நமது மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளன அறைகூவலின்படி,மத்திய/மாநில அரசுகளின் மக்கள்/தொழிலாளர் விரோத போக்கினை கண்டித்து நாடு முழுவதும்  22.05.2020 அன்று கண்டன ஆர்ப்பட்டமும்  , பேட்ஜ் அணித்து பணியாற்றவும் நமது சங்கங்களுக்கு அறிவுறுத்தப்பட்டது..

அதனை ஏற்று ,  நமது ஈரோடு சங்கம் சார்பில் கீழ்கண்டவாறு இயக்கம்   வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டது..

~~~~~~~~~~~

 நாள் : 22.05.2020
வெள்ளிக்கிழமை

 இடம் :
ஈரோடு தலைமை அஞ்சலகம்

 நேரம் : மதியம் 1

 கூட்ட தலைமை :
தோழர். V. அருண்குமார்,
கோட்டத் தலைவர், NFPE-P3

 கண்டன விளக்கவுரை :
தோழர். B. சிவக்குமார்,கோட்ட செயலர், NFPE P4.

தோழர். சத்ருக்கன்,
கோட்ட தலைவர், NFPE GDS.

தோழர். S. செல்லமுத்து
கோட்ட செயலர்,
NFPE P3.

 கண்டன கோஷம் ;
தோழர். K. சுவாமிநாதன், கோட்ட உதவி செயலர்,
ஈரோடு NFPE P3.

 நன்றியுரை ;
தோழர். S. மணிகண்டன்,
கோட்ட உதவி தலைவர்,
ஈரோடு NFPE P3.

 ஆர்ப்பாட்ட கூட்டத்தில் பங்கேற்றோர் :
ஈரோடு DO, HO, Town SO போன்ற பல அஞ்சலகங்களை சார்ந்த60க்கும் மேற்பட்ட P3,P4 மற்றும் GDS தோழமைகள்.

~~~~~~~~~~~~~~

தோழமையுடன்,
 NFPE ஈரோடு.🚩

குறிப்பு:
1.  22.05.2020 அன்று ஈரோடு கோட்டத்தில் உள்ள தோழமைகள், கருப்பு பட்டை அணிந்து பணியாற்றினர்.

2. ஆர்பாட்ட இயக்கத்தில், சமுக இடைவெளி கடைபிடிக்கப்பட்டது.

3. ஆர்பாட்டத்தின் பொது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் அனைவரின் பார்வைக்கும் இங்கு பகிரப்படுள்ளது.