📮 அஞ்சல் துறை ஊழியர்கள் நாடு தழுவிய ஆர்ப்பாட்டம் 🚩
இந்திய அஞ்சல் துறையில்,
5785 கோடி செலவில் IT 2.0 என்ற பெயரில் corporate மயமாக்குவதை எதிர்த்து நாடு தழுவிய ஆர்ப்பாட்டம் 22.06.2022 புதன்கிழமை அன்று மாலை நடைபெற்றது.
ஈரோடு தலைமை அஞ்சலகத்தில் அனைத்து அஞ்சல் துறை சங்கங்கள் இணைந்து நடத்திய ஆர்ப்பாட்ட கூட்டத்தை அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்க கோட்ட தலைவர் சக்திவேல் மற்றும் தேசிய அஞ்சல் ஊழியர் சங்க செயலர் கணேசன் அவர்களும் கூட்டு தலைமை ஏற்று நடத்தினர்.
போராட்டத்தை வாழ்த்தி,
அகில இந்திய அஞ்சல் தபால்காரர் சங்க கோட்ட செயலர் K.தனசேகர்,
அகில இந்திய கிராமப்புற அஞ்சல் ஊழியர் சங்க கோட்ட செயலர் M.சத்ருக்கன்,
ஈரோடு மாவட்ட மத்திய அரசு ஓய்வூதியர் சங்க செயலர் N ராமசாமி,
அகில இந்திய அஞ்சல் RMS கிளை தலைவர் சாமுவேல் சத்தியசீலன்,
கிராமப்புற அஞ்சல் ஊழியர் சங்க செயலர் K.நடராஜன்,
தேசிய அஞ்சல் கிராமப்புற சங்க செயலர் P.ரவிக்குமார்,
ஈரோடு NFPE மகிளா கமிட்டி திலகவதி,
கிராம புற ஊழியர் திவ்யா,
ஈரோடு கோட்ட உதவி செயலர் ந.கார்த்திகேயன்
ஆகியோர் சிறப்பாக வாழ்த்துரை வழங்கினர்.
மத்திய அரசின் ,அஞ்சல் துறையின் அடாவடித்தனத்தை எதிர்த்து கோட்ட உதவி தலைவர் அருண்குமார் அவர்கள் கோஷமிட ஆர்ப்பாட்டம் சூடுபிடித்தது.
அஞ்சல் துறையில் தனியார் மயமாக்குவதை தவிர்த்து, அஞ்சல் துறையின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த 5785 கோடி நிதியினை செலவு செய்து, இந்திய மக்களுக்கு தரமான அஞ்சல் துறை சேவையை உறுதிபடுத்த வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டது.
கூட்டத்தில் ஈரோடு நகர் பகுதி அஞ்சலகங்கள், கொடுமுடி ,பள்ளிபாளையம், ஊத்துக்குளி,அரச்சலூர்,வெள்ளோடு சென்னிமலை, ஆகிய பல பகுதிகளில் இருந்து சுமார் 150க்கும் மேற்ப்பட்டோர் பங்கேற்றனர்.
இறுதியாக
ஈரோடு கோட்ட அமைப்பு செயலர் மகேந்திரன் அவர்கள் நன்றியுரை வழங்கினார்.
கோரிக்கைகள் வெல்ல, இந்திய அஞ்சல் துறை 100 சதவிகிதம் அரசு சேவை துறையாக நீடிக்க ,
அடுத்த கட்ட போராட்டமாக
காலவரையற்ற வேலைநிறுத்தத்தை,
நாடு தழுவிய அளவில்
நடத்த சங்க தலைவர்கள் முடிவு எடுத்துள்ளனர்.
தோழமையுடன்,
அஞ்சல் JCA ( NFPE & FNPO)
ஈரோடு🚩
பி. கு:
ஆர்ப்பாட்ட நிகழ்வில் எடுக்கப்பட்ட புகைப்படங்களில் சிலவற்றை ,அனைவரின் பார்வைக்கும் இங்கு பகிர்கின்றோம்.
No comments:
Post a Comment