MENU BAR

Thursday 30 June 2016

பெருமையுடன் வாழ்த்துகிறோம் ...



                 ஈரோட்டில் வேர் பதித்து ... கொண்ட கொள்கைத் தடம் மாறாமல் மத்திய மாநிலச் சங்கங்களில் பொறுப்புகள் வகித்து இன்று இலாகா பணி ஓய்வு பெரும் எங்கள் N.G வாழ்க , வாழ்க, வாழ்கவென பெருமையுடன் வாழ்த்துகிறோம்.

தொழிலாளி வர்க்க நலன் ஒன்றே குறிக்கோளாய் ....

ஒன்றுபட்ட போராட்டங்கள் மட்டுமே உழைக்கும் மக்களின் துயர் துடைக்குமென்ற கொள்கையில் உறுதியாய் ...

NFPE போரட்டமென்றாலும்  , POSTAL JCA போரட்டமென்றாலும் ஒட்டு மொத்த இந்தியத் தொழிலாளி வர்க்க அறைகூவல் போராட்ட மென்றாலும் ஊழியர்களை ஒன்றுபடுத்திப் போராடி தண்டனைகள் பல பெற்றும் ... விழுப்புண்கள்யாவும் நட்சத்திர முத்திரைகளேயென இயக்கப் பணியை தொய்வில்லாமல் தொடர்ந்திட்ட நெஞ்சுரம் கொண்டவராய் ...

ஈரோடு கோட்டச் NFPE – P3 சங்கத்தில் கோட்டச் செயலராய் வென்று, NFPE பேரியக்கத்தில் மத்திய மாநிலச் சங்கங்களில் ஊழியர் நலன் சார்ந்த பல திருப்பு முனைகளுக்கு வித்திட்டு, மாநிலச் சங்க உதவிச் செயலராய் , மத்தியச் சங்க செயல் தலைவராய் பரிணமித்து சூத்திரதாரியாய் ஜொலித்து...

இன்று 30.06.2016- ல் தன் அலுவலக பணியிலிருந்து (SPM, திருவல்லிக்கேணி) பணி ஓய்வு பெறுகின்ற எங்கள் வழிகாட்டி... தோழர்கள் – பாபு தார பாதா, ஹென்றி பாட்டன் , ஆதி நாராயணா , K.ராகவேந்திரன் ஆகியோரின் மிடுக்கான பாதையில் எங்கள் பயணம் தொடர தொடர்ந்து ஊக்கமளித்திட்ட    எங்கள் N.G என்கின்ற N.கோபாலகிருஷ்ணன் (அலைபேசி எண்: 94440 59259) அவர்களின் பணி ஓய்வுக் காலம் சிறக்க வாழ்த்தியும் தொடரும் எங்கள் பயணத்தில் உதவிட வேண்டியும் ...

                   மகிழும் உள்ளங்கள் ...
       ஈரோடு கோட்டசங்கநிர்வாகிகள் NFPE P3,P4,GDS 
             மற்றும் அனைத்து தோழர்கள் .

No comments:

Post a Comment