MENU BAR

Sunday, 17 November 2019

15.11.2019 பொதுக்குழு முடிவுகள்

தோழியர்களே ! தோழர்களே !

கடந்த 15.11.2019 வெள்ளிக்கிழமையன்று நடந்த மாலை நேர ஆர்பாட்டத்திற்கு பிறகு , நமது ஈரோடு தலைமை அஞ்சலக மனமகிழ் மன்ற வளாகத்தில் நமது ஈரோடு கோட்ட P3 சங்கத்தின் பொதுகுழு நடைபெற்றது . சுமார் இரவு 9 மணி வரை நடைபெற்ற இந்த பொதுக்குழுவானது கீழ்க்கண்டவாறு நடைபெற்றது

கூட்டத் தலைமை:
தோழர். V.அருண்குமார், கோட்டத் தலைவர், NFPE-P3.

விளக்கவுரை:
தோழர்.S.செல்லமுத்து, கோட்டச் செயலர், NFPE P3
தோழர்.K.சுவாமிநாதன், கோட்ட உதவி செயலர், NFPE-P3

மற்றும் பல்வேறு தோழமைகள் பங்கேற்புடன் கீழ்க்கண்ட பொருள் குறித்து ஆக்கப்பூர்வமாக விவாதிக்கப்பட்டது


விவாதிக்கப்பட்ட பொருள்கள்:
  1. சிவகிரி பாசூர் முறைகேடுகள்
  2. புதிதாக LSG பதவி உயர்வு பெற்ற தோழமைகளுக்கு , அவர்களின் விருப்பபடி அலுவலகம் கிடைக்க வழிவகை செய்தல்
  3. UNSCIENTIFIC & UNREALISTIC TARGET நிர்ணயித்து  நிர்வாகம் கொடுத்து வரும் நெருக்கடிகள் 
  4. நடந்து முடிந்த அகில இந்திய மாநாட்டு செய்திகள் குறித்து
  5. NFPE சங்கத்தின்2020 DIARY குறித்து
  6. ஈரோடு தலைமை அஞ்சலக SB COUNTERல், குறைந்த பட்சம் 4PAக்களும்,  2 APMகளும் இருக்க நடவடிக்கை எடுத்தல்
  7.  IPPB நிர்வாகத்தின் ஆதிக்கமும், IPPB பரிவர்த்தனைகளில் நமது தோழமைகள் VIGILANT ஆக இருக்க வேண்டிய அவசியம் குறித்தும்
  8. ஈரோடு கோட்டத்தில் ஊழியர் விரோத போக்கை கடைபிடித்து வரும் 2 ASP களின் மீது , சங்க அறிக்கை தயாரித்தல் தொடர்பாகவும்
  9. ஏற்கனவே முடிவெடுக்கபட்ட 100 RTI விண்ணப்பங்கள் , நிர்வாகத்தை நோக்கி அனுப்புவதை உடனடியாக துரிதபடுத்துதல் தொடர்பாகவும் 
இன்னும் பல பிரச்சனைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.மேற்கூறிய அனைத்து பிரச்சனைகளுக்கும் நமது சங்கம் அடுத்தடுத்து எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் முடிவெடுக்கபட்டது.


தோழமையுடன்
ஈரோடு NFPE-P3.

15.11.2019 மாலை நேர ஆர்ப்பாட்டம்

20 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டம்

தோழியர்களே ! தோழர்களே !

நமது மத்திய AIPEU GDS (NFPE - GDS) சங்கமானது 
  • GDS ஊழியர்களை சிவில் ஊழியர்களாக அறிவிக்கப்பட வேண்டும்
  • பணிகொடை தொகை ரூபாய் 5 லட்சமாக உயர்த்தப்பட வேண்டும்
  • சேமிப்பு கணக்குகள் , காப்பீடு திட்டங்கள் போன்றவற்றில், முற்றிலும் விஞ்ஞானபூர்வமற்ற, நடைமுறைக்கு சாத்தியமற்ற இலக்குகளை நிர்ணயித்து ஊழியர்களுக்கு நெருக்கடி கொடுப்பதை நிறுத்த வேண்டும்
 உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து இராண்டாம் கட்டமாக , 15.11.2019 அன்று நாடு முழுவதும் முழு நாள் தர்ணா போராட்டம் நடத்த அறைகூவல் விடுத்தது இருந்தது.
 நமது ஈரோடு கோட்டத்தை பொருத்தமட்டில் ஈரோடு , பவானி மற்றும் கோபி கிளைகளை சார்ந்த அனைத்து P3, P4 மற்றும் GDS தோழமைகள் அனைவரும் இணைந்து கடந்த  15.11.2019 அன்று மாலை 6 மணியளவில் மாபெரும் ஆர்பாட்டம் கீழ்க்கண்டவாறு வெற்றிகரமாக நடைபெற்றது

கூட்ட தலைமை(கூட்டு) :
தோழர்.V.அருண்குமார்,கோட்டத் தலைவர் NFPE-P3 மற்றும்
தோழர்.N.சதாசிவன், மாநில உதவி தலைவர், NFPE-GDS

விளக்கவுரை:
தோழர். K,சுவாமிநாதன்,கோட்ட உதவி செயலர், NFPE-P3
தோழர்.S.மாயவன், கோட்டச் செயலர், NFPE-GDS
தோழர்.B.சிவகுமார், கோட்டச் செயலர் NFPE-P4

வாழ்த்துரை:
C.பரமசிவம், CONVENOR, ஈரோடு மாவட்ட அனைத்து ஊழியர் சங்கம்

கோஷங்கள்:
தோழர். K,சுவாமிநாதன்,கோட்ட உதவி செயலர், NFPE-P3

நன்றியுரை :
தோழர். S.செல்லமுத்து, கோட்டச் செயலர், NFPE-P3.



தோழமையுடன்,
ஈரோடு கோட்ட NFPE P3.

குறிப்பு:
ஆர்பாட்ட கூட்டத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களில் சிலவற்றை, அனைவரின் பார்வைக்கும் இங்கு நாம் பதிகின்றோம்.







Friday, 15 November 2019

15.11.2019 கூட்டு பொதுக்குழு கூட்டம்

NFPE
அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கம் குரூப் ‘C’
ஈரோடு கோட்டக் கிளை மற்றும் பவானி, கோபி கிளைகள்.

கூட்டு பொதுக்குழு  கூட்டம்15.11.2019

தோழர்களே ! தோழியர்களே !
நமது  சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் வருகின்ற 15.11.2019 வெள்ளிக்கிழமை அன்று மாலை 06:00  மணியளவில் ஈரோடு தலைமை அஞ்சலகத்தில் நடைபெற உள்ளது. அதுசமயம் கீழ்கண்ட பொருள்கள் பற்றி விவாதிக்கப்படும். நமது சங்கத்தை சார்ந்த ஈரோடு ,பவானி மற்றும் கோபி தோழமைகள்/உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ள வேண்டுகிறோம்..

பொருள்:
1.   சிவகிரி மற்றும் ஊஞ்சலூர் முறைகேடுகள் - நிர்வாகத்தின் போக்கும், சங்கம் எடுக்க வேண்டிய நடவடிக்கைகளும்.
2.   சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ள LSG பதவி உயர்வு ஆணை மற்றும் இடம் கோருதல் தொடர்பாக
3.   புதிய கணக்கு ஆரம்பித்தல், புதிய பாலிசி பிடித்தல் ஆகியவற்றில்
விஞ்ஞானபூர்வமற்ற / ஏதார்த்ததிற்கு புறம்பான இலக்கு நிர்ணயிப்பது தொடர்பாக  
4.   நடந்து முடிந்த அகில இந்திய மாநாடு பற்றிய செய்திகள் – தொடர்பாக
5.   இதர பொருள்கள் – தலைவர் அனுமதியுடன்.


தோழமையுடன்,

S.செல்லமுத்து
கோட்டச் செயலர்
P3 - ஈரோடு

T.கணேசன்
கிளைச் செயலர்
 P3 –பவானி 

S.கார்த்திகேயன்
கிளைச் செயலர்
P3 –கோபி


இடம் : ஈரோடு                                                   
நாள் : 07.11.2019

Wednesday, 16 October 2019

15.10.2019 ஈரோடு தலைமை அஞ்சலகம் முன்பு ஆர்ப்பாட்டம்

10அம்ச கோரிக்கைகளை முன்வைத்து மாபெரும் ஆர்ப்பாட்டம்..

தோழியர்களே ! தோழர்களே !
புதிய பென்ஷன் திட்டத்தை கைவிடுதல், காலிப் பணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட 10அம்ச கோரிக்கைகளை முன்வைத்து நாடு முழுவதும் பல்வேறு ஆர்ப்பாட்டங்களை நிகழ்த்த மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனம் அறைகூவல் விடுத்துள்ளது.

ஏற்கனவே 15.10.2019 மதியம் ஈரோடு வருமான வரி அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்பாட்டத்தை அடுத்து,
இரண்டாம் போராட்டமாக கீழ்கண்ட இயக்கம் வெற்றிகரமாக நடைபெற்றது.

தேதி : 15.10.2019
நாள் : செவ்வாய்க்கிழமை
இடம் : தலைமை அலுவலகம், ஈரோடு
காலம் : மாலை 6 :30 மணியளவில்
இயக்கம் : மாபெரும் ஆர்ப்பாட்டம்

கூட்ட தலைமை :
தோழர்.V. அருண்குமார்,கோட்டத் தலைவர்,NFPE P3,ஈரோடு மற்றும்
தோழர். தனசேகரன், கோட்டத் தலைவர். NFPE P4,ஈரோடு.

ஆர்ப்பாட்ட உரை :
தோழர். N. ராமசாமி , செயலர், மத்திய அரசு ஊழியர் ஒருங்கிணைப்புக் குழு.

தோழர். மோகன் ,தமிழ் மாநில NFPE RMS சங்க பொறுப்பாளர், ஈரோடு RMS.

தோழர். S. செல்லமுத்து, கோட்ட செயலர், NFPE P 3,ஈரோடு.

ஆர்ப்பாட்ட கோஷங்களை முன்னெடுத்தவர் :
தோழர். K. சுவாமிநாதன், உதவி செயலர், NFPE P3, ஈரோடு.

ஆர்ப்பாட்ட கூட்டத்தில் பங்கேற்றோர் :
ஈரோடு கோட்ட NFPE சங்கத்தை சார்ந்த பல்வேறு P3,R3,P4,R4 ,GDS தோழமைகள்.

நன்றியுரை:
தோழர். B. சிவகுமார், கோட்டச் செயலர், NFPE P4,ஈரோடு.

தோழமையுடன்,
ஈரோடு NFPE P3.

குறிப்பு:
ஆர்ப்பாட்ட கூட்டத்தில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்களை அனைவரின் பார்வைக்கும் கீழே பதிகின்றோம்.































15.10.2019 IT அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்

10அம்ச கோரிக்கைகளை முன்வைத்து மாபெரும் ஆர்ப்பாட்டம்..

தோழியர்களே ! தோழர்களே !
புதிய பென்ஷன் திட்டத்தை கைவிடுதல், காலிப் பணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட 10அம்ச கோரிக்கைகளை முன்வைத்து நாடு முழுவதும் பல்வேறு ஆர்ப்பாட்டங்களை நிகழ்த்த மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனம் அறைகூவல் விடுத்துள்ளது.

முதற் போராட்டமாக கீழ்கண்ட இயக்கம் வெற்றிகரமாக நடைபெற்றது.

தேதி : 15.10.2019
நாள் : செவ்வாய்க்கிழமை
இடம் : வருமான வரி அலுவலகம், ஈரோடு
காலம் : மதியம் 1 மணி
இயக்கம் : மாபெரும் ஆர்ப்பாட்டம்

கூட்ட தலைமை : தோழர். ரோஹித் குமார், தலைவர்,ITEF,ஈரோடு.

ஆர்ப்பாட்ட உரை :
தோழர். P. சேகர், செயலர், ITEF, ஈரோடு.

தோழர். N. ராமசாமி , செயலர், மத்திய அரசு ஊழியர் ஒருங்கிணைப்புக் குழு.

தோழர். N. கார்த்திகேயன், அமைப்புச் செயலர், NFPE P3,ஈரோடு.

தோழர். R. அலெக்ஸ் சாம்ராஜ், செயலர், ஈரோடு RMS.

ஆர்ப்பாட்ட கோஷங்களை முன்னெடுத்தவர் :
தோழர். K. சுவாமிநாதன், உதவி செயலர், NFPE P3, ஈரோடு.

ஆர்ப்பாட்ட கூட்டத்தில் பங்கேற்றோர் :
அஞ்சல் ஊழியர் ஓய்வூதிய சங்க தோழர். V. K. பழனிவேல் , ஈரோடு வருமான வரி அலுவலக ITEF தோழமைகள், ஈரோடு அஞ்சலக NFPE மற்றும் அஞ்சல் RMS தோழமைகள் உள்ளிட்டோர்.

நன்றியுரை:
தோழர். குமார், ITEF, ஈரோடு.

தோழமையுடன்,
ஈரோடு NFPE P3.

குறிப்பு:
ஆர்ப்பாட்ட கூட்டத்தில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்களை அனைவரின் பார்வைக்கும் கீழே பதிகின்றோம்.









15.10.2019 ஆர்ப்பாட்டம் Notice

10 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து நாடு தழுவிய போராட்டம்


தோழமையுடன்,
ஈரோடு NFPE P3.

10.10.2019 மூன்றாம் நாளாக போராட்டம்

🚩 *Bonus ஆணை வழங்க கோரி மூன்றாம் நாளாக ஆர்ப்பாட்டம்*🚩

தோழமைகளே...
நமது மத்திய அரசு ஊழியர் சம்மேளன அறைகூவல்படி,
உடனடியாக Bonus ஆணை வெளியிட கோரி நாடு முழுவதும் அன்றாடம் ஆர்ப்பாட்ட இயக்கங்கள் நிகழ்த்தி கொண்டு இருக்கிறோம்.

கடந்த 05.10.2019, 09.10.2019க்கு பிறகு, மூன்றாம் நாளாக 


*10.10.2019*
அன்று

நமது *ஈரோடு தலைமை அஞ்சலகம்* 

மற்றும்

*கருங்கல்பாளையம் துணை அஞ்சலகம்* முன்பு 
மதியம் 
உணவு இடைவேளை ஆர்ப்பாட்டம் சிறப்பாக நடைபெற்றது..

அது சமயம்  நமது ஈரோடு NFPE, FNPO மற்றும் AIPRPA(ஓய்வூதியர்) சங்கங்களை சார்ந்த  P3,P4 மற்றும் GDS தோழமைகளும் இதில் பங்கேற்று ஆர்ப்பாட்டத்தை சிறப்புற நடத்தினர்.


தோழமையுடன்,
*ஈரோடு அஞ்சல் JCA (NFPE~FNPO~AIPRPA)* 🚩

ஈரோடு தலைமை அஞ்சலகம் மற்றும் கருங்கல்பாளையம் துணை அஞ்சலகத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்ட இயக்க புகைப்படங்களை அனைவரின் பார்வைக்கும் இங்கு நாம் பதிகின்றோம்.