MENU BAR

Tuesday 18 June 2019

தாமதிக்கப்படும் ஊதியம்/ஓய்வூதியம் மற்றும் NFPE சம்மேளனத்தின் ஆர்ப்பாட்ட இயக்கமும்

ஊதியம்/ஓய்வூதியம் தாமதத்திற்கு கண்டன ஆர்ப்பாட்டம்

தோழியர்களே தோழர்களே ..

தொடர்ந்து பல மாதங்களாக நமது அஞ்சல் துறையில் ஊதியம் மற்றும் ஓய்வூதியம் தாமதமாக வரவு வைக்கப்படுவதை கண்டித்து நமது NFPE சம்மேளனம் ஆர்ப்பாட்ட இயக்கங்கள் அறிவித்துள்ளது..
அதையடுத்து சம்மேளனத்தின் 8அறைகூவலை அடுத்து இன்று18.06.2019 செவ்வாய்க்கிழமை அன்று நமது ஈரோடு தலைமை அஞ்சலகத்தில் மதியம் 1 மணியளவில் உணவு இடைவெளி ஆர்ப்பாட்ட போராட்டம் நடைபெற்றது..
இந்த போராட்ட இயக்கத்தில் ஈரோடு கோட்டத்தை பொறுத்தமட்டில் NFPE, FNPO மற்றும் AIPRPA (ஓய்வூதியர்) சங்கங்கள் இணைந்து ஆர்ப்பாட்டம் நிகழ்த்தினர்...

இந்த ஆர்ப்பாட்ட கூட்டு தலைமையேற்று NFPE யின் சார்பாக தோழர்.சுவாமிநாதன் மற்றும் FNPO சார்பில் தோழர். மோகன் அவர்கள் நிகழ்த்தினர்..
மேலும் கீழ்காணும் தோழமைகள் வாழ்த்துரை நிகழ்த்தினர்..
ஈரோடு NFPE P3 கோட்ட செயலர் தோழர். கார்த்திகேயன்,
ஈரோடு NFPE P4 கொட்ட செயலர் தோழர். சிவகுமார்,
ஓய்வூதியர் ஒருங்கிணைப்பாளர்கள் தோழர்.R. சுப்ரமணியன் ,
தோழர்.N. ராமசாமி மற்றும் ஈரோடு மாவட்ட மத்திய/மாநில மற்றும் பொதுத்துறை ஓய்வூதியர் சங்க ஒருங்கிணைப்பாளர் தோழர்.மணிபாரதி ஆகியோர் சிறப்புரையாற்றினர்... 
இறுதியாக போராட்ட முழக்கத்துடன் கண்டன கோஷங்களுடன் நிறைவு பெற்றது...
ஆர்ப்பாட்ட இயக்கத்தில் ஈரோடு கோட்ட அலுவலகம், ஈரோடு தலைமை அஞ்சலகம், அருகாமையிலுள்ள துணை அஞ்சலக தோழமைகள் , பவானி/கோபி கிளை தோழமைகள் மற்றும் அஞ்சல்/RMS ஓய்வூதிய சங்க தோழமைகள் என கிட்டத்தட்ட 60க்கும் மேற்பட்டோர் இந்த இயக்கத்தில் பங்குபெற்று ஊதிய/ஓய்வூதியம் தாமதமாக்கப்படுவதை கண்டிப்பதற்காக பங்குபெற்று தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்...

ஆர்ப்பாட்ட இயக்கத்தில் எடுத்த சில புகைப்படங்கள் சிலவற்றை அனைவரின் பார்வைக்கும் இங்கு நாம் பதிகின்றோம்...















தோழமையுடன்,
ஈரோடு கோட்ட NFPE P3.

No comments:

Post a Comment