MENU BAR

Tuesday, 18 June 2019

மாநில சங்கமும் மூன்று தொடர் இயக்கங்களும்

🚩 *மாநில சங்கத்திலிருந்து* 🚩
சமீபத்திய முக்கியமான  3 நிகழ்வுகள் குறித்து...
👇👇👇

 1.மேற்கு மண்டல கோட்ட  , கிளைச் செயலர்கள் கூட்டம் 

ஜூன் 11 2019 அன்று ஈரோடு தலைமை அஞ்சலகத்தில் மேற்கு மண்டல  கோட்ட  கிளை செயலர்கள் கூட்டம்   மண்டல செயலர் தோழர் ராஜேந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது கோட்ட கிளைச் செயலாளர்கள் கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளர்களாக முன்னாள் பொதுச்செயலர் தோழர் KVS  அகில இந்திய தலைவர் தோழர் JR சம்மேளன துணைப் பொதுச் செயலாளர் தோழர் ரகுபதி ஆகியோர் கலந்துகொண்டு ஆலோசனைகளை வழங்கி சிறப்பித்தனர் இந்த கூட்டத்தில் பெரும்பாலான கோட்ட கிளைச் செயலர்கள் தங்களது கோட்ட  பிரச்சினைகளை கடிதமாக கொடுத்து விவாதித்தனர் இங்கு விவாதிக்க பட்ட பிரச்சினைகள்  அனைத்தும்  திரு  PMG  அவர்களுக்கு கடிதமாக கொடுத்து தீர்வுகானபடும் .இந்த கூட்டத்தை ஏற்பாடு செய்த ஈரோடு கோட்ட செயலர் தோழர்  கார்த்திகேயன் அவர்களுக்கு மாநிலச் சங்கத்தின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் இதற்கு துணையாக இருந்து செயல்பட்ட அருமை தோழர் சஞ்சீவி அவர்களுக்கும் தோழர் சுவாமிநாதன் அவர்களுக்கும் மாநிலச் சங்கத்தின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

A. வீரமணி
மாநில செயலர்
அஞ்சல் மூன்று


 2⃣ *ஈரோடு கோட்டத்தின் சிறப்பு                              ஆலோசனைக் கூட்டம்*

ஈரோடு கோட்டத்தின்  சிறப்பு ஆலோசனைக் கூட்டம்  ஜீன் 11 2019 அன்று மாலை 6     மணி அளவில் ஈரோடு தலைமை அஞ்சலகத்தில்  தலைவர் சுவாமிநாதன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது தோழர் சஞ்சீவி அவர்கள் வரவேற்புரை ஆற்றினார்  இந்தக் கூட்டம் ஒரு பொதுக்கூட்டம் போல் இல்லாமல் ஊழியர்கள் கேட்கின்ற கேள்விகளுக்கும்  சந்தேகங்களுக்கும் விளக்கம் அளிக்கக் கூடிய ஒரு கூட்டமாக அமைந்தது இந்த கூட்டத்தில் கலந்துகொண்டு கேட்கப்பட்ட கேள்விகள் சந்தேகங்கள் அனைத்திற்கும் தோழர் KVS தோழர் JR தோழர் ரகுபதி தோழர் A.வீரமணி தோழர் ராஜேந்திரன் ஆகியோர்  விளக்கம் அளித்தனர் பின்பு கிருஷ்ணமூர்த்தி அவர்கள் நன்றி கூற கூட்டம் இரவு 9 மணி அளவில் நிறைவுற்றது இக்கூட்டத்தை ஏற்பாடு செய்த கோட்ட செயலர் தோழர் கார்த்திகேயன் அவர்களுக்கு மாநிலச் சங்கத்தின் மனமார்ந்த வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் 

A. வீரமணி 
மாநிலச் செயலர் அஞ்சல் மூன்று


3⃣ *RO-WR ல் இருமாத சந்திப்பு*
 ஜூன் 12 .2019 அன்று நடைபெற்ற மேற்கு மண்டலத்தின் இரு மாதாந்திர பேட்டியில் மாநிலச் செயலர் தோழரே A.வீரமணி மண்டலச் செயலாளர் தோழர்.          ராஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர் இதில் மூன்றாண்டு காலமாக தேங்கிக் கிடக்கும் TA Bills மெடிக்கல் பில் போன்றவை  உடனடியாக கொடுக்கும்படி PMG அவர்களிடத்தில் வலியுறுத்தப்பட்டது   எவ்வளவு பணம் தேவைப்படும் என்ற proposal பெறப்பட்டு உடனடியாக வழங்கப்படும் என்று உறுதியளித்தார்கள்

 RICT சம்பந்தமாக பிரச்சனைகள் எழுப்பப்பட்ட போது இதில் குறிப்பாக 748 அலுவலகத்தில் புதிய சிம்கார்டு வழங்கப்பட்டுள்ளதாகவும் 251 புதிய அஞ்சல் அலுவலகத்திற்கு எந்த சிம் கார்டு விரைவாக செயல்படுகிறது என்பதை அறிந்து உள்ளதாகவும் அதை உடனடியாக மாற்றுவதற்கு ஏற்பாடு நடந்து வருவதாகவும்  தனியாக ஒரு சர்வர் அமைப்பதற்கு மாநில மத்திய நிர்வாகத்திர்க்கு  தெரிவிக்கப்பட்டு அந்த பணி நடைபெற்றுக்                  கொண்டிருப்பதாகவும்  வேறு  விதமான நெட்வொர்க்  பிரச்சினைகள்  மேல் மட்டத்திர்க்கு எடுத்து சென்று சரிசெய்ய
ஆவண செய்வதாக உறுதியளித்தார்கள் 

ஈரோடு கோட்டத்தின் கட்டிட பிரச்சனை சம்பந்தமாக ஈரோடு தலைமை அஞ்சலகம் கருங்கல்பாளையம் பவானி போன்ற அலுவலகங்கள் சீரமைக்க படுவதற்கு துரிதமான நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாகவும் குறிப்பாக ஈரோடு அஞ்சலகத்தில் 9.48 Laksh  sanction செய்யப்பட்டு  இருப்பதாகவும்  துரித நடவடிக்கை எடுத்து விரைவில் முடித்து தரப்படும் .  கோபிசெட்டிபாளையம் அலுவலகம் மாற்றுவதற்கான ஏற்பாடுகள் நடைபெறுவதாகவும் திண்டால். வீரப்பன் சத்திரம். போன்ற அலுவலகங்களில் கழிப்பறை வசதி கூட இல்லாமல் செயல்பட்டுக் கொண்டிருப்பதை சுட்டிக்காட்டினோம்  வேறு கட்டிடங்கள் மாற்றுவதற்கு உண்டான நடவடிக்கையில் ஈடுபட்டு மாற்றப்படும் என்றும் உறுதி அளித்தார்கள்

  பல.                                 கோட்டங்களில் குடி இருக்க தகுதி இல்லாத அலுவலகத்தை dequarterisation செய்ய வலியுறுத்தி னோம் தர்மபுரி கோட்டத்தில் பென்னாகரம் கோயம்புத்தூர் கோட்டம். ராம்நகர்  கிருஷ்ணகிரி கோட்டத்தில் ராயக்கோட்டை அஞ்செட்டி மத்தூர் போச்சம்பள்ளி போன்ற அலுவலகங்களில் போதுமான அளவிற்கு குடியிருக்கும் அளவிற்கு தகுதியானதாக இல்லை என்பதை சுட்டிக் காட்டினோம் ராம் நகர் அஞ்சலகம் ஒரு வாரத்திற்குள்ளாகவும் மற்ற அலுவலகங்கள் அந்தந்த கோட்ட அலுவலகத்தில் இருந்து proposal பெறப்பட்டு உடனடியாக தீர்வு காணப்படும் என்றும் உறுதியளிக்கப்பட்டது

 சேலம் மேற்கு கோட்டத்தில் HRA சம்பந்தமாக விவாதிக்கப்பட்ட.  போது ஓமலூர் கருப்பூர் ஸ்டீல் பிளானட் மகாராஜா நகர் போன்ற அலுவலங்களில்  வெகு விரைவில் 16% HRA வழங்குவது குண்டான ஆணை வெளியிடப்படும் என்று உறுதி அளித்தார்கள் நீண்ட நாட்களாக தேங்கிக் கிடக்கும் MACP அடுத்த வாரத்தில் ஆணை.                     வெளியிடப்படும் என்று உறுதியளித்தார்கள் 

 Rule 38உத்தரவு CPMG அவர்கலால் வெளியிடபட்டும் இன்னும் பல கோட்டங்களில் Releive செய்யாமல் இருப்பதை சுட்டிக்காட்டி உடனடியாக அவர்களை releive செய்ய வேண்டும் என்று அழுத்தம் கொடுத்தோம் மற்ற மண்டலங்களிலிருந்தும் மேற்கு மண்டலத்திற்கு வந்தால் விரைவாக இவர்கள் விடுவிக்கப்படுவார்கள் என்று உறுதி அளித்தார்கள். நாம் CPMG அவர்களின் கவனத்திர்க்கு எடுத்து சென்று அனைத்து மண்டலங்களிலும் ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் விடுவிக்க வேன்டும் என்று .வலியுருத்துவோம் 

 பின்பு நடைபெற்ற இன்ஃபார்மல் கூட்டத்தில் தோழர்கள் மாநில உதவிச் செயலர் தோழர் சிவசுப்பிரமணியன் கோவை கோட்ட  முன்னாள் தலைவர் பாலன் அவர்களும் தர்மபுரி கோட்டச் செயலர் தோழர் பழனிமுத்து ஈரோடு கோட்ட செயலர் தோழர் கார்த்திகேயன் நீலகிரி கோட்டச் செயலர் தோழர் சேகர் கிருஷ்ணகிரி கோட்டச் செயலர் தோழர் செந்தில் தாராபுரம் கோட்டச் செயலர் தோழர் வெங்கடேஷ்  முன்னாள் மாநில உதவித் தலைவர் தோழர் காந்தி  முன்னாள் கோவை கோட்ட தலைவர் தோழர் பரமசிவம் மற்றும் முன்னணி தோழர்கள் பலர் கலந்து கொண்டனர். 

மாநில செயலராக தேர்ந்தெடுக்கபட்டு முதல் முறையாக சந்திப்பதால் மாநிலச் செயலர் தோழர் A.வீரமணி அனைத்து தோழர்களுடன் PMG மற்றும் DPS  அவர்களுக்கு சால்வை அணிவித்து சிறப்பித்தனர் இன்னும் பல பிரச்சனைகள் விவாதிக்கப்பட்டது விரிவாக அறிக்கை வெளியிடப்படும்.

A.வீரமணி
மாநில செயலர்
அஞ்சல் மூன்று.


மேற்கூறிய மூன்று இயக்கங்களில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் அனைவரின் பார்வைக்கும் இங்கு பதிவிடப்படுகின்றது.













தோழமையுடன்,
*ஈரோடு NFPE P3* 🚩

No comments:

Post a Comment