அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கங்கள்
ஈரோடு கோட்டம், ஈரோடு 638001.
நிலைமையை புரிந்து கொள்வோம்
யார் யாருக்கு “கொரோனா” நோய் வந்து இருக்கிறது என்பது
பற்றிய முழுமையான தகவல் இன்று யாருக்குமே தெரியாது. நோய் தொற்று இருப்பவர்கள் பல
இடங்களுக்கு (அஞ்சலகங்கள் உட்பட) சென்று வந்தால் அது யாருக்குப் பரவுகிறது
என்பதும் இன்றைய சூழ்நிலையில் யாருக்கும் தெரியாது. ஊழியர்களான நமக்கு பணிக்கு
செல்லும் காலங்களில் இந்த நோய் தொற்று பரவாமல் இருக்குமா என்பது பற்றியும்
யாருக்கும் தெரியாது.
ஒரு
பதினான்கு நாட்களாவது அனைவரும் SOCIAL DISTANCING maintain செய்து வீட்டிற்குள்ளேயே
இருந்தால் மட்டுமே (வீதியில் கூட இறங்காமல்), இந்த பதினான்கு நாட்களில் யார் யார்
பாதிக்கபடுகிறார்களோ, அவர்களை கண்டறிந்து, (நீங்கள் வெளியில் சென்று வீட்டிற்கு
திரும்பினால் மறுபடியும் 14 நாட்கள் என்ற chain தேவைப்படலாம்) அவர்களுக்கு தரமான
சிகிச்சை அளிப்பதும் , அவர்களோடு இருந்த மீதமுள்ள மிகச்சில குடும்ப உறுப்பினர்களை
மட்டும் தனிமைபடுத்துவது அரசாங்கத்திற்கு எளிதாக இருக்கும்.
இந்த
எண்ணிக்கை அதிகமானால் அரசாங்கம் சிகிச்சை அளிக்க மேலும் சிரமப்பட வேண்டி இருக்கும்
என்பதையும் நாம் உணர்த்து செயல்பட வேண்டும். குறைந்தபட்சம் ஒரு 14 நாட்களாவது நாம்
அனைவரும் நமது வீட்டுக்குள்ளேயே இருந்தால் மட்டுமே ,இந்த நோய் தொற்று அதிகம்
பேருக்கு பரவாமல் தடுக்க முடியும் என்பதே சீனா, இத்தாலி போன்ற பல நாடுகளில் இருந்து நமது இந்தியா கற்றுக்
கொண்ட படிப்பினையாகும்.
இந்த
காரணத்தினாலேயே இந்தியாவின் மற்றொரு பெரிய துறையான ரயில்வே துறையின்
செயற்பாடுகளும் முடக்கிவிடபட்டுள்ளன. மாண்புமிகு
பாரத பிரதமர் அவர்களின் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவுக்கான முக்கிய காரணமும்
இதுதான்.
உத்தரவினை மதிப்போம்..!
வீட்டிற்குள்ளேயே இருப்போம்..!
இவண்,
NFPE சங்கங்கள்,
ஈரோடு கோட்டம்
ஈரோடு638001.
26.03.2020.
பின்குறிப்பு :
1.புயல்,வெள்ளம், சுனாமி சூறாவளி போன்ற இயற்கை
பேரிடர் காலங்களில் நாம் பணிக்கு அழைக்கபடுவது வேறு,கண்ணுக்கு தெரியாத தொற்று நோய்
பரவல் என்ற இந்த சூழல் வேறு என்பதையே நமது மத்திய, மாநில சங்க செயலர்களும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள்.
2.இந்த இக்கட்டான சூழலிலும் மீட்பு பணிகளிலும்,
தொற்று பரவாத வகையிலும், மக்களின் நலனில் அக்கறையோடு பணியாற்றி வரும் அனைத்து துறை
ஊழியர்களுக்கும் நமது ஈரோடு கோட்ட சங்கத்தின் சார்பில் நன்றிகளை தெரிவித்துக்
கொள்வதோடு, இச்சேவையில் அவர்களுக்கு நம் பங்களிப்பாக அதிக நோயாளிகளை உருவாக்காமல்
இருப்போம் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
No comments:
Post a Comment