முதல் வெற்றி: 20.11.2016 ஞாயிறு பணிக்கு
வரவழைக்காதது.
இரண்டாவது வெற்றி: Honararium வழங்க Directorate உத்தரவு : 116/11/2016/SB
dated 18/21.11.2016
தோழர்களே ! தோழியர்களே !
எந்த விதத்திலும் எதிர்பாராத அதிரடி அறிவிப்பாக அரசு
உத்தரவு! இருந்தாலும் என்ன? மக்கள் நலன் கருதி முழு மூச்சாய் இப்பணியில் நமது
ஊழியர்கள் !! வேலைப்பளு என்றெல்லாம் ஒற்றை வார்த்தையில் இதைச் சொல்லிவிட முடியாது
!!! சுனாமியாய் எழுந்த வேலைப்பளுவை சாமர்த்திமாய் செய்து வருகிறோம்.
கடமையைச் செய்வோம்!! பலனை
கேட்டுப் பெறுவோம் !! என்ற உயர்ந்த சிந்தனையில் நமது ஊழியர்கள்.
ஈரோடு கோட்டத்தில் முன் மாதிரியாய் ஊழியர்கள். ஈரோடு,
பவானி, கோபி ஆகிய மூன்று HO-க்களில் Accounts/SOLC/SBCO ஊழியர்கள் மற்றும் ஈரோடு
கோட்ட அலுவலக ஊழியர்களும் (தங்களது
பணியும் பாதிக்காமல், BUS FARE மற்றும் FOOD BILL என என்ன தரப்போகிறார்கள் என்பதையும்
பெரிதாகக் கருதாமல் ஞாயிறு மற்றும் திங்கள் விடுமுறை நாட்களிலும்) அன்றாடம்
சுழற்சி முறையில் நேரம், காலம் கருதாமல் பணி புரிந்துள்ளனர். இந்தப் பணியோடு
கூடவே Statement மேல் மட்டங்களுக்கு அனுப்ப வேண்டிய வேலையையும் கோட்ட
அலுவலக ஊழியர் இரவு நீண்ட நேரம் வரை இருந்து செய்துள்ளனர். PA, Postmen, MTS, GDS
என்ற அணைத்து பிரிவு ஊழியர்களும் இணைந்து பணியாற்றி ஊழியர் ஒற்றுமையை நிலை
நிறுத்தியுள்ளனர். December 2016 கடைசி நாள் வரை இப்படிச் செய்ய வேண்டிய தேவையும் உள்ளது.
மூன்று HO –க்களிலும் நிலைமை மேற்கண்டவாறு சமாளிக்கப் பட்டதென்றால் - அனைத்து
SO- க்களிலும் நமது ஊழியர்கள் வேலைப் பளுவினை சமாளிக்க
முடியாமல் ஆழ்ந்த கஷ்டத்திற்கு உள்ளானார்கள் என்பதும் நிதர்சனம். SO- க்களில்
பணிபுரியும் Postmen, MTS, GDS தோழர்கள் ஆத்மார்த்தமாக இரவு நீண்ட நேரம் வரை பணி
புரிந்துள்ளனர்.
நமது JCA-வின்
மூலம் நாம் கொடுத்த 16.11.2016 தேதிய Memorandum மற்றும் தமிழக JCA அறை கூவலுக்கிணங்க நாம் இணைந்து
நடத்திய எழுச்சிமிகு ஆர்ப்பாட்டம் காரணமாய் கடந்த 20.11.2016 ஞாயிறு நாம் பணிக்கு அழைக்கப்படவில்லை என்பது மிகப் பெரிய
வெற்றியாகும்.
அடுத்த வெற்றியாக தற்போது Honararium வழங்கலாம்
எனவும் Directorate உத்தரவு 116/11/2016/SB dated 18/21.11.2016 வெளியாகியுள்ளது .இந்த
உத்தரவுப்படி விரைவில் Honararium வழங்க கோட்ட நிர்வாகம் முடிவெடுக்க வேண்டுமென
JCA சார்பில் கேட்டுக் கொள்கிறோம். நமது வேண்டுகோளுக்கிணங்க கடந்த 10.11.2016 முதல் இப்பணியில்
ஈடுபட்ட தோழர்களின் பட்டியில் கோட்ட நிர்வாகத்தால் கேட்கப்பட்டுனதை வரவேற்கிறோம்.
பணி செய்வதிலும் ஊழியர் ஒற்றுமை !
நியாயம் கேட்டுப் போராடுவதிலும் ஊழியர் ஒற்றுமை !!
தொடரட்டும் இந்த ஒற்றுமை !
கிடைக்கட்டும் நியாயமான Honararium!
இவண் ,
K.Swaminathan
J.Balamohanraj
JCA Conveners
No comments:
Post a Comment