மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனத்தின் மாபொது செயலாளர் தோழர் M.கிருஷ்ணன் அவர்களின் விளக்கம்.
1.4.2014 முதல் அனத்து மத்திய அரசு ஊழியர்களுக்கும் போனஸ் உச்சவரம்பு 3500 ல் இருந்து 7000 மாக 29.8.2016 ல் மத்திய அரசால் உத்திரவு வெளியிடப்பட்டது. அதற்கான நிலுவைத் தொகை 7000 ரூபாயும் இரண்டு ஆண்டுகளுக்கு வழங்கப்பட்டது.
ஆனால் அஞ்சல் வாரியம் இந்த உயர்த்தப்பட்ட போனஸ் உச்சவரம்பு உத்திரவை GDS ஊழியர்களுக்கு அமுல்படுத்த மறுத்து விட்டு, GDS ஊதியக்குழுவின் பரிந்துரைக்காக அனுப்பிவிட்டது.
இதற்கு முன் நடராஜமூர்த்தி கமிட்டி, GDS ஊழியர்களின் உற்பத்தி திறன் 50% மட்டுமே உள்ளதால் அவர்களுக்கு 3500 ல் பாதி 1750 மட்டும் போனஸாக வழங்கினால் போதும் என்று பரிந்துரை வழங்கியது. இதற்கு எதிராக அப்பொழுது NFPE மற்றும் AIPEU-GDS அமைப்புகள் FNPO மற்றும் NUGDS அமைப்புகளோடு இணைந்து வேலைநிறுத்தம் உள்ளிட்ட பல கட்ட போராட்டங்களை நடத்தியும் கூட, அப்போதைய துறை அமைச்சரோடு பலகட்ட பேச்சுவார்த்தை நடத்திய பின்பு, அமைச்சரின் சாதகமான பரிந்துரைகளையும் ஏற்றுக் கொள்ளாமல் GDS ஊழியர்களுக்கு 3500 போனஸை மூன்று முறை மறுத்து 2500 வழங்கியது. நீண்ட நெடிய போராட்டத்திற்கு பின்புதான் நிதியமைச்சகம் 3500 போனஸை ஏற்றுக்கொண்டு வழங்கியது.
இந்த முறை கமலேஷ் சந்திரா குழுவின் மாறுபட்ட நிலை:
இந்த முறை GDS குழுவின் தலைவர் கமலேஷ் சந்திரா உயர்த்தப்பட்ட 7000 ரூபாய் போனஸை GDS ஊழியர்களுக்கும் பரிந்துரை செய்தது.
"GDS ஊழியர்களால் நடத்தப்படும் அலுவலகங்களில் வருமானமும் செலவும் சமமாக உள்ளது. அஞ்சல் துறையின் மொத்த பற்றாக்குறை ரூபாய் 6000 கோடியாக உள்ளது. ஆனால் GDS ஊழியர்களால் பற்றாக்குறை என்பது 200 கோடி மட்டுமே. அஞ்சல் RMS அலுவலகங்கள், நிர்வாக அலுவலகங்களில் ஏற்படும் வருவாய் பற்றாக்குறையை பார்க்கும் பொழுது GDS ஊழியர்களின் வருவாய் பற்றாக்குறை என்பது மிகவும் குறைவானதே என்று எடுத்துக்காட்டிய பின், GDS போனஸ் கோப்பு அஞ்சல் வாரியத்தால் நிதியமைச்சகத்திற்க்கு அனுப்பப்பட்டது. விரிவான ஆய்விற்க்குப்பின் நிதியமைச்சகத்தின் ஒப்புதல் பெறப்பட்டு அஞ்சல்துறையால் 27.10.2016 அன்று GDS ஊழியர்களுக்கு 7000 போனஸ் உத்திரவு வெளியிடப்பட்டது.
NFPE மற்றும் AIPEU-GDS சங்கங்களின் பங்களிப்பு
NFPE சம்மேளனத்தின் மாபொதுச்செயலாளர் தோழர் RN.பராசர் மற்றும் AIPEU-GDS-NFPE பொதுச்செயலாளர் தோழர் R.பாண்டுரெங்கராவ் இணைந்து FNPO மற்றும் NUGDS அமைப்புகளை இணைத்துக் கொண்டு GDS ஊழியர்களுக்கு எதிராக போனஸ் பாரபட்சம் காட்டப்படுவதை கண்டித்தும், அனைத்து கேசுவல் மற்றும் பகுதிநேர, கண்டிஜன்ட் ஊழியர்களுக்கு 1.1.2016 முதல் உயர்த்தப்பட்ட ஊதியம் வழங்க கோரியும் பல இயக்கங்களுக்கு அறைகூவல் விட்டன. கோட்ட, மண்டல, மாநில அளவில் ஆர்ப்பாட்டங்களும் தர்ணா போராட்டங்களும் நடத்தப்பட்டது. நவம்பர் 3 2016 முதல் டெல்லி தலைமை அஞ்சலகம் முன் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டமும், நவம்பர் 9 மற்றும் 10 இரண்டு நாட்கள் வேலைநிறுத்த நோட்டீசும் அஞ்சல் துறை செயலரிடம் 20.10.16 அன்று வழங்கப்பட்டது. நாடு முழுவதும் நடத்தப்பட்ட வேலைநிறுத்த பிரச்சார இயக்கத்திற்கு ஊழியர்களிடம் உற்சாக வரவேற்பு கிடைத்தது.
இலாகா - GDS - ஊழியர் ஒற்றுமை .. உடைக்க முடியாத ஒற்றுமையை ஏற்படுத்திய தோழர் ஆதி ED ஊழியரை இலாக்கா ஊழியராக்கு என்ற ஒரே கோரிக்கை வைத்து 1984 செப்டம்பர் 19 அன்று ஒரு நாள் வேலைநிறுத்த போராட்டத்தை தோழர் ஆதிநாராயணா அவர்கள் வெற்றிகரமாக நடத்தினார்கள். 32 ஆண்டுகளுக்கு பின்பு மீண்டும் NFPE, AIPEU-GDS மற்றும் FNPO,NUGDS அமைப்புகள் இணைந்து GDS மற்றும் கேசுவல் ஊழியர்கள் கோரிக்கைகளுக்காக மட்டுமே நவம்பர் -9,10 -2016 ஆகிய தேதிகளில் இரண்டு நாட்கள் வேலைநிறுத்தம் என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவு எடுக்கப்பட்டது.
NFPE மற்றும் அஞ்சல் கூட்டுப் போராட்டக் குழு எப்பொழுதும் GDS மற்றும் கேசுவல் ஊழியர்களை விட்டுக் கொடுக்காது, அவர்களும் அஞ்சல் குடும்ப உறுப்பினர்கள் என்பதை இப்பொழுதும் நிரூபித்துள்ளோம். இந்த உறுதியான தொழிலாளிவர்க்க நிலைபாட்டை எவராலும் மறுக்கவோ, மறைக்கவோ, திரித்துக் கூறவோ முடியாது.
அங்கீகரிக்கப்பட்ட GDS சங்கத்தின் நிலை என்ன??
NFPE சங்கங்கள் ஒன்று அல்லது இரண்டு நாட்கள் வேலைநிறுத்தத்திற்கு அறைகூவல் கொடுப்பதை விமர்சனம் செய்யும் திரு மகாதேவைய்யா அவர்கள், காலவரையற்ற வேலைநிறுத்தத்தை மட்டுமே நம்புவதாக கூறும் அவர் இந்த முறை 25,26 - 10 -2016 இரண்டு நாட்கள் வேலைநிறுத்த நோட்டீஸ் வழங்கியது மட்டுமல்ல அதற்கான பிரச்சாரமும் செய்யாமல், போனஸ் உத்திரவு வராமலே திடீரென 24.10.2016 அன்றே வேலைநிறுத்தத்தை விலக்கி கொண்டது எதற்கு என்ற கேள்வியை GDS ஊழியர்கள் கேட்கிறார்கள். அங்கீகாரம் ரத்தாகிவிடும் என்கிற அமைச்சகத்தின் அச்சுறுத்தலுக்கு ஆட்பட்டு GDS ஊழியர்கள் கோரிக்கைகளை விலையாக கொடுத்து விட்டார். திரு மகாதேவைய்யா அவர்கள் GDS ஊழியர்களை சில காலம் ஏமாற்றலாம், எல்லா காலத்திலும் ஏமாற்ற முடியாது என்பதை ஊழியர்கள் உணர்ந்து கொண்டார்கள்.
NFPE, AIPEU-GDS மற்றும் PJCA நிலைபாடு:
திரு மகாதேவையாவுக்கு வந்த அதே மிரட்டல் NFPE/AIPEU-GDS மற்றும் PJCA வுக்கு வந்தாலும், GDS மற்றும் கேசுவல் ஊழியர் பிரச்சனைகள் தீர்க்கப்படாமல் நவம்பர் 9,10 இரண்டு நாட்கள் வேலைநிறுத்தம் நடந்தே தீரூம் என்ற உறுதியான நிலைபாட்டை PJCA எடுத்ததின் காரணமாகத்தான் 27.10.2016 அன்று GDS ஊழியர்களுக்கு, உயர்த்தப்பட்ட 7000 போனஸ் உத்திரவும், கேசுவல் ஊழியர்களுக்கு 1.1.2016 முதல் புதிய ஊதியம் வழங்கிடும் உத்திரவு இதற்கு முன்பே வந்தாலும், இந்த உத்திரவை அமுல்படுத்தாத அனைத்து மாநில CPMG களும் கறாராக அமுல்படுத்திட மீண்டும் கடிதம் அனுப்பிட இலாக்கா ஏற்றுக் கொண்டது.
GDS-ஊதியக்குழுவும் - NFPE/AIPEU-GDS பங்களிப்பும் :
NFPE மற்றும் AIPEU-GDS அமைப்பும் GDS ஊதியகுழுவிடம்விரிவான எழுத்துப்பூர்வமான அறிக்கையை கொடுத்துள்ளது. இந்த அமைப்பின் பிரதிநிதிகள் குழு GDS ஊதியகுழுத்தலைவர் திரு.கமலேஷ் சந்திரா அவர்களை மூன்றுமுறை நேரில் சந்தித்து நேரடி சாட்சியம் அளித்துள்ளது. அரசு ஊழியர் அந்தஸ்தும், இலாக்கா ஊழியருக்கு இணையான சலுகைகளும் உரிமைகளும் GDS ஊழியருக்கு தரப்பட வேண்டும் என்பதே நம் முக்கிய கோரிக்கை. GDS ஊதிய குழு நவம்பர் 2016 ல் பரிந்துரைகளை வழங்குவதாக கூறியுள்ளது. பரிந்துரைகள் GDS ஊழியருக்கு எதிராக இருக்குமானால் NFPE, AIPEU-GDS மற்றும் அஞ்சல் கூட்டு போராட்ட குழுவோடு இணைந்து வேலைநிறுத்தம் உள்ளிட்ட பலபோராட்டங்களை நடத்திடும்.
கடந்த பதினைந்து ஆண்டுகளாக GDS ஊழியர்களின் பிரச்சனைகளை தீர்க்க முடியாத திரு மகாதேவய்யா அவர்கள் GDS ஊழியர்களின் எதிரி இலாக்கா ஊழியர்கள் என்று சித்தரித்து அஞ்சல் ஊழியர்களின் ஒற்றுமையை சிதைத்து வருகிறார். இச்செயல் மற்ற பல மத்திய அரசு ஊழியர்கள் அமைப்போடு இணைந்த ஒன்றுபட்ட போராட்டத்திற்கு எதிரானது. குறிப்பாக GDS ஊழியர்களின் கோரிக்கைகளை வெல்வதற்கு எதிரானது.
இத்தகைய சூழலில் ஒவ்வொரு GDS ஊழியரும்
AIPEU-GDS-NFPE அமைப்பை பலப்படுத்தும் பணியில் ஈடுபட வேண்டும். ஒன்றுபட்ட போராட்டமே GDS ஊழியர்களின் நியாயமான பிரச்சனைகளை தீர்க்க முடியும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. இதனை கருத்தில் கொண்டு ஒவ்வொரு GDS ஊழியரும் நடைபெறவுள்ள உறுப்பினர் சரிபார்ப்பில் AIPEU-GDS-NFPE அமைப்புக்கு ஆதரவாக உறுதிமொழி படிவத்தில் கையெழுத்திட்டு உறுப்பினராக வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
மத்திய அரசு ஊழியர் மகாசம்மேளம் மற்றும் JCM (தேசிய குழு - ஊழியர் தரப்பு) பங்களிப்பும் பாராட்டகூடியது. 25.10.2016 அன்று JCM National council கூட்டத்தில் GDS பிரச்சனையை அரசுடன் விவாதித்து உடனடி தீர்வு காண வலிவுறுத்தப்பட்டது.
NFPE, AIPEU-GDS மற்றும் FNPO, NUGDS உள்ளடக்கிய அஞ்சல் போராட்ட குழுவின் போனஸ் போராட்டம் மாபெரும் வெற்றியே!!
GDS- இலாக்கா ஊழியர்களின் ஒற்றுமையை சீர்குலைக்கும் சக்திகளை தனிமைப்படுத்துவோம்....
இலாக்கா GDS ஊழியர்களின் - அமைப்புகளின் ஒற்றுமையை பலப்படுத்துவதின் மூலம் எதிர்காலத்தில் GDS ஊழியர்களின் கோரிக்கைகளை வென்றெடுக்க ஒன்றுபட்டு போர்முரசொலிப்போம்!! தடைகளை தகர்த்தெறிவோம்.
No comments:
Post a Comment