MENU BAR

Tuesday, 30 April 2019

தோழர். கர்ணல் அவர்களுக்கு பணிநிறைவு வாழ்த்துக்கள்

பணி நிறைவு பாராட்டு விழா


நமது அஞ்சல் துறையில் கடந்த 41 ஆண்டுகளாக கோட்ட அலுவலகம், தலைமை அஞ்சலகம் போன்று பல அலுவலகங்களில் சிறப்பான முறையில் பணியாற்றியும்,தற்சமயம் நமது ஈரோடு தலைமை அஞ்சலக APM ஆகவும் பணியாற்றி வரும் தோழர்.G. கர்ணல் அவர்கள் இன்று 30.04.2019 செவ்வாய்க்கிழமை அன்று  ஓய்வு பெறுகிறார்..


அலுவலக பணியிடையே நமது தொழிற்சங்க பணியினையும் தொய்வின்றி ஆற்றி வந்தார்..
தோழரது ஓய்வு காலம் சிறப்பானதாக அமைய நமது ஈரோடு கோட்ட NFPE P3 சங்கத்தின் சார்பாக வாழ்த்துகின்றோம்..
மேலும் 30.04.2019 அன்று மாலை ஈரோடு SIMNEY அரங்கில் நடைபெற்ற பணிநிறைவு பாராட்டு விழாவில் நமது கோட்ட சங்கம் சார்பில் அனைவரும் பங்கேற்று தோழர். கர்ணல்  அவர்களுக்கு பொன்னாடை  அணிவித்து கௌரவித்தோம்...விழாவில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு..

தோழர். கர்ணல் அவர்கள் குடும்பத் தினருடன்


நமது NFPE சங்கத்தின் சார்பில் தோழரை வாழ்த்தியபோது




தோழமையுடன்,
ஈரோடு கோட்ட NFPE P3.

Wednesday, 24 April 2019

📮 *IP EXAM 2019 PREPARATIONS*📮

📮 *IP EXAM 2019 PREPARATIONS*📮

Dear Sir/mam..
Hope everybody is aware about the upcoming LDCE exam (for the promotion of PA/SA to IP cadre) in the month of *June 2019..*

We the guys working in Erode division have planned to
1.Form a *SEPARATE WHAT'S UP GROUP* for sharing the materials, links, ideas, previous year question papers ,etc..

2. *CONDUCT A onetime - HALF DAY WORKSHOP  * on *IP exam & it's Preparation...* at *ERODE*  coming 27th  OR 28th April 2019.(Evening time)

Those who are  willing to guide/appear/clear the IP exam are welcome to join us..

pls do whatsapp
your name, designation &  division to below no. to become part of this team..

*9842398613*

Thanks.

🚩 *மெழுகுவர்த்தி ஏந்தும் ஆர்ப்பாட்டமும், இரங்கல் கூட்டமும்* 🚩



தோழமைகளே..
மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனத்தின் அறைகூவல்படி இன்று  *23.04.2019 செவ்வாய்க்கிழமை மாலை 6:15 மணியளவில் ஈரோடு தலைமை அஞ்சலகத்தில்*  கீழ்காணும் இயக்கங்கள் நடத்தப்பட்டன.

*கோரிக்கை :* NPS எனப்படும் புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்ய கோரி

*போராட்டம் :* மெழுகுவர்த்தி ஏந்தும் ஆர்ப்பாட்டம்

*பங்குபெற்றோர் எண்ணிக்கை :* 60க்கும் மேற்பட்டோர்

*பங்குபெற்ற சங்கங்கள் ;*
NFPE -அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கங்கள் (P3,P4,R3,R4 மற்றும் GDS) - ஈரோடு, பவானி மற்றும் கோபி கிளைகள்
*&*
அகில இந்திய அஞ்சல் RMS ஓய்வூதியர் சங்கம்,ஈரோடு
*&*
மத்திய அரசு ஊழியர் சங்க கூட்டமைப்பு, ஈரோடு.

*ஆர்ப்பாட்ட தலைமை :*
தோழர்.N.கார்த்திகேயன்,
கோட்ட செயலாளர்,
அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கம்-P3,
ஈரோடு.

*NPS பாதிப்புகள் பற்றிய விளக்கவுரை :*
தோழர். பழனிவேலு,
பொருளாளர், அகில இந்திய அஞ்சல் RMS ஓய்வூதியர் சங்கம்,ஈரோடு.

*தோழர்.NG  அவர்களின் தொழிற்சங்க வரலாறு பற்றிய பாராட்டுரை :*
தோழர். சத்ருக்கன்,
கோட்ட செயலாளர், அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கம்-GDS,ஈரோடு.

*ஆர்ப்பாட்ட/போராட்ட கோஷத்தை முன்னெடுத்தவர்  :*
தோழர்.K. சுவாமிநாதன்,
கோட்ட உதவி செயலாளர்,
அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கம்-P3,ஈரோடு.

*நன்றியுரை :*
M. தங்கராஜ்,
கிளை செயலாளர்,
அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கம்-GDS,
பவானி.


*ஆர்ப்பாட்ட கூட்டத்தின் முக்கிய நிகழ்வுகள்*
👇👇👇

🚩 மத்திய அரசிடம் *NPS திட்டத்தை ரத்து செய்ய கோரி ஒரு வலுவான கோஷங்களும், மெழுகுவர்த்தி ஏந்தும் ஆர்ப்பாட்டமும்* நடைபெற்றது.

🚩 மத்திய சங்கத்தின் முன்னாள் செயல் தலைவரும், தமிழ் மாநில சங்கத்தின் முன்னாள் உதவி செயலாளரும், ஈரோடு கோட்டத்தின் முன்னாள் செயலாளருமான  *தோழர். NG என்கிற N.கோபாலகிருஷ்ணன் அவர்களின் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கல்கள் தெரிவிக்கப்பட்டும், மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது*.

🚩 சமீபத்தில் *இலங்கையில் நடந்த குண்டு வெடிப்பில் இறந்த அப்பாவி போதுமக்களுக்காக கண்ணீர் அஞ்சலி செலுத்தப்பட்டது*..

( *குறிப்பு :* ஆர்ப்பாட்ட கூட்டத்தின் சில புகை படங்கள் அனைவரின் பார்வைக்கும் இங்கு பதியப்படுக்கின்றது..)



தோழமையுடன்,
அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கங்கள் - P3,P4 மற்றும் GDS,
ஈரோடு, பவானி மற்றும் கோபி.🚩



Monday, 22 April 2019

23.04.2019 மெழுகுவர்த்தி ஏந்தும் போராட்டம்.. NPS திட்டத்தை கைவிட கோரி

NPS திட்டத்தை ரத்து செய்


புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்யக் கோரி ,
மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனத்தின் அறைக்கூவல்படி
23.03.2019 செவ்வாய்க்கிழமை அன்று
மாலை 6 மணியளவில்
நமது ஈரோடு தலைமை அஞ்சலகத்தில் மத்திய அரசு ஊழியர் ஒருக்கிணைப்புக் குழு மற்றும் வருமான வரி சமேளனத்துடன் இணைந்து
மெழுகுவர்த்தி ஏந்தும் போராட்டம் நடைபெற இருக்கிறது..
தோழமைகள் திரளாக இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று NPS க்கு எதிரான இந்த போராட்டத்தை வலுப்படுத்தும்படி கேட்டுக் கொள்கிறோம்.

தோழமையுடன்,
P3,P4 மற்றும் GDS சங்கங்கள்,
ஈரோடு கோட்ட NFPE.

தோழர். NG அவர்களுக்கு கண்ணீர் அஞ்சலி

😭கண்ணீர் அஞ்சலி😭
 நமது மத்திய சங்கத்தின் முன்னாள் செயல் தலைவர் (Chq-Working President )மற்றும் நமது ஈரோடு கோட்ட சங்கத்தின் முன்னாள்/முன்னோடி சங்க நிர்வாகியுமான

தோழர். NG என்கிற 
N. கோபாலகிருஷ்ணன் அவர்கள் இன்று  22.04.2019 காலை இறைவனடி சேர்ந்தார் என்பதை மிகவும் வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்..
தோழர். NG அவர்கள் நமது ஈரோடு கோட்டத்தின் முன்னாள் செயலாளராக சிறப்பான முறையில் சங்க பணியாற்றி இருந்தார்..
மேலும் P3,P4 மற்றும் GDS சங்கங்கள் ,மாநில மற்றும் மத்திய சங்கங்களில் இடைவிடாத தொழிற்சங்க பணிகளை செய்து வந்தவர்..
அனைத்து தொழிற்சங்க இயங்கங்களையும் திறம்பட நிகழ்த்த தக்க உறுதுணையாக இருந்தவர்..
அவரது இழப்பு அவரது குடும்பத்தினருக்கு மட்டுமல்ல.. 
நமது NFPE சங்கத்திற்க்கும் மாபெரும் இழப்பாகும்..

தோழரது குடும்பத்தினருக்கு நமது கோட்ட சங்கத்தின் சார்பாக ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறோம்..

வருத்தத்துடன், 
P3,P4 மற்றும் GDS சங்கங்கள்,
ஈரோடு கோட்ட NFPE.

Tuesday, 16 April 2019

17.04.2019 அன்று தபால் பட்டுவாடா


தோழமைகளே..
நாளை 17.04.2019 முதல் 19.04.2019 தொடர்ந்து மத்திய அரசு விடுமுறை இருக்கின்ற காரணத்தினால் , நமது இலாக்காவின் ஆணைப்படி 
நாளை 17.04.2019 ஒரு நாள் மட்டும் தபால் பட்டுவாடா செய்ய வேண்டியுள்ளது என்பதை நாம் அனைவரும் அறிவோம்..
இந்த ஆணையானது HO மற்றும் SO(delivery Office) ஆகிய அலுவலகங்களுக்கு மட்டுமே பொருந்தும்..

இருப்பினும் நமது கோட்டத்தில் கடந்த வாரம் அனுப்பப்பட்ட கடிதத்தில் BO அலுவலகங்களையும் 17.04.2019 அன்று தபால்  பட்டுவாடவிற்கு வர சொல்லி இருப்பதாக நமது பவானி கிளை GDS செயலர் தோழர். சதாசிவம் அவர்கள் ,நமது ஈரோடு கோட்ட P3 செயலரிடம் நேற்று தொலைபேசியில் அழைத்து முறையிட்டு இருந்தார்..

மேலும் இது தொடர்பாக நமது கோட்ட செயலர் தோழர்.கார்த்திகேயன் அவர்கள் உடனடியாக ASPOs(Hq) அவர்களை தொடர்பு கொண்டு பேசினார்..
ASPO s(hq) அவர்களும் நமது கோரிக்கையை ஏற்று, *17.04.2019 அன்று BO வில் தபால் பட்டுவாடா செய்ய வேண்டியது இல்லை* என்றும் உறுதி அளித்துள்ளார்..
இதனை நேற்று நமது கோட்ட அலுவகத்தில் இருந்து Email மூலம் சம்பந்தப்பட்ட delivery SO (BO உள்ள) க்களுக்கு தெரிவித்து விடுவதாகவும் கூறினார்..
இந்த பிரச்சனையை நமது கோட்ட சங்கத்தின் பார்வைக்கு கொண்டு வந்த நமது பெருந்துறை தோழர். சதாசிவம். அவர்களுக்கும், நமது கோரிக்கையை ஏற்ற ASPOs(Hq) அவர்களுக்கும் நமது கோட்ட சங்கத்தின் சார்பாக நன்றிகள்..

மேலும் 17.04.2019 அன்று நமது கோட்டத்தில் உள்ள HO மற்றும் delivery  SO வில் பணிபுரிபவர்கள், நாளை காலை அலுவலகம் வந்து தபால் பட்டுவாடா வேலையை(invoicing/delivery/returns) மட்டும் முடித்துவிட்டு அலுவகத்தில் இருந்து கிளம்பலாம் என்றும் தெரிவிக்கப்படுகின்றது. 


📮 17.04.2019 அன்று நமது கோட்டத்தில் உள்ள *HO  மற்றும் delivery SO* வில் பணிபுரிபவர்கள் (delivery related staffs) மட்டும் தத்தம் அலுவலகம் செல்ல வேண்டும்

📮 *பட்டுவாடாவிற்கு unaccountable mails (சாதா தபால் ) மற்றும் Speed post(விரைவு அஞ்சல்) மட்டும்* HO/SO தபால்காரரிடம் கொடுத்து விடவும்

📮பட்டுவாடா முடிந்த பிறகு தபால்காரர் வந்தவுடன்   Speed post returns ஐ DPMSல் update செய்து விட்டு வீட்டுக்கு கிளம்பலாம்.

📮 *பண சம்பந்தபட்ட தபால்   இனங்களை(unpaid, COD, etc..) நாளை deal செய்ய வேண்டாம்*

📮 17.04.2019 *விடுமுறையன்று பணிக்கு வருபவர்களின் விவரங்களை தொகுத்து வைக்கவும்*. CO வில் இருந்து incentive பற்றிய  *ஆணை வந்தபிறகு தகுதியானவர்களுக்கு payment செய்ய வழிவகை செய்யப்படும்*.

தோழமையுடன்,
ஈரோடு கோட்ட NFPE P3🚩

Monday, 15 April 2019

அஞ்சல் துறையில் பல்லாயிரக்கணக்கான GDS வேலை வாய்ப்பு..

10ஆவது வகுப்பில் (SSLC) நல்ல மார்க் எடுத்துள்ளீர்களா..
உங்கள் சொந்த ஊரிலோ மாவட்டத்திலோ மத்திய அரசின் வேலை உங்களுக்கு காத்திருக்கின்றது..
எழுத்துத் தேர்வு எதுவும் கிடையாது..
நீங்கள் எடுத்த SSLC மதிப்பெண்களின் MERIT அடிப்படையில் உங்களுக்கு வேலை கிடைக்க நிறைய வாய்ப்புள்ளது.  
தமிழகம் முழுதும் கிட்டத்தட்ட 4442 கிராம அஞ்சல் ஊழியர் (BPM கிளை அஞ்சல் அதிகாரி, MDதபால் பட்டுவாடா செய்பவர்,MC தபால் பை எடுத்து வருபவர், PKR தபால் பை கட்டுபவர் உள்ளிட்ட ) காலி பணியிடங்களை நிரப்ப இருக்கிறது இந்திய அஞ்சல் துறை..
எடுத்துக்காட்டாக ஈரோடு அஞ்சல் கோட்டத்தில் மட்டுமே 100 GDS காலி பணியிடங்கள் உள்ளன...

பகுதி நேர (நாளொன்றுக்கு அதிகபட்சமாக 5 மணி நேரம்) பணியான இவற்றிற்கு குறைந்தபட்ச ஊதியமாக மாதம் 10,000 எதிர்பார்க்கலாம்..
இந்த வேலைவாய்ப்பு பெருவதற்கான பதிவானது முழுவதும் ONLINE method  மட்டுமே..
பதிவு மற்றும் கட்டணம் செலுத்த இறுதி தேதி 18.04.2019 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது..








பதிவு செய்யும்பொழுது ஒவ்வொருவருக்கும் மேற்குறிப்பிட்ட 4442 பணியிடங்களில் 20 பணியிடங்களுக்கு POST PREFERENCE கொடுக்கலாம்...
(Server சரிவர கிடைக்காத சமயத்தில் முதல் முறை 5 பதவிகளுக்கும், அடுத்தடுத்த முறை login செய்து  ஐந்தைந்து பதவிகளுக்கும் preference கொடுக்கலாம்)
இது பகுதி நேர வேலை என்பதால் ,மேற்படி வருமானத்திற்கு அஞ்சல் துறையின் சேவைகள் பாதிக்காவண்ணம் மற்ற தொழிலோ, பணியோ செய்து கொள்ள அஞ்சல் துறை அனுமதிக்கிறது..

மேலும் GDS ஆக குறைந்தபட்சம் 6 மாத கால பணி செய்து இருந்தால்,துறை சார்ந்த எழுதுத்தேர்வு எழுதி  ரூபாய் 18000 மாத வருவாய் வரக்கூடிய MTS பதவி உயர்வு பெறலாம்..
GDS ஆக 5 வருட பணி அனுபவம் கிடைத்த பிறகு மாதம் 25000 ஊதியம் அளிக்கக்கூடிய தபால்காரர் POSTMAN வேலைக்கோ , மாதம் 30,000 ஊதியம் வரக்கூடிய அஞ்சல் எழுத்தர் POSTAL ASSISTANT பணிக்கோ துறையளவில் நடக்கக்கூடிய எழுதுத்தேர்வுகளை எதிர்கொண்டு பதவி உயர்வு பெறவும், வருமானத்தை அதிகப்படுத்தவும் ஒரு சிறப்பான வாய்ப்பு காத்துக்கொண்டு இருக்கின்றது...

அஞ்சல் எழுத்தர் வேலை நேரடியாக கிடைக்க வேண்டுமெனில் அகில இந்திய அளவில் SSC  போட்டி தேர்வுகளை எதிர்கொள்ள வேண்டுமென்பது அனைவரும் அறிந்ததே..

ஆனால் 5 வருட அனுபவமுள்ள GDS ,அஞ்சல் எழுத்தர் ஆவதற்க்குSSC அளவுக்கு கடுமையான தேர்வுகள் இருக்காது..
ஆதலாம் எளிதில் POSTAL ASSISTANT ஆகிவிடலாம்..

விண்ணப்பங்களை சமர்ப்பிக்க இறுதி நாளாக 21.04.2019 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது..

வயது வரம்பு உள்ளிட்ட மேலதிக விவரங்களுக்கு கீழ் உள்ள Linkஐ click செய்யவும்..

http://www.appost.in/gdsonline/Home.aspx



கடந்த ஐந்து வருடங்களாக நிரப்பப்படாமல் இருந்ததால் தமிழகத்தில் மட்டுமே கிட்டத்தட்ட 4500 காலி பணியிடங்கள் சேர்ந்து உள்ளது..
மேலும் காலி பணிடங்களை உடனே நிரப்பக் கோரி அஞ்சல் துறையின் ஊழியர் சங்கமான NFPE போன்ற சங்கங்கள் வேலைநிறுத்த உள்ளிட்ட போராட்டங்களின் பலனாக மத்திய அரசும் அஞ்சல் துறையும் இப்பொழுது இந்த பணி யிடங்களை நிரப்ப முடிவு எடுத்து செயற்படுத்தி வருகின்றது..
எனவே இந்த பொன்னான வாய்ப்பை அனைத்து இளைஞர்களும் பயன்படுத்திக் கொள்ளவும்..

வேலையில்லா திண்டாட்டத்திற்கு இது போன்ற ஒரு சிறு சிறு தீர்வு கிடைக்க பெறுவதில்  தொழிற்சங்ககளின் பங்கு மிக அதிகம் என்பதில் பெருமை கொள்கிறோம்..

Note : குறுக்கு வழியில் வேலை வாங்கிதருவதாக யாரவது கூறினால் அதனை நம்ப வேண்டாம்.. மேலும் அப்படிப்பட்ட புகார்கள் இருப்பின் அஞ்சல் துறையின் மிகப்பெரிய ஊழியர் சங்கமான NFPEயின் அந்தந்த பகுதி  நிர்வாகிகளிடம் உடனடியாக தெரிவிக்கவும்.

வாருங்கள் அஞ்சல் துறைக்கு..
வரவேற்கின்றோம்..
வாழ்த்துகின்றோம்..

தோழமையுடன்,
NFPE P3,P4 மற்றும் GDS சங்கங்கள்,
ஈரோடு அஞ்சல் கோட்டம்.

Saturday, 6 April 2019

Monthly meeting minutes - March 2019.

தோழமைகளே..
கடந்த 28.03.2019 வியாழக்கிழமை அன்று நமது ஈரோடு கோட்ட நிர்வாகத்துடனான மாதாந்திர சந்திப்பு நடைபெற்றது..பல்வேறு பொருள்கள் குறித்து அன்று விவாதிக்கப்பட்டது.. அன்றைய சந்திப்பின் Minutes இங்கே  நாம் அனைவரின் பார்வைக்கும் பகிர்கின்றோம்.. நிர்வாகம் கொடுத்த பதிலில் ஏதேனும் குறைபாடுகள் இருப்பின்,உடனடியாக நமது சங்கத்தை தொடர்பு கொண்டு தெரிவிக்கும் படி கேட்டுக் கொள்கிறோம்.

தோழமையுடன்,
ஈரோடு கோட்ட NFPE P3.