MENU BAR

Monday 15 April 2019

அஞ்சல் துறையில் பல்லாயிரக்கணக்கான GDS வேலை வாய்ப்பு..

10ஆவது வகுப்பில் (SSLC) நல்ல மார்க் எடுத்துள்ளீர்களா..
உங்கள் சொந்த ஊரிலோ மாவட்டத்திலோ மத்திய அரசின் வேலை உங்களுக்கு காத்திருக்கின்றது..
எழுத்துத் தேர்வு எதுவும் கிடையாது..
நீங்கள் எடுத்த SSLC மதிப்பெண்களின் MERIT அடிப்படையில் உங்களுக்கு வேலை கிடைக்க நிறைய வாய்ப்புள்ளது.  
தமிழகம் முழுதும் கிட்டத்தட்ட 4442 கிராம அஞ்சல் ஊழியர் (BPM கிளை அஞ்சல் அதிகாரி, MDதபால் பட்டுவாடா செய்பவர்,MC தபால் பை எடுத்து வருபவர், PKR தபால் பை கட்டுபவர் உள்ளிட்ட ) காலி பணியிடங்களை நிரப்ப இருக்கிறது இந்திய அஞ்சல் துறை..
எடுத்துக்காட்டாக ஈரோடு அஞ்சல் கோட்டத்தில் மட்டுமே 100 GDS காலி பணியிடங்கள் உள்ளன...

பகுதி நேர (நாளொன்றுக்கு அதிகபட்சமாக 5 மணி நேரம்) பணியான இவற்றிற்கு குறைந்தபட்ச ஊதியமாக மாதம் 10,000 எதிர்பார்க்கலாம்..
இந்த வேலைவாய்ப்பு பெருவதற்கான பதிவானது முழுவதும் ONLINE method  மட்டுமே..
பதிவு மற்றும் கட்டணம் செலுத்த இறுதி தேதி 18.04.2019 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது..








பதிவு செய்யும்பொழுது ஒவ்வொருவருக்கும் மேற்குறிப்பிட்ட 4442 பணியிடங்களில் 20 பணியிடங்களுக்கு POST PREFERENCE கொடுக்கலாம்...
(Server சரிவர கிடைக்காத சமயத்தில் முதல் முறை 5 பதவிகளுக்கும், அடுத்தடுத்த முறை login செய்து  ஐந்தைந்து பதவிகளுக்கும் preference கொடுக்கலாம்)
இது பகுதி நேர வேலை என்பதால் ,மேற்படி வருமானத்திற்கு அஞ்சல் துறையின் சேவைகள் பாதிக்காவண்ணம் மற்ற தொழிலோ, பணியோ செய்து கொள்ள அஞ்சல் துறை அனுமதிக்கிறது..

மேலும் GDS ஆக குறைந்தபட்சம் 6 மாத கால பணி செய்து இருந்தால்,துறை சார்ந்த எழுதுத்தேர்வு எழுதி  ரூபாய் 18000 மாத வருவாய் வரக்கூடிய MTS பதவி உயர்வு பெறலாம்..
GDS ஆக 5 வருட பணி அனுபவம் கிடைத்த பிறகு மாதம் 25000 ஊதியம் அளிக்கக்கூடிய தபால்காரர் POSTMAN வேலைக்கோ , மாதம் 30,000 ஊதியம் வரக்கூடிய அஞ்சல் எழுத்தர் POSTAL ASSISTANT பணிக்கோ துறையளவில் நடக்கக்கூடிய எழுதுத்தேர்வுகளை எதிர்கொண்டு பதவி உயர்வு பெறவும், வருமானத்தை அதிகப்படுத்தவும் ஒரு சிறப்பான வாய்ப்பு காத்துக்கொண்டு இருக்கின்றது...

அஞ்சல் எழுத்தர் வேலை நேரடியாக கிடைக்க வேண்டுமெனில் அகில இந்திய அளவில் SSC  போட்டி தேர்வுகளை எதிர்கொள்ள வேண்டுமென்பது அனைவரும் அறிந்ததே..

ஆனால் 5 வருட அனுபவமுள்ள GDS ,அஞ்சல் எழுத்தர் ஆவதற்க்குSSC அளவுக்கு கடுமையான தேர்வுகள் இருக்காது..
ஆதலாம் எளிதில் POSTAL ASSISTANT ஆகிவிடலாம்..

விண்ணப்பங்களை சமர்ப்பிக்க இறுதி நாளாக 21.04.2019 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது..

வயது வரம்பு உள்ளிட்ட மேலதிக விவரங்களுக்கு கீழ் உள்ள Linkஐ click செய்யவும்..

http://www.appost.in/gdsonline/Home.aspx



கடந்த ஐந்து வருடங்களாக நிரப்பப்படாமல் இருந்ததால் தமிழகத்தில் மட்டுமே கிட்டத்தட்ட 4500 காலி பணியிடங்கள் சேர்ந்து உள்ளது..
மேலும் காலி பணிடங்களை உடனே நிரப்பக் கோரி அஞ்சல் துறையின் ஊழியர் சங்கமான NFPE போன்ற சங்கங்கள் வேலைநிறுத்த உள்ளிட்ட போராட்டங்களின் பலனாக மத்திய அரசும் அஞ்சல் துறையும் இப்பொழுது இந்த பணி யிடங்களை நிரப்ப முடிவு எடுத்து செயற்படுத்தி வருகின்றது..
எனவே இந்த பொன்னான வாய்ப்பை அனைத்து இளைஞர்களும் பயன்படுத்திக் கொள்ளவும்..

வேலையில்லா திண்டாட்டத்திற்கு இது போன்ற ஒரு சிறு சிறு தீர்வு கிடைக்க பெறுவதில்  தொழிற்சங்ககளின் பங்கு மிக அதிகம் என்பதில் பெருமை கொள்கிறோம்..

Note : குறுக்கு வழியில் வேலை வாங்கிதருவதாக யாரவது கூறினால் அதனை நம்ப வேண்டாம்.. மேலும் அப்படிப்பட்ட புகார்கள் இருப்பின் அஞ்சல் துறையின் மிகப்பெரிய ஊழியர் சங்கமான NFPEயின் அந்தந்த பகுதி  நிர்வாகிகளிடம் உடனடியாக தெரிவிக்கவும்.

வாருங்கள் அஞ்சல் துறைக்கு..
வரவேற்கின்றோம்..
வாழ்த்துகின்றோம்..

தோழமையுடன்,
NFPE P3,P4 மற்றும் GDS சங்கங்கள்,
ஈரோடு அஞ்சல் கோட்டம்.

No comments:

Post a Comment