தோழமைகளே..
நாளை 17.04.2019 முதல் 19.04.2019 தொடர்ந்து மத்திய அரசு விடுமுறை இருக்கின்ற காரணத்தினால் , நமது இலாக்காவின் ஆணைப்படி
நாளை 17.04.2019 ஒரு நாள் மட்டும் தபால் பட்டுவாடா செய்ய வேண்டியுள்ளது என்பதை நாம் அனைவரும் அறிவோம்..
இந்த ஆணையானது HO மற்றும் SO(delivery Office) ஆகிய அலுவலகங்களுக்கு மட்டுமே பொருந்தும்..
இருப்பினும் நமது கோட்டத்தில் கடந்த வாரம் அனுப்பப்பட்ட கடிதத்தில் BO அலுவலகங்களையும் 17.04.2019 அன்று தபால் பட்டுவாடவிற்கு வர சொல்லி இருப்பதாக நமது பவானி கிளை GDS செயலர் தோழர். சதாசிவம் அவர்கள் ,நமது ஈரோடு கோட்ட P3 செயலரிடம் நேற்று தொலைபேசியில் அழைத்து முறையிட்டு இருந்தார்..
மேலும் இது தொடர்பாக நமது கோட்ட செயலர் தோழர்.கார்த்திகேயன் அவர்கள் உடனடியாக ASPOs(Hq) அவர்களை தொடர்பு கொண்டு பேசினார்..
ASPO s(hq) அவர்களும் நமது கோரிக்கையை ஏற்று, *17.04.2019 அன்று BO வில் தபால் பட்டுவாடா செய்ய வேண்டியது இல்லை* என்றும் உறுதி அளித்துள்ளார்..
இதனை நேற்று நமது கோட்ட அலுவகத்தில் இருந்து Email மூலம் சம்பந்தப்பட்ட delivery SO (BO உள்ள) க்களுக்கு தெரிவித்து விடுவதாகவும் கூறினார்..
இந்த பிரச்சனையை நமது கோட்ட சங்கத்தின் பார்வைக்கு கொண்டு வந்த நமது பெருந்துறை தோழர். சதாசிவம். அவர்களுக்கும், நமது கோரிக்கையை ஏற்ற ASPOs(Hq) அவர்களுக்கும் நமது கோட்ட சங்கத்தின் சார்பாக நன்றிகள்..
மேலும் 17.04.2019 அன்று நமது கோட்டத்தில் உள்ள HO மற்றும் delivery SO வில் பணிபுரிபவர்கள், நாளை காலை அலுவலகம் வந்து தபால் பட்டுவாடா வேலையை(invoicing/delivery/returns) மட்டும் முடித்துவிட்டு அலுவகத்தில் இருந்து கிளம்பலாம் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
📮 17.04.2019 அன்று நமது கோட்டத்தில் உள்ள *HO மற்றும் delivery SO* வில் பணிபுரிபவர்கள் (delivery related staffs) மட்டும் தத்தம் அலுவலகம் செல்ல வேண்டும்
📮 *பட்டுவாடாவிற்கு unaccountable mails (சாதா தபால் ) மற்றும் Speed post(விரைவு அஞ்சல்) மட்டும்* HO/SO தபால்காரரிடம் கொடுத்து விடவும்
📮பட்டுவாடா முடிந்த பிறகு தபால்காரர் வந்தவுடன் Speed post returns ஐ DPMSல் update செய்து விட்டு வீட்டுக்கு கிளம்பலாம்.
📮 *பண சம்பந்தபட்ட தபால் இனங்களை(unpaid, COD, etc..) நாளை deal செய்ய வேண்டாம்*
📮 17.04.2019 *விடுமுறையன்று பணிக்கு வருபவர்களின் விவரங்களை தொகுத்து வைக்கவும்*. CO வில் இருந்து incentive பற்றிய *ஆணை வந்தபிறகு தகுதியானவர்களுக்கு payment செய்ய வழிவகை செய்யப்படும்*.
தோழமையுடன்,
ஈரோடு கோட்ட NFPE P3🚩
No comments:
Post a Comment