தோழியர்களே ! தோழர்களே !
நமது கோட்டச் சங்கத்தின் 44வது மாநாடு கடந்த 18.08.2019 ஞாயிறு அன்று ஈரோடு தலைமை அஞ்சலகத்தில் வெற்றிகரமாக நடந்து முடிந்தது.
நமது தமிழ் மாநில NFPE-P3 தலைவர் தோழர் M.செல்வகிருஷ்ணன் அவர்கள் தேசியக்கொடி ஏற்ற, ஈரோடு கோட்ட NFPE P4 சங்கத்தின் தலைவர் தோழர் K தனசேகரன் அவர்கள் சம்மேளனக் கொடியேற்ற , ஈரோடு கோட்ட சங்க தோழர் AV சிவசுப்பிரமணியன் அவர்கள் சங்க கொடியேற்ற , அனைத்து தோழமைகளும் தோழர் NG நினைவு மாநாட்டு அரங்கினுள் பலத்த கோஷங்கள் முழங்க வருகை புரிந்தனர்.
கோட்டத் தலைவர் தோழர் S.செல்லமுத்து அவர்கள் கோட்ட மாநாட்டை தலைமை ஏற்று நடத்த, தோழியர் .T.ஆர்த்தி அவர்கள் சிறப்பானதொரு வரவேற்புரை அளித்தார். அடுத்ததாக நமது மாநில தலைவர் தோழர் M.செல்வகிருஷ்ணன் அவர்கள் விரிவானதும் ஆக்கப்பூர்வமானதுமான ஒரு துவக்கவுரை அளித்து சிறப்பித்தார்.
கோட்டச் செயலர் தோழர் N கார்த்திகேயன் அவர்கள் சமர்ப்பித்த ஈராண்டறிக்கையும், கோட்ட நிதிச் செயலர் (பொறுப்பு ) தோழர் D.சக்திவேல் அவர்கள் சமர்ப்பித்த 2017-18 மற்றும் 2018-19 நிதியாண்டுகளுக்கு உண்டான வரவு செலவு அறிக்கையும் , அவையினரால் ஏகமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்ட பின்னர் நடந்த நிர்வாகத் தேர்வில் கீழ்க்கண்ட தோழமைகள் வரும் ஈராண்டுகளுக்கான நிர்வாகிகளாக எந்தவித போட்டியுமின்றி ஏகமனதாக தேர்ந்தேடுக்கப்பட்டனர்.
கோட்டத்தலைவர்:
தோழர்.V.அருண்குமார் PM GR-I, ஈரோடு ரயில்வே காலனி SO
தோழர்.V.அருண்குமார் PM GR-I, ஈரோடு ரயில்வே காலனி SO
கோட்டத் துணை தலைவர்கள் :
தோழர்.M.ரவிசங்கர் LSG SPM அரச்சலூர் SO
தோழர்.N.ஆனந்தகுமார் , PA , கருங்கல்பாளையம் SO
தோழர். R.பிரித்விராஜ்,OA,O/o SSPOs ஈரோடு
தோழியர்.M.சுபபிரியா , PA, ஈரோடு HO
கோட்டச் செயலர்:
தோழர்.S.செல்லமுத்து,SPM, ஈரோடு EAST SO
கோட்ட உதவி செயலர்கள் :
தோழர்.K.சுவாமிநாதன், SPM, ஈரோடு NORTH SO
தோழர்.P.விஜயகுமார்,PA, ஈரோடு COLLECTORATE SO
தோழர்.S.மணிகண்டன்,SA, ஈரோடு HO
தோழியர்.S.ஸ்ரீகௌரி, PA, ஈரோடு HO
கோட்ட நிதிச் செயலர்:
தோழர்.S.கணபதி,SA, ஈரோடு HO
கோட்ட உதவி நிதிச் செயலர்:
தோழர்.D.சக்திவேல் ,LSG SPM, காவிரிRS SO
அமைப்புச் செயலர்கள் :
தோழர்.S.வெள்ளியங்கிரி, ME, ஈரோடு HO
தோழர்.R.மகேந்திரன், OA,O/o SSPOs ஈரோடு
தோழர்.N.கார்த்திகேயன்,INSTRUCTOR, WTC, கருங்கல் பாளையம்
தணிக்கையாளர்:
தணிக்கையாளர்:
தோழியர் . N.பிரேமா, PA ஈரோடு HO
அகில இந்திய மாநாட்டு சார்பாளர்கள்
:
தோழர்.S. செல்லமுத்து, SPM, ஈரோடு East SO
தோழர். M. சிங்காரவேலு, PA, ஈரோடு HO(Deptn.@Passport Seva Kendra)
மாநில மாநாட்டு சார்பாளர்கள்:
:
தோழர்.S. செல்லமுத்து, SPM, ஈரோடு East SO
தோழர். M. சிங்காரவேலு, PA, ஈரோடு HO(Deptn.@Passport Seva Kendra)
மாநில மாநாட்டு சார்பாளர்கள்:
தோழர்.S. செல்லமுத்து, SPM, ஈரோடு East SO
தோழர். M. ரவிசங்கர், SPM, அரச்சலூர் SO
மேலும் கீழ்க்கண்ட தோழமைகள் ஈரோடு கோட்டச் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
1.
S.மகேஷ்வர், PA, சென்னிமலை
SO
2.
L.ஹரிபிரசாத்,
PA, வடமுகம் வெள்ளோடு SO
3.
G.இளங்கோ,
PA, அவல் பூந்துறை SO
4.
D.கௌதமி
, PA, அரச்சலூர் SO
5.
B.ராம்சங்கர்,
PA, சிவகிரி SO
6.
G.சதீஷ்குமார்,
PA, சிவகிரி SO
7.
G.கண்ணன்,
SPM, மொடக்குறிச்சி SO
8.
T.சந்திரசேகரன்,
SPM, கொடுமுடி SO
9.
S.மணி,
PA, கொடுமுடி SO
10. S.முத்துக்குமார், SPM,
ஊஞ்சலூர் SO
11. V.மணிராஜ், SPM, கணபதிபாளையம்
SO
12. A.சபிரா பானு,PA, ஈரோடு ரயில்வே
காலனி SO
13. A.C. மணிமேகலை, PA, சூரம்பட்டி
SO
14. P.மாதேஸ்வரி, SPM,
இடையன்காட்டுவலசு SO
15. N.வித்யா, SPM, திண்டல் SO
16. T.ஆர்த்தி , PA,
வீரப்பன்சத்திரம் SO
17. S.முஹமது நாசர் அலி, PA, பெரிய
அக்ரஹாரம் SO
18. M.ராமகிருஷ்ணன், SPM,
கருங்கல்பாளையம் SO
19. S.திலகவதி, PA, SPB காலனி SO
20. D.அசோகன், PA, ஈரோடு HO
21. T.V.ராகவன் , APM, ஈரோடு HO
22. P.தமிழ்செல்வி, SPM.
ஈரோடு MARKET SO
23. P.பரமேஸ்வரன் PA
பள்ளிபாளையம் SO
24. K.உமாராணி PA ஈரோடு HO
25. R.செந்தில்குமார், PA, ஈரோடு HO
26. S.சேகர், OA ,O/o, SSPOs, ஈரோடு
27. V.இலக்கியா ,SPOC, O/o SSPOs,
ஈரோடு.
அனைத்து தோழமைகளுக்கும் நமது கோட்டச் சங்கத்தின் சார்பில் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
பின்னர் நடந்த பொது அரங்கு கூட்டத்தில் மாநில செயலர் தோழர் A.வீரமணி அவர்கள் சிறப்புரை ஆற்றினார். அவரது உரைக்கு பிறகு, மதிய உணவு இடைவெளி விடப்பட்டது. மீண்டும் கூடிய அரங்கில் தோழமைகள் A.ராஜேந்திரன், N.சிவசண்முகம், N.சதாசிவம்,மத்திய சென்னை கோட்டச் செயலர் தோழர் R.செந்தில்குமார்,B.சிவக்குமார்,S.மாயவன்,R.அலெக்ஸ் சாம்ராஜ்,T.கணேசன்,R.கருப்பண்ணன்,M.K.தங்கராசு,S.கார்த்திகேயன், P.ரவிக்குமார், R.கருப்பசாமி, N.ராமசாமி,நீலகிரி கோட்ட முன்னாள் செயலர் தோழர்.A.M.சேகர் ஆகியோர் சிறப்பானதொரு உரை அளித்து மாநாட்டை சிறப்பித்தனர்.
மாநாட்டு நிகழ்வில் பணி ஓய்வு பெற்ற (கடந்த மாநாட்டிற்கு பிறகு) தோழமைகளான கர்னல், நளினி, சுப்பிரமணியம், விசாலாட்சி,காஞ்சனமாலா ஆகியோருக்கு கோட்டச் சங்கத்தின் சார்பில் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டது.
கடந்த மாநாட்டை காட்டிலும் இந்த கோட்ட மாநாட்டில் அதிக உறுப்பினர்கள் பங்கேற்றது நமது சங்கத்தின் மீது நமது தோழமைகள் வைத்து இருக்கும் பற்றினையும், உறுதியையும் பறைசாற்றுவதாக இருந்தது. முக்கியமாக தோழியர்கள் அதிகளவில் பங்கேற்றது இந்த மாநாட்டின் சிறப்பாகவே கருதுகிறோம்.
மேலும் மாநாட்டு அரங்கில் POSTAL CRUSADER, DAK JAKRITI, PENSIONER POST, அஞ்சல் முழக்கம், உழைக்கும் வர்க்கம் உள்ளிட்ட பல தொழிற்சங்க இதழ்களை இலவசமாக நமது உறுப்பினர்களுக்கு அளிக்கப்பட்டது. சுற்றுசூழல் நலன் கருதி மாநாட்டிற்கு வந்த அனைத்து தோழமைகளுக்கும் இலவசமாக புங்கை மற்றும் சொர்க்கம் மரக்கன்றுகள் இலவசமாக அளிக்கப்பட்டது.
தலைமை அஞ்சலக வளாகத்தில் மாநாடு நிகழ்த்த அனுமதி அளித்த நமது முதுநிலை அஞ்சல் அதிகாரி தோழர்.சாய்ராம் அவர்களுக்கும், மாநாட்டு ஏற்பாடுகளை முந்தைய நாள் மாலை முதல் நள்ளிரவு வரை நம்முடன் இணைந்து கள பணியாற்றிய தோழமைகளுக்கும், மாநாட்டிற்கு வந்து சிறப்பித்த பல்வேறு தொழிற்சங்க நிர்வாகிகளுக்கும் , மாநாட்டு நிகழ்வன்று குடிதண்ணீர் , மதிய உணவு பரிமாறுதல்,மரக்கன்றுகள் வழங்குதல் உள்ளிட்ட அனைத்து பணிகளையும் தங்கள் வீட்டு விஷேசம் போல் ஆர்வமாக எடுத்து செய்த தோழமைகளுக்கும், மாநாட்டு அரங்கை நித்தமும் நிரம்பி வழியும் அளவிற்கு மாநாட்டிற்கு வருகை புரிந்த ஈரோடு கோட்ட சங்க உறுப்பினர்கள் உள்ளிட்ட அனைத்து தோழமைகளுக்கும் நமது ஈரோடு கோட்டச் சங்க நிதிச் செயலர் தோழர் .S.கணபதி அவர்கள் நன்றியுரை வழங்கி சிறப்பித்தார்.
கோட்ட அளவில் உள்ள பிரச்சனைகளை நமது கோட்ட சங்கம் ஒவ்வொரு மாதமும் SSPOs உடனான மாதாந்திர சந்திப்பின் போது பேசி சரிசெய்ய ஏதுவாக ஒவ்வொரு மாதமும் 5ஆம் தேதிக்குள் , நமது சங்கத்திடம் உங்கள் பிரச்சனைகளை subjectஆக தெரிவிக்கும்படி கேட்டுக் கொள்கிறோம்.
இனிவரும் காலங்களில் பல்வேறு பிரச்சனைகளை கையாள, ஆர்பாட்டம் உள்ளிட்ட இயக்கங்களை சிறப்புற நடத்திட நமது கோட்டச் சங்கத்திற்கு நமது தோழமைகள் அனைவரும் முழு ஆதரவையும் அளித்து நமது சங்கத்திற்கு மென்மேலும் வலிமை சேர்க்கும்படி வேண்டி விரும்பி கேட்டுக் கொள்கிறோம்.
தோழமையுடன்,
V.அருண்குமார்
கோட்டத் தலைவர்
99426 23483
S .செல்லமுத்து
கோட்டச்செயலர்
70102 72295
S .கணபதி
கோட்ட நிதிச்செயலர்
95249 55543
குறிப்பு:
· *வருகின்ற OCTOBER மாதம் 20 முதல் 22 வரை ஹைதராபாத் மாநகரில் நடைபெறவிருக்கும் AIPEU குரூப் - 'C' யின் அகில இந்திய மாநாட்டில் பங்கு பெற விருப்பம் உள்ள தோழமைகள் உடனடியாக நமது கோட்டச் செயலரிடம் தகவல் தெரிவிக்கும்படி கேட்டுக் கொள்கிறோம்
· * நமது கோட்டச் சங்கத்தை எப்பொழுது வேண்டுமானாலும் தொடர்பு கொள்ள மேற்கூறிய 15 சங்க நிர்வாகிகளையோ அல்லது 27 செயற்குழு உறுப்பினர்களையோ எப்பொழுது வேண்டுமானாலும் அணுகலாம் என்று தெரிவித்துக் கொள்கிறோம்.
· *மேலும் தொடர்பிற்கு கீழே உள்ள தொழில்நுட்ப முகவரிகளை/வழிகளை தொடர்பு கொள்ளலாம்
Whatsapp Group : NFPE P3 Erode
மின்னஞ்சல் : nfpeerode@gmail.com
வலைப்பதிவு : www.nfpeerode.blogspot.com
மாநாட்டு நிகழ்வில் எடுக்கப்பட்ட பல்வேறு புகைப்படங்களை உங்கள் பார்வைக்கு இங்கு பதிவிடுகிறோம்.
No comments:
Post a Comment